தாஸ்யம்
தாஸ்யம்
என்றால் தாஸனின் (வேலைக்காரனின்)
தன்மை, வேலை, கைங்கரியம்
என்று பொருள்படும்;
அதாவது அடிமை என்று ஆகும்.
உலகத்தில் ராஜாவினிடத்தில்
ப்ருத்யன் அடிமைப்பட்டிருக்கிறான்.
பர்த்தாவினிடத்தில்
பத்தினியும், பிதாவினிடத்தில்
புத்திரனும் அடிமைப்பட்டிருப்பதைப்
பார்த்திருக்கிறோம்.
இப்படியே தமையனிடத்தில்
தம்பி. இவ்வாறே இதைப்பல
இடங்களில் பார்க்கிறோம்.
இத்தகைய அடிமை ஓர் உபாதிவசத்தாலே
ஏற்பட்டது. அரசன் தன்
வேலைக்காரனை வேலையில்
இழியும்படி செய்து வேலையை
வாங்கிக்கொள்ளுகிறான்.
ஆனால் இது சம்பளம் முதலிய
காரணங்களால் ஏற்பட்டது.
அரசன் இவனுக்குக் பொருளைக்
கொடுக்காவிட்டால் இவன்
எப்படி வேலைக்காரனாவான்?
அரசனுக்கும் இவனுக்கும்
என்ன ஸம்பந்தம் உள்ளது
? ஆகையால் ஒருவனுக்கு
ஒருவன் ஸ்வாமியாக ஆவதும்
யஜமானனாக ஆவதும் சேஷியாக
ஆவதும் அர்த்தப்ரயுக்தம்.
கணவன்
- மனைவியினிடத்தில் இந்த
ஸம்பந்தம் உள்ளது. ஆனால்
சிறிது வித்தியாசம் உண்டு.
கணவன் மனைவிக்கு பொருள்
முதலியவற்றைக் கொடுக்காமல்
போய்விட்டாலும், கணவன்
கணவனே; மனைவி அவனுக்கு
மனைவிதானே? உயிருள்ள
வரையில் இந்த ஸம்பந்தம்
விடாது. புண்ய-பாபரூப
கர்மஸம்பந்தம் உள்ளவரையில்தானே
ஒருவன் ஒருத்திக்குக்
கணவனாவதும், ஒருவனுக்கு
ஒருத்தி மனைவியாவதும்?
இது போலத்தான் மற்ற
உறவுகளும்.
பரமாத்மாவுக்கும்
ஜீவராசிகளுக்கும் உள்ள
'தாஸ்யம்' என்ற இந்த ஸம்பந்தம்
எப்போதும் உள்ளது. இதைத்தான்
'சேஷ-சேஷிபாவம், ஸ்வாமி-தாஸபாவம்'
என்றும் சொல்லுகிறோம்.
இது யஜமானன்-வேலைக்காரன்
இவர்களுக்குப் போல்
அர்த்தப்ரயுக்தமாக வந்ததன்று;
தம்பதிகளுக்குப் போல்
புண்ய பாப ரூப கர்மப்ரயுக்தமாகவும்
வந்ததன்று; எப்போதும்
உள்ளது. 'அநாதிஸித்தம்'
என்பர் கற்றறிந்தோர்.
இந்த
ஜீவாத்மாக்களும் பரமாத்மாவும்
எது முதற்கொண்டு இருக்கிறார்களோ,
எது வரையிலும் இருப்பார்களோ
அது முதற்கொண்டும் அது
வரையிலும் இந்த ஸம்பந்தம்
உள்ளது. இவ்விருவருக்கும்
ஆதியும் அந்தமும் இல்லை.
ஆகையால் இந்த ஸம்பந்தத்துக்கும்
ஆரம்பமும் முடிவும் இல்லை.
இவ்வுலத்தில் இந்தியா
தேசத்தில் இருக்கிறவர்களுக்கு
மட்டும்தான் இந்த ஸம்பந்தம்
என்பது இல்லை; வெளிநாடுகளான
ஜப்பான், ஜர்மனி முதலிய
தேசத்தவர்களுக்கும்
இது உண்டு. தெய்வம், தேவாலயங்கள்,
சாஸ்திரங்கள் முதலியவற்றை
இல்லை என்று சொல்லும்
நாஸ்திகர்களுக்கும்
இது இல்லை என்பதில்லை.
இதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை;
அவ்வளவுதான். மேல் ஏழு
கீழ் ஏழு உலகங்களிலுள்ள
எல்லா ஜீவராசிகளுக்கும்
- இவ்வுலகங்களிலுள்ள
கொசு, பசு, சிங்கம், கரடி
முதலியவற்றுக்கும்-பகவானுக்கும்
உள்ள இந்த ஸம்பந்தத்தை
ஒருகாலும் அழிக்க முடியாது.
இங்கு,
தம்பதிகளுக்கோ பிதா
- புத்திரர்களுக்கோ
வைமனஸ்யம் ஏற்பட்டுவிட்டால்
'கடப்ரஹரம்' (டைவர்ஸ்) செய்து
ஒழித்துவிடலாம். அது
போல இதை ஒழிக்க முடியாது.
இதை மனத்தில் வைத்துத்தான்
கோதையும், 'உறவேல் நமக்கிங்கு
ஒழிக்க ஒழியாது' என்றாள்.
'நாராயணன் பரன்; நாம் அவனுக்கு
நிலையடியோம்'; 'காரணமும்
காவலனுமாகி என்றும் கமலையுடன்
பிரியாத நாதனான நாரணனுக்கு
அடியேன் நான்' என்று ஸ்வாமி
தேசிகனும் ஸாதித்திருக்கிறார்.
ஆகையால் இங்குக் கர்மோபாதிகமாக
ஏற்படும் சேஷ-சேஷிபாவம்
போல அல்லாமல் அநாதிஸித்தமாயும்
நித்யமாயும் உள்ளது ஜீவனுக்கும்
பரமாத்மாவுக்குள்ள சேஷ-சேஷிபாவம்.
வைகுண்டலோகத்தில் விஷ்வக்ஸேனர்-ஸுத்ரவதி
போன்ற பல தம்பதிகள்
இருக்கிறார்கள். அவர்களுக்கு
ஏற்பட்ட ஸம்பந்தம் உலகத்திலுள்ள
தம்பதிகளுக்கு ஏற்பட்டது
போல அன்றி எப்போதும்
உள்ளது; எம்பெருமானுக்கும்
மகாலக்ஷ்மிக்கும் போல்.
எனவே பகவானுக்கும் நமக்கும்
ஏற்பட்ட ஸம்பந்தம் இயற்கையானது
என்பது பலிதாம்சம். 'த்வத்தாஸ்யம்
அஸ்ய ஹி மம ஸ்வரஸ-ப்ரஸக்தம்'
என்றனர் ஆன்றோர்.
தாஸ்யம்
இரண்டு வகைப்படும் - 'குணக்ருதம்'
என்றும் 'ஸ்வரூபப்ரயுக்தம்'
என்றும். யஜமானன் வேலைக்காரனிடத்தில்
ஸெளலப்யம், ஸெளசீல்யம்,
தயை முதலிய குணங்களைக்
காட்டித் தன்னிடத்தில்
ஈடுபடும்படி செய்வான்.
நிறைய சம்பளம், போனஸ்,
வாடகை இல்லாத வீடு, லீவு
முதலிய பல வசதிகளைச்
செய்து கொடுத்தால் எந்த
வேலைக்காரன்தான் அவனிடத்தில்
வேலைசெய்ய விரும்பமாட்டான்?
இதுதான் 'குணக்ருத தாஸ்யம்'
என்பது. இளையாழ்வான்
ஸ்ரீராமனிடத்தில் அதிகமாக
ஈடுபட்டார். காரணம் என்ன
? அவரிடத்திலுள்ள நல்ல
குணங்கள்தாம். இதைத்
தம் வாயினேலேயே சொல்லுகிறார்
- 'அஹமஸ்ய அவரோ ப்ராதா
குணைர் தாஸ்யம் உபாகத:'
என்று. இங்குச் சுவை மிக்க
பொருளை ஈட்டில் கண்டுகொள்க.
'பஹவோ ந்ருப கல்யாணகுணா:
புத்ரஸ்ய ஸந்தி தே' என்று,
அயோத்தி ஜனங்கள் அனைவருமே
குணங்களுக்குத் தோற்றார்கள்
என்பது பிரசித்தமன்றோ?
