இளைய பெருமாளும்
இளையாழ்வானும்
தசரதச்
சக்கரவர்த்தியின் திருக்குமாரனான
இராமனைப் பெருமாள் என்று
அழைப்பது ஸம்பிரதாயம்.
அவன் தம்பியான லக்ஷ்மணனை
இளைய பெருமாள் என்பர்.
நம், ராமநுஜரான லக்ஷ்மணமுனியை
இளையாழ்வான் என்று அழைப்பர்.
இவ்விருவருக்கும் பல
வகைகளில் ஒற்றுமை உண்டு.
இங்கே சிலவற்றை மட்டும்
கூறி, இவ்விருவரின் ஸாத்ருச்யத்தைக்
காட்டுகிறோம். இருவருக்கும்
ராமாநுஜன் என்ற பெயர்
பொருத்தம் உண்டு என்பதை
அனைவரும் அறிவர்.
இலக்குவன்
ஆதிசேஷனுடைய அவதாரம்
என்பது பல பிரமாணங்களினால்
பிரசித்தமானது. 'சென்றால்
குடையாம், இருந்தால்
சிங்காசனமாம்' என்ற பாசுரப்படி,
பாதுகை என்பது ஆதிசேஷனுடைய
திருவவதாரம். 'நிவாஸசய்யாஸநபாதுகா'
என்று ஆளவந்தார் கூறினார்.
லக்ஷ்மணனும் பாதுகையும்
ஒருவரே என்பதும், பாதுகாஸஹஸ்ரத்திலுள்ள
'பரதசிரஸி லக்நாம் பாதுகே
... ஸ்வதநுமபி வவந்தே லக்ஷ்மண:
சேஷபூத:' என்ற ச்லோகத்தால்
ஸுவ்யக்தமாகிறது: 'சேஷபூத:
லக்ஷ்மண: என்றதனாலும்,
'ஸ்வதநுமபி' என்றதனாலும்
ஆதிசேஷனே லக்ஷ்மணனாக,
அவதரித்தான் என்றும்,
பாதுகையும் லக்ஷ்மணனும்
ஒன்றே என்றும் தெளிவாக
ஏற்படுகின்றன அல்லவா?
எனவே, லக்ஷ்மணன் ஆதிசேஷ
அவதாரம். இது போலவே இளையாழ்வானான
ராமாநுஜரும் ஆதிசேஷனின்
அவதாரம்.
ப்ரஹ்மதந்த்ரஸ்வதந்த்ர
ஸ்வாமி அருளிய திவ்யஸூரி
ஸ்தோத்திரத்தில், 'ராமாநுஜன்
சேஷாவதாரம்' என்று ஸ்பஷ்டமாகக்
காட்டப்படுகிறது. அதில்
உள்ள ச்லோகம் - மேஷார்த்ராஸம்பவம்
விஷ்ணோர் தர்சநஸ்தாபநோத்ஸுகம்
| - துண்டீரமண்டலே சேஷமூர்த்திம்
ராமாநுஜம் பஜே || என்பது.
ஸ்ரீராமாநுஜருக்கு
ஸாக்ஷாத் சிஷ்யரான வடுகநம்பி
என்று சொல்லப்பெறும்
ஆந்த்ரபூர்ணரும் இதைத்
தெளிவாகக் காட்டியிருக்கிறார்
-
வேதாந்தஸித்தாந்தஸமர்த்தநாய,
பாஹ்யாந்தரப்ராந்தமதாபநுத்யை
| சேஷாம்சக: கேசவயஜ்வதேவ்யாம்
தேஜோநிதி: கஸ்சிததாவிராஸீத்
|| என்று சேஷோ வா ஸைந்யநாதோ
வா ஸ்ரீபதிர் வேதி ஸாத்விகை:
| விதர்க்யாய மஹாப்ராஜ்ஞைர்
யதிராஜாய மங்களம் ||
என்றும்
இவரைப் புகழ்ந்திருக்கின்றனர்.
