ஸாயுஜ்யம்
ஒரு
மகாநகரம்; அதில் ஒரு மகான்
வாழ்ந்து வந்தார். அவர்
கல்வி கற்றவர்களில் சிறந்தவர்;
ஞானம் அநுஷ்டானம் வைராக்யம்
முதலிய நற்குணங்கள் நிறைந்தவர்;
வேதங்களை நன்கு ஓதியவர்;
வேதாந்த சாஸ்திரத்தைக்
கசடறக் கற்றவர். அவரிடம்
பல சீடர்கள் வேதாந்த
சாஸ்திரத்தை கற்று வந்தனர்.
அந்த நகரத்திலுள்ள அனைவருமே
அவரிடம் சென்று ஸத்விஷயங்களை
கேட்டறிந்து அறிவாளிகளாக
விளங்கினர்.
பெரிய ஞானி
ஒருவர் ஓர் ஊரில் இருந்தால்
அவ்வூரில் வியாதி, துர்பிக்ஷம்,
திருடன் இவர்கள் இருக்க
மாட்டார்கள் என்று சாஸ்திரம்
சொல்லுகிறது. மகான்களுடைய
மாகாத்மியத்தினால் இவை
அங்கு நடமாடுவதில்லை.
அனைவரும் வியாதியற்றவர்களாக
அரோக திடகாத்ரர்களாக
இருப்பார்கள். மழை பெய்யாமலே
இராது. 'நிகாமே நிகாமே
ந: பர்ஜந்யோ வர்ஷது' என்ற
ரீதியில், நினைக்கும்
சமயங்களில் மழை பெய்யும்.
'வேதம் ஓதிய அந்தணர்க்கோர்
மழை' என்று தமிழர்களும்
'வேத வேதாந்தங்களை அப்யஸித்த
மகான்களுக்காகவே மழை
பெய்யும்' என்று சொன்னார்கள்.
திருடனும் இருக்கமாட்டான்.
அவ்வூரில்
வசிக்கும் மகான் நல்ல
ஞானியானபடியால் திருடியவன்
இவன்தான் என்ற ஞானத்ருஷ்டியால்
அறிந்து தன்னை கண்டுபிடித்து
விடுவார் என்று திருடன்
தன் தொழிலையே செய்யமாட்டான்.
ஆகையால் வியாதியும் துர்பிக்ஷமும்
திருடனும் அவ்வூரில்
நடமாடுவதில்லை. மேலும்,
அவர் ஸத்விஷயங்களை நன்கு
அறிந்தவரானபடியாலும்
பிறருக்கு அடிக்கடி நல்
விஷயங்களை உபதேசிப்பவரானபடியாலும்
ஞான துர்பிக்ஷமும் அவ்வூரில்
இராது. அவருடைய சேர்க்கையால்
அவ்வூரிலுள்ள அனைவரும்
ஞானவான்களாகவே இருப்பர்.
ஒரு சமயம் அந்த
மகான் காலக்ஷேபம் சொல்லும்
தறுவாயில், ஒரு சிஷ்யன்
அவரிடம் சில சந்தேகங்களைப்
போக்கிக் கொள்ள சில
கேள்விகள் கேட்டான்.
சிஷ்யன்,
"ஸ்வாமி, தேவரீரிடமிருந்து
பல அபூர்வ விஷயங்களை
அறிந்து கொண்டேன். ஆயினும்
ஒரு விஷயத்தில் ஸம்சயம்
இருக்கிறது. அதையும்
நிவிருத்தி செய்து வைக்க
வேண்டும்; அதாவது சரணாகதி
செய்தபிறகு இவன் இசைந்த
காலம் வரையில் இங்கு
வசித்து பிறகு வைகுண்டத்தை
அடைகிறான். அங்கு சென்றதும்
பகவானுடன் ஸாயுஜ்யத்தை
பெறுவதாக வேதம் கூறுகிறது.
'ஸாயுஜ்யம் ஸமவாப்ய நந்ததி
ஸமம் தேநைவ தந்ய: புமாந்'
என்று பெரியவர்களும்
கூறுகின்றனர். ஸாலோக்யம்,
ஸாரூப்யம், ஸாயுஜ்யம்,
ஸார்ஷ்டிதா என்பவை இவனுக்கு
உண்டு என்றும் சொல்லுகின்றன
ப்ரமாணங்கள். இவற்றை
விவரித்து எனக்கு தெளியும்படி
கூற வேண்டும்" என்றான்.
