பறவைகள்
ச்ரிய:
பதியான நாராயணன் உலகம்
யாவையும் படைத்துக் கண்டு
களிக்கிறான். இவன் படைத்த
எந்தப் பொருளும் பயனற்றதாகவே
இராது. ஒவ்வொன்றும்
ஒவ்வொரு விசேஷமான அர்த்தத்தை
உணர்த்த வேண்டுமென்றே
நினைத்து ஸ்ருஷ்டித்திருக்கிறான்.
அவரவர்களின் புண்ணிய
பாவங்களை அநுசரித்து
அந்த அந்த ஜந்துக்களைப்
படைத்தாலும் அவற்றின்
மூலமாகச் சில தர்மங்களை
மக்களுக்கு உணர்த்தி
வைக்கிறான்.
மனிதர்களைப்
படைத்து அவர்கள் மூலமாகச்
சில தர்மங்களை வெளிப்படுத்துவது
கண்கூடாக இருப்பது நமக்குத்
தெரிந்ததே. இது பெரிய
அதிசயமல்ல. பறவைகளைப்
படைத்து அவற்றின் மூலமாக
லோகோத்தரமான தர்மங்களையும்
சிற்சில உபதேசங்களையும்
செய்து வைக்கிறானே; இதுதானே
பரம ஆச்சரியம்! இதைச்
சில பறவைகளை உதாரணமாக்கி
விளக்குகிறோம்.
ஆகாசத்தில்
எத்தனையோ பறவைகள் பறக்கின்றன.
ஜனங்கள் சரியான வழியில்
இருந்து தர்மங்களை அநுஷ்டித்து
ச்ரேயஸ்ஸை அடைய வேண்டுமென்று
எண்ணிச் சில தர்மங்களை
அவை நமக்கு உபதேசிக்கின்றன.
அவ்வப்பொழுது அவற்றின்
செயலைக் கண்டு நாம் தர்மபுத்தியைப்
பெற வேண்டும்.
குலிங்கம்
என்ற ஒரு பக்ஷி உண்டு.
இதற்கு, ஸாஹஸ பக்ஷி என்ற
பெயரும் வழங்குகிறது.
இது, 'ஸாகஸ வேலையைச் செய்யாதே'
(மா ஸாஹஸம் குரு) என்று
சொல்லிக் கொண்டே இருக்கும்.
இதன் வாயிலிருந்து வரும்
ஒலி 'ஸாகஸ வேலையைச் செய்யாதே'
என்ற ஓர் அர்த்த விசேஷத்தை
அறிவிப்பது போல் தோற்றம்.
ஆனால் இது செய்வது வேறு;
நேர் எதிரான காரியம்.
அதாவது, காட்டில் சிங்கம்
உணவைத் தின்றுவிட்டுப்
படுத்து உறங்கும். அப்போது
சிங்கம் வாயைத் திறந்து
கொட்டாவி விடும். அந்த
சமயத்தில், அதன் பற்களில்
ஒட்டிக்கொண்டிக்கும்
மாம்ஸத் துண்டுகளை இந்த
ஸாஹஸ பக்ஷி திடீரென்று
வாயில் புகுந்து எடுத்துக்
கொண்டு தப்பி வெளியில்
வந்துவிடுமாம். சிங்கம்
அதற்குள் வாயை மூடிக்கொண்டுவிட்டால்
இதன் கதி என்ன ஆகும்? இதைவிடத்
துணிச்சலான காரியம் வேறு
என்ன இருக்கிறது? கண்ணை
மூடித் திறப்பதற்குள்
இந்தச் செயலை இது செய்கிறது.
'கரணம் தப்பினால் மரணம்'
என்பது போல இல்லையா
இதுவும்?
இந்த ஸாஹஸ பக்ஷியைத்
தமக்கு ஒப்பாக வைத்து
ஸ்ரீமந் நிகமாந்த மஹா
தேசிகன் தயா சதகத்தில்
ஒரு விஷயத்தை நிரூபணம்
பண்ணுகிறார் - 'கோரம்
குலிங்க சங்குநேரிவ சேஷ்டிதம்
மே' என்று. "திருவேங்கட
முடையானின் தயைப்பற்றிப்
புகழ்வது மகரிஷிகளுக்கும்
அரிதான காரியம். அப்படியிருக்க
நான் அதில் இழிவது அதிஸாஹஸமான
வேலை. இதை அறிந்தும், ஸாஹஸமான
வேலையை செய்வது தவறு
என்று பிறருக்கு உபதேசித்தும்
இருக்கும் நான் அந்த
பக்ஷிக்கு ஸமமாகவே ஆகிறேன்.
இப்படிப்பட்ட அடியேனை
திருத்திப் பணிகொள்ளப்
பிரார்த்திக்கிறேன்"
என்று.
இந்தப் பக்ஷியின்
மூலமாக நாம் அறிந்து
கொள்வது என்னவென்றால்
"பரோபதேசவேலாயாம் ஸர்வே
வ்யாஸ பராங்குசா: | ஸ்வஸ்வாநுஷ்டாநஸமயே
முநயோபி ந பண்டிதா: ||" என்பதே.
எத்தனையோ மகான்கள் மேடையில்
உட்கார்ந்து பிறருக்குத்
தர்மோபதேசங்களைச் செய்வார்கள்.
தாங்களும் தர்மசாஸ்திரங்களில்
சொல்லும் வகையிலேயே
சிறிதும் பிறழாமல் நடப்பார்கள்.
