பாசம்
ஸர்வேச்வரன் உலகத்திலுள்ள
ஜனங்களைப் படைக்கும்
போதே ஒருவரிடம் ஒருவருக்குப்
பாசம் உண்டாகும்படியே
பாசத்தையும் சேர்த்துப்
படைக்கிறான். பாசம் என்றால்,
'இவன் நம்முடையவன்; நாம்
இவனைச் சேர்ந்தவன்' என்ற
அபிமானம், ஆசை. உலகத்தில்
பரஸ்பரம் அபிமானத்துடன்
தான் மக்கள் வாழ்ந்து
வருகிறார்கள். குழந்தைகளிடத்தில்
தாய் தந்தையருக்கு இருக்கும்
பாசத்தை நாம் பார்த்தே
வருகிறோம். இது மாத்திரமல்ல,
கணவன் மனைவியினிடத்திலும்,
மனைவி கணவனிடத்திலும்,
அண்ணன் தம்பிகளிடத்திலும்,
தம்பி அண்ணனிடத்திலும்
கொண்டுள்ள பாசத்தைப்
பார்த்துத்தான் வருகிறோம்.
தன்
குழந்தை அழகில்லாமல்
இருந்தாலும் குரூபமாக
இருந்தாலும் அதனிடத்தில்
பெற்றோருக்கு ஒரு விதமான
பாசம் இருந்தே வருகிறது.
இந்தக் குழந்தையினிடத்திலுள்ள
அபிமானத்தில் லவலேசமும்
பக்கத்துக் குழந்தை அழகாக
இருந்தபோதிலும் அதனிடத்தில்
பாசம் உண்டாவதில்லை.
இம்மாதிரியே ஈச்வரன்
இவர்களை ஸ்ருஷ்டித்து
வைக்கிறான். தன் குழந்தையின்
உடலிலுள்ள துர்நாற்றமோ,
கண் முதலிய அவயங்களிலுள்ள
அழுக்குப் போன்றவையோ
தெரிவதில்லை. அவ்வளவு
அதனிடத்தில் உள்ள பாசம்.
மனைவியினிடத்தில் உள்ள
பாசம் அவளிடமுள்ள தோஷத்தையும்
அழுக்கையும் காட்டுவதில்லை.
'ஸர்வ:
காந்தம் ஆத்மீயம் பச்யதி'
என்று கவி கூறுவது உண்டு.
அதாவது தன்னைச் சேர்ந்த
வஸ்து எப்படி இருந்தாலும்
மிகவும் அழகுடையது என்றே
அனைவரும் பார்ப்பர்.
ஒரு பொருள் தன்னைச்
சேர்ந்ததாக ஆகிவிட்டால்
அதனிடத்தில் இவனுக்குப்
பாசம் வந்துவிடுமாகையால்
எவ்வளவு குற்றங்கள் இருந்தபோதிலும்
அவை இவன் கண்ணுக்குப்
புலப்படா. பிறர் இவனிடத்தில்
ஆயிரம் தூஷணங்கள் சொல்லிக்கொண்டிருந்த
போதிலும் இவன் காதில்
அவை விழா. இம்மாதிரியான
பாசம் உண்டாகும்படி ஈச்வரன்
இவர்களைப் படைக்கிறான்.
காக்கையை
நாம் பார்த்திருக்கிறோம்.
அது பார்வைக்கு அழகில்லாதது;
வர்ணத்திலும் கருநிறம்
கொண்டது. நிறத்தில்
ஏதோ ஒரு விதமாக இருந்தபோதிலும்
அதன் குரலாவது நன்றாக
இருக்கிறதா என்றால்,
அதுவுமில்லை. குயில்
போலவா அது கத்துகிறது?
கிளி போலவா நிறத்தைக்கொண்டுள்ளது?
இப்படியிருக்க அதன் குஞ்சு
மாத்திரம் எப்படி நன்றாக
இருந்துவிடும்? ஜனங்கள்
எல்லா விதத்திலும் வெறுக்கக்கூடிய
குஞ்சைக் காகம் பொன்குஞ்சு
என்றே சொல்லுகிறது.
'காக்கைக்குத் தன் குஞ்சு
பொன் குஞ்சு' என்று பழமொழியையும்
கேட்டிருக்கிறோம். காக்கைகளே
இப்படி நினைத்தால் ஆறறிவுள்ள
மனிதர்கள் ஏன் அப்படி
நினைக்க மாட்டார்கள்?