ஆசார்யன்
- நீ மிகவும் புத்திசாலி;
ஸத்விஷயங்களில் ஈடுபடுகிறவன்.
உனக்கு தெரியும்படி நன்கு
விளக்கி சொல்கிறேன்,
கேள். ப்ரபன்னனான ஒருவன்
ஸ்ரீவைகுண்ட லோகத்துக்கு
சென்று அங்குள்ள பரமாத்மாவைப்
பரிபூர்ணமாக அநுபவிக்கிறான்.
ச்ரிய:பதியான பரமபுருஷனை
ஸர்வ தேசத்திலும் ஸர்வ
காலத்திலும் ஸர்வ அவஸ்தைகளிலும்
அவனுடைய திருமேனி குணம்
வீபூதி சேஷ்டிதங்கள்
இவற்றுள் ஒன்றிலும் குறையாதபடி
அவனை அநுபவித்து ஸர்வவித
கைங்கரியங்களையும் செய்கிறான்
என்று சாஸ்திரம் சொல்லுகிறது.
இதைத்தான் மோக்ஷம் என்பர்.
நீ கேட்ட ஸாலோக்ய ஸாரூப்யாதிகளில்
ஸாயுஜ்யம் என்று ஒன்றை
கேட்டாயே; அந்த ஸாயுஜ்யம்தான்
மோக்ஷம்.
லோகேஷு விஷ்ணோர்
நிவஸந்தி கேசித், ஸமீபம்
ரிச்சந்தி ச கேசித் அந்யே
| அந்யே து ரூபம் ஸத்ருசம்
பஜந்தே ஸாயுஜ்யம் அந்யே
ஸ து மோக்ஷ உக்த: ||
சிலர்
சாலோக்யத்தையே மோக்ஷம்
என்பர்; சிலர் ஸாமீப்யத்தை
மோக்ஷம் என்பர்; ஸாத்ருச்யம்தான்
மோக்ஷம் என்று சிலர்
சொல்வர். நன்கு கற்றவர்
ஸாயுஜ்யம்தான் மோக்ஷம்
என்பர். உண்மையில் ஸாயுஜ்யம்தான்
மோக்ஷம் என்று ப்ரமாணம்
கூறுகிறது. பகவானைத்
தியானம் செய்பவர்களில்
சிலர் எம்பெருமானுடைய
லோகத்தில் வாஸம் செய்வர்.
இதுதான் ஸாலோக்யம்.
ஒரே லோகத்தில் இவர்கள்
பகவானுடன் வாஸம் செய்கிறபடியால்
இவர்களுக்கும் பகவானுக்கும்
ஸாலோக்யம் ஏற்பட்டுவிட்டது.
சிலர் எம்பெருமானுக்கு
சமீபத்தில் வசிப்பர்.
இதுதான் ஸாமீப்யம். இவர்களுக்கு
பகவானுக்கு சமீபத்தில்
வாஸம் ஏற்பட்டுவிட்டபடியால்
ஸாமிப்யம் கிடைத்தது.
சிலர் பகவானுக்குச் சமமான
ரூபத்தை அடைகின்றனர்.
ஆகையால் இவர்களுக்கு
ஸாரூப்யம் ஏற்பட்டது.
மற்றும் சிலர் பகவானுடன்
ஸமமான போகத்தையே அடைகின்றனர்.
இதுதான் ஸாயுஜ்யம் என்பது.
இதுதான் மோக்ஷம்.
இதை
நன்கு தெளிவிக்க ஓர்
உதாரணம் காட்டுகிறோம்.
காஞ்சியில் தேவாதிராஜனுடைய
உத்ஸவம் நடைபெறுகிறது.
பகவான் அநேக உபசாரங்களுடன்
வீதியில் வாகனங்களில்
ஸேவை ஸாதிக்கிறார். இதை
ஸேவிப்பதற்காக ஒருவர்
வெளியூலிருந்து காஞ்சிபுரம்
சென்றார். அவருக்கு அப்பொழுது
பகவானுடன் ஸாலோக்யம்
ஏற்பட்டது. கோயிலுக்கோ
வீதியில் எழுந்தருளியிருக்கும்
பகவானுக்கு சமீபத்திலே
அவர் சென்றதும் அவருக்கு
ஸாமீப்யம் வந்துவிட்டது.