அவர்களைப் பற்றி நாம்
ஒன்றும் சொல்லவேண்டியதில்லை.
'குலிங்க சகுனியை போல்
கேவலம் வேஷதாரிகளாக மட்டும்
இருக்கிறார்களே. அவர்களைத்தான்
கவனிக்க வேண்டும். இவர்கள்
மேடையில் உட்கார்ந்து
மிகவும் பிரமாதமாக தர்மங்களை
உபதேசிப்பார்கள். "சந்தியா
வந்தனம் செய்ய வேண்டும்;
பகவத் ஆராதனம் செய்ய
வேண்டும்; கொலை செய்யக்
கூடாது; திருடக் கூடாது;
வெங்காயம் முதலியவற்றை
சாப்பிடக்கூடாது" என்று
இப்படியெல்லாம் பிறர்
மனதை கவரும் வகையில்
உபதேசிப்பார்கள். ஆனால்
இவர்கள் வீட்டில் சாலக்ராமமே
இராது. பூஜைக்கு வழியே
இல்லை. யாராவது பார்க்கும்போது
புளியைச் சிறு உருண்டையாக்கி
சாலக்ராமம் என்று பிறர்
பிரமிக்கும்படி செய்து
ஆடம்பரப்படுத்துவார்கள்.
வெங்காயம், பூண்டு, முட்டை
கோசு, பீட் ரூட் முதலியவற்றைதான்
சமைத்து சாப்பிடுவர்.
இப்படி உலக இயற்கை. ஆகையால்
பிறருக்கு உபதேசம் செய்வது
ஒன்று; தான் அநுஷ்டிப்பது
மற்றொன்று என்ற ரீதியில்
ஜனங்கள் இருக்கிறார்கள்.
அவர்களைப் பார்த்து நாம்
ஏமாந்து விடவேண்டாம்
என்னும் அர்த்தத்தை இந்த
பக்ஷி உலகத்துக்கு அறிவிப்பதபோல்
இருக்கிறது.
ஆனைச் சாத்தன்
என்ற ஒரு பக்ஷி உண்டு.
இதை ஜனங்களுக்கு, "காலை
எழுந்தவுடன் பகவன் நாமங்களைச்
சொல்லுங்கள். 'க்ருஷ்ணா,
க்ருஷ்ணா, ஹரி ஹரி' என்று
பகவத் கீர்த்தனம் செய்து
எழுந்திருங்கள். இது
தான் உத்தாரகம்" என்று
அறிவிக்கிறது, தான் அநுஷ்டித்துக்
காட்டி.
இந்த பக்ஷி 'கீசு
கீசு' என்ற கத்தும். உலகத்தில்
ஒருவனுக்கு க்ருஷ்ணன்
என்றும், தேசிகன் என்றும்,
ஸ்ரீநிவாசன் என்றும்
பெயர் வைப்பதுண்டு. காலக்ரமத்தில்
அவனைக் கூப்பிடும்போது,
ஸ்ரீநிவாசனை 'சீனு' என்றும்,
தேசிகனை 'தொச்சு' என்றும்,
க்ருஷ்ணனை 'கிச்சு' என்றும்
அழைப்பது வழக்கம்.
இந்த
பக்ஷி காலையில் எழுந்ததும்
'க்ருஷ்ணா க்ருஷ்ணா' என்று
சொல்வதற்கு பதிலாக,
'கீசு கீசு' என்று (கிச்சு
- கிச்சு) என்று கத்துகிறது.
மனிதர்களே கொச்சையாக
சொல்லும்போது, பறவைகளைப்பற்றி
சொல்ல வேண்டுமா? காலையில்
ஆயர்பாடியில் முனிவர்களும்
யோகிகளும் 'ஹரி ஹரி' என்று
சொல்கிறார்கள். இந்த
பக்ஷிகள் க்ருஷ்ணா க்ருஷ்ணா
என்று சொல்லுகின்றன.
இதை மனதில் வைத்துத்தான்
கோதைப் பிராட்டி 'கீசு
கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்
கலந்து பேசின பேச்சரவம்'
என்று சொன்னாள்.
காகம்
- இந்த பறவையை மனிதர்கள்
மிகவும் இழிவாகச் சொல்லுவார்கள்.
ஒரு மனிதன் எல்லா விஷயத்திலும்
ஆசைப்பட்டு அதிகப் பரப்பைக்
காட்டினால் அவனைக் 'காக்காய்
மாதிரி பறக்கிறானே!' என்று
பேசுவதுண்டு. இதிலிருந்தே
காகம் எவ்வளவு இளப்பம்
என்பது தெரியவரும். ஒரு
மாமரத்தில் குயிலும்
காக்கையும் வசித்து வந்தன.
இதை ஒருவன் பார்த்தான்.
குயில் மிகவும் மதுரமாகப்
பாடுகிறது. காக்கையோ
கர்ணகடூரமாகக் கத்துகிறது.
இதைக்கண்டதும், "இரண்டும்
நிறத்தில் ஒன்றாக இருந்தாலும்
இவை இரண்டுக்கும் ஒரே
இடத்தில் வாஸத்தைப் பிரமன்
கற்பித்தானே; அவனையல்லவா
நிந்திக்க வேண்டும்?
இந்தக் காகத்தை ஏன் நிந்திக்க
வேண்டும்?" என்றான்.
இப்படியெல்லாம்
காகத்துக்கு இழிவு இருந்தபோதிலும்
இதற்கு உள்ள ஓர் உத்தம
குணம் யாருக்குமே கிடையாது.
