|
|
Have Faith in God ! He is always there with you !
|
|
இடுக்கண் களையும்
இறைவன்
ச்ரிய: பதியான
ஸர்வேச்வரனை எல்லா வேதங்களும்
ஒரே மிடறாக ஸமஸ்த கல்யாண
குணாகரன் என்று கூறுகின்றன.
ஸ்ம்ருதிகளும் இதை அடியொற்றியே
பகவானை உயர்நலம் அனைத்துக்கும்
இருப்பிடம் என்று வலியுறுத்திக்
கூறுகின்றன. இதிகாச புராணங்களிலும்
இந்த அர்த்தத்தை நன்கு
தெரிந்துகொள்ளலாம்.
ஆழ்வார்களும், 'வல்வினையேனை
ஈர்கின்ற குணங்களையுடையாய்'
என்றும், 'உயர்வற உயர்
நலம் உடையவன்' என்றும்,
'எண்பெருக்கந்நலத்து'
என்றும் இந்தக் கல்யாண
குணங்களில் ஆழங்காற்பட்டுப்
பல பாசுரங்களை வெளியிட்டிருக்கின்றனர்.
'வசீ வதாந்ய:' என்று
ஆரம்பித்து 'ஸமஸ்த கல்யாண
குணாம்ருதோததி:' என்று
எம்பெருமானுடைய குணங்களைப்
பற்றி பலவாறாவாக ஆளவந்தார்
அநுபவித்து பேசியிருக்கிறார்.
எம்பெருமானாரும்,
'ஸ்வாபாவிகாநவதிகாதிசயஜ்ஞாந'
என்று ஆரம்பித்து, 'குணகணெளகமஹார்ணவ'
என்று ஸர்வேச்வரனின்
குணங்களை அடுக்காகக்
கூறியுள்ளார். மேலும்,
'ப்ரணதார்த்திஹர, ஆபத்ஸக'
என்றும் கூறியுள்ளார்.
தன்னை அடைந்தவர்களின்
துயரத்தை நீக்குகிறவன்;
ஆபத்காலத்தில் தோழன்
போல் இருந்து, துயரத்தை
விலக்குகிறவன் என்ற இந்த
இரண்டு குணங்களும் பகவானிடமுள்ள
எல்லாக் குணங்களைக் காட்டிலும்
மேம்பட்டவை, முக்கியமானவை
என்று தெரியப் படுத்துவதற்காகவே
இவை இரண்டையும் தனியாகக்
கூறினார்.
உண்மையில்
ஒரு பிரபு அழகாக இருக்கிறான்;
இனிமையாகப் பேசுகிறான்:
வள்ளலாக உள்ளான்; புத்திசாலியாகவும்
இருக்கிறான்; எல்லாம்
அறிந்து நன்கு வேலைகளையும்
செய்கிறான். இப்படி இருந்தாலும்
ஜனங்களிடத்தில் இரக்கத்தைக்
காட்டி அவர்களின் துன்பத்தைத்
தீர்க்காமல் இருந்துவிட்டால்
அவன் மேன்மையை அடையமாட்டான்.
அவனை யாரும் மதிக்கவும்
மாட்டார்கள். ஒரு சல்லிக்
காசுக்கும் உபயோகப்பட
மாட்டான். ஆபத்து உண்டானபோது
அதைக் கண்டு, 'ஐயோ! இவனுக்கு
இப்படிப்பட்ட துர்தசை
வந்துவிட்டதே!' என்று
தானும் கலங்கி, அவனுடைய
கஷ்டத்தைப் போக்க முயலுகிறவனே
உத்தம புருஷனாவான்.
ஒரு
நண்பனுக்குத் துயரம்
உண்டானால் அதைக் கண்டு
அவனது உண்மைத் தோழன்
உடனே அதை நீக்க முயற்சி
செய்வான் அல்லவா? அப்பொழுதுதானே
அவன் உண்மைத் தோழனாவான்.
