உயிரா, மானமா?
'உயிர்
பெரிதா, மானம் பெரிதா?'
என்று வசனம் சொல்லுவதுண்டு.
ஸாமான்யமான பாமர ஜனங்களில்
கூட இதை சொல்லாதவர்
ஒருவருமில்லை. தனக்கு
எவ்வளவு ஆபத்து நேர்ந்தபோதிலும்
உயிரையும் பேணாமல் மானத்தைத்தான்
காப்பாற்றிக் கொள்வான்
நல்லவன்.
இக்காலத்து
மக்களோ, 'உயிர்தான் பெரிது,
மானம் பெரிதல்ல' என்ற
எண்ணி, எவ்வளவு அவமதிப்பு
வந்த போதிலும் அதைத்
தள்ளி, உயிரைக் காப்பாற்றுவதற்கு
அநுகுணமான செயல்களை செய்வதிலேயே
ஊக்கமுள்ளவர்களாக உள்ளனர்.
அவர்கள் இதைக் கேட்டால்
நம்மிடம் வெறுப்பும்
கொள்வர். காலத்தின்
போக்கு இவ்விதமாக ஆகிவிட்டதே!
முன்காலத்தில், 'நமக்குப்
பொருளும் பெரிதல்ல,
உயிரும் பெரிதல்ல, மானமே
பெரிது. அதையே காப்பாற்ற
வேண்டும். அதற்கு தகுந்த
செயலையே செய்ய வேண்டும்'
என்று எண்ணி அதன்படி
நடப்பர். இதுதான் அறிவாளிகளின்
தன்மை.
ஏனெனில், உயிர்
அழிந்துபோகும். ஆனால்
மானம் என்பது எப்பொழுதும்
அழியாமல் இருக்கக்கூடிய
வஸ்து. மனிதன் இறந்துவிட்டாலும்
அவனுடைய புகழ் அழிந்து
போவதில்லை. கோபுரம்
கட்டுதல், குளம் வெட்டுதல்,
தானம் செய்தல், பள்ளிக்கூடம்
ஏற்படுத்துவது - இவை போன்ற
பல நற்செயல்களைப் பல
ஆண்டுகள் கழித்தும் ஜனங்கள்
கூறித் துதிப்பதைப் பார்க்கிறோம்
அல்லவா?
தர்மமோ அதர்மமோ
செய்து உயிரைப் பேண முன்
வருகிறீர்களே, இந்த உயிர்
அதர்மம் செய்தும் எத்தனை
நாள் இருக்கப் போகிறது?
ஒரு நாள் அழிந்தே தீருகிறது.
தினந்தோறும் இதைப் பார்த்துக்
கொண்டே இருக்கிறோமே.
இவன் செய்த அக்ரமந்தான்
நிலைத்து நிற்கிறது.
இது இவ்வுலகில். மேலுலகிலும்
இதன் பலனாக நரகத்தையே
அநுபவிக்கப் போகிறான்.
இதெல்லாம தெரிந்தும்
மானத்தையும் விட்டு உயிரைப்
பேண ஆசைப்படுகிறார்களே?
இதென்ன ஆச்சரியம்!
இதனால்தான்
பீமஸேனனும், ப்ராணம்
வாபி பரித்யஜ்ய மாநமேவாபிரக்ஷது
| அநித்யோ பவதி ப்ராணோ
மாநஸ் த்வாசந்த்ரதாரகம்
||
என்று சொன்னான்.
'உயிர்
என்பது எப்படி அழியும்?
அது ஆத்மாதானே? அதுதான்
அழியாப் பொருளாயிற்றே.
அது நித்தியம் என்று
அனைவரும் இசைந்ததுதானே?
கீதையிலும் அதை உலர்த்த
முடியாது, கொளுத்த முடியாது,
வெட்ட முடியாது என்று
சொல்லவில்லையா? ஆகவே,
அழியும் பொருள் அது
என்று எவ்விதம் சொல்ல
முடியும்?' என்று நினைக்கலாம்.
ஆத்மா
அழியாப் பொருள்தான்.
அதை நினைத்து, 'உயிரா மானமா?'
என்னும் தலைப்பு வந்ததல்ல.
லோகத்திலும் தப்புச்
செய்பவனைப் பார்த்து,
'உயிர் பெரிதா, மானம் பெரிதா?'
என்று சொல்லுகிறார்கள்.
இவ்விடங்களில், இப்பொழுது
சரீரத்துடன் இருக்கும்
ஆத்மாவைப்பற்றிய பேச்சு
இது.
கீதாசார்யன், அர்ஜுனனைப்
பார்த்து, 'நீ யுத்தம்
செய்யாமலிருந்துவிட்டால்
எதிரிகள் பலவந்தமாக உன்
மேல் அம்புகளைப் போட்டு
கொன்றுவிடுவார்கள்.