பர்த்தா
முன்கோபி, அங்கஹீனன்,
குடிகாரன், பார்யையின்
கழுத்திலுள்ள தாலிச்
சரட்டையும் பறித்துக்
குடித்துவிடுவான்; க்ரூரமான
வார்த்தையைச் சொல்லுவான்;
அடிப்பான்; இன்னும் பல
அக்ரமங்களையும் செய்வான்.
இவ்வளவு ஹிம்ஸைகளைச்
செய்த போதிலும் அவனுடைய
பத்னி மிகவும் பதிவிரதையானபடியால்
பர்த்தாவினிடத்தில்
கோபம் கொள்ளமாட்டாள்;
புன்முறுவல் செய்வாள்;
பல பணிவிடைகளைச் செய்வாள்.
'என் கழுத்தில் இவர் தாலியைக்
கட்டியபடியால் நான் இவருக்கு
எல்லா விதமான பணிவிடைகளையும்
செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் இவருக்கு அடிமைப்
பட்டவள்' என்று எண்ணி
ஸந்தோஷத்துடன் நடந்துகொள்வாள்.
'இப்படியும் ஒருத்தி
இருப்பாளா?' என்று நினைக்க
வேண்டாம் புராணங்களில்
எத்தனையோ பதிவிரதைகளின்
சரித்திங்களைக் கேட்டிருக்கிறோம்.
இப்போதும் எத்தனையோ
பேர் இருப்பார்கள்.
'கண்டார்
இகழ்வனவே காதலன்தான்
செய்திடினும் கொண்டானை
அல்லால் அறியாக் குலமகள்'
என்று இத்தகைய உத்தம
ஸ்திரீரத்தினத்தை ஆழ்வார்
கொண்டாடுகிறார். இவளிடத்தில்
உள்ளது 'ஸ்வரூபப்ரயுக்த
தாஸ்யம்.'
கடியன் கொடியன்
நெடிய மால் உலகங் கொண்ட அடியன்,
அறிவருமேனி மாயத்தன்,
ஆகிலும் கொடிய என் நெஞ்சம்
அவனென்றே கிடக்குமெல்லே துடிகொள்
இடை மடத் தோழீ அன்னை
என் செய்யுமே
என்று
இந்த ஸ்வரூபப்ரயுக்தமான
தாஸ்யத்தை நம்மாழ்வார்
நாயிகாபாவத்தில் நன்கு
அநுஷ்டித்துக் காட்டினார்.
"என்
கணவன் ஸ்வகார்யப் புலிதான்;
விரும்பியதை அடைவதிலேயே
நோக்கமுள்ளவன்; இதனால்
பிறருக்கு ஏற்படும் கஷ்டங்களை
எண்ணிப் பார்க்கமாட்டான்;
பிறர் நோய் அறியாதவன்;
ஒருவருக்கும் எட்டாதவன்;
ஸுலபன் அல்லன்; வஞ்சித்து
காரியம் கொள்வதில் மகா
சூரன்; இன்னார் இனையான்
என்று அறிய முடியாத ஸ்வபாவம்
உள்ளவன்; இப்படிப் பல
கெட்ட குணங்கள் நிரம்பப்பெற்றவன்;
ஆனாலும் என் நெஞ்சம்
அவனைவிட்டு அகல மறுக்கிறது;
இப்படி துர்க் குணங்கள்
நிரம்பப்பெற்ற இவனை விட்டு
மற்றொருவனை அணுகு என்றால்
மாட்டேன் என்கிறது. அதுதான்
'கொடிய நெஞ்ச' மாயிற்றே?"
ஸ்வரூபப்ரயுக்த தாஸ்யத்தை
ஆழ்வார் இவ்விதம் மிகவும்
அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
திருமங்கையாழ்வாரும்,
'வேம்பின் புழு வேம்பன்றி
உண்ணாது; அடியேன் நான்
பின்னும் உன் சேவடியன்றி
நயவேன்' என்றார். வேப்பம்பழம்
கசக்கும். அதில் புழு
இருக்கும். அதைத்தான்
அது விரும்பும். அப்புழுவை
மாம்பழத்தில் எடுத்துவிட்டாலும்
அது அதன் ருசியைக் கணிசியாது.
இதற்கு அதில் விருப்பம்
இல்லையாம். அதுபோல்
பகவானிடத்தில் எனக்கு
விருப்பம். மற்றவை நான்
விரும்ப மாட்டேன் என்கிறார்
இவ்வாழ்வார்.