'உடுக்கை இழந்தவன் கைபோல
ஆங்கே இடுக்கண் களைவதாம்
நட்பு' என்று திருவள்ளுவரும்
கூறுகிறார். அவையில்
ஒருவனது வஸ்திரம் இடுப்பிலிருந்து
அவிழ்ந்தால் அவனது கை
எவ்வளவு பரபரப்புடன்
அந்த வஸ்திரத்தைப் பிடித்துக்கொள்ள
முயலுமோ அது போலத்
தன் நண்பனின் துயரத்தைக்
களைய முயல வேண்டும். இப்படிச்
செய்கிறவன்தான் உண்மை
நண்பன் என்று உலகத்தோர்
புகழ்வர். பரமன் நமது
ஆபத்காலத்தில் தோழன்
போல் இருந்து நமது கஷ்டத்தை
விலக்குகிறான். இதை நினைத்தே
'ஆபத்ஸக' என்று கத்யத்தில்
ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்
செய்தார். ஆகவே இந்த குணமே
எல்லா குணங்களிலும் உயர்ந்தது.
இதைத்தான் 'ஸம்ரக்ஷகத்வம்,
ஸம்ரக்ஷித்ருத்வம்' என்று
சொல்லுகிறது. ரக்ஷணம்
என்றால் ஒருவனுடைய அனிஷ்டத்தை
அதாவது துயரத்தை நீக்கி
இஷ்டத்தை கொடுப்பது.
பகவானை அண்டினவர்கள்
சரணாகதர்கள். அவர்களை
பகவான் காப்பவன். 'சரணாகதஸம்ரக்ஷிதா'
என்று பகவானுக்கு ஒரு
பிருது உண்டு. இதைப்பற்றிதான்
இங்கு விவரிக்க வந்துள்ளோம்.
ஸ்வாமி தேசிகன் இதைப்
பற்றி ஒரு ச்லோகம் இட்டிருக்கிறார்.
அந்த ச்லோகம் இதோ-
பூயோபி
ஹந்த வஸதிர் யதி மே பவித்ரீ யாம்யாஸு
துர்விஷஹ வ்ருத்திஷு
யாதநாஸு | ஸம்யக் பவிஷ்யதி
தத: சரணாகதாநாம் ஸம்ரக்ஷிதேதி
பிருதம் வரத த்வதீயம்
|| (வரதராஜ பஞ்சாசத் - 35)
இதன்
கருத்து - தேவாதிராஜரே!
நான் தேவரீரை சரணம் அடைந்திருக்க்றேன்.
எவ்வளவோ பாவங்களை நான்
செய்திருந்தபோதிலும்
உமது திருவடிகளை அடைந்துவிட்டபடியால்
எனக்கு நரகம் வராது. எமன்
என்னை ஹிம்சிக்க மாட்டான்.
பொறுக்க முடியாத வேதனைகள்
எனக்கு வரா. ந கலு பாகவதா
யமவிஷயம் கச்சந்தி. அப்படி
ஒரு சமயம் எனக்கு எமலோகத்தில்
பல யாதனைகளை அநுபவிக்க
சூழ்நிலை ஏற்பட்டால்
உம்மை உலகத்தில் உள்ளவர்
தூற்றுவர். சரணமடைந்தவனை
நல்ல முறையில் காப்பவர்
நீர் என்று உலகம் முழுவதும்
உம்மை இந்த பிருதைக்கூறி
போற்றுகிறது. அது உமக்கு
எப்படி பொருந்தும்?
இதை நீர் காத்துக் கொள்ளவேண்டியது
அவசியம் இல்லையா? உம்மை
ஆபத்ஸகன், சரணாகத ரக்ஷகன்
என்று உலகம் புகழ்கிறது.
என் துயரத்தை நீர் நீக்காவிட்டால்
உம்மை நிர்க்ருணன் என்று
உலகத்தார் நிந்திக்கமாட்டார்களா?