உனக்கு பெரிய அபகீர்த்தி
ஏற்பட்டுவிடும். இதைவிட,
யுத்தம் செய்து அவர்களை
வெல்வதே உயர்ந்தது. மேலும்,
'யுத்தம் ஆரம்பித்தபோது
பயத்தினால் அர்ஜுனன்
ஓடிப்போனான்' என்று
பலம் உள்ளவர்களும் மற்றவர்களும்
பரிஹஸிப்பார்கள். இந்த
அபகீர்த்தி எப்போதும்
நிலைநிற்கும். செளகர்யம்
வீர்யம் பராக்ரமம் முதலியவற்றை
பெற்ற உனக்கு இந்த அபகீர்த்தியைவிட
மரணமே மேலானது என்று
தோன்றும்" என்று சொன்னார்.
உலகிலுள்ளவர்
அனைவரும் ஒரே விஷயத்தில்
அபிருசி உள்ளவர் அல்லர்.
சிலர் படிப்பிலும், சிலர்
பணத்திலும், சிலர் ஸுகமாக
உயிர் வாழ்வதிலும், சிலர்
மானத்திலும் ஆசை கொண்டவர்கள்.
படிப்புத்தான்
முக்கியம் என்று சிலர்
கருதுவர். இது வாஸ்தவமே.
படிப்பில்லாமல் அறிவு
வளருமா? மனிதனுக்கு கெளரவம்தான்
ஏற்படுமா?
ஒருவனுக்கு
விவாகம் நடந்தது. நடை
உடை பாவனைகளைப் பார்த்து,
அவன் நன்கு படித்தவன்
என்று ஏமாந்து, பெண்ணைக்
கொடுத்துவிட்டார் பெண்ணின்
தந்தை. அவனுக்கோ எழுத
படிக்க தெரியாது. மனிதனைப்
பார்த்தால் தோற்றத்தில்
மட்டும் கம்பீரமாக இருந்தான்.
ஒரு ஸமயம் அவன் மாமனார்
வீட்டுக்கு சென்றான்.
அவன் சென்று இரண்டு தினம்
கழித்து அவன் மாமியாருக்கு
உடல் நிலை சரியில்லாமற்
போகவே அவன் மாமனார்
அவளை அழைத்துக் கொண்டு
வைத்தியத்துக்கு வெளியூருக்குச்
சென்றார். போகும்போது,
சென்றவுடன் தாயின் உடல்
நலத்தைப் பற்றி கடிதம்
எழுதச் சொன்னாள் பெண்.
ஒரு
வாரம் கழித்துத் தந்தையிடமிருந்து
மகளுக்கு கடிதம் வந்தது.
பெண் படிக்காதவளாதலால்,
தன் கணவனிடம் கொடுத்துப்
படிக்கச் சொன்னாள்.
அவன் எழுதப் படிக்க தெரியாதவன்
என்பதை இனிமேல்தானே அறியப்
போகிறாள்? கணவனும் தன்
குட்டு வெளிப்படாமல்
இருக்க எவ்வளவோ முயன்றும்
முடியவில்லை. கடைசியில்
கடிதத்தை எடுத்தான்.
இப்படியும் அப்படியும்
பார்த்தான். 'ஐயோ, நாம்
சிறுவயதில் பெற்றோர்
சொல்லை அலட்சியம் செய்து
ஏமாற்றிப் படிக்காமல்
இருந்துவிட்டோமே. இப்போது
நாம் அல்லவோ ஏமாந்தோம்?'
என்று தன் பால்ய விளையாட்டுக்களை
நினைத்து அழுதுகொண்டே
கடிதத்தைப் படிப்பது
போலப் பாவனை செய்தான்.
அவனது
அபிப்ராயம் அந்த பெண்ணுக்கு
எப்படித் தெரியும்? 'நம்
தாய்க்குத்தான் ஏதோ
ஆபத்து வந்துவிட்டது.
எனவேதான் வெளியில் சொல்லாமல்
துக்கம் தாங்காமல் மனத்திலேயே
படித்துக்கொண்டு தன்
கணவர் அழுகிறார்' என்று
எண்ணினாள். மிகவும் பயமடைந்து
அழுதாள். சிறிது நேரத்தில்
அக்கம்பக்கத்திலுள்ள
அனைவரும் கூடி அழ ஆரம்பித்துவிட்டனர்.
இப்படியிருக்க, படித்த
பெண் ஒருத்தி திடீரென்று
அங்கு வந்து, அழும் காரணத்தை
கேட்டாள். மனைவி விஷயத்தை
சொல்லி கடிதத்தைக் காட்டினாள்.
வந்த பெண் அதை வாசித்தாள்.