சீதை ஸ்ரீராமனுடன்
காட்டுக்குச் செல்லுகிறாள்;
அத்ரி மகரிஷியின் ஆச்ரமத்தில்
தங்குகிறாள். அந்த மகரிஷியின்
பத்தினி பதிவிரதோத்தமையான
அநுஸூயை ஸீதையைப் பார்த்து,
"குழந்தாய்! உன் பர்த்தா
ராமன் ராஜ்யத்தை இழந்தவன்,
செல்வம் இல்லாதவன், உண்ண
நல்ல உணவும் உடுக்க நல்ல
ஆடையும் அற்றவன். உனக்கு
காட்டில் ராஜபோகங்களைக்
கொடுத்து ஸந்தோஷிக்கும்படி
செய்ய முடியாதாவன். ஆயினும்
உனக்கு அவன் பர்த்தா
ஆனபடியால், அவனித்தில்
நல்ல புத்தியுடன் இரு.
உபசாரங்களைச் செய்யாமல்
இருந்துவிட வேண்டாம்.
பர்த்தா எப்படிப்பட்டவனாக
இருந்தபோதிலும் அவனுக்கு
பணிவிடைகளைச் செய்து
உபசாரத்துடன் இருக்கவேண்டும்.
இதெல்லாம் பதிவ்ரதா தர்மம்"
என்று பல உபதேசங்களைச்
செய்தாள்.
ஒரு
சமயம் ஸப்தரிஷிகள் யாகம்
செய்தார்கள். தங்கள்
தங்கள் பத்நியுடன் செய்ய
வேண்டியதாக இருந்தது.
அகநியில்தாநே ஹோமம்
செய்யவேண்டும். அப்பொழுது
அக்நி தேவதை ரிஷிகளின்
மனைவியை பார்த்தான்.
அவர்கள் அழகில் ஈடுபட்டான்.
எப்படியாவது இவர்களுடன்
ஒரு நாளாவது சேர விரும்பினான்.
இது நடக்கிற கார்யமாக
இல்லை. அதனால் மெலிந்தான்.
இரவு பகல் தூக்கமில்லை.
அக்நியின் மனைவிக்குப்
பெயர் ஸ்வாஹதேவி. அவள்
விஷயம் தெரிந்து கொண்டாள்.
கனவனுக்கு ஆதரவு சொல்லி
நான் அவர்களை உன்னுடன்
சேர வைக்கிறேன் என்றாள்.
அக்நிக்கு மிக சந்தோஷம்.
ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு
மனைவி வருவாள் என்று
சொல்லி தன் மாஹர்தம்பயத்தால்
அவர்கள் வேஷத்தை தரித்தாள்.
இது எப்படி அக்நிக்குத்
தெரியும். அவன் அவர்களுடன்
புணர்ந்ததாகவே நினைத்தான்.
ஆனால் அருந்ததியின் வேஷத்தை
அவளால் தரிக்க முடியவில்லை.
அகநிதேவதை ஸ்வாஹாவைப்
பார்த்து எப்படியோ அவர்களுடன்
சேர்த்து வைத்தாய். ஆனால்
அருந்ததியுடன் புணராதது
எனக்கு வருத்தம் என்றான்.
அப்பொழுது ஸ்வாஹா சிரித்துக்
கொண்டு சொன்னாள். இதுவரையிலும்
சேர்ந்தது என்னுடன்தான்.
புருஷனின் மயக்கமும்
புத்தி கெட்டிருப்பதையும்
இப்பொழுதாவது தெரிந்துக்
கொண்டீர்களா என்றாள்.
வெட்கமடைந்தான் அக்நி.
அருந்ததியின் வேஷம் எடுத்துக்
கொள்ள முடியவில்லை ஸ்வாஹையினால்.
ஏன். அவள் அவள் அப்படிப்பட்ட
பதிவ்ரதை. தன் வேடத்தையும்
இதரர்களால் அடைய முடியாத
வகையில் இருக்கும் தன்மையான
பதிவ்ரதை. ஆகவேதான் விவாஹத்தில்
அருந்ததி தர்சனம் செய்து
வைப்பது. அருந்ததி வஸிஷ்டர்போல்
பரதாரபர புருஷ பராங்குகர்களாக
இவர்கள் இருக்கவேண்டும்
என்று ஸ்வஸ்தி சொல்வது.