வேங்கடாத்ரி என்ற மகாகவி
தமது விச்வகுணாதர்ச சம்பூவில்
இவரைச் சேஷனுடைய அவதாரம்
என்றே பணிக்கிறார்.
ராமாநுஜாய
குரவே நரவேஷபாஜே, சேஷாய
தூதகலயே கலயே ப்ரணாமாந்
| யோ மாத்ருசாநபி க்ருசாந்
பரிபாதுகாம:, பூமாவவாதரத்
உதஞ்சித போத பூமா || என்று,
இப்படி
பல ஆசார்யர்கள் இந்த
இளையாழ்வானை சேஷாவதாரம்
என்றே ஒருமுகமாக சொல்லுகின்றனர்.
வேதாந்தாச்சார்யார்
மாத்திரம் இவரை சேஷனுடைய
அவதாரம் என்று கூறவில்லை.
அநந்த:
ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஸ்ச
ததாபர: | பலபத்ரஸ் து கலெள
கஸ்சித் பவிஷ்யதி ||
என்று
பவிஷ்ய புராணத்தில் இவரைச்
சேஷாம்சம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதை அநுஸரித்ததுதான்.
ப்ரதமோ
நந்தரூபஸ்ச த்விதீயோ
லக்ஷ்மணஸ் ததா | த்ருதீயோ
பலராமஸ் ச கலெள ராமாநுஜோ
முநி: ||
என்ற முன்னோர்களின்
பாசுரமும்.
வைகுண்ட
லோகத்தில் பரம ஆனந்தத்துடன்
பர்யங்கத்தில் பக்தர்களும்
பாகவதர்களும் சூழப் பரம
த்ருப்தராய் இருக்கும்
பகவான் தம் பர்யங்கபூதனான
எல்லா விதமான கைங்கர்யங்களையும்
செய்து சேஷன் என்ற பெயர்
பெற்ற ஆதிசேஷனைப் பார்த்து,
ச்ருதிர் நஷ்டா
ஸ்ம்ருதிர் லுப்தா ப்ராயேண
பதிதா த்விஜா: | அங்காநி
ச வி சீர்ணாநி ஹா விருத்தோ
வர்த்ததே கலீ: ||
"ச்ருதிகளும்
ஸ்ம்ருதிகளும் அழிந்துவிட்டன.
அந்தணர்கள் தங்களுடைய
நித்ய கர்மாநுஷ்டானங்களை
விட்டுவிட்டனர். வேதாங்கங்களும்
சிதறிப் போயிந. கலியுகம்
மேன்மேலும் விருத்தியடைகிறது.
ஆகவே, நீ என் பஞ்சாயுதங்களின்
சக்தியை ஏந்திக்கொண்டு
உலகத்தில் ராமாநுஜ தரிசனம்
என்ற பெயர் விளங்கும்படியாக
ராமாநுஜராக அவதரித்து,
வேதம், வேதாந்தம், ஸ்ம்ருதி
முதலியவற்றுக்குக் காப்பாக
உரையிட்டு ஜனங்களை உஜ்ஜீவிக்கும்படி
செய்" என்று உத்தரவிட்டார்.
அதன்படி இவர் அவதரித்தார்.
மந்நியோகாத்
பூதபுர்யாம் அஹீநாமீச்வர
: கலெள | ஸ்ரீராமாநுஜரூபேன
ஜநிஷ்யதி ஸதாம் முதே
||
இளையபெருமாள் தசரதனுடைய
புத்ரகாமேஷ்டி மூலமாகப்
பிறந்தவர். ராமாநுஜரும்
புத்ரகாமேஷ்டி மூலமாகவே
பிறந்தவர். இவரது பிதா
ஆஸூரி கேசவாசார்யருக்கு
ஸர்வக்ரது என்ற பிருதமும்
உண்டு. இவர் காந்திமதி
என்ற பெண்மணியை மணந்து
இல்வாழ்க்கை நடத்தி வந்தார்.