அதில், "க்ஷேமம். நான் ஸெளக்யமாக
வந்து சேர்ந்தேன். அம்மாவை
நல்ல டாக்டரிடம் காட்டினேன்.
நல்ல மருந்துகள் கொடுத்தார்.
பூர்ண குணம் அடைந்தாள்.
அம்மாவின் உடம்பைப் பற்றிக்
கவலை வேண்டாம். நாளைத்
தினமே புறப்பட்டு வருகிறோம்"
என்று இருந்தது.
இதையே
வாசித்து காட்டினாள்.
அனைவரும் திக்ப்ரமமடைந்து
மாப்பிள்ளையைப் பார்த்தனர்.
அவன் விழிக்கிறான். பதில்
சொல்ல முடியாமல். பிறகு
விஷயத்தை அறிந்து கொண்டனர்.
மனைவி
அங்கு இருந்த ஒரு தோழைியைப்
பார்த்து,
சதுர:
ஸகி மே பர்த்தா யோ ந வாசயதி
பரைர் லிகிதம் |
என்றாள்.
அதாவது, "என் கணவர் மிகவும்
ஸமர்த்தர்; பிறர் எழுதிய
கடிதத்தைப் படிக்கமாட்டார்"
என்றாள். இதன் உண்மையை
அறிந்த தோழி,
தஸ்மாதபி
சதுரதர: ஸ்வயமபி லிகிதம்
ஸ்வயம் ந ஜாநாதி ||
என்று
வேடிக்கையாகப் பதில்
சொன்னாள்.
"உன் கணவர்
பிறர் எழுதியதைப் படிப்பதில்லை.
இது என்ன ஆச்சரியம்? என்
கணவர் தாம் எழுதியதையே
மறுபடி படிக்கச் சொன்னால்
படிக்கத் தெரியாதவர்
ஆயிற்றே. ஆக என் கணவர்
அல்லவா மிகவும் ஸமர்த்தர்?"
என்றாள். ஆகையால் படிப்பில்லாதவனின்
நிலை இவ்விதமாகும்.
சிலர்
பணத்தையே பிரதானமாக கருதுவர்.
இதுவும் ஒரு விதத்தில்
வாஸ்தவமே. படிப்பிருந்தும்
பணமில்லாதவனை மதிப்பதில்லையே.
பணம் இருந்தால் அல்லவோ
ஆடை ஆபரணங்களை அணிந்து
தன்னை உயர்ந்தவனென்று
பிரகடனம் செய்து கொள்ளலாம்?
விஷயங்களை உள்ளபடி அறிந்த
பெரியவர்கள் கூட பணமில்லாமல்
வெறும் படிப்பு மட்டும்
உள்ளவனை திரஸ்கரிக்கிறார்கள்.
மற்றும்
சிலர் உயிரையே பிரதானமாக்
கருதுகின்றனர். அதாவது
ஸுகமாக இந்த பூலோகத்தில்
இருந்து வாழ்வதே முக்கியம்
என்று நினைக்கிறார்கள்.
இதற்காக நியாயமான வழிகளிலோ,
மற்ற வழிகளிலோ பணத்தை
ஸம்பாதிப்பதில் முயற்சி
எடுத்து கொள்கிறார்கள்.
'நாம் இந்த பூலோகத்தில்
இருப்பது எல்லா விதத்தாலேயும்
ஸுகங்களை அநுபவிப்பதற்காகவே'
என்று நினைக்கிறார்கள்.
கோடிக் கணக்கான பணத்தை
ஸம்பாதித்துப் பெட்டிகளிலோ
பாங்குகளிலோ வைத்து
அழகு பார்ப்பதில் மாத்திரம்
என்ன பயன்? நல்வழியிலேயோ
மற்றப்படியோ தனத்தை
ஸம்பாதித்து எல்லா இந்திரியங்களையும்
திருப்திப்படுத்துவதுதான்
பூமியில் பிறந்ததற்குப்
பரம பலன் என்று நினைப்பர்.
சார்வாகனும், "சாம்பலாகப்
போய்விட்டால் இந்த சரீரம்
மறுபடி வரப் போவதில்லையே.
இவ்வுடலைக் கொண்டு ஸுகத்தை
எவ்விதம் அநுபவிக்க முடியும்?
ஆகையால் இந்த உடல் இருக்கும்போதே
கடனை வாங்கியாவது நெய்யைக்
குடி. ஸுகங்களை எவ்வவு
அநுபவிக்கலாமோ அவ்வளவையும்
அநுபவித்துவிடு" என்று
சொல்லுகிறான்.
இந்த
நிலையில் சில மகான்கள்,
"ஈச்வரன் நமக்கு பிறப்பை
கொடுத்திருக்கிறான்.