இதெல்லாம்
ஒரு புறம் இருக்கட்டும்.
ஒவ்வொருவனும் தன்னை
எப்படி நினைக்கிறான்,
பாருங்கள். தன்னைப் போல்
அழகுள்ளவன் யாருமே இல்லை
என்று நினைக்கிறான்.
'நான் தான் அழகில் மன்மதன்'
என்றே சொல்லுகிறான்.
உண்மையில் அவன் கறுப்பாகவும்,
விகாரமான முகத்தை உடையவனாகவும்,
ஏற்றக் குறைபாடுகள் கொண்ட
கைகால்களைப் பெற்றுள்ளவனாகவும்
இருப்பான். அவன் நினைக்கிற
நினைவோ, 'உலகத்திலேயே
நான்தான் எல்லாவிதத்திலும்
மேன்மையானவன்' என்பது.
இவ்விஷயம் பெண்களுக்கு
நன்றாகத் தெரியும். காலையில்
எழுந்ததும் கண்ணாடிப்
பார்த்துக் கொண்டு நிற்பார்கள்.
பார்க்கிறவர்கள், "எல்லா
வேலைகளையும் விட்டுக்
கண்ணாடியில் உன்னையே
பார்த்துக் கொண்டிருக்கிறாேய்;
என்ன, நீ அழகில் சிறந்தவளா?"
என்று சொல்லிவிட்டால்
எவ்வளவு கோபம் வந்து
விடுகிறது, பாருங்கள்!
தனது உடலில் அவள் அவ்வளவு
அபிமானம் வைத்திருக்கிறாள்.
இறைவன்
படைத்த பிராணிகள் உலகத்தில்
எத்தனையோ வகை உண்டு.
ஒவ்வொரு பிராணியும்
அழகாகவா இருக்கிறது?
எறும்பு, மூட்டைப் பூச்சி,
நாய், மீன், பன்றி எல்லாமே
அழகுடையவா? தேவ ஸ்ருஷ்டியில்
சிலர் அழகாக இருக்கலாம்.
மனித ஸ்ருஷ்டியிலும்
சிலரை அழகுள்ளவர் என்றும்
சொல்லாம். நாய், பன்றி
முதலியவற்றை அழகில் யாராவது
சிலாகிப்பார்களா? ஆயினும்
அந்த அந்தப் பிராணி, 'உடலமைப்பில்
நான்தான் நன்றாக இருக்கிறேன்'
என்று எண்ணிக் கொள்வதுண்டு.
'ஏனோ தேவனாகவோ மனிதனாகவோ
நான் பிறக்காமல் இப்படிக்
கோரமான பிறவியில் பிறந்துவிட்டேனே!'
என்று நினைப்பதில்லை.
தன் பிறவிதான் உயர்ந்த
பிறவி என்றும், மற்றப்
பிறவிகள் தாழ்ந்தவை என்றும்
நினைப்பு. இம்மாதிரிப்
பாசத்தைக் கொடுக்கும்படியாக
ஸர்வேச்வரன் அவரவர் உடலில்
போக்யதாபுத்தியை உண்டுபண்ணியிருக்கிறான்.
கடவுள் மாயாவியானபடியால்
மாயையைக் கொண்டு ஜனங்களுக்குத்
துரபிமானத்தை உண்டுபண்ணிவிடுகிறான்.
வேதாந்தங்களில்
மாயை என்று சொல்வதுண்டு.
இதைத் தான் 'ப்ரக்ருதி'
என்று வழங்குவர். இது
ஜனங்களை மோகிக்கச் செய்யும்.
எதிரிலுள்ள வஸ்துவை,
இது இப்படிப்பட்டது என்ற
விவேகத்தை உண்டுபண்ணாமல்
மறைக்கக்கூடிய பொருள்.
இதைத் திரை என்று கீழ்கூறிய
காரணத்தாலேயே பெரியோர்
பணிப்பர். 'யவநிகா மாயா
ஜகந்மோஹிநீ' என்று ஆளவந்தார்
இதன் சுபாவத்தைக் கூறினார்.
ஒரு மனிதனின் முன்பு
திரையைப் போட்டுவிட்டால்
எதிரிலுள்ள வஸ்துக்கள்
எவை, அவை எப்படிப்பட்டவை
என்பதை அவனால் அறிய முடியாதல்லவா?
அதபோலவே மாயை-ப்ரக்ருதி
என்று சொல்லப்படும்
பொருளை ஸர்வேச்வரன்
ஜனங்களுக்கு முன்பு திரையாக
அமைத்து அவர்களுக்கு
மோகத்தைச் செய்விக்கிறான்.