நாம் சாப்பிட்டதும் எச்சில்
இலையை வாசலில் போட்டு
விடுகிறோம். அதை ஒரு
காகம் பார்த்ததும் தன்
இனத்தார் எல்லாரையும்
கூப்பிட்டு உடன் உண்கிறது.
'ஏக: ஸ்வாது ந புஞ்ஜித, புஞ்ஜித
தஸபி: ஸஹ' என்ற சாஸ்திரத்தின்படி
நடக்கிறது. 'தான் ஒருவனே
வாழ ேவ்ண்டும், மற்றவர்
அழிந்துவிட வேண்டும்'
என்ற கெட்ட குணம் இதற்கு
இல்லை. மனிதர்களில் இந்தக்
குணம் பெரும்பாலும் உண்டு.
ஓர் அன்ன சத்திரத்தில்
நானாவிதமான பக்ஷணங்களோடு
வந்தவர்கள் எல்லோருக்கும்
ததீயாராதனை செய்து பத்துப்
பத்து ரூபாய் பூரி தானம்
வழங்கப் போகிறார்கள்
என்று நன்றாகத் தெரிந்தபோதிலும்
பிறருக்கு இதைச் சொல்லவே
மாட்டான். "இம்மாதிரி
நடக்கப் போகிறதாமே;
இது உனக்குத் தெரியுமா?
என்று பிறர் இவனைக் கேட்டாலும்,
"ஐயோ! இது நடக்கப்போகிறது
என்று முன்பு சொன்னது
வாஸ்தவம். ஆனால் ஏதோ
அஸந்தர்ப்பத்தினால்
ஒரு மாதம் கழித்து நடத்துவதாகத்
தீர்மானித்துவிட்டார்கள்.
ஆகையால் நானும் அங்கே
போகப் போவதில்லை" என்று
சொல்லிவிட்டு, அவனுக்குத்
தெரியாமல் இவன் போய்
வருவான். ஆகையால் காகத்தைவிட
இவன் கேடு கெட்டவன். இதை
மனத்தில் வைத்து ஒரு
கவி சொல்லுகிறான்:-
காகயாசகயோர்
மத்யே வரம் காகோ ந யாசக:
| காக: காகாநாஹ்வயதே யாசகோ
ந து யாசகம் ||
ஸீதையினிடம்
அபராதம் செய்து ப்ரஹ்மாஸ்திரத்தினால்
அடிப்பட்டுப் பிழைத்
தெழுந்த காகம் ஆகாயத்தில்
பறந்துகொண்டே, 'ஸீதைக்கு
ஸமம் யார் [கா?] தயையில்
ராமனுக்கு ஸமம் யார்?
[க: ] என்று சொல்லிற்றாம்.
அதனால்தான் அந்த இனத்துக்கே
'காக:' என்ற பெயர் வழங்கியதாம்
என்றான் ஒரு கவி. 'காக்கையின்
வாயிலும் கட்டுரை கொள்வர்'
என்றார் ஆழ்வார். இதை
முன்னிட்டுத்தான் காகத்திற்கு
அன்னமிடுகின்றனர். மரத்தில்
உண்டான தளத்தைக் கொண்டுதான்
குயில் ஜீவிக்கிறது.
சகோர பக்ஷி - இதன் ஆஹாரம்
சந்திர கிரணம் மட்டும்தான்.
இதன் குணம் மிகவும் உயர்ந்தது.
தசரத சக்கரவர்த்தி தன்
மகனான ராமனுக்கு முடிசூட்ட
நினைத்தான். ஜனங்களின்
அநுமதியை நாடினான். ஜனங்களும்,
'நாங்கள் இதை வெகு காலமாகவே
எதிர்பார்த்தோம். நீர்
இப்போதுதான் ஆசைப்படுகிறீர்,
நீர் எல்லோருக்கும்
சக்கரவர்த்தியாக இருந்தாலும்
உமது புதல்வனான ராமனைத்தான்
நாங்கள் விரும்புவோம்;
உம்மை நாங்கள் விரும்பமாட்டோம்.
இது
நியாயமா என்றால் இதுதான்
நியாயம் என்போம். எவ்வளவோ
தாகத்துடன் சகோர பக்ஷி
வாடியிருந்த போதிலும்
சந்திர கிரணத்தைத் தான்
எதிர்பார்க்கும். அது
தவிர சந்திரனுக்கு காரணமான
க்ஷீராப்தியை கூட விரும்பாது.
அது போல நாங்கள் ராமனை
விரும்புவோமே தவிர அவனுக்கும்
தகப்பனான உம்மை விரும்பமாட்டோம்'
என்றனர்.
தேவே ஸதிதேபி
தநயம் தவ ராமபத்ரம் லோக:
ஸவயம் பஜது நாம கிமத்ர
சித்ரம் | சந்த்ரம் விநா
ததுபலம்பநஹேதுபூதம் க்ஷீரோதமாச்ரயதி
கிம் த்ருஷிதஸ் சகோர:||
சாதக
பக்ஷி என்று ஒரு பறவை.
இது உயர்ந்த பறவை. இதன்
குணம் எல்லோராலும் போற்றத்தக்கது,
உலகில் சிலரை பரமைகாந்தி
என்று புகழ்கிறோமே.
அவர்களுக்கு இது உதாரணமாம்.