வெகு காலமாகியும், சந்ததி
இல்லாமலிருந்து, பிறகு
பெரியோர்களின் நியமனத்தினால்
ப்ருந்தாவன க்ஷேத்திரம்
என்று பெயர் பெற்ற திருவல்லிக்கேணியில்
புத்ரகாமேஷ்டி செய்து
முடித்தார். வேள்வி நிறைவேறியது.
அன்றிரவு ஸ்ரீபார்த்தசாரதி,
"நானோ என் படுக்கையான
ஆதிசேஷனோ உனக்குப் பிள்ளையாகப்
பிறந்து வேத வேதாந்தங்களை
ரக்ஷிக்க வருகிறோம்"
என்று ஸ்வப்னத்தில் சொன்னார்
எனற வரலாற்றையும் கண்டுகொள்ள
வேண்டும். ஆகவே இருவரும்
புத்ரகாமேஷ்டியின் மூலமாகப்
பிறந்தவர்கள்.
இளையபெருமாள்
விசாலமான மனத்தைப் பெற்றவர்
என்பது ராமாயணப் பிரசித்தம்.
'என் ஒருவனுக்கு மரணம்
வந்தாலும் பாதகம் இல்லை;
வம்சத்துக்கே விநாசம்
ஏற்படக்கூடாது' என்ற
பரந்த மனத்துடன் துர்வாஸர்
என்ற மகரிஷியிடம் அவர்
நடந்துகொண்டார் என்பது
தெளிவானது.
இளையாழ்வானும்,
"பதிஷ்யே ஏக ஏவாஹம் நரகே
குரு-பாதகாத்| ஸர்வே கச்சந்து
பவதாம் க்ருபயா பரமம்
பதம் ||" என்று விசாலமான
மனத்துடன் மந்திரார்த்தங்களை
ஆசார்ய நியமனத்தை உல்லங்கனம்
செய்து உபதேசித்தார்
என்பது பிரசித்தமானது.
பகவானான
ஸ்ரீராமனுடைய திருவடியை
அடைவிப்பதற்கு லக்ஷ்மணன்
எப்போதும் ராமனை விட்டுப்
பிரியாமலே இருந்தார்.
'யத்ர ராம' ஸலக்ஷ்மண:' என்றார்
வால்மீகி. விபீஷணன் இலங்கையைவிட்டு
ராமனிடம் சரணாகதி செய்யச்
சமுத்திரத்தின் தென்கரையை
அடைந்தான். 'இலக்குவனோடு
கூடிய ராமன் இருக்கும்
இடத்துக்கு வந்து சேர்ந்தான்'
என்றார் வால்மீகி. இதன்
கருத்து - ராமனை அடைவதற்கு
லக்ஷ்மணனுடைய உதவி வேண்டும்
என்பது. 'நமோஸ்து ராமாய
ஸலக்ஷ்மணாய' என்று மற்றோரிடத்தில்
கூறினார்.
இளையாழ்வானும்
பகவானுடைய திருவடியை
நம்மை அடையும்படி செய்கிறார்.
'உலகோர்கள் எல்லாம்
அண்ணல் ராமாநுசன் வந்த
தோன்றிய அப்பொழுதே
.. நாரணற்கு ஆயினரே' என்பது
நோக்கத் தக்கது. 'இவை
என்றனுக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண்
தந்திலன் தான் அது தந்து'
என்பதையும் நோக்கவேண்டும்,
த்வயமந்திரத்தின்
அர்த்தமான சரணாகதியை
இளையபெருமாள் இராமன்
காட்டுக்குச் சென்றபோது,
'ஸ ப்ராதுஸ் சரணெ காடம்
நிபீட்ய ரகுநந்தந: | ஸீதாமுவாச
அதியஸா: ராகவம் ச மஹாவ்ரதம்
|| பவாம்ஸ் து ஸஹ வைதேஹ்யா
கிரி ஸாநுஷு ரமஸ்யதே
| அஹம் ஸர்வம் கரிஷ்யாமி
ஜாக்ரத: ஸ்வபதஸ்சதே || என்ற
பாசுரங்களை அநுஷ்டித்து
விவரித்தார். இளையாழ்வானும்
சரணாகதிகத்யம் என்று
பெயரிட்டு த்வயார்த்தத்தை
உலகுக்குத் தாமே அநுஷ்டித்துக்
காட்டினார்.