இந்த மாயை என்னும் திரை
ஜனங்களுக்குத்தான் மோகத்தை
உண்டுபண்ணிவைக்குமே
தவிரப் பகவானுக்கு மோகத்தை
உண்டுபண்ணாது. 'திரை நடுவில்
போட்டிருந்தால் இரு
புறத்தாருக்கும் அறிவின்மையைக்
கொடுப்பது போல் இந்த
மாயை என்னும் திரை ஜனங்களுக்குப்
போல் பகவானுக்கும் ஏன்
மோகத்தை உண்டுபண்ணாது?'
என்றால், இது விலக்ஷணமான
ஓர் அதிசயத்தைப் பெற்ற
திரை. கோஷா ஸ்திரீகளை
நாம் பார்த்திருக்கிறோமே.
அவர்கள் தங்களைப் பிறர்
பார்க்காமலிருப்பதற்கு
முகமூடி அணிந்திருப்பார்கள்.
அந்தத் திரை அவர்களுக்கு
எதிரிலுள்ள வஸ்துக்களை
மறைப்பதில்லை. ஆனால்
பிறருக்கு இவர்களை அறிய
முடியாத வண்ணம் செய்கிறது.
தாய் தன்னை அறியாத கன்றில்லை.
தன் கன்றை ஆயும் அறியும்.
உலகின் தாய் ஆகில் அய்யா?
நீ அறிந்த எப்பொருளும்
அவை உன்னை நிலை அறியா.
மாயை இது என்கோலோ வாராதே
விரவல்லாய்" என்று விராதன்
இராமனை துதி செய்வதைக்
கவனிக்கவும்.
பெரிய
மாடிவீடுகளில் கண்ணாடிகளாலேயே
ஜன்னல் அமைந்திருக்கும்.
அந்தக் கண்ணாடி மூலமாக
மாடியிலுள்ளவர்கள் வெளியில்
உள்ளவற்றைப் பார்ப்பார்கள்.
வெளியிலுள்ளவர்களோ
மாடியிலுள்ளவர்களை அந்தக்
கண்ணாடிமூலம் பார்க்க
மாட்டார்கள்; பார்க்கவும்
முடியாது. அப்படி அதிசயம்
பெற்ற கண்ணாடி அது. அது
போன்றது அந்த மாயைத்
திரை. மாயைத்தான் செடி
கொடியாகவும், குடிசை
அரண்மனையாகவும், கைகால்
ஆகிய அவயங்கள் கூடிய
உடலாகவும் மாறுதல் அடைகிறது.
'அவரவருக்கு ஏற்பட்ட
அந்த அந்தப் பொருள்களைத்
தவிர வேறு எதுவும் போக்கியமான
பொருள் அல்ல. இதுதான்
உயர்ந்த போகத்தைக் கொடுக்கக்கூடியது'
என்ற எண்ணத்தையும் மாயை
உண்டுபண்ணுகிறது. 'ஸ்வவிஷயாயாஸ்ச
போக்யபுத்தேர் ஜநநீம்'
என்று ஸ்ரீ பாஷ்யகாரர்
அருளிச் செய்தார். ஆக
இப்படித் தன் தனது வஸ்துக்கள்தாம்
உயர்ந்தவை, அதிக ஸுகத்தைக்
கொடுக்கக்கூடியவை; இவற்றைவிட
மேம்பட்ட வஸ்துக்களே
இல்லை என்ற எண்ணம் எல்லார்க்கும்
ஒருசமமாகவே இருந்து வருகிறது.
வயதாகிய
ஒருவன். அவனுக்குப் பார்ப்பதற்குக்
கண் இல்லை. காதும் வேலை
செய்யாது. கையால் எதையும்
சுவாதீனமாக எடுத்துக்
கொள்ளவும் முடியாது.
முகத்தில் மீசை தாடி
நரைத்துவிட்டன. பற்கள்
விழுந்துவிட்டன. உடலில்
எல்லா அவயங்களும் சுருங்கிவிட்டன.
தடியை ஊன்றிச் செல்வதற்கே
உடலில் சக்தி இல்லை. மெதுவாக
தடியைப் பிடித்து தான்
எழுந்திருக்க முயற்ச்சிக்கிறான்.