இந்த சரீரத்தில் இந்த
ஆத்மா இருக்கிறது. அந்த
பிராணன் தரித்திருப்பதற்காக
சாப்பிட வேண்டுமே தவிர
அதர்மமான வழிகளில் இறங்கி
சாப்பிடுவதோ மற்ற காரியங்கள்
செய்வதோ தகாது" என்கிறார்கள்.
ஆகவே,
சாஸ்திரமே நமக்கு கைவிளக்கு,
அதை ஆதாரமாக கொண்டே
நாம் நடக்க வேண்டும்.
விபரீதமான வழிகளில் சென்று
அதர்மங்களை செய்யக் கூடாது.
அப்படி செய்தால், இவ்வுலகில்
நமக்கு அபகீர்த்தியும்
அவமானமும் ஏற்படும்;
மேலும், நரகத்துக்குப்
போகவும் நேரிடும். ஆகையால்
அவமானகரமான செய்கைகளை
செய்யாமல் நல்வழியிலேயே
நாம் நடக்க வேண்டும்.
பெரியவர்கள் மானத்தையே
பிரதானமாக கருதி அதற்காக
உயிரையும் விட ஸித்தமாக
இருக்கிறார்கள்.
இதை
வலியுறுத்தும் வகையில்
ஒரு நீதி ச்லோகமும்
உண்டு -
அதமா தநமிச்சந்தி
தநமாநெள ஹி மத்யமா: | உத்தமா
மாநமிச்சந்தி மாநம் ஹி
மஹதாம் தநம் ||
கீழ் நிலையில்
உள்ளவர்கள் பணத்தையே
பெரிதாக நினைப்பவர்கள்;
நடுநிலையில் உள்ளவர்கள்
தனத்தையும் மானத்தையும்
விரும்புகிறவர்கள்; உத்தம
புருஷர்களோ, 'எங்களுக்கு
மானமே பெரியது; அதுவே
தனம்; வேறு வேண்டாம்' என்று
நினைப்பார்கள்.
ஆகையால்,
பூமியில் பிறந்த ஒவ்வொருவரும்,
'இவன் நல்லொழுக்கத்துடன்
கூடியவன்; உண்மையாக நடப்பவன்'
என்று யாவரும் புகழும்
வகையில் நல்ல பெயரை ஸம்பாதித்துக்
கொண்டு இருக்க முயற்சி
செய்ய வேண்டும்.
மாப்பிள்ளை
மாமனார் வீட்டுச் சென்றான்.
அறைகுறை படிப்பு. பூரணமில்லை.
மைத்துனன்மார்கள் படித்தவர்கள்.
பெண்ணும் படித்தவள்.
சாப்பிடும் காலம். ஒருமைத்துனன்
மற்றவனைப் பார்த்து மாப்பிள்ளை
எப்படி இருக்கிறான் என்று
வினவினார். அதற்கு பதில்:
ஜாமாத வ்ருத்த ஸம்பன்ன:
குணரூப ஸமந் வித: கந்த
விஹீனோஸெள பாலாச குஸுமம்
யிதா என்று சொல்லி சிரித்தான்
என்றான். மாப்பிள்ளை
குணம் அழகு வ்ருத்தம்
எல்லாம் பொருந்தியவர்.
ஆனால் படிப்பில்லாதவர்.
பலாச புஷ்பம் எப்படி
கேவலம் அழகோ அப்படி
என்று பொருள். இதைக்
கேட்டதும் மருமகனுக்கு
கோபம் வந்துவிட்டது.
உடனே எழுந்தான். தனக்கு
மானம்தான் பெரியது என்று
மஹா பண்டிதனிடம் அணுகி
நான்கு வருஷங்களுக்குள்
மேதாவியாக திகழ்ந்தான்.
மாமனார் வீட்டுக்கு வந்தான்.
சாப்பிடும் சமயம். ரஸம்
பரிமாறினாள். அப்பொழுது
ரஸம் எப்படி என்றான்
ஒருவன். அதற்கு மாப்பிள்ளை.
"சாரு சாருதாம்பாதி இங்கு
தீ ஜீரமிச்ரிதம். கிஞ்சித்
லவண ஹீனேன பாலாச குஸம்யதா"
என்று சிரித்தான். ரஸம்
பார்வைக்கு அழகுதான்.
பெருங்காயம் ஜீரகம் எல்லாம்
சேர்த்து செய்யப்பட்டதுதான்.
ஆனால் உப்பு இல்லாமல்
ருசி இல்லை என்றான். பலாச
புஷ்பம் போல் என்றான்.
இதைக் கேட்டதும் முன்
தாங்கள் சொன்னது நினைவுக்கு
வந்து அவனிடம் மன்னிப்பு
கேட்டுக் கொண்டனர்.
ஒரு
பெண் நன்றாகப் படித்