ஒரு தனிகனின் கேள்வி
ஓர்
ஊரில் ஓர் அந்தணன் இருந்தான்.
அவன் வேதங்களை ஓதியவன்;
ஸகல கல்விகளையும் கற்றவன்.
கல்வி கற்றவர்களில் சிறந்தவனாக
விளங்கியது போலவே செல்வர்களிலும்
சிறந்தவனாக அவன் விளங்கினான்.
ஸரஸ்வதியும் லக்ஷ்மியும்
ஓர் இடத்தில் வசிக்கமாட்டார்கள்
என்று பெரியேர்கள் சொல்வது
இவனிடத்தில் இல்லை. இவ்வளவு
கல்வியும் செல்வமும்
நிறைந்தவனாக இருந்த போதிலும்
ஈகை என்ற குணம் இவனிடத்தில்
அணுவளவும் இல்லை.
எவ்வளவு
படித்திருந்தபோதிலும்,
எவ்வளவு பணக்காரனாக இருந்தபோதிலும்,
வறுமையுற்ற ஜனங்களுக்கு
தான தர்மங்களை செய்பவனையே
உலகத்தார் மதிப்பர்.
எனவே இவனை ஒருவரும் புகழவில்லை;
மதிக்கவில்லை. இப்படி
இருந்தும் இவன் பணத்தை
சேமிப்பதிலேயே கண்ணோட்டமுடையவன்.
தினந்தோறும் எப்படியாவது
சிறிதளவாவது பணத்தை சம்பாதித்து
பெட்டியில் வைத்து பார்க்காமல்
இருக்கமாட்டான்.
இவன்
உயர்ந்த குலத்தில் பிறந்த
பெண்ணை மணம் செய்து கொண்டான்.
அவளுக்கு சுசீலை என்று
பெயர். மிக்க அழகு வாய்ந்தவள்.
அவள் தன் பெயருக்கு தகுந்த
படி நற்குணமுள்ளவள்.
அவள் தன் பர்த்தாவின்
போக்கை நினைத்து வருந்துவாள்.
'இப்படி பணத்தை சேமித்து
என்ன செய்யபோகிறான்?
கடைசிக் காலத்தில் இது
இவனுடன் போகப் போவதில்லையே?'
என்று நினைப்பாள். இவ்விஷயத்தை
பர்த்தாவிடம் சொல்ல
விரும்பியும் அச்சத்தினால்
சொல்லாதிருந்தாள்.
ஒரு
நாள் அந்தணன் ஏதோ ஒரு
காரியத்துக்காக தன் பந்துக்கள்
உள்ள கிராமத்துக்கு சென்றான்.
அங்கு ஒரு பெளராணிகர்
ராமாயண காலக்ஷேபம் நடத்தி
வந்தார். அந்தணன் கதா
காலக்ஷேபம், திருவிழா
முதலிய ஸத்காரியங்கள்
நடக்கும் இடங்களுக்கு
போனால் பணம் செலவழிந்துவிடுமே
என்று போகாமல் இருப்பவன்.
ஆயினும் இங்கே பந்துகளின்
நிர்ப்பந்தத்தினால்
போக வேண்டி நேரிட்டது.
பெளராணிகர் இவனை கண்டதும்,
இவனுடைய குணங்களை முன்பே
கேட்டிருந்தபடியால்,
இவனுக்கு நற்புத்தியை
உண்டு பண்ண கருதி மிகவும்
அழகாக வேதாந்த அர்த்தங்களை
உபதேசித்தார்.
ஆத்மா
அழியாப் பொருள்; உடல்
செல்வம் மக்கள் வீடு
வாசல் முதலியவை அழியக்
கூடியவை. நித்யனான ஆத்மா
அவனவன் செய்த புண்ணிய
பாவங்களை அநுஸரித்து
தேவன் மனிதன் ஆடு மாடு
முதலிய சரீரங்களில் பிரவேசிக்கிறான்.