ஆனால் என்ன நடக்கிறது
தெரியுமா? தடிதான் எழுந்ததே
தவிற இவன் எழுந்திருக்க
முடியவில்லை. கண்களும்
அந்தகாரத்தால் இருள்
அடைந்து விட்டன. இப்படிப்
பட்டவன் தனது உபயோகமற்ற
உடலை விட்டுவிட மனத்தினால்
கூட விரும்புவதில்லை.
ஏன்? இதிலுள்ள ஒருவிதமான
போக்யதாபுத்தி அவனை
அம்மாதிரி செய்துவிடுகிறது.
இவ் விஷயத்தில் புராணத்தில்
உள்ளதும் பெரியோர்மூலமாகக்
கேட்டதுமான கதையை வரைகிறேன்.
ஓர் ஊரில் வேதம், சாஸ்திரம்
முதலியவற்றில் வல்ல அந்தணர்
இருந்தார். அவர் பல சீடர்களுக்குக்
கல்வியைப் போதித்துக்
கொண்டிருந்தார். சீடர்கள்
மிக்க மரியாதையுடனும்
பக்தியுடனும் அவரிடம்
நடந்துகொண்டனர்.
முற்காலத்தில்
வித்தையை அப்யஸிக்க வேண்டும்
என்று எண்ணி ஓர் ஆசார்யனை
அணுகினால் அவர் உடனடியாகச்
சொல்லிவிடுவாரா? பல
தடவை அவனைப் பரீக்ஷை
செய்து அவன் மூலமாகத்
தமக்கோ தம் வீட்டுக்கோ
சில பணிவிடைகளைப் பெற்றுக்
கொண்டு பிறகுதான் உபதேசம்
செய்வார். இதை ஒட்டியே
இந்த அந்தணரும் தம் சீடர்களை
ஏதாவது பணிவிடைகளைச்
செய்ய ஏவி விடுவார். சிஷ்யர்கள்
மிக்க சந்தோஷத்துடன்
ஆசார்யருக்கு வேலை செய்வார்கள்.
|
|
ஒரு நாள் ஒரு சீடன்
ஆசார்யனின் நியமனத்தை
முன்னிட்டு அவரது வஸ்திரங்களைத்
திருத்தக் காவேரிக்குச்
சென்றிருந்தான். காவேரி
நுரையுடனும், மீன் முதலிய
ஜந்துக்களுடனும் வெள்ளமாகப்
பெருகிக்கொண்டிருந்தாள்.
சீடன் கவனக் குறைவால்
ஒரு சிறிய மீனுடன் துணியைத்
துவைத்துப் பிழிந்துவிட்டான்.
பிறகு துணிகளைப் பிழிந்த
வண்ணமே ஆசார்யனிடத்தில்
கொடுத்துத் தன் வேலையில்
இறங்கினான். அந்தணர்
வழக்கம்போல் அந்த வஸ்திரத்தில்
புதிதாக ஜலத்தைக் கொட்டிப்
பிழிந்து உதறினார்.
துணியைப்
பிரித்ததும் அதில் இரத்தக்கறைகள்
தென்பட்டன. அவருக்குத்
தூக்கிவாரிப் போட்டது.
'ஐயோ! இதென்ன கொடுமை?
வஸ்திரம் கெட்டுப் போய்விட்டதே.
மீனும் இறந்துவிட்டதே!'
என்று கலங்கி, அந்தச்
சீடனைக் கூப்பிட்டு வஸ்திரத்தைக்
காட்டினார். சீடனுக்கு
ஒன்றுமே புரியவில்லை.
"ஏதோ தெரியாமல் விஷயம்
நிகழ்ந்துவிட்டது. என்னை
மன்னிக்க வேண்டும்" என்று
வணங்கினான்.
ஆசார்யனுக்கோ
கோபம் சாந்தமாகவில்லை.
அதனால் சினத்துடன் அவனை,
"நீ பன்றியாக உடனடியாக
மாறவேண்டும்" என்று சபித்துவிட்டார்.
இதைக் கேட்டதும் சீடன்,
"இப்படி அழகிய மானுட உடலை
விட்டுப் பன்றியாகவா
மாறுவது? அது சேற்றிலும்
மற்றும் அசுத்தமான பொருள்களிலும்
புரண்டு திரிகிற பிராணி
அல்லவா? அதன் உடலையா நான்
பெறுவது?" என்று கஷ்டப்பட்டான்.
பிறகு தன்னுடன் படிக்கும்
சீடர்களைப் பார்த்து,
"ஆசார்யனுடைய சாபமோ
பலிக்காமலிருக்கப் போவதில்லை.