அவர்கள் பகவானிடத்திலேயே
மனத்தைச் செலுத்தி 'உண்ணும்
சோறு பருகு நீர் தின்னும்
வெற்றிலையும் எல்லாம்
கண்ணன். வாசு தேவ: சர்வம்
என்று எண்ணியிருப்பவர்கள்.
பகவானைத் தவிர வேறு தேவதைகளிடத்தில்
மனதை செலுத்தாதவர்கள்.
ச்ரீய: பதியான நாராயணன்தான்
உயர்ந்த தேவதை. 'அங்கான்யந்யா
தேவதா:' என்று வேதத்தில்
சொன்னபடி, மற்ற தேவதைகள்
அவனுடைய உடல்; அதுவே தவிர
அவர்கள் பிரதான தேவதைகள்
ஆகமாட்டார்கள் என்று
நினைத்துப பகவானிடத்திலேயே
பக்தியைச் செலுத்துவார்கள்.
க்ஷுத்ர தேவதைகளைக் கண்ணெடுத்தும்
பார்க்கமாட்டார்கள்.
'உன்னால் அல்லால் யாவராலும்
ஒன்றும் குறை வேண்டேன்'
என்றபடி, உயர்ந்த புத்தியைப்
பெற்றவர்கள்.
அந்த ஸர்வேச்வரன்
கொடுத்த புண்ய பாபத்துக்கு
அநுகுணமாகப் பெற்ற பதவியைக்
கொண்டுதான் தங்கள் தங்கள்
வேலையைச் செய்கிறவர்கள்
தேவதாந்தரங்கள். ஒழுகுசங்கிலியில்,
நம்மைப் போல் அவர்களும்
கட்டுப்பட்டவர்கள். குற்றம்
செய்தவர்களை ஒரு காராக்ருஹத்தில்
கைகளிலும் கால்களிலும்
விலங்கைப் பூட்டி ஒர்
அரசன் அடைத்து வைத்தான்.
அதிலிருந்து கட்டை அவிழ்த்து
வெளியில் வர சக்தியற்றவர்களாக
அவர்கள் தவித்துக் கொண்டு
இருக்கிறார்கள். அதில்
ஒருவன் தன்னைப் போல்
கஷ்டத்தோடு இருப்பவனை
பார்த்து, 'ஐயா, உமக்கு
நான் பூஜை செய்கிறேன்;
பலி கொடுக்கிறேன்; கோவிலைக்
கட்டுகிறேன்; என்னை எப்படியாவது
அவிழ்த்துவிடும்' என்று
சொன்னால் மற்றவன் என்ன
செய்வான்? அது போலத்தான்
தேவாதாந்தரங்களை நாம்
பஜிக்கலாகாது என்ற த்ருடமான
எண்ணத்தை யார் அடைந்திருக்கிறார்களோ
அவர்கள் தாம் பரமைகாந்திகள்.
மேலும் அந்த பகவானே நாம்
அடையும் எல்லா பலன்களுக்கு
உபாயம். அவனது கைங்கர்யத்தையும்
அவனிடத்தில்தான் பெறவேண்டும்.
அந்த கைங்கர்யத்ததைத்
தவிர வேறு எந்த பலனையும்
அவனிடத்திலும் எதிர்பார்க்க
மாட்டார்கள். சிலர்ஸ்ரீ
ஸ்ரீமானான நாராயணன்தான்
தெய்வம் என்று எண்ணி
தேவாந்த்ர கோவில்களுக்குச்
செல்லாமல் இருப்பார்கள்.
ஆனால் அந்த பகவானிடத்தில்
வேறு பலனை எதிர் பார்த்து
வேண்டிக் கொள்வார்கள்.
வீடு வாசல் மக்கள் செல்வம்
முதலிய பலனை அவனித்தில்
எதிர்பார்ப்பதுண்டு.
இவர்கள் ஏகாந்திகள்.
நிஷித்தமான வேலைகளை எப்படி
விட்டுவிடுவார்களோ
அதுபோல் காம்யங்களையும்
விட்டொழிப்பார்கள்
பரமைகாந்திகள். பரமா
ஏக அந்தி உன்று பிரித்தால்,
பிராட்டி, பகவான் இவர்களிடமே
நோக்குள்ளவர்கள் என்றும்,
ஆகையால் பரமை காந்திகள்
என்றும் சொல்லலாம்.
மா=லக்ஷ்மி. ஏக: பரமாத்மா
'ஏகோ நைக: என்பது ஸஹஸ்ர
நாமம். பர என்பதை இரண்டிடத்திலும்
சேரு. த்வந்த்வஸமாஸம்.
இந்த ஸமாஸத்தில் முடிவில்
இருக்கும் பதத்தை இரண்டிடத்திலும்
சேர்ப்பர். அதுபோல்
முதலில் உள்ள பதத்தையும்
இரண்டிடமும் சேர்க்கலாம்.
ஆக உத்த்ருஷ்டமான லக்ஷ்மி.
உத்த்ருஷ்டமான பகவான்
இரண்டு பேருமே ப்ராப்யம்.
ப்ராபகம் என்ற எண்ணமுடையவர்கள்
பரமை காந்திகள். இதனால்
ப்ராப்யத்வம் ப்ராபகத்வம்
இரண்டு பேருக்கும் உண்டென்று
மந்திரத்தில் சொன்ன
அர்த்தம் தெளிவாகிறது.
இப்படிப் பட்ட பரமைகாந்திகளுக்கு
சாதக பக்ஷி உதாரணமாகிறது.
''ஜகதி சாதகவத் க்ருதிந:'
என்றார் வேதாந்த தேசிகர்.