நிலையாக ஒரு சரீரத்திலும்
இருப்பதில்லை. சரீரம்
மின்னல் போல் அழிந்துவிடுகிறது.
இப்படி இருக்க, நாம் அழியாமல்
ஸ்திரமாகவே இருக்க போகிறோம்
என்று எண்ணி அதர்மங்களையே
செய்கின்றனர். தான தர்மங்களை
செய்வதில்லை. இரவில்
படுத்துக் கொள்ளும்போது,
'எப்போது சூரியோதயம்
ஆகப்போகிறது? எப்படி
பணத்தை சேமிக்கலாம்?'
என்று யோசனையில் ஆழ்ந்து
விடுகிறார்கள். நாம்
அழிந்துவிட்டால் நமக்கு
நல்ல கதி ஏற்படுமா ஏற்படாதா
என்பதை யோசிப்பதே இல்லை.
இரவு வரும்போது ஒருவித
மகிழ்ச்சி. பகல் உண்டாகும்போது
ஒரு வித உத்ஸாஹம். இதனால்
நமது ஆயுள் குறைந்து
விடுகிறதே என்பதை யோசிப்பதே
இல்லை. நம் வாழ்வில் என்ன
தர்மங்களை செய்கிறோம்
என்பதையும் கவனிப்பதில்லை
என்றெல்லாம் இவர் உபதேசித்தார்.
இதைக்
கேட்டதும் அந்தணனுடைய
மனத்தில் ஒரு வித எண்ணம்
தோன்றிற்று: 'பெளராணிகர்
சொல்லும் விஷயம் வாஸ்தவம்தானே?
நாம் போகும்போது இவ்வளவு
பொருளையும் எடுத்துக்
கொண்டா போகப் போகிறோம்?
நாம் வரும்போது இவற்றை
எடுத்துக் கொண்டா வந்தோம்?
போகும்போதும் அப்படித்தானே?
நாம் போகும்போது பாவ
புண்ணியங்கள்தாமே நம்முடன்
வரப்போகின்றன? இனித்
தான தர்மங்களையே செய்ய
வேண்டும். உலகிலுள்ள
ஜனங்கள் நம்மை புகழ வேண்டும்.
நாம் நற்கதியை பெற வேண்டும்'
என்று.
இவ்வளவு நல்ல
எண்ணம் உண்டாயினும் இவன்
பெளராணிகருக்கு ஒரு காசுகூட
கொடுக்கவில்லை. மறுநாள்
தன் வீட்டை அடைந்தான்.
இங்கு நடந்த விஷயங்களை
மனைவியிடம் சொன்னான்.
இவன் மனைவி இதைக் கேட்டு
ஆனந்தமடைந்து தன் கணவனிடம்
சொல்லத் தொடங்கினாள்.
"நாதா,
இவ்விஷயத்தை நான் முன்பே
யோசித்தேன். தங்களிடம்
சொல்லப் பயந்தேன். ஏதோ
அதிருஷ்டவசத்தால் தங்களுக்கு
நல்ல எண்ணம் தோன்றியுள்ளது.
நம் முன்னோர் செய்த
பாக்கியமே இது. கோவிலுக்கு
சென்று பகவானை அர்ச்சிக்க
வேண்டும்; புண்ணிய நதிகளில்
ஸ்நானம் செய்ய வேண்டும்;
ஏழை மக்களுக்கு அன்னதானம்
செய்ய வேண்டும்; நிறைய
கோதானம் செய்ய வேண்டும்.
நாம் பிறருக்கு கொடுத்தால்தான்
நமக்கு பகவான் கொடுப்பார்.
இந்த பிறவியில் ஒருவருக்கு
நாம் பூமிதானம் செய்தால்
நாம் மறுபிறவியில் பூமியை
ஆளக்கூடிய பாக்கியம்
பெறுவோம். வாகனத்தை
கொடுத்தால் சொந்தமான
யானத்தை பெறலாம். பிராமணர்களுக்கு
எதை எதை கொடுக்கிறோமோ
அந்த அந்த பொருள் நமக்கு
பன்மடங்காக பெருகும்.