இளைய பெருமாளை
அனுமான் பார்த்து, "இவருக்கு
நீர் என்ன ஆவீர்?" என்று
கேட்க, "அஹமஸ்யாவரோ ப்ராதாகுணைர்
தாஸ்யம் உபாகத:. ராமர்
என்னைத் தம் தம்பி என்று
நினைத்திருப்பார். அவருடைய
குணங்களுக்குத் தோற்று
நான் தாஸன் என்று நினைத்திருப்பேன்"
என்று பதிலளித்தார் இளைய
பெருமாள். இதனால் பகவானுக்கும்
தமக்கும் உள்ள ஸ்வஸ்வாமி
பாவஸம்பந்தம் சேஷசேஷிபாவஸம்பந்தம்
காட்டப்பட்டது. பாஷ்யகாரரும்,
'சரணாகதோஸ்மி தவாஸ்மி
தாஸ:' என்று இந்த ஸம்பந்தத்தை
பல இடங்களில் வெளியிட்டார்.
ராமன்
காட்டுக்குச் சென்றபோது,
காட்டில் முதலில் ராமனும்
பிறகு சீதையும் பிறகு
லக்ஷ்மணனும் சென்றதாக
'அக்ரத: ப்ரயயெள' என்ற ச்லோகத்தில்
கூறப்பட்டிருக்கிறது.
ராமாநுஜரும் காசியாத்திரையினின்று
தெளிந்து மீண்டு திரும்பி
வந்த போது காஞ்சிக்கருகில்
முதலில் வேடனுடைய உருவம்
தரித்த வரதனும் பிறகு
பெருந்தேவியும் பிறகு
ராமாநுஜரும் வந்தார்கள்
என்பதையும் இங்கு நோக்க
வேண்டும்.
லக்ஷ்மணன்
ராமனுடைய திருவடிகளில்
கைங்கர்யம் ஒன்றைத் தவிர
வேறு எதையும் விரும்பவில்லை.
ந
தேவலோகாக்ரமணம் நாமரத்வம்
அஹம் வ்ருணே | ஐச்வர்யம்
வாபி லோகாநாம் காமயே
ந த்வயா விநா ||
என்றார்.
பகவானைப் பெற விரும்புகிறவன்
மற்றப் பொருள்களில்
வைராக்யமும், பகவானிடத்தில்
ஆசையும் பெற்றிருக்கவேண்டும்.
ராமாநுஜரும் பகவானுடைய
திருவடிகளில் உண்டான
வியாமோகத்தினால் மற்றப்
பொருள்களை த்ருணமாக
நினைத்தார். 'யோ நித்யம்'
என்ற இவருடைய தனியனை
இங்கு அநுஸந்திப்பது,
லக்ஷ்மணன்
தம் அண்ணனான ராமனுக்குத்
தீர்த்தத்தை நதிகளிடமிருந்து
எடுத்து வந்து உபசரித்தார்.
பரதாழ்வான் ராமனைச் சித்திரகூடத்திலிருந்து
அழைத்துவர எண்ணி அந்த
மலைக்குச் சென்றபோது
வஸிஷ்ட முனிவர், கெளஸல்யை
முதலிய தேவிகள் அனைவரும்
சென்றனர். அங்கே கங்கை
நதிக்கரையில் ஸுமித்ரை
முதலியானவர்களைப் பார்த்துக்
கெளஸல்யை சொல்லும் வார்த்தை
-
இத: ஸுமித்ரே புத்ரஸ்தே
ஸதா ஜலம் அதந்த்ரித: | ஸ்வயம்
ஹரதி ஸெளமித்ரிர் மம
புத்ரஸ்ய காரணாத் || ஜகந்யமபி
தே புத்ர க்ருதவாந் ந
து கர்ஹித: | ப்ராதுர் யதர்த்தஸஹிதம்
ஸர்வம் தத் விஹிதம் குண:
(அயோத்யா காண்டம் - 103)
என்பவை
அங்குள்ள ச்லோகங்கள்.