சாதக பக்ஷி ஆகாயத்திலேயே
வாயைத் திறந்துகொண்டு
பறந்துகொண்டிருக்கும்.
இது தண்ணீரைப் பருக இந்திரனையே
எதிர் பார்த்திருக்கும்.
இந்திரன் மேகம் மூலமாக
மழையைப் பெய்வித்தால்
அந்த மழையின் பிந்து
இதன் வாயில் விழும். அதைப்
பருகி இது சந்தோஷம்
அடையும். கிணற்றிலேயோ
குளத்திலேயே இருக்கும்
தண்ணீரை இது குடிக்காது.
எவ்வளவோ தாகமாக இருந்தபோதிலும்
ஆகாயத்தில் வாயைத் திறந்து
இந்திரனை எதிர் பார்க்குமே
தவிற மற்றொன்றை எதிர்பார்ப்பதில்லை.
இது இதன் உயர்ந்த குணம்.
'ஏக: க்ருதீ ஸகுந்தேஷு
யோந்யம் ஸக்ராந் ந யாசதே!'
என்று கவிகள் கூறுவர்.
இந்தப் பக்ஷியினிடமிருந்து
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது
பரமைகாந்த்யம்.
இந்தச்
சாதக பக்ஷியை ஒரு கவி
புகழ்ந்து பேசுகிறான்
- ஸந்த்யேவாஸ்மிந் ஜகதி
பஹவ: பக்ஷிண: ஸெளம்யரூபா:
தேஷாம் மத்யே மம து மஹதீ
வாஸநா சாதகேஷு | யைரத்யக்ஷைரத
நிஜஸகம் நீரதம் ஸ்மாரயத்பி:
ஸ்மருத்யாரூடம் பவதி
கிமபி ப்ரஹ்ம க்ருஷ்ணாபிதாநம்
||
"உலகத்தில் அழகான பக்ஷிகள்
எத்தனையோ இருக்கின்றன.
ஆயினும் சாதக பக்ஷியினிடத்தில்தான்
எனக்கு அபிமானம் அதிகம்.
ஏனென்றால், இது மேகஜலத்தைத்
தவிர வேறு நீரைப் பருகுவதில்லை.
ஆகையால், இதைக் கண்டதும்
மேகத்தின் ஞாபகம் வருகிறது.
மேகத்தின் ஞாபகம் வந்தவுடன்,
நீலமேக ஸ்யாமளனான கிருஷ்ணன்
ஞாபகம் வருகிறது. ஆக, சாதக
பக்ஷி தொடர்பாகப் பரப்ரஹ்மமாகிற
கிருஷ்ணனை நினைப்பூட்டுகிறபடியால்
எல்லாப் பக்ஷிகளைக் காட்டிலும்
இது உயர்ந்தது. அதனால்
இதனிடத்தில் எனக்கு அதிக
அபிமானம்'.
இப்படி ஒவ்வொரு
பக்ஷியின் மூலமாகவும்
உலகத்திலுள்ள மனிதர்கள்
ஒவ்வொரு விஷயத்தைத்
தெரிந்துகொள்ள வேண்டும்.
இதற்காகவே எப்பெருமான்
பக்ஷிகளைப் படைத்திருக்கிறான்.
உதாரணமாகச் சிலவற்றைக்
கூறினோம். ஸ்ரீராமபிரானும்,
'கபோதோ வாநரஸ்ரேஷ்ட
கிம் புநர்மத்விதோ ஜந:'
என்று புறாவின் மூலமாக
சரணாகதி ரக்ஷணத்தை அவசியம்
செய்ய வேண்டுமென்பதை
உணர்ந்து "அறிவில்லாத
பறவையினத்தில் பிறந்த
புறாவே தன் சத்ருவுக்கேத்
தன் பிராணனைக் கொடுத்துக்
காப்பாற்றியது என்றால்
சரணாகத ரக்ஷக குலத்தில்
பிறந்த நான் சத்ருவின்
தம்பியான அடைக்கலமென்று
வந்த விபீஷணனை என் உயிரைக்
கொடுத்தாவது காப்பாற்றாவிட்டால்
உலகம் என்னை நிந்திக்கும்"
என்றான்.
குருவிகளின்
ஸ்வபாவத்தைப் பார்ப்போம்.
குஞ்சுகளுடன் தம்பதிகளான
குருவிகள் கூண்டில் இரவில்
வசிக்கும்பொழுது விடிந்ததும்
தீனி தேடித் தனித்தனியாக
வெளியில் சென்றுவிடும்.
இரவில் மறுபடியும் தம்
இருப்பிடம் வந்து சேரும்.
ஓர் இரவுகூட ஆணை விட்டுப்
பெண்ணோ, பெண்ணை விட்டு
ஆணோ தனித்து வசிக்காது.
இன்னொரு கூட்டிலும்
வாசம் செய்யாது. இரவுவேளை
வந்தால், அந்த அந்த ஜோடி
தங்கள் தங்கள் இருப்பிடத்திற்குக்
கட்டாயம் வந்து சேர வேண்டும்
என்ற நிர்ப்பந்தம் உண்டு.
ஏதாவது காரணத்தினால்
ஓர் இரவு வெளியில் தங்க
நேர்ந்தால் மறுநாள் காலையில்
ஒன்றுக்கொன்று சண்டை
ஏற்படும்; தங்கள் இனத்தோடு
சேர்க்க ஸம்மதிக்காது.