இதைக்கேட்டதும்
சீதைக்கு வெட்கம் வந்துவிட்டது.
அவள் சொல்ல ஆரம்பித்தாள்
- "தாயே, என் பர்த்தா ராமன்
கெட்ட குணங்களுடையவனாக
இருக்கவேண்டும்; கெட்ட
நடத்தையுடையவனாக இருக்க
வேண்டும்; உலகத்திலுள்ள
ஜனங்கள் இகழக்கூடிய விதத்தில்
இருக்கவேண்டும்; என்
விஷயத்திலும் க்ரூரஸ்வபாவனாக
இருக்கவேண்டும்; அப்போது
நான் எவ்விதம் இருப்பேன்
என்பதைக் கவனிக்க வேண்டும்;
பர்த்தாவினிடத்தில்
நல்ல நடத்தையுடன் இருக்கிறாளா,
பர்த்தாவைத் திரஸ்கரித்துப்
பேசுகிறாளா என்றெல்லாம்
உலகத்தாருக்கு நன்கு
விளங்கும். அதைக் காட்ட
இப்போது வழி இல்லை. ஏனெனில்,
என் பர்த்தா குணங்களால்
ச்ரேஷ்டன், இரக்கமுள்ளவன்,
பரஸ்திரீகளைக் கண்ணாலும்
பாராதவன், என்னிடத்தில்
மிக்க ஆசையைக் காட்டுகிறவன்,
தாய் தந்தை போல எனக்குப்
பிரியமானவன். இப்படி
இருக்கிறபடியால், என்னை
கஷ்டப் படுத்தும்போது
நான் சலிக்காமல் இருப்பேன்
என்பதை எவ்விதம் காட்டுவது?
காட்ட முடியாமல் இருக்கிறது"
என்றாள். இங்குள்ள ஸ்ரீமத்
ராமாயண ச்லோகங்களை நோக்குங்கள்
-
யத்யப்யேஷ பவேத்
பர்த்தா அநார்யோ வ்ருத்தவர்ஜித:| அத்வைதமத்ர
வர்த்தவ்யம் ததாப்யேஷ
மயா பவேத் || கிம் புநர்
யோ குணச்லாக்ய : ஸாநுக்ரோசோ
ஜிதேந்த்ரிய : | ஸ்திராநுராகோ
தர்மாத்மா மாத்ருவத்
பித்ருவத் ப்ரிய:||
இப்படி
இருவகைப்பட்ட தாஸ்யத்தில்
எது சிறந்தது என்றால்,
ஸ்வரூபப்ரயுக்த தாஸ்யமே
சிறந்தது. இதை அநுஷ்டிப்பவன்தான்
சிறந்தவன். பிரதிபலனை
எதிர்பாராமலன்றோ இவன்
அடிமை செய்கிறான்? இவ்விடத்தில்,
'பகவத் விஷயத்தில் இழிகிறதும்
குணம் கண்டன்று; ஸ்வரூபப்ரயுக்தம்
(வகுத்த விஷயம்) என்று';
'குணக்ருத தாஸ்யத்திலும்
காட்டில் ஸ்வரூபப்ரயுக்த
தாஸ்யமிறேப்ரதாநம். அநுஸூயைக்குப்
பிராட்டி அருளிச்செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது'
என்ற ஆசார்ய ஸ்ரீஸுக்தி
ரத்தினங்களின் சுவையை
அநுபவித்து இன்பம் பெற
வேண்டும்.
இங்கு, பெரியோர்
சொல்லிக் கேட்ட கதையை
வரைகிறோம் - ஓர் அந்தணர்
கங்கையில் ஸ்நானம் செய்யக்
காசி யாத்திரை சென்றார்.
அவர் போகும்போது அவ்வூரிலுள்ள
அனைவரும் நிறையத் திரவியங்களைக்
கொடுத்து வெற்றிலை பாக்கு
பழம் புஷ்பம் தக்ஷிணை
முதலியவற்றுடன் கங்கையில்
சேர்க்க வேண்டும் என்று
வேண்டிக் கொண்டனர்.
பொதுவாக, நதிகளில் ஸ்நானம்
செய்பவர் தக்ஷிணையுடன்
தாம்பூலத்தை நதியில்
சேர்ப்பது வழக்கம்.