"எப்பொழுதும் சோம்பலில்லாமல்
இந்தக் கங்காநதியிலிருந்து
என் குமாரனான ஸ்ரீராமனுக்கு
உன் புதல்வன் தானாகவே
தீர்த்தத்தைக் கொணர்ந்து
உபசரிக்கிறான். இப்படித்
தீர்த்தத்தைக் கொண்டுவரும்
இந்தக் கைங்கர்யம் தோஷத்தை
உண்டுபண்ணாது. இது பரிகாசத்திற்கு
உரியதாகவும் ஆகாது. உலகத்தில்
தண்ணீர் கிடைப்பது துர்லபமாக
இருக்கும் காலத்தில்
ஒரு குடம் தண்ணீர் கொணர்ந்தால்
இரண்டு ரூபாய் கொடுக்கிறேன்
என்று பிரபுக்களின் வார்த்தையைக்
கேட்டுப் பண ஆசையால்
ஒருவன் அம்மாதிரி செய்தால்
அது பரிகசிப்பதற்கு உரியதாகும்.
ஸர்வவித பந்துவாய் ஸர்வஸ்வாமியாக
உள்ள எம்பெருமானான ராமனுக்காகக்
கொண்டு வரும் கைங்கர்யமானபடியால்
இது எல்லோராலும் போற்றக்
கூடியதாகவே முடியும்."
என்கிறாள்.
ஆளவந்தார்
பல சிஷ்யர்களுக்குப்
பகவத்விஷய காலக்ஷேபம்
ஸாதித்து வந்தாராம்.
அப்பொழுது, 'சுமந்து
மாமலர் நீர்சுடர் தீபம்
கொண்டு' என்ற திருவேங்கடமுடையான்
விஷயமான பாசுரம் நடந்து
வந்ததாம். 'நீர் கொண்டு
என்று தீர்த்த கைங்கர்யம்
சொல்லப்பட்டிருக்கிறபடியால்
திருவேங்கடமுடையானுக்குத்
தீர்த்த கைங்கர்யம் செய்வதில்
நமமாழ்வாருக்குப் பேரவா
இருந்திருக்க வேண்டும்.
இதைப் பூர்த்தி செய்து
அவரது மனோரதத்தை ஆளவந்தார்
நிறைவேற்ற எண்ணினார்.
காலக்ஷேபம் முடிந்ததும்,
"திருவேங்கடமுடையானுக்குத்
தீர்த்த கைங்கர்யத்தை
இந்தக் கோஷ்டியில் யார்
செய்யப் போகிறார்கள்?"
என்று வினவினார். பெரிய
திருமலை நம்பி, "அடியேன்
சித்தமாக இருக்கிறேன்"
என்று சொல்லி விடைபெற்றுத்
திருமலைக்குச் சென்று
அந்தக் கைங்கர்யத்தை
அழகுடன் செய்து வந்தாராம்.
தினந்தோறும்
பாபவிநாசம் என்ற நதியிலிருந்து
ஒரு கலசத்தில் இவர் தீர்த்தத்தை
எடுத்து வந்து திருவேங்கடமுடையானுக்கு
ஸமர்ப்பிப்பது வழக்கம்.
ஒரு நாள் வழக்கம் போல்
கலசத்தில் தீர்த்தத்தை
எடுத்துச் சென்றார்.