பறவைகளாக இருந்தபோதிலும்
இவற்றுக்கு ஏற்பட்ட கட்டுப்பாடு
எவ்வளவு அழகாக இருக்கிறது
என்பதைக் கவனியுங்கள்.
பாதிவ்ரத்யமும் பரதாரபராங்முகத்வமும்
இவற்றுக்கு முக்கியமான
தர்மம். அருந்ததி வஸிஷ்டர்களை
கூறுவதுண்டு. பதிவ்ரதத்தில்
இவர்களுக்கு ஒப்பானவர்கள்
இல்லை. ஆகையால்தான் விவாஹ
ஸமயத்தில் இரவில் அருந்தி
நக்ஷத்ரத்தையும் வஸிஷ்டரையும்
பார்க்கச் சொல்வது.
இந்த விஷயத்தை நாம் இவற்றினிடமிருந்து
கற்றுக்கொள்ள வேண்டும்.
குருவிக்காரன் என்று
நாம் சிலரை அழைக்கிறோமே;
அதற்குக் காரணம் என்ன
தெரியுமா? குருவித் தம்பதிகள்
எப்படியோ அப்படிப்பட்டவர்கள்தாம்
இவர்களும், இவர்களிலும்
ஆணும் பெணணும் ஜீவனத்துக்காகப்
பொழுது விடிந்ததும்
தனித்தனியாக எங்கு வேண்டுமானாலும்
செல்லலாம். அஸ்தமித்துவிட்டால்
இருவரும் தங்கள் இருப்பிடம்
வந்தே சேரவேண்டும். அப்படி
இல்லாவிட்டால் இவர்களைத்
தங்கள் இனத்திலிருந்து
தள்ளி விடுவார்களாம்.
இது இவர்களின் ஸங்கேதம்.
ஆகையால்தான் எங்களுக்குக்
குருவிக்காரர் என்ற பெயர்
உண்டாயிற்று என்று அவர்களே
சொல்லும் வார்த்தை.
கிளி
மதுரமாகப் பேசும். சொன்னதைச்
சொல்லுமாம் கிளிப்பிள்ளை.
ஸ்ரீரங்கம் முதலிய திவ்யதேசங்களிலும்
அரசர்களின் அரண்மனைகளிலும்
கிளியைக் கூண்டில் அடைத்து
அதன் மதுரமான பேச்சைக்
கேட்டு ஆனந்திக்கின்றனர்.
'சுக பஞ்ஜரபந்தஸ் தே மதுராணாம்
கிராம் பலம்' என்றார்கள்
புலவர்கள். இதிலிருந்து
நாம் அறிவது - ஒருவனுக்கு
ஏதாவது ஒரு விதத்தில்
மேன்மை இருந்தால் அவனுக்குக்
கிளியைப் போல் பந்தம்
ஏற்படும் என்பது. ஆகையால்
ஒரு மேன்மையோடு உள்ளவன்
தன்னைக் காப்பாற்றிக்
கொள்ள ஜாகரூகனாக இருக்கவேண்டும்.
உலகத்தில் ஒருவன் நல்ல
குணத்தையோ தோஷத்தையோ
அடைவது சேர்க்கையினால்தான்.
ஸம்ஸர்கஜா தோஷ-குணா
பவந்தி. ஸஹவாஸத்தினால்தான்
நல்லது கெட்டதை அடைகிறான்.
நல்லவருடன் சேர்ந்தால்
ஸத்புத்தி உண்டாகிறது;
கெட்டவருடன் சேர்ந்தால்
தீய புத்தி உண்டாகிறது.
ஒரே பெற்றோருக்குப்
பிறந்த கிளிகளில், ஒன்று
முனிவர்களின் சேர்க்கையினால்
நற்புத்தியை அடைந்து
நற்காரியம் செய்தது.
மற்றொன்று, வேட்டுவச்சேரியில்
வளர்ந்து அவர்களின் ஸஹவாஸத்தினால்
தீய புத்தியைப் பெற்று,
'தஹ பச' என்ற கெட்ட வார்த்தைகளைச்
சொல்லி வந்தது. நல்ல
ஸம்ஸர்க்கம் நமக்கு வேண்டுமென்பதை
இதிலிருந்து தெரிந்து
கொள்ளலாம். இப்படி எல்லா
ஜந்துக்களிடமிருந்தும்
நாம் கற்க வேண்டிய விஷயங்கள்
பல உள்ளன என்பதை உணர்ந்து
நடந்துகொள்ள வேண்டும்.
ஹம்ஸத்தைப்
பார்ப்போம். ஜலத்தையும்
பாலையும் கலந்து கொடுத்தால்
அது பாலை மாத்திரம் சாப்பிடும்.
ஜலத்தை பருகுவதில்லை.
ஹம்ஸ ஜல க்ஷீரந்யாயம்
என்பதுண்டு. இதன் மூலம்
ஒருவனிடம் உள்ள தோஷங்களை
விட்டு விடவேண்டும்.
குணங்களை மாத்திரம் எடுத்துக்
கொள்ள வேண்டும் என்பது.
எப்பொழுதும் குணங்களைத்தான்
புகழ வேண்டும். அவனிடமுள்ள
தோஷங்களைப் பார்க்க
கூடாது. குணம் தோஷம்
இரண்டும்தான் மனிதனுக்கு
இயற்கையாக உண்டு என்று
எண்ணி புகழ்வது தான்
உத்தமம்.