அவர் பகவானை அநேக ஸ்தோத்திரங்களை
சொல்லி கண்ணில் நீர்
பெருக ஆனந்தபாஷ்பத்தோடு
பரவசராக துதித்தார்.
அங்குள்ள அர்ச்சகர்கள்
மாலை, பரிவட்டம், சந்தனம்,
புஷ்பம் முதலியவற்றை
கொடுத்து அவரை உபசரித்தார்கள்.
பகவான் உடுத்து களைந்த
பீதகவாடைகளை அவர் பெற்றபடியால்
அவருக்கு ஸாரூப்யம் ஏறபட்டுவிட்டது.
பிறகு பகவான் அமுது செய்த
பிரசாதம் முதலியவற்றை
இவர் பெற்று அங்கேயே
புசித்தார். இதனால் இவருக்கு
ஸாயுஜ்யம் ஏற்பட்டுவிட்டது.
கிருஷ்ணாவதார காலத்தில்
ஆயர்பாடியிலுள்ள பையன்களுடன்
கிருஷ்ணன் காட்டுக்கு
சென்று தயிர்சாதத்தை
எல்லோரும் ஒன்று சேர்ந்து
புசித்தார்கள் என்பதை
ஸ்ரீபாகவதத்தில் கேட்டிருக்கிறோம்.
இப்படி இவ்விஷயம் நன்கு
மனத்தில் பதிவதற்காக
காட்டினோமே தவிர, மோக்ஷத்தில்
ஏற்படும் ஸமமான போகம்
பெறுதல் என்று சொல்லக்கூடிய
ஸாயுஜ்யமே உண்மையில்
மோக்ஷம் என்று அறிந்துகொள்ள
வேண்டும், ஸாயுஜ்யம்
என்றால் ஸயுக்கினுடைய
தன்மை. ஒரே போக்கியமான
பொருளில் கூட இருந்து
எவன் அநுபவிக்கிறானோ
அவனை ஸயுக் என்பர்.
'ஸோச்நுதே
ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா
விபச்சிதா' என்பது வேதம்.
ஸர்வவித போகங்களையும்
ப்ரஹ்மத்துடன் இந்த முக்தன்
என்ற ஜீவன் அநுபவிக்கிறான்
என்பது இதன் பொருள்.
பயஸா ஸஹ ஓதநம் புங்க்தே
- பாலுடன் சாதத்தை ஒருவன்
சாப்பிடுகிறான் என்றால்
இங்கு சாப்பிடுபவன் ஒருவன்.
இவன் சாப்பிடும் பொருள்
இரண்டு; பால், பிரசாதம்,
வெறும் பிரசாதத்தை மாத்திரம்
இவன் சாப்பிடவில்லை.
பாலுடன் கலந்த பிரசாதத்தை
சாப்பிடுகிறான் என்று
சொன்னதனால் போக்தா
ஒருவன், போக்யம் இரண்டு
என்று ஏற்படுகிறது.
'ஸுஹ்ருதா
ஸஹ ஓதநம் புங்க்தே - சிநேகிதனுடன்
பிரசாதத்தை சாப்பிடுகிறான்
என்றால், இங்கு சாப்பிடுகிறவர்
இருவர்: தானும் சிநேகிதனும்.
சாப்பிடப்படும் பொருள்
ஓதனம் ஒன்றுதான். முன்பு
சொன்ன உதாரணத்தில் போக்யம்
இரண்டானபடியால் அதற்கு
போக்ய ஸாஹித்யம் என்று
பெயர். இரண்டாவது உதாரணத்தில்
போக்தா இருவரானபடியால்
போக்த்ரு ஸாஹித்யம்
என்று அதற்கு பெயர். ப்ரஹ்மத்துடன்
இந்த ஜீவாத்மா எல்லாவிதமான
போகங்களையும் அநுபவிக்கிறான்
என்று வேதத்தில் கூறியிருக்கிறபடியால்,
போக்த்ருஸாஹித்யம்
இங்கு சொல்லப்பட்டதாக
கொள்ள வேண்டும். எல்லாவிதமான
போகங்களையும் பரமாத்மாவும்
அநுபவிக்கிறான், முக்தனும்
அநுபவிக்கிறான் என்ற
திரண்ட பொருள் ஏற்படுகிறது.
ஆகவே ப்ரஹ்மத்திற்கு
சமமான போகத்தை இவன்
அடைகிறபடியால் இவன் ஸயுக்
என்று சொல்லப்படுகிறான்.