ஆகவே உம்முடைய தன்மையை
நிலைநிறுத்துவதற்காக
எனக்கு துயரம் வராமல்
காக்க முற்பட்டிருக்கிறீர்
என்றவாறு.
இப்படி அருளிச்
செய்த ஆசார்ய ஸார்வபேளமரான
வேதாந்த தேசிகனுடைய கருத்து
என்ன என்பதை ஆராய்வோம்.
நரகம் சென்று பொறுக்க
முடியாத பல யாதனைகளை
நான் அநுபவித்தாலும்
அது எனக்கு பெரிய துயரம்
அன்று. எத்தனையோ தடவை
எமலோகம் சென்று வேதனை
அநுபவித்தாற்போல் இதுவும்
ஆகும். ஆக இதில் நான் துயரப்பட
வேண்டிய அவசியம் இல்லை,
'அபூத பூர்வம் மம பாவி
கிம் வா ஸர்வம் ஸஹே மே
ஸஹஜம் ஹி து:கம்' என்று
ஆளவந்தார் அருளிச் செய்த
கணக்கிலே இதுவும் ஒன்றாயிற்று.
பின் எனக்கு என்ன துயரம்
என்றால், ஆபத்காலத்தில்
ஒருவன் பகவானைக் கூப்பிடும்போது
பகவான் நேராக வந்தோ
மறைவில் இருந்தோ அவனது
துயரத்தை துடைக்காமல்
இருந்துவிட்டால் அவனது
ஆபத்கால ரக்ஷகத்வம் போய்விடும்
அல்லவா? கஷ்ட காலத்தில்
பகவானை நினைத்தால் அந்த
ஈச்வரன் அனைவரையும் ரக்ஷிக்கிறான்
என்ற எண்ணம் ஜனங்களுக்கு
முன்பு இருந்தது. இப்பொழுது
மாறிவிடும். ஈச்வரனே
இல்லை என்றோ, அவன் இருந்தாலும்
நிர்க்ருணன் - இரக்கமற்றவன்
என்றோ உலகத்தில் பெயர்
பரவி விடும். ஐயோ! என்ன
செய்வது? இதுதான் என்
கஷ்டம். இந்த துயரத்தை
போக்க நீர் முயல வேண்டும்.
அதாவது சராணகத ரக்ஷகத்வத்தை
நீர் காத்துக் கொள்ள
வேண்டும் என்பது கருத்து.
பிரஹ்லாதஆழ்வான்
எம்பெருமான் திருநாமத்தையே
சொல்லி வந்தபடியால்
தகப்பன் பல ஹிம்சைகளை
செய்வித்தான். அதனால்
உண்டான இவரது துயரத்தை
பகவான் தீர்த்தான். துச்சாதனன்
மூலமாக ஏற்பட்ட த்ரெளபதியின்
துயரத்தையும் பகவான்
களைந்தான். கஜேந்திர
ஆழ்வாருடைய துயரத்தையும்
ஸர்வேச்வரன் துடைத்தான்.
எல்லா இடங்களிலும் இவர்களுக்கு
ஏற்பட்ட துயரம் என்னவென்றால்
கீழ் கூறிய வகையில் ஏற்பட்ட
துயரமே அல்லாது வேறல்ல.
'பகவான் ஒருவன் இருக்கிறான்.
அந்த இறைவன் இரக்கமுள்ளவன்.
ஆபத்காலத்தில் தன்னை
அழைப்பவர்களை அவன் தோழன்
போல வந்து காப்பவன்'
என்று சாஸ்திரங்களில்
சொல்லியிருக்கிறது.
ஜனங்கள் இதை உண்மை என்று
நினைக்கிறார்கள்.
இப்படியிருக்க,
சமயத்தில் வந்து ரக்ஷிக்காமல்
இருந்தால் நாட்டில் உள்ளவர்கள்
என்ன நினைப்பார்கள்?