இந்த
அந்தணர் போகும்போது
ஒருவன், "ஐயா! நான் மிக ஏழ்மைப்பட்டவன்;
கையில் பணம் இல்லாதவன்;
கங்கையில் எதையாவது ஸமர்ப்பிக்க
வேண்டும் என்ற ஆசையுள்ளவன்.
என் மனைவி வெகுநாளாக
இதற்காகவே காப்பாற்றி
வைத்திருந்த காலணாவை
என்னிடம் கொடுத்திருக்கிறாள்.
இதை எப்படியாவது கங்கையில்
ஸமர்ப்பித்துவிட வேண்டும்.
சொல்வதற்கே வெட்கப்படுகிறேன்.
க்ஷமிக்க வேண்டும்" என்று
சொல்லி, அந்தக் காசை
அந்தணரிடம் சொடுத்தான்.
பிறகு
அந்தணன் காசிக்குச் சென்று
அங்கு கங்ககையில் தன்
மனோரதப்படி அந்த காசை
கங்கையில் சேர்த்தான்.
அப்பொழுது கங்கை ஸ்வய
உருவம் கொண்டு அந்த
காசை வாங்கி வாழ்த்தினான்.
இந்த சமயம் பாதரக்ஷையை
சீர்த்ருத்தி கொடுப்பவன்
இந்த அந்தணனைப் பார்த்து,
ஏன் பாதரக்ஷை அணியாமல்
வீதியில் செல்கிறீர்.
நான் உனக்குத் தகுந்தால்
போல் செய்து தருகிறேன்.
இந்த வியாபாரம்தான் எனக்கு
இங்கு நடக்கிறது. ஆனால்
அதற்காக காசு வாங்குவதில்லை.
கங்கையைப் பார்த்தும்
ஸ்நானம் செய்து போகிறவர்களுக்கு
இந்த தாஸ்யத்தை மனப்பூர்வமாக
செய்கிற பழக்கம் என்று
சொல்லி புதியதாக பாதரக்ஷையை
செய்து சொடுத்தான்.
மேலும் கங்கா நதியின்
ப்ரபாவத்தை ஆதி சங்கரர்
கூறினதைப் பார்த்தால்
மனம் தண்ணீராக உருகும்.
அவ்வாறு அதில் ஆழந்த
அநுபவம் என்று சொல்லி
அவர் சொன்ன பத்யங்களின்
அர்த்தத்தை விளக்கினான்.
அதாவது - நுற்றுக் கணக்கான
யோசனை தூரத்திலிருந்தாலும்
கங்கை கங்கை என்று சொன்னால்
போதும். இப்படி சொல்லி
ஸ்நானம் செய்தால் ஸர்வ
பாபங்களிலிருந்து விடுபட்டு
விஷ்ணு லேகத்தை அடைவான்.
ஸம்ஸாரத்துக்கு
பீஜம் நம் வினை இது விடுபட்டு
விடுகிறது. இதன் நாமம்
சொல்வது ஸுகத்துக்கும்
செல்வத்துக்கும் காரணம்
இதன் நாமோச் காரணம்,
யம தூதர்களை விரட்டுவதும்
இதுதான்.
இதன்
பெயரைச்சொல்பவன் பகவத்
பாதத்தை அடைவான். ஆதலால்
கங்கை என்று பெயர்.
அம்மணியே
ஹிமய மலையினின்று உண்டானவளே
! - பூமிக்கே அலங்கார பூதயான
ஹாராவளி போன்றவளே. ஸ்வர்க்கம்
செல்ல வழி காட்டுபவளே.
உன்னிடம் நான் ஒரு வரம்
வேண்டக் கொள்கிறேன்
உனது கரையில் வசிக்க
வேண்டும். உனது திர்த்தத்தைப்
பானம் செய்ய வேண்டும்.
உன் வீதியிலேயே வாழ வேண்டும்.
உனது பெயரை எப்பொழுதும்
ஸ்மரிக்க வேண்டும். உன்னையே
கண்டு குளிரப் பார்க்க
வேண்டும். உன்னிடத்திலேயே
மரணத்தை அடைய வேண்டும்.
உனது கரையில் உள்ள மரத்தின்
பொந்தில் பறவையாக் ஜீவித்து
வசிக்க வேண்டும். மத்ஸ்யமாகவோ
ஆமையாகவோ பிறக்க வேண்டும்.