அப்படிப்பட்டவனின் தன்மைதான்
ஸாயுஜ்யம். ஆக ஸாலோக்யம்,
ஸாமீப்யம், ஸாரூப்யம்,
ஸாயுஜ்யம் இந்த நான்கில்
ஸாயுஜ்யம்தான் மோக்ஷம்.
சிஷ்யன்
- ஸ்வாமி, ஸாயுஜ்யம் என்பதை
உதாரணத்தோடு நன்கு விளக்கி
காட்டியாயிற்று. நன்றாக
தெரிந்து கொண்டேன்.
இதைத்தான் மோக்ஷம் என்றும்
தேவரீர் சொல்லியாயிற்று.
அப்படியானால் ஸார்ஷ்டிதா
என்று புதிதாக ஒன்று
சொல்லப்படுகிறதே; அது
ஸாயுஜ்யத்தைக் காட்டிலும்
வேறாகத்தானே இருக்க வேண்டும்?
ஸாயுஜ்யம் என்ற மோக்ஷத்தைக்
காட்டிலும் அது இன்னும்
மேற்பட்டதா? அதை விவரித்து
சொல்ல வேண்டும்.
ஆசார்யன்
- நீ கேட்கும் கேள்வி உயர்ந்தது.
இதற்கு விடை அவ்வளவு
சுலபமாக எல்லோராலும்
சொல்ல முடியாது. ஸ்வாமி
தேசிகன் ஒருவர்தாம் விடையளிக்க
முடியும். அவர் அருளிச்
செய்த ச்லோகம் இதோ
-
ஸாயுஜ்யம் உபயோரத்ர
போக்தவ்யஸ்ய அவிசிஷ்டதா
| ஸார்ஷ்டிதா தத்ர போகஸ்ய
தாரதம்ய விஹிநதா ||
மோக்ஷத்தில்
ஈச்வரன், முக்தன் என்ற
இரண்டு பேருமே அநுபவிக்கிறார்கள்
என்று சொன்னோமே, அதில்
ஈச்வரன் சில பொருள்களை
அநுபவிக்கிறான், முக்தன்
வேறு சில பொருள்களை
அநுபவிக்கிறான் என்பது
இல்லை. பகவான் எதை எதை
அநுபவிக்கிறானோ அவற்றை
இவனும் அநுபவிக்கிறான்.
அநுபவிக்கப் படும் பொருளில்
வேறுபாடு இல்லை. இதைத்தான்
ஸாயுஜ்யம் என்ற சொல்வது.
ஆனால் எல்லாப் பொருளையும்
இருவரும் அநுபவித்தாலும்
ஈச்வரன் அநுபவிப்பது
அதிகமாகவும் முக்தன்
அநுபவிப்பது கொஞ்சமாகவும்
இருக்குமோ என்றால் அதுவும்
இல்லை. இதை சொல்வதற்குத்தான்
'ஸார்ஷ்டிதா' என்று ச்ருதி
ஓதுகிறது. அதாவது பொருளில்
எப்படி வேறுபாடு இல்லையோ
அதே மாதிரி அந்த பொருளின்
அநுபவத்திலும் ஏற்ற சுருக்கம்
இல்லை. பகவான் எந்த எந்த
பொருளை எப்படி எப்படி
அநுபவிக்கிறானோ அப்படியே
அந்த பொருளை இவனும்
அநுபவிக்கிறான். அநுபவ
பிரகாரத்திலும் காலத்திலும்
வேறுபாடு இல்லை; இதுதான்
ஸார்ஷ்டிதா என்பது.
சிஷ்யன்
- ஸ்வாமிந், ஸாயுஜ்யம்,
ஸார்ஷ்டிதா என்று வேதத்தில்
கூறியிருப்பதன் பொருளை
அறிந்துகொண்டேன். என்
ஸம்சயம் நிவிருத்தியாயிற்று.
மிகவும் தன்யனானேன்.
ப்ரணாமத்தை தெரிவித்துக்
கொள்கிறேன்.
பஞ்ச பாண்டவர்கள்
த்ரெளபதியுடன் ஸ்வர்கம்
செல்லுகின்றனர். போகும்போது
முதலில் த்ரெளபதி கீழே
விழுந்துபிட்டாள். தர்மபுத்ரரிடம்
நகுலன் கேட்கிறான். இதற்கு
என்ன காரணம் என்று. அவர்
சொல்லும் பதில்: நாம்
ஐவரும் கணவராக இருந்தும்
நம்முடன் சேரும்போது
போகத்தை அதிகம் கொடுக்கவில்லை.