'ஈச்வரனே இல்லை. இருந்தாலும்
தயையற்றவன்; கூவி கூவி
அழுகிற இவர்கள் விஷயத்தில்
காப்பாற்றாமல் இருக்கிற
படியால்' என்றெல்லாம்
நினைப்பார்கள். ஆகவே
இவர்களது துயரத்தை போக்கவே
மறைமுகமாகவோ நேரிலிருந்தோ
பகவான் காப்பாற்றினான்.
கஜேந்திர ஆழ்வானைக் காத்த
வரலாறு புராணங்களில்
பிரசித்தமானது. இதை ஆழ்வார்கள்
பல இடங்களில் பரக்க பேசியிருக்கிறார்கள்.
இதைச் சொல்லும்போதெல்லாம்
எல்லா ஆழ்வார்களும் ஒரே
அபிப்பிராயத்துடன் சொற்களை
வழங்குகின்றனர். 'கதறி
கை கூப்பி என் கண்ணா கண்ணா
என்னா உதவுப் புள்ளூர்ந்து
அங்கு உறுதுயர் தீர்த்த',
'கைநாக திடர் கடிந்த' 'மதுசூதா
கண்ணனே கரிக்கோள் விடுத்தவனே',
'அழுங்கிய ஆனையின் அருந்துயர்
கெடுத்த', 'யானையின் துயரம்
தீர புள்ளூர்ந்து சென்று,'
'பொள்ளை கரத்த போதகத்தின்
துன்பம் தவிர்த்த புனிதனிடம்',
'போரானை பொய்கை வாய்
கோட்பட்டு நின்றலறி
நீரார் மலர்கமலம் கொண்டோர்
நெடுங்கையால் நாராயணா
ஓ மணிவண்ணா நாகணையாய்
வாராய் என் ஆரிடரை நீக்காய்
என .. அதனை இடர் கடிந்தான்
எம்பெருமான்', 'ஓரானைக்
கொம்பொசித் தோரானைக்
கோள்விடுத்த சீரானை',
'பூந்தண்புனல் பொய்கை
யானைநிடர் கடிந்த பூந்தண்டுழாயென்தனி
நாயகன்' என்று ஆனையின்
துயரம், ஆனையின் கோள்,
ஆனையின் இடர் என்று சொல்வதை
கவனித்தால் இவர்களது
அபிப்ராயம் ஒரே மாதிரியாகவே
இருக்கும் எனத் தோன்றுகிறது.
ஆனைக்குத்
துயரம் மூன்றுவிதமாக
உள்ளது. புஷ்பங்களை பறிக்க
யானை பொய்கையில் இறங்கியதும்
முதலை அதன் காலை கவ்விக்
கொண்டது. அதனால் யானைக்குத்
துயரம்.
இரண்டாவது
கஜேந்திரன் என்ற யானை
முன்பு இந்திரத்யும்னன்
என்ற அரசனாகஇருந்து பகவானை
ஆராதித்துக் கொண்டு
வந்த சமயத்தில் அகஸ்திய
முனிவர் வருவதை காணாமல்
இருந்தபடியால், அவரது
சாபத்தால் இந்தபிறவி
எடுத்து வாழ்ந்துவந்தது.
முன்செய்த விஷ்ணு பூஜையின்
மகிமையினால் இப்பொழுதும்
நாள்தோறும் ஆயிரம் தாமரை
மலர்களைக் கொண்டு பகவானை
அர்ச்சித்து வந்தது.
விஷ்ணுவை பூஜிப்பதற்காக
பெரியதொரு தாமரை தடாகத்தில்
புஷ்பங்களை பறிக்க இறங்கியது.
அதே நீர் நிலையில் முன்பு
ஒருகால் தேவலர் என்ற
முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார்.