நம் பெரியோர்கள் நிறைய
தான தர்மங்களை செய்தபடியால்
நாம் பணக்காரர்களாக இருக்கிறோம்.
நாமும் அப்படி செய்தால்தான்
நம் ஸந்ததியும் க்ஷேமத்தை
அடையும். நாமும் சொர்க்கத்தை
பெற்று இந்திரனுக்கு
சமமான போகத்தை பெறலாம்"
என்றாள்.
இதை கேட்டதும்
அந்தணன் தானங்களை செய்வதில்
ஈடுபட்டான். தங்க கொப்பு
போட்ட நூற்றுக்கணக்கான
பசுமாடுகளை நல்லவர்களுக்கு
தானம் செய்தான். 'முன்பு
இருந்த லோபியா இவன்?'
என்று சொல்லும்படியாக
இவன் நடந்து கொண்டான்.
இவனது ஆயுள் முடிவு பெற்றது.
இவனுடைய தர்மதேவதைகள்
இவனை வழியில் பல பல போகங்களை
நடத்தி, இந்திரலோகத்தை
அடைவித்தனர். தேவேந்திரன்
இவனை கண்டு மகிழ்வுற்று
தன் சிம்மாஸனத்தின் வலப்
பக்கத்தில் ஓர் ஆசனமிட்டு,
அதில் இவனை உட்கார வைத்து
தங்க பூண் இட்ட வெள்ளி
தடியை கையில் கொடுத்து
உபசரித்தான். இவன் பரம
ஸந்தோஷத்துடன் ரம்பை
ஊர்வசி முதலிய தேவஸ்திரீகளுடன்
விளையாடிக் கொண்டு தேவேந்திரனுக்கு
சமமாக போகத்தை அநுபவித்து
வந்தான்.
சில நாள் கழிந்தன.
தேவேந்திரனுடைய இடப்
பக்கத்திலுள்ள ஓர் ஆசனத்தில்
வெள்ளி தடியை கையில்
பிடித்து கொண்டு உட்கார்ந்திருந்த
ஒரு மனிதனை கண்டான். 'ஐயோ!
இவன் எப்படி இங்கு வந்தான்?
இந்த ஆசனத்தில் நமக்கு
சமமாக உட்கார இவனுக்கு
என்ன தகுதி உள்ளது? நம்
ஊரில் நம் வீட்டுக்கு
எதிரிலுள்ள ஏழை பிராமணன்தானே
இவன்? நாம் எவ்வளவு பணத்தை
தான தர்மங்களில் செலவு
செய்து இந்த பதவியை அடைந்தோம்?
ஏழை அந்தணனான இவனுக்கு
தானம் செய்ய பணம் ஏது?
இது என்ன அநியாயம்'? என்று
திகைத்தான். மிக்க கவலையுடன்
தனக்கு சமமாக அவனுக்கு
போகத்தை கொடுத்த இந்திரனை
வெறுத்தான். 'இந்திரனை
எப்படி கேட்டுத் தெரிந்துகொள்வது?
இவனை எப்படி விரட்டுவது?'
என்றெல்லாம் யோசித்தான்.
ஊரில் இருந்த போது அவனிடத்திலுள்ள
பொறாமை இங்கும் விடவில்லை.
சில
நாள் கழிந்ததும் இந்திரனை
பார்த்து மனம் தாங்க
முடியாமல், "இந்திரனே!
நான் அநேக தானங்களை செய்தபடியால்
என்னை நீங்கள் இந்த ஆசனத்தில்
உட்காரவைத்தீர்கள். செல்வத்தின்
வாஸனையையே அறியாதவன்
இவன். இவனுக்கு தானம்
செய்ய வழியே இல்லை. எப்படி
இவனை எனக்கு சமமாக உடகார
வைத்தீர்? பணக்காரனான
எனக்கும் ஏழையான இவனுக்கும்
போகத்தில் ஒற்றுமையா?