ராஜவானுடைய வீட்டில்
விட்டில் எனக்கு பிறப்பு
வேண்டாம். அரசனாகவும்
ஆகவேண்டாம் என்பது - அவரது
ச்லோகத்தின் தாத்பர்யம்
ஆக கங்கா தேவிக்கும்
அங்கு ஸ்நானம் செய்யும்
பாகவதர்களுக்கு தொண்டு
செய்வது எனது தர்மம்.
பரம சிவனே எம்பெருமானின்
தாஸ்யத்தைக் காட்டிலும்.
அவன் திருவடியில் உண்டான
கங்கைக்கு தாஸ்யனாக வேண்டும்
என்று எண்ணி தலையால்
தரிக்கிறான். ஆக, நாம்
தாஸ தாஸனாக வேண்டும்
என்கிற மனப்பான்மை என்று
சொல்லி, இதன் பெருமையை
விவரித்தான்.
அப்பொழுதுதான்
இதன் பெருமையும் பகவத்
தாஸ்யத்தின் பெருமையும்
தெரியவந்தது. அடியார்
அடியார் என்று நம்மாழ்வார்
ஏழுபர்வதாஸ்யத்தை விரும்பினார்.
'தவத் ப்ருத்யப் ருத்ய'
என்பதையும் கேட்டிருக்கிறோம்.
பாதுகை சடகோபன் என்று
வைத்துக் கொண்டு நம்மாழ்வாரைவிட
மிகப் பெருமை பெற்றது.
காட்டிலிருந்து திரும்பிப்போ
என்று லக்ஷ்மணனை ராமன்
சொன்னான். அபிஷேகம்
செய்து கொள் என்று பரதனிடம்
சொன்னான. இருவரும் இராமபிரான்
வார்த்தையை கேட்கவில்லை.
பாதுகை இரண்டு செய்தது.
அவ்வளவு பாரதந்திரியம்
பெற்றது. இருவரையும்
வெள்றுவிட்டது என்றார
ஸ்வாமி தேசிகன். ஆக, தாஸத்
தன்மையை அறிந்து ஏவலை
செய்ய வேண்டும். இதுதான்
ஸாரம்,.
இளைய பெருமாள்
லக்ஷ்மணன். ராமனைப் போல்
யுவராஜகுமாரன். அவன்
தன்னை இராமனுக்கு தாஸன்
என்றே சொல்லுகிறான்.
உலகத்தில், வேலைக்காரர்கள்
தங்களை வேலைக் காரன்
என்ற ரீதியில் ஒப்புக்
கொள்வதில்லை. வேலைதான்
செய்ய எஜமானன் வீட்டுக்கு
செல்கிறான். போகும்போது
அவனைப் பார்த்தால் இவன்
வேலைக்காரன். அவன் வீட்டுக்கு
வேலை செய்யத்தான் போகிறான்
என்று சொல்லும் வகையில்
ட்ரஸை அமைத்துக் கொள்வதில்லை.
பேண்ட், ஷர்ட், குல்லா,
வேஷ்டி இவைகளை பார்த்தால்
இவன்தான் யஜமானன் என்று
சொல்லும் வகையில் இருக்கிறான்.
இப்படிதான் வேலைக்காரியும்,
புஷ்பம், சேலைகளை அணிந்து
கொண்டு போகிறாள். இதுதான்
நடக்கிறது. இங்கு அந்தஸ்து
இருந்தும், லக்ஷ்மணன்
தன்னை வேலைக்காரன் தாஸன்
என்ற ரீதியில் அமைத்துக்
கொண்டுள்ளான். இதுதான்
ஆச்சர்யம் ! இதை, ஹனுமானிடம்
லக்ஷ்மணன் கூறுவது "குணை:
தாஸ்ய முபாகத! என்பது.
லக்ஷ்மணனை பார்த்து ஹனுமான்
கூறுவது இவருக்கு நீர்
என்னாவது என்பது. இதற்கு
விடை, நான் ராமன் புத்தியால்
அவன் தம்பி. இப்படி இவர்
நினைப்பு. என் நினைப்பு
அவருக்கு தாஸன் என்பது.
ஹனுமன்தனும்
முதலில் தன்னை இராமதூதன்
என்று சொன்னான். பிறகு
தாஸோ ளஹம் கோஸ வேந்த்ரஸ்ய'
என்று தாஸன் என்று சொன்னான்.
*****
|