எனக்கோ பன்றியுடலில்
பிடிப்பு இல்லை. ஆகவே
நீங்கள் நான் பன்றியாக
மாறியதும் ஒரு தடியை
எடுத்து என்னைக் கொன்று
விடுங்கள். இவ்வளவு உபகாரம்
நீங்கள் அவசியம் செய்ய
வேண்டும்" என்றான்.
உடன்
படிப்பவர்கள் அவனுடைய
மனக் கவலையைப் பார்த்தும்,
அவனிடத்திலுள்ள அன்பைக்
கொண்டும், "அப்படியே
செய்கிறோம்" என்றார்கள்.
ஒரு மாதமாயிற்று. ஆசார்யன்
சாபம் வீணாகுமா? ஏதோ
ஓர் ஊரில் ஓரு பன்றியின்
குட்டிகளில் இந்தச் சீடனும்
ஒரு குட்டியாகப் பிறந்து,
அசுத்தமான நீர் செல்லும்
கால்வாய் ஒன்றில் புரண்டு
கொண்டிருந்தான். சீடர்கள்
ஆசார்யன் மூலமாகச் சில
அடையாளங்களை அறிந்துகொண்டு,
இந்தப் பன்றியைப் பார்த்து,
'இதோ நம்முடன் படித்த
சீடன் பன்றியாக இருக்கிறான்.
இவனைத் தடியால் அடித்துக்
கொல்ல வேண்டும்' என்று
எண்ணி ஓடி வந்தனர். சிலர்
தடியை எடுத்தனர். சிலர்
பெருங் கற்களை எடுத்துத்
துரத்தினர். பன்றிக்குட்டி
அவர்களிடமிருந்து தப்ப
முயன்றது. ஆயினும் இவர்கள்
எல்லாரும் பன்றிக்குட்டியைச்
சூழ்ந்து பிடித்துக்கொண்டார்கள்.
அப்போது அந்தக் குட்டி,
"என்னை எதற்காகக் கொல்லுகிறீர்கள்?
நான் என்ன குற்றம் செய்தேன்?
என் மாமிசத்தை நீங்கள்
தின்கிறவர்களும் அல்ல.
ஏதோ நான் என் பிறப்புக்குத்
தகுந்தவாறு ஓடியாடி விளையாடிக்
கொண்டிருக்கிறேன். என்னை
விட்டுவிடுங்கள்" என்றது.
இதைக்
கேட்டதும் சீடர்கள் சிரித்துக்கொண்டே,
"என்ன! நீ முன்பு எங்களிடம்
சொன்னதை மறந்துவிட்டாயா?"
என்றார்கள்.
குட்டி,
"நான் உங்களை எப்போது
பார்த்தேன்? என்ன சொன்னேன்?
ஒன்றும் புரியவில்லையே!"
என்றது.
சீடர்கள், "நாம்
முன்பு ஓர் ஆசிரியரிடத்தில்
வித்தையைக் கற்றுக்கொண்டோமே;
அப்பொழுது நீ ஒரு தப்புச்
செயலைச் செய்ததற்காக
ஆசிரியர் சாபம் கொடுத்ததை
மறந்துவிட்டாயா?" என்றனர்.
இதைக்
கேட்டதும் பன்றிக்குட்டிக்கு
ஞாபகம் வந்துவிட்டது.
"ஆமாம், முன்பு நான் என்னை
அடித்துக் கொல்லுங்கள்
என்றேன். அந்தச் சமயத்தில்
எனக்கு இவ்வுடல் பிடிக்காமலிருந்தது.
ஆகவே அப்படிக் கூறினேன்.
இவ்வுடலைப் பெற்றதும்
இதைவிட உயர்ந்த உடலே
கிடையாது; இதுதான் எனக்கு
மிகச் சுகத்தைக் கொடுக்கிறது
என்று எண்ணுகிறேன். மிக்க
இன்பத்துடன் கூடிய இவ்வுடலை
விட எனக்கு மனம் வரவில்லை.
சொர்க்கம் என்று சொல்லுகிறார்களே,
அது எதற்கு பிரயோசனம்?
இவ்வுடலிலிருந்து நான்
அநுபவித்துவரும் சுகத்துக்கு
அந்தச் சுகம் இணையாகாது.
ஆகவே என்னைக் கொல்லவேண்டாம்.
என் தோழர்களான இந்தப்
பன்றிக் குட்டிகளோடு
இருந்து வாழ்கிற வாழ்க்கை
எனக்குப் பரம சந்தோஷத்தைக்
கொடுக்கிறது" என்றது.