அப்போது பகவான் வில்லி
வேஷம் பூண்டு, அவருக்குத்
தெரியாமல் கலசத்தில்
துவாரத்தை உண்டுபண்ணி
நீரைக் கீழே பெருகும்படி
செய்துவிட்டார். கொஞ்ச
தூரம் சென்றதும், "தாதா,
எனக்கு ரொம்பவும் தாகமாய்
உள்ளது. கொஞ்சம் நீர்
கொடு" என்றார். அப்போது
கலசத்தில் நீரே இல்லை.
பெரிய திருமலை நம்பி
திக்பிரமம் அடைந்தார்.
"வெகு தூரத்திலிருந்து
தீர்த்தத்தை கொண்டுவந்தேன்.
திருமலைக்குச் சமீபத்தில்
வந்து விட்டேன். கலசத்திலோ
நீர் இல்லை. மறுபடி பாபவிநாசம்
சென்று கொண்டு வரவும்
சக்தி இல்லை. என்ன செய்வது?"
என்று கலங்கினார். அப்போது
வில்லிவேஷம் பூண்ட பகவான்,
"பெரியவரே! கவலைப்பட வேண்டாம்,
நான் பாணத்தைப் பிரயோகம்
செய்து இங்கிருந்தே நீரை
வரவழைக்கிறேன். இதிலிருந்து
தீர்த்தத்தை எடுத்துச்
செல்லும்" என்று சொல்லி,
ஓர் அஸ்திரத்தைப் பிரயோகம்
செய்தார். திரிவிக்ரமாவதார
காலத்தில் கங்கை எப்படி
வேகமாகக் கிளம்பிற்றோ
அது போல ஆகாசத்திலிருந்து
கங்கை விழ ஆரம்பித்தது.
இதற்குத்தான் 'ஆகாச கங்கை'
என்று பெயர்.
நம்பி மிகவும்
விஸ்மயப்பட்டு, இதிலிருந்து
நீரைக் கொண்டு சென்றார்.
அது முதல் உண்மையை உணர்ந்து,
பகவானுக்கு இங்கிருந்து
தீர்த்தத்தைக்கொண்டு
கொடுப்பதுதான் மிகவும்
பிரீதியை உண்டுபண்ணும்
என்பதை உணர்ந்து, தினமும்
அப்படியே செய்ய ஆரம்பித்தார்.
'தாதேத்யாமந்த்ர்ய கஸ்சித்
வநபுவி த்ருஷிதஸ் தோயவிந்தூந்
யயாசே' என்றார் வேங்கடாத்வரி
கவி. ஆகையால், பகவானுக்குச்
செய்யும் இந்தக் கைங்கர்யம்
மிகவும் போற்றத்தக்கது.
இளையாழ்வானும்
சாலைக்கிணற்றிலிருந்து,
பகவானுடைய அபிப்பிராயத்தை
உணர்ந்து, தினமும் தீர்த்த
கைங்கர்யம் செய்து வந்தார்
என்பது உலகப் பிரசித்தம். இப்படிப்
பல வகைகளில் இரண்டு ராமாநுஜர்களுக்கும்
ஒற்றுமைகள் உள்ளன.
இதை
ஸ்ரீதேசிகன் "தத்தம்
யேன தயாஸுதாம்பு நிதினர்"
என்கிற ஸலோகத்தால் காட்டினார்.
அமிர்தமாகிற கடல் தயை
என்னும் அமிர்தம் இதற்கு
கடல் ஸ்ரீபாஷ்யகாரர்.
தேவப் பெருமாளும் கருணைக்
கடல். இவர் ஸமர்ப்பித்த
அம்ருத ஜலத்தை பருகினார்.
புஷ்டியை அடைந்தார்.
கருமுகில் கடல் நீரை
பருகும் மலை மீது அமரும்.
அதிக மழையைக் கொடுக்கும்.
அது பகவானாகிற கருமுகிலும்
அமுத நீரைப் பருகி புஷ்டியை
அடைந்து நமது விருப்பத்துக்கும்
அதிகமாக நமக்கு பல பலரை
பொழிகிறான் என்றார்.
*****
|