88th Thirunakshathram Pathirikai |
|
A gathering seeking Perukaranai Swami's Blessings |
|
16 பிப்ரவரி 2010 அன்று காலை
8.00 மணி அளவில் ஸ்ரீ உ.வே.
பெருக்காரணை ஸ்வாமியின்
88-வது திரு நக்ஷத்திரம்
மிகவும் சிறப்பாக தொடங்கியது.
ஸ்வாமியிடம் காலக்ஷேபம்
செய்து கொண்டவர்கள்,
செய்துகொண்டிருப்பவர்கள்
பலர் உள்ளூரிலிருந்தும்
வெளியூரிலிருந்தும்
வந்து இந்த விழாவில்
கலந்து கொண்டு விமரிசையாகக்
கொண்டாடி ஸ்வாமியின்
ஆசியைப் பெற்றனர்.
ஸ்வாமி செய்யும் கைங்கர்யங்கள் பல
- தானத்தில் சிறந்தது
அன்ன தானம் என்பதை தனது
வாழ்க்கையின் கொள்கைகிளில்
ஒன்றாக கடைபிடிக்கிறார்.
ஏழை எளிய மக்களுக்கு
அடிக்கடி
அன்னதானம் செய்வதில்
மகிழ்ச்சி பெறுகிறார்.
கோவில் நற்பணிகளுக்கு
நன்கொடை
கொடுப்பதிலும் பெருமிதம்
கொள்கிறார். பெருங்களத்தூர்
ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள்
கோயிலுக்கு ஒரு மண்டபம்
எழுப்ப ரூபாய் நான்கு
லக்ஷம் அளித்து உதவி
செய்துள்ளார்.
மண்டபம் வெகு விரைவில்
கட்டிமுடித்தது சாத்தியமாயிற்று.
இஞ்சிமேடு கோவில்
சம்ப்ரோக்ஷணத்திற்கும்
பண உதவி அளித்துள்ளார்.
இந்த தள்ளாத வயதிலும்,
அவரது உடல்நலம் பலவீனமாக
இருந்த போதிலும் கூட,
ஸ்ரீ உ.வே.
பெருக்காரணை ஸ்வாமியின்
அயராத உழைப்பு - தான் கற்றவற்றை
மற்றவர்களும் அறிந்து
கொள்ள
வேண்டும் என்கிற ஆர்வம்
- அதனால் மேலும் மேலும்
நமது சித்தாந்தங்களையும்
கலாச்சாரங்களையும் கற்றுக்கொள்ள
வேண்டும் என்கிற விருப்பத்துடன்
தன்னை நாடும்
அனைவருக்கும் அன்புடனும்,
பொறுமையுடனும், தெளிவாகவும்
கற்றுக்கொடுக்க முன்வரும்
அவரது குணங்களை பலரும்
வியந்து பாராட்டினர்.
தன்னுடைய ஞானத்தையும்
கல்வியறிவையும் வியாபாரமாக்கிக்கொண்டிருக்கும்
இந்த
நாட்களில்கூட இப்படி
ஒரு மனிதரா என்று வியக்கும்படி
தான் எழதிய புத்தகங்களை
அச்சிட்டு கேட்பவர்களுக்கெல்லாம்
இலவசமாகவும் வழங்குவது
மட்டுமல்லாமல், தன்னுடைய
சில புத்தகங்களையும்
கட்டுரைகளையும் இணையதளத்திலும்
வெளியிட்டு எல்லோருக்கும்
பயன்படும்படி செய்துவருவது
மிகவும் பாராட்டத்தக்கது.
|