இங்கு ஒரு வேடிக்கை
- ஸ்ரீபாஷ்ய காரர் விஷயமாக
ஸ்வாமி தேசிகன் அநுபவம்
-
ஒரு பொய்கை கரையில்
வாட்டத்தோடு அன்னம்
இருந்தது. அது ஏன் அப்படி
என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு மற்றொருவர் 'சோர்வுதான்
காரணம்' என்றார். 'அதற்குக்
காரணமென்ன?' 'அதற்கு ஏற்பட்ட
பெருமை போனது'. அதுதான்
ஏன் ஏற்பட்டது? இயற்கையாக
அன்னத்துக்கு ஏற்பட்டது.
நீரையும் பாலையும் பிரிக்கும்
தன்மை. அது போனபடியால்
அதற்கு சோகம். ஏன் அத்தன்மை
நீங்கியது? எம்பெருமானார்
புகழ் உலகெல்லாம் பரவிற்று.
புகழ் என்பது வெண் சங்குக்கு
ஸமமாக வெளுப்புடையது.
அதன் வெள்ளை நிறம் எங்கும்
கலந்துவிட்டது. ஆக நீரெல்லாம்
பால் ஆகிவிட்டது. இப்படி
நேர்ந்ததால் பாலையும்
நீரையும் பிரிக்க முடியவில்லை.
அதனால் தங்களுக்கு ஏற்பட்ட
சக்தி இழந்துவிட்டதே
என்று அதற்கு கவலை. அதனால்
பல சோகமாம் அதற்கு.
"அலர்ந்த
அம்புயத்தில் இருந்து
தேன் அருந்தி இன்னகல்
இங்குலார் அசைந்து அடைந்த
நடை கொளாதது அனம் ஏனோ?
நலம் தவிர்ந்ததால் அதன்
கொல் ? நாவின் வீறு இழந்ததால்
நாவணங்கு நாதர் தந்த
நாவின் வீறு இழந்ததால்
என் சலம் தவிர்ந்து வாதம்
செய்து அடி முண்டமிண்டரை
சரிவிலேன் என களைத்து
உரைத்த யதிராசர் தம்
வலம் தரும் கைய நாயனார்
வளைக்கு இசைந்த கீர்த்தியால்
வாரி பாலதாம் அதென்றும்
மாசில் வாழி வாழியே" என்பதாம்.
இனி கருடனைப்பார்ப்போம்.
இது பூஜிக்கத் தகுந்தது.
இந்திரனிடம் சென்று போர்
செய்து, அம்ருத கலசத்தை
கொண்டுவந்து, கொடுத்து
உதவி செய்தது. கருட பஞ்சாக்ஷரத்தில்
கருட தண்டகத்திலும் இதன்
பெருமையை விஸ்தருதம்.
இதனுடைய நிழலே விஷத்தை
போக்கடிக்கும். இதன்
த்வனி மங்களகரம். கருட
சகுனம் எனப் புகழ்வதுண்டு.
நாக பாசத்தால் கட்டுண்டு
இருக்கும் சமயம் பகவானுக்கே
ஓடி வந்து உதவி செய்தது.
இது வேதமயம். பரதேவதை
பகவான் ஸ்ரீமான் நாராயணன்
என்று வேதம் தெரிவிக்கிறதே.
அப்படி பகவானை தன்னிடத்தில்
எழுந்தருளப் பணி பரதேவதா
நிஷ்கர்ஷத்தை நமக்கு
காட்டி கொடுக்கிறது.
அது உயர்ந்தது ஆழ்வாரும்
இந்த ஸேவையை வேண்டிக்
கொண்டார்.
"கருட வாஹனனும்
நிற்க ஜ்டேஷ்டைதன் மடியகத்து"
என்றும், திருமாலையிலும்
சொன்னார்.
இவ்வாறு
பறவைகள் நடக்கும் பலவகையில்
உபகரிக்கின்றன. அதைக்
கொண்டு நாமும் திருந்த
வேண்டும்.
ஆக ஹம்ஸம்
ஸாரக்ராஹி. அதுபோல்
நாம் இருக்கவேண்டும்.
கடவுளின் படைப்பு எதுவும்
வீணில்லை. அருகம்புல்
நீர் வ்யாதிக்கு உபயோகப்படும்
என்பதையும் தெரிந்து
கொண்டிருக்கிறோம்.
இப்படி எல்லா புல் பூண்டுகளும்
நமக்கு உபயோகப்படத்தான்
எம்பெருமான் படைத்திருக்கிறான்.
மேலும்
அன்னங்களுக்கு முட்டை
இடத்தெரியும். குஞ்சு
பொரிக்கத் தெரியாது.
ஆகையால் காக்கை கூண்டில்
முடடையிட்டு விடும்.
காக்கைகள் தன் முட்டை
என்று குஞசு பொரிக்கும்.
பெரியதானவுடன் இது நிறத்தையும்
குரலையும் பார்த்து இவை
நம் இனத்தைச் சேர்ந்ததல்ல
என்று துரத்தும். இவைகளின்
ராமர்த்யத்தைப் பார்க்கவும்.
இதை காளிதாஸன் சொல்கிறான்.
சிக்ஷை இல்லாபமலே அவைகளுக்கு
பருத்வம் ஸாமர்த்யம்
உண்டு என்பதை "ஸ்த்ரிணாம்
அசிஷிதபருத்வம் என்று.