இதைக் கேட்டதும் சீடர்கள்
சிரித்துக்கொண்டு தமது
இடம் போய்ச் சேர்ந்தார்கள்.
ஆகையால்
தான் செய்யும் பாவ புண்ணியத்தை
அநுஸரித்து எவன் எந்தப்
பிறவி எடுத்தாலும் அந்தப்
பிறவியில் அவனுக்கு விருப்பம்
உண்டாகிவிடுகிறது. அவன்
தன் உடம்பில் மிக்க போக்யதாபுத்தியை
அடைகிறான். அவன் உடலிலேயே
அதிகப் பாசம் ஏற்பட்டுவிடுகிறது.
அது உண்மையில் நன்றாக
இருந்தாலும் சரி, நன்றாக
இல்லாவிட்டாலும் சரி,
'இதுதான் உயர்ந்தது, இதில்தான்
பரம சுகம், மற்றவை உபயோகமற்றவை'
என்ற எண்ணம் சூழ்ந்துவிடுகிறது.
இந்த ஆசாபாசம் ஒருவராலும்
அழிக்கமுடியாமால், எல்லா
வர்ணத்திலுள்ளவர்க்கும்,
எல்லா ஆசிரமத்திலுள்ளவர்க்கும்,
எல்லாப் பிறவியிலுள்ளவர்க்கும்
வளர்ந்தே வருகிறது. இந்தப்
பாசமாகிற கயிற்றை அறுத்து
வெளிவந்தவர்கள் சிலரே;
சில மகான்களே.
எவ்வளவுக்கு
எவ்வளவு பாசத்தை ஒரு
பொருளில் வைக்கிறோமோ
அவ்வளவுக்கு மேல் நமக்கு
அதன் மூலமாக சோகம் கஷ்டமாகிற
முள் நம் ஹ்ருதயத்தில்
தைக்கும் என்றான். சாதாரணமாக
பென்ஸில் பேனா முதலிய
சிறிய வஸ்துக்களில் ஆசை
வைத்தால் அது காணாமல்
போனால் எவ்வளவு தவிக்கிறோம்
என்பதை கவனியுங்கள்.
பெறிய வஸ்துக்களைப் பற்றி
சொல்லவே வேண்டாம். பக்ஷி
ஆடு மாடுகளில் ஓர் விதமான
அற்புதத்தை பார்க்கிறோம்.
பால் கொடுக்கும் வரை
ஆசாபாசம் உள்ளது. பெரியதானதும்
அந்த பாசம் போய்விடுகிறது.
இது பகவானின் செயல். மனிதர்களும்
இப்படி இருந்தால் சீக்கிறமாகவே
பகவானிடம் பாசம் வைத்து
நல்ல கதியை அடைய வழி ஏற்பட்டு
விடலாம். மக்களுக்கு
உலக இன்பத்தில் எவ்வளவு
ப்ரீதி உள்ளது. சொல்ல
முடியாது. இது அவிவேகிகளுக்கு
உண்டு. அவ்வளவு அன்பு
உன்னிடத்தில் இருக்க
வேண்டும் என்று பகவானை
வேண்டிக் கொண்டான் ப்ரஹ்லாதன்.
"மற்றை நம் காமங்கள் மாற்று"
என்று கோதை சொன்னபடி
பகவானிடத்தில் பாசம்
வெறுக்கத்தக்கதன்று.
இது உசிதமானது. மற்ற உலக
இன்பங்களில் தகாதது.
"சேம நல்வீடும் பொருளும்
தர்மமும் சீறிய நற்காமமும்
இன்றிவை நான்கு என்பா.
நான்கினும் கண்ணனுக்கே
ஆமது காமம். அறம் பொருள்
வீடு இதற்கு என்று உரைத்தான்
வாமனன் சீலன்" என்று இராமனுஜ
திருவந்தாதியைப் பார்த்து
நன்கு இதை உணரலாம். ஆனால்
ஒரு விஷயம் "தாய் தந்தை
மனம்பித்து. தனயன் மனம்
கல்லு" என்று சொல்வர்.
விவாஹம் ஆனதும் பிள்ளை
மனம் மனைவியினிடததில்
பாசம் வைக்கிறது. இதுதான்
அதிசயம். தொட்டில் சுகத்தைவிட
படுக்கை ஸுகம் பெரியதாகிவிடுகிறது".
*****
|
|
|
|
|
|