அர்ஜுனன் முறையில் அதிக
ஆவேசத்துடன் போகத்தை
புணர்ந்தான். அதுதான்
என்றார். ஆக நம்முடன்
ஸாயுஜ்யம் போல் அர்ஜுனனிடம்
ஸார்ஷ்டிதா.
ஒரு பெண்
ஒரு புருஷனுடன் கலவியுறியும்போது
கபடத்துடன் அநுபவிக்கிறாள்.
அவளே தனக்கு ப்ரியமான
புருஷன் கிடைக்கும்போது
கபடமில்லாமல் இருக்கிறாள்
என்றால் இதில் எவ்வளவோ
வித்யாஸப்படுகிறது அல்லவா?
"யமேவ ஏஷ: வ்ருணுதே தேவைப்ய:
தஸ் யெஷ ஆத்மா. விவ்ருணேதே
தனும் ஸ்வாம்" என்றது
ச்ருதி. இதை தான் நன்றாக
ஆராய வேண்டும். அதிக காதல்
கொண்ட புருஷனுடன் சேரும்
பெண் தனது உடலை முழுவதும்
அநுபவிப்பதற்கு இடம்
கொடுப்பாள். அது எப்படியோ
அப்படியே பகவானும் தனது
எல்லா பொருளையும் விவரித்துக்
காட்டி அவனை அநுபவிக்கும்படி
செய்வான். தனது பொருளில்
ஒன்றும் குறைவில்லாமலும்
அநுபவிக்கப்படும் பொருள்களில்
ஏற்றச் சறுக்கம் இல்லாமலும்
பரஸ்பரம் வேறுபாடு இல்லாமலும்
அநுபவிக்கச்செய்கிறான்.
இதுதான் ஸார்ஷ்டிதா என்று
கூறுப்படுகிறது.
நாம்
நமது காதலியுடன் போகம்
புரியும்போது சில சமயம்
ஸாயுஜயத்தோடு நிற்கும்.
சில நேரத்தில் ஸார்ஷ்டிதையும்
ஏற்படும். இது ப்ரஸித்தம்.
பாலர்களுடன்
ஸ்ரீக்ருஷ்ணன் தயிர்
சாதம் சாப்பிடுகிற அழகே
அழகு. ப்ரஸாதத்தை கைகளில்
வைத்துக் கொண்டும்,
விரல்களின் சந்தில் ஊறுகாயை
வைத்துக் கொண்டும் புசித்தார்கள்.
பையனின் விரல்களில் உள்ள
ஊறுகாயை வாயால் கடித்தும்
அவர் கையிலுள்ள ப்ரஸாதத்தை
வாயால் கவ்வி சாப்பிடுவதும்
தன் கையில் உள்ள ஊறுகாய்
ப்ரஸாதம் இவைகளை அவர்களும்
கவ்வி சாப்பிடுவதாகவும்
இருந்தது அந்த நிலை. இதுதானே
ஸார்ஷ்டிதா? இதைக் கண்டுதானே
ப்ரஹ்மா ஆஸுயைக் கொண்டார்.
மேலும்
ஸ்ரீபாகவதத்தில் எது
ஸாரமான பாகம் என்று கேட்க
"ராஸக்ரீடைதான் ஸாரம்".
ராஸக்ரீடை ஸாரக்ரீடை
ஒரு கண்ணன் இரண்டு பெண்கள்.
இரண்டு பெண்கள் ஒரு கண்ணன்
என்று இவ்வாறு கை கோத்துக்
கொண்டு விளையாடினார்கள்.
அப்பொழுது கண்ணன் வாயில்
இருக்கும் வெற்றிலை பாக்கு
முதலியவைகளை அவர்கள்
அவன் வாயோடு சேர்த்து
சும்பனிபீர்கமாக வாயிலிருந்து
பிடுங்கி ஒருவள் புசித்தாள்.
மற்றவர் வேறு விதமாக.
இவனும் அப்படியே செய்தான்.
இவ்வாறு பலப்ரகாரமாக
விளையாட்டை நடத்தினான்.
இது முக்த தசையைக் காட்டிலும்
அதிகமாக விளங்கிற்று
என்றார் சுகர். அதனால்தான்
ராஸக்ரீடை ஸாரக்ரீடை
ஆயிற்று.
*****
|