இது எப்படி கூடும்?" என்று
கேட்டான்.
இந்திரன்
- அந்தணரே! நான் இந்த தேவலோகத்துக்கு
அதிகாரி. மேலிருந்து
எனக்கு எப்படி உத்தரவு
வருகிறதோ, அப்படி பலனை
கொடுக்க எனக்கு உரிமை
உண்டு. இவனுக்கு ஆசனமிட்டு
போகங்களை கொடுக்கும்படி
உத்தரவு வந்தது. அதன்படி
செய்தேன். அவ்வளவுதான்
தெரியும். இதன் உண்மையை
வேறு யாரிடமாவது கேட்டு
தெரிந்துகொள்ளும்" என்று
கூறிவிட்டான்.
அந்தணனுக்கு
ஒன்றுமே புரியவில்லை.
எப்படியாவது இவனை விரட்ட
வேண்டும் என்ற எண்ணமே
ஓடிக் கொண்டிருந்தது.
இதனால் ஸ்வர்க்க லோகத்தில்
ஏற்பட்ட அநுபவமும் சுகமாகவே
தோன்றவில்லை. இப்படியிருக்க,
ஒரு நாள் நாரத மகரிஷி
அங்கு வந்தார். அவரை கண்டதும்
எழுந்திருந்து உபசரித்து
இவ் விஷயத்தை கேட்டான்.
"நாரத
மகரிஷியே! தேவலோகம்
என்பது சிறந்த உலகம்.
இது புண்ணியம் செய்பவர்களுக்காக
ஏற்பட்டது. எவன் தான தர்மங்கள்
செய்கிறானோ அவன் இவ்வுலகத்தில்
ஸுகத்தை அடைவான். தானங்களை
செய்யாதவர்களுக்கு இங்கு
இடம் இருக்காது. இது திண்ணம்.
இப்படி இருக்க தேவேந்தினுடைய
இடப் பக்கத்தில் உள்ளவன்
பரம ஏழை. தினந்தோறும்
சாப்பிடுவதற்கே திண்டாட்டம்
உடையவன். இவன் தானங்களை
எப்படி செய்வான்? இவனுக்கு
இந்த இடத்தை கொடுத்தது
நியாயமல்ல. நான் எவ்வளவோ
தானங்களை செய்து இவ்விடத்தை
பெற்றேன். எனக்கும் இவனுக்கும்
போகத்தில் ஒற்றுமை இருக்க
முடியாதே. இவ்விஷயத்தை
இந்திரனிடம் கேட்டால்
பதில் சொல்ல முடியாமல்
திகைக்கிறார். தானமே
செய்யாமல் இவன் இவ்விடத்தை
பெற்றிருக்கிறான். ஐயோ!
நானும், தெரிந்திருந்தால்
என் பொருளை வீணே செலவு
செய்யாமல் இருந்திருப்பேனே!
இவனை போலவே நானும் இந்த
பதவியை பெற்றிருக்கலாமே.
என் சொத்துக்களை செலவு
செய்து பசுமாடுகளை வாங்கி
பல அந்தணர்களுக்கு கொடுத்தேனே.
என் சந்ததிகளுக்கும்
வைக்காமற் செய்துவிட்டேனே!"
என்றான்.
நாரதர் இதை
கேட்டு புன்சிரிப்புடன்,
"ஊரை விட்டு இங்கு வந்த
பிறகு கூடவா உனக்கு நல்ல
எண்ணம் உண்டாகவில்லை?
நீ அடைந்த போகத்துக்கு
சமமான போகத்தை அடைய,
தானம் போல் இன்னோர்
உபாயமும் உண்டு: பாரதம்,
ராமாயணம் முதலிய புராதன
கதைகளை கேட்பவனும் இந்த
போகத்தை அடைவான். இதற்கு
நீ அஸூயை பட்டு பயனில்லை"
என்றார்.