மேலும்
கோழிகள் காலை நேரத்தை
தெரிவிக்கின்றன. பொழுது
விடிந்தமையை அவைகள் எடுத்து
உரைப்பது போல் 6 அறிவு
படைத்திருந்தும் நாம்
உணர்பதில்லை. ஆண்டாளும்
கோழி அழைப்பதன் முன்னம்
குடைந்து நீராடுவான்
என்றாள். வந்தெங்கு கோழி
அழைத்தனகாண் என்றும்
சொன்னார்.
கோழி கூ
வென்னுமால் தோழி நான்
என் செய்வேன். ஆழி வண்ணர்வரும்
பொழுதாயிற்று. கோழி
ழு என்னுமால் என்ற பெரிய
திருமொழி பாசுரத்தையும்
அங்குள்ள வ்யாக்யானத்தையும்
கவனிக்கலாம். பொழுது
விடிந்தமையைக்காட்டும்
கோழிகளை கண்ணனோடு உரங்கும்
பெண்கள் இவை இவ்வாறு
காட்டுகின்றனவே. கண்ணன்
எழுந்து சென்றுவிடுவான்
என்று பெருமையால் வெய்கின்றார்கள்
என்பது பாகவதம்.
1. கோழிபோல்
இருப்பான். 2. கொக்கு போல்
இருப்பான். 3. உப்புபோல்
இருப்பான். 4. உம்மைப்போல்
இருப்பான் என்பது உண்டு,
கோழிபோல்
இருத்தல் - கோழி மும்முறை
கத்தும். அஷ்டாசரம், த்வயம்,
சரமஸ்லோகம் மூன்றையும்
நினைவு படுத்தும். ஸ்வர
பேதம் கத்துதலுக்கு உண்டு.
மேல் குப்பையுல் ஸாரக்
ராஸி.
2. கொக்கு - சிறிய
மீனை விட்டு பெரிய மீனை
அடைவதற்கு த்யானம் செய்வது
போல் இருக்கும். நாமும்
அல்ப சுகங்களை விட்டு
ப்ரஹ்மத்யானம் செய்ய
வேண்டும்.
3. உப்பு கறையும்
வஸ்து நாமும் ஆடி ஆடி
அகம் கரைந்து என்று இருக்க
வேண்டும்.
4. ததியாராதனத்தில்
ஒரு பாகவதர் பொறுமையுடன்
இடத்துக்காக 5-6 தடவை ததீயாராதனை
ஆனபிறகும் பொறுத்திருந்தார்.
அவனைப் பார்த்து பட்டர்
சொன்னது இந்த வார்த்தை.
இப்படி இருத்தல்தான்
வைஷ்ணவ லக்ஷணம் என்று.
ஜதுகா
வெளவால். இதற்கு இரக்கையுண்டு.
பற்களும் உண்டு. மிருகங்களுக்கும்
பக்ஷிகளுக்கும் வரும்
சண்டை ஒரு சமயம் மிருகங்களுக்கு
ஜயம் வரும்போல் இருந்தால்
எனக்கு வற்கள் உண்டு.
நான் மிருக இனத்தை சேர்ந்த்வன்
என்று சொல்லும் பக்ஷிகளுக்கு
ஜயம் வருவதுபோல் இருந்தால்
எனக்கு இறக்கைகள் உண்டு.
ஆக நான் பக்ஷியின் இனம்
என்று சொல்லுமாம். இப்படித்
தன்னை காப்பாற்றிக் கொள்ளும்
இப்படி ஸ்வர்த மரக்ஷணத்தில்
ஜாக ரூகர்களாக இருக்க
முயற்சிக்க வேண்டும்.
இப்படி எத்தனையோ ஜந்துக்கள்
மூலம் தெரிந்து கோள்ள
வேண்டிய விஷயங்கள் உள்ளன.
ஒரு
காட்டில் புள்ளிமான்
விளையாடிக்கொண்டிருந்தது.
நீர் பருக குளம் சென்றது.
அங்கு தன் நிழலைக்கண்டது.
புள்ளிமான் ஆனபடியால்
அதன் கொம்பு வளைந்து
வளைந்து அழகைக் கொடுத்தது.
ஈச்வரனை துதி செய்தது.
நீர் சாப்பிடும்போது
அது தண்ணீரில் காணப்பட்டது.
கால் மெல்லியது. விகாரமாக
இருந்தது. அது நினைத்ததாம்
- தலையில் கொம்பு அழகாக
உள்ளதே, காலை மாத்திரம்
ஏன் நமக்கு இப்படி படைத்தான்.
கடவுளின் செயல் நன்றாக
இல்லையே என்று. அப்பொழுது
நரி புலி இதைப்பார்த்து
துரத்தி வந்தது. இதன்கால்
மெல்லியதானபடியால் வேகமாக
ஓட ஸெளகர்யம் உண்டாயிற்று.
அப்பொழுது பகவானை ஸ்துதி
செய்தது. தன்னை மறைத்துக்
கொள்ள வேண்டும் என்று
நினைத்து ஒரு புதரில்
ஓடிற்று. இதன் கொம்பு
அதில் சுற்றிக் கொண்டது.
இதனை செல்லவிடாமல் தடை
செய்தது. அந்த ஸமயம் புலி
இதனை பிடித்துக் கொண்டு
இதை வதைத்தது. அப்பொழுது
நினைத்ததாம் கொம்பின்
அழகை நினைத்து துதி செய்தோம்.
காலை நினைத்து பகவானை
நிந்தித்தோம். இப்பொழுது
கொம்புதானே நமக்கு ம்ருத்யு
என்றதாம். ஆக பகவானின்
படைப்பு விசித்ரமானது.
*****
|