அப்பொழுது ஹூஹூ என்ற
கந்தர்வன் அவரது காலைப்
பற்றியிழுத்தான். கோபம்
கொண்ட முனிவர் அவனை
முதலையாகும்படி சபித்தார்.
அந்த முதலைதான் யானையின்
காலைப் பிடித்து கவ்வியது.
இந்த யானை விஷ்ணு பூஜையில்
மனத்தையும் உடலையும்
செலுத்தியபடியால் இந்த
வழிபாடு இடையூறு இல்லாமல்
நடைபெற வேண்டுமே. முதலையோ
நம்மை கவ்விக்கொண்டது.
அழியக் கூடிய உடலைப்பற்றி
எனக்கு கவலையில்லை. செவ்வி
மாறாமல் இந்த புஷ்பங்களை
பகவானுடைய திருவடிகளில்
எப்படிச் சமர்ப்பிக்க
முடியும்?' என்று வருந்தியது.
இது இரண்டாவது துயரம்.
மூன்றாவது
துயரம் ஒன்று உண்டு இந்த
யானைக்கு. 'இப்படி நாம்
கதறும்போது பகவான் உதவாமல்
இருந்தால், ஸர்வேச்வரன்
ஆபத்ஸகன், ஸத்யன் என்று
உண்மையில் இருக்க அவனை
ஆபத்தில் ரக்ஷிக்காதவன்,
தயை அற்றவன் என்று உலகத்தார்
சொல்லப் போகிறார்களே'
என்ற துயரம். இப்படி மூன்று
துயரம்.
இங்கே திருவாய்மொழியில்
இரண்டாம் பத்தில் எட்டாவது
திருவாய்மொழி, இரண்டாம்
பாட்டின் வியாக்யானத்தை
படித்து சுவைக்கவேண்டும்.
1. கொய்கையிலே
போய்ப்புக்கு முதலையாலே
இடர்பட்ட ஆனையினுடைய
து:கத்தை வாஸனையோட போக்கினவன்.
2.
'பூவிற் செவ்வியழியாமே
திருவடிகளிலே இடவேணும்'
என்று நினைத்து அது பெறாமையால்
வந்த இடரைப் போக்கின.
3.
ஆனையிடராவது - "ஸர்வேச்வரன்
ஆபத்ஸகன் என்று இருந்தோம்;
இவன் இப்படி ஆபந்நனாக
உதவாதொழிவதே. நிர்க்ருணனாய்
இருந்தானீ ! என்று நாட்டிலுள்ளார்
நினைக்கிற் செய்வதென்?"
என்று அத்தாலே வந்த இடராகிலுமாம்
என்று மூன்று விதமாகத்
துக்கத்தை விவரித்திருக்கிறார்
வியாக்யாதா.
இந்த அர்த்தங்களில்
மூன்றாவது அர்த்தம் மிக்க
சுவை உடையது. இதை நினைத்துத்தான்
வேதாந்த தேசிகன் மேற்ச்
சொன்ன சுலோகத்தை அருளிச்
செய்தார் போலும்.
ஹரி
ஹரி ஹரி என்றாள். அபயம்
அபயம் என்றாள். உனக்கு
அபயம் என்றாள். கரியனுக்கு
அருள் புரிந்ததே அன்று
கயித்தின் முதலையின்
உயிர் மடித்தாய். என்றார்
பாரதியார் பாஞ்சாலியின்
சபதத்தில். இங்கு எனக்கு
அபயம் தா என்று சொல்லாமல்
உனக்கு அபயம் என்றாள்.
மும்முறையும் சொன்னாள்
அபயம் என்று. எதத் அம்ருதம்
அபயம் என்றும் உபநிஷத்
கூறிற்று. இதெல்லாம்
கவனிக்கவும்.
துர்யோதனனால்
தூண்டப்பட்ட துர்வாஸர்
அக்ஷய பாத்திரத்தை அபஹரிக்க
வந்தவர். பாஞ்சாலி கானகத்தில்
கண்ணனிடம் வேண்ட ஓடிவந்தார்
காப்பாற்ற என்பதும் ப்ரஸித்தம்.