அந்தணன், "ஐயோ!
இப்படியென்றால். நானும்
பாரதம் முதலிய புண்ணிய
கதைகளை கேட்டே இந்த போகத்தை
அடைந்திருக்கலாமே! வீணே
பணத்தை செலவழித்து ஏன்
இப்படி வரவேண்டும்?" என்றான்.
நாரதர்,
"அந்தணனே, கல்விகள் பலவற்றை
கற்று வேதம் ஓதிய அந்தணனுக்கு
எவனொருவன் தங்க பூண்
பெற்ற கொம்புகளையுடைய
பசுமாடுகளை தானம் செய்கிறானோ
அவனும், புண்ணியமான பாரதம்
முதலிய கதைகளை எவன் கேட்கிறானோ
அவனும் சமமான போகத்தை
பெறுவர் என்று சாஸ்திரம்
கூறுகிறது. அதிலும் பணம்
உள்ளவன், கதைகளை கேட்பதனால்
மாத்திரம் பரிசுத்தியை
அடைய மாட்டான். தன் அதிகாரத்துக்கு
தகுந்தபடி தானங்களையும்
செய்ய வேண்டும். உன்னை
போல் உள்ளவர்களுக்கு
கதைகளை கேட்பதனால் மட்டும்
இந்த போகம் உண்டாகாது.
ஸத்பாத்திரங்களில் தானம்
செய்ய வேண்டும். ஆகையால்
அவன் விஷயத்தில் நீ வேறு
விதமான எண்ணம் கொள்வது
தகாது. நீயும் அவனுடன்
கலந்து பழகி போகங்களை
அநுபவிப்பாயாக" என்றார்.
நீ எவ்வளவோ தான தர்மங்களை
செய்தாய். அப்படியிருந்தும்
அஸூயை உன்னைவிட்டுப்
போகவில்லையே. இதுதான்
முக்யமான குணம். தயா, ஸர்வ
பூதேஷு, க்ஷார்தி:, அகஸூயா,
செளசம், அநாயாஸ:, மங்களம்,
அகார்பண்யம் அஸ்ப்ருஹா,
இவை எட்டும் ஆத்ம குணங்கள்.
நாற்பது ஸம்ஸ்காரங்கள்
மனிதனுக்கு உண்டு. அவற்றைவிட
இந்த ஆத்ம குணங்கள்தான்
சிறந்தவை. தீழ் கைகா தமதர்மஸீத்ரத்தில்
நாற்பது ஸம்ஸ்காரங்களும்
இந்த ஆத்ம குணங்களும்
சொல்லப்பட்டன. அதிலும்
ஸம்ஸ்காரம் குறைந்திருந்தபோதிலும்
இந்த ஆத்ம குணங்கள்தான்
உயர்ந்தன. இதனால் மனிதன்
க்ஷேமத்தை அடைவான். ஸமஸ்காரங்கள்
முக்யமல்ல. சொல்லப்பட்ட
குணங்கள் முக்யமானவை.
இதன் மூலமாகவே எல்லா
லோகங்களிலும் எல்லா
போகங்களையும் அநுபவிக்கலாம்
என்பது ஸாஸ்த்ரம். இதை
நாரத பகவான் தனிகனுக்கு
உபதேசம் செய்தார். ஆக
அஸூயையும் மமதை விட்டு
விட்டு அவனுடன் கலந்து
சுகம் அநுபவிப்பாயாக
என்றார்.
ஸ்வாமி
தேசிகனும் இதை எடுத்துக்
காட்டியுள்ளார். "ஆசார
ஆத்ம குண உபாய புருஷார்த்த
விசேஷத: அதிகாரிணி வைசிஷ்ட்யம்
ப்ரக்ருஷ்யேத உதத ரோத்தரம்.
ஆசார விசேஷம்.