மனிதனுடைய ஆபத்காலத்தில்
ஸுஹ்ருத் எப்படி ஓடிவந்து
காப்பாற்றுவானோ அவ்வாறு
எம்பொருமான் வனவாஸத்தில்
த்ரெளபதியின் இடுக்கண்
களைய வந்தான். இதை பாகவதத்திலும்
பார்க்கலாம்.
"யோ நோ
ஜுகோப வனமேத்ய துரந்தக்குச்
ராத்" என்பது ச்லோகம்.
பெரும்
காடு. சமயமோ இரவு. இராத்ரி
பகல் புரியாதவன் புது
மனிதன். எங்கு எப்படிபோவது
என்று தெரியவில்லை. அது
ஸமயம் ஒர் மஹான் வந்து
வழியைக் காட்டினால் எவ்வளவு
ஸந்தோஷம். சொல்ல வேண்டுமா.
அதுபோல் ஜீவனுடைய அந்திம
தசை பூதஸூக்ஷ்மங்களோடு
இந்திரியங்களோடு அடைப்பட்டுவிட்டான்.
இனி வெளிக்கிளம்ப வேண்டும்.
வழியோ நூற்று ஒன்று.
எந்த வழியில் போவது
என்பதை அறிய முடியவில்லை.
என்ன நடக்குமோ எப்படி
போவதோ என்று திக்ப்ரமம்.
அது ஸமயம் ஹார்தனான பகவான்
விளக்கைப் போட்டு மோக்ஷமார்க்கம்
செல்லும் வழியான ப்ரஹ்ம
நாடியை (நூற்றி ஒன்றாவது)
காட்டி அநுப்புகிறான்
என்றால் இதைவிட ஆபத்ஸ
கத்வம் அவனுக்கு சொல்ல
வேண்டியது என்ன. ஸ்வாமி
தேசிகனும் "த்ராதாபதி
ஸ்திதிபதம் பரணம் ப்ரரோஹ
என்றார் தேசிகன். "ஹார்த:
ஸ்வயம் நிஜபதே விநிலேசயிஷ்யன்.
நாடீம் ப்ரவேசயஸி. நாத
சதாதிகாம் த்வம் என்றும்
பேசினார். ஹார்தாநுக்ரஹீத:
சதாதிகயா என்றார் ஸூத்ரகாரர்.
எவனும்
சில சமாசாரங்கனை எல்லோரிடமும்
சொல்ல மாட்டான். சில
விஷயங்களை தாய் தந்தையிடம்
சொல்வான். அவர்களிடமும்
சொல்லாமல் மனைவியிடம்
மாத்திரம் சொல்வான்.
சில விஷயங்களை அவளிடமும்
சொல்லான். ஸ்நேஹிதனிடம்
மட்டும் தெரிவிப்பான்.
அந்த ஸ்நேஹிதனும் இவன்
ஏதாவது நம்மிடம் அபேக்ஷிப்பான்
என்று எண்ணி தூரமாக விலகி
விடுவான். அவன் உண்மை
ஸுக்ருத் அல்ல. அந்த ஸமயத்திலும்
விலகாமல் இவனுடன் இருந்து
ரக்ஷிப்பவன் உதவிபுரிகிறவன்
பகவான். ஆக ஆபத்காலத்திலும்
உடன் இருந்து ரக்ஷிப்பவன்.
மற்ற ஸ்நேஹிதர்கள் அட்டைகள்
போல் பணம் இருக்கும்
வரையில் சுவைப்பவர்கள்.