ஸ்நாந ஸந்தியாதி ஆசாரங்களில்
ஏற்றச் சுறுக்குக்கு
ஈடாக அதிகாரிகளின் மேன்மையில்
ஏற்றச் சுறுக்கம் கேவல
புண்ட்ர ஸ்நாநம் செய்பவன்
வாருண ஸ்நாநம் செய்பவனை
காட்டிலும் எப்படி உயர்ந்தவனாவான்
என்பதையும் கவனிக்கவும்.
தேவதாந்தர பஜனம் செய்பவன்
பகவத் பஜனம் செய்பவனைவிட
எப்படி உயர்ந்தவன். ஸ்ரீமன்
நாராணனை பஜனம் செய்பவன்தானே
உயர்ந்தவன்? ஸவர்காதி
புருஷார்த்தத்தை விரும்புவனைவிட
மோக்ஷத்தை விரும்புவன்தானே
ஸ்ரேஷ்டம் என்பது தாத்பர்யம்.
ஆசார்யர்களிலும் உத்தமன்
மத்யமன் அதமன் எனப் பிரிவு
உண்டு. இதில் உத்தம ஆசார்ய
சம்பந்தம் உள்ளவன்தான்
க்ஷேமத்தை அடைவான். க்யாதி
லாப பூஜைகளிலும் டம்பத்திலும்
ஆசைப்பட்டவன் ஆசார்ய
பதவியில் இருந்தால் அவனை
ஆச்சர்யத்தவன் எப்படி
க்ஷேமம் அடைய முடியும்.
நம்மை போல் இந்த ஆசார்யன்
ஆகிவிட்ட படியால் அவன்
தன்னை காப்பதற்கே சக்தியற்றவன்.
பிறர்களை எப்படி உஜ்ஜீவிக்கச்
செய்வான். இதை யோசிக்காமல்
கேவல ஸங்பேத மாத்திரைத்தைக்
கொண்டு ஈடுபடுகின்றனர்.
ஐயோ, ஆத்ம க்ஷேமத்தை
விரும்புவர்கள் ஏமாராதீர்கள்.
இதை
கேட்ட அந்தணன் வியந்து,
முனிவர் கூறியபடியே நடந்துகொண்டான்.
தானம்
போகோ நாச: திஸ்ரோ கதய:
பவந்தி வித்தஸ்ய யோ
ந ததாதி ந புங்தே தஸ்ய
த்ருதீயா கதிர்பவத் என்பது
சாஸ்த்ரம். பணத்தைக்
கொண்டு என்ன செய்யலாம்.
நல்ல பாத்ரத்தில் தானம்
செய்யலாம். தான் அநுபவிக்கலாம்.
இரண்டும் இல்லை என்றால்
எவனாவது அபஹரித்து விடுவான்.
இம்மூன்றும்தானே அதற்கு
ஏற்பட்டது. அக நாரதர்
கூறியபடி ஸத்பாத்ரத்தில்
கொடுப்பதுதான் யுக்தம்
என்பதை நன்கு உணர்ந்தான்.
நாம் மரணமானால் எவன்
கூட வந்து நம்மை காப்பாற்றப்
போகிறானர்? அவரவர்கள்
தன் வேலைகளைத்தான் பார்ப்பார்கள்.
உடன் வருவது பணமுமில்லை.
மிதரனும் இல்லை. பந்துக்களும்
இல்லை. நாம் செய்யும்
புண்ய பாபங்கள்தான் உடன்வரும்.
ஆக தனத்தை செலவு செய்து
மாற்றி ஸுக்ருத ரூபமாக
எடுத்து செல்லலாம். எத்தனை
கோடி ஸம்பாதித்தால்
என்ன. பேராசைதான் நிற்கும்.
அதனால் அவன் அவன் அதிகாரத்துக்கு
தகுந்தார்போல் ஸத்கார்யங்களைச்
செய்ய முன் வரவேண்டும்.
*****
|