இவன் அப்படியல்ல. மேலும்
நமக்கு எந்த விதமான ஆபத்து
நேர்ந்தாலும் உதவி புரிகிறவன்
என்பது மாத்ரமல்ல. நமக்கு
வரும் ஆபத்து போல தனக்கு
வந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல்
ஆபத்து பெற்றவனான மற்றவனை
ஆதியிலிருந்து எவன் ரக்ஷித்து
உதவிசெய்கிறானோ அவன்தான்
ஆபத்ஸகன். உலகத்தில்
சிலரிடம் இதைக் காணலாம்.
சில ஸமயம் தான் ஆபத்துடன்
இருந்தாலும் அதே ஸமயம்
நண்பனுக்கு கஷ்டம் வந்தால்
தன்னையும் பார்க்காமல்
உதவுவது உண்டு. தனக்கு
உடல் சரியில்லாத ஸமயம்
நண்பனுக்கும் அவ்விதம்தான்.
அப்பொழுது தனக்காக வைத்யத்துக்காக
இருக்கும் பணத்தை தமக்கு
இல்லாமல் போனாலும் போகிறது
இதைக் கொண்டு அவனுக்கு
உதவி செய்ய வேண்டும்
என்று நினைப்பவரும் உண்டு.
ஸுக்ரீவனும்
ராஜ்யம் மனைவி இவர்களை
இழந்தவன். ராமனும் இழந்தவன்.
ராமன் என்ன செய்தான்?
க்ருஹ்யதாம் எஷ பாணனா
என்று சொன்ன ஸுக்ரீவனுக்கு
ஸகாவான படியால் அவனது
துயரத்தைத்தான் களைய
வேண்டுமென்று முதலில்
களைந்தான். ஒரு மரத்தில்
இரண்டு பக்ஷிகள். அது
இந்த சரீரத்தில் ஜீவனும்
பரமாத்மாவும் இருக்கிறார்கள்.
இருவரும் ஸ்நேஹிதர்கள்.
ஏன் இருக்கிறார்கள்.
நட்பு மூலமாக நம்முடைய
துன்பத்தைக்களையத்தான்
அவர்களது இருப்பு. த்வா
ஸகாயா ஸமான் என்பது ச்ருதி.
தண்ணீரும்
பாலும் சேர்ந்துவிடுகிறது.
இவைகளின் ஸ்நேஹபாவம்
மிக உயர்ந்தது. நாம் நெருப்பில்
பாலைவைத்து காய்ச்சிகிறோம்.
தண்ணீரை எடுப்பதற்காக.
பால் என்ன நினைக்கிறது
தெரியுமா. நம்முடைய ஸுக்ரத்தான
தண்ணீரை அழிக்கச் செய்கிறார்களா
என்று அதற்காக நெருப்பை
அனைக்கக் கருதி பொங்கிவழிகிறது.
இதைக்கண்ட தண்ணீர் நமக்காக
நெருப்பில் விழுந்து
தன்னையும் அழியிமாறுப்பண்ணுகிறதே.
ஐயோ பாவம் என்று பாலில்தான்
மறுபடியும் விழுந்து
பாலை பொங்காமல் செய்கிறது.
இதனால் பால் பொங்குவதும்
இல்லை. நெருப்பில் விழுவதும்
இல்லை. பாருங்கள் எவ்வளவு
ஸ்நேஹபாவம். அசேதனமான
தண்ணீருக்கும் பாலுக்கும்.
அவ்வாறல்லவா ஸுஹ்ருத்பாவம்
வேண்டும்.
க்ஷீரே ணாத்ம
கதோதகாய ஹி குணா : ததா:
புரா தே அகிலா: க்ஷீரே
தாப மவேஷ்ய தேனபயஸா ஸ்யாத்மா
க்ருசானெள ஹுத: ||
கந்தும்
பாவகம் உன்மன: ததபவத்
த்ருஷ்ட்வா மித்ராபதம், யுக்தம்
தேன ஜலேன சாம்யதி ஸதாம்
மைத்ரி புனஸ்த்வீத்ருசீ.
*****
|
|
|
|
|
|
|
|
Enter supporting content here
|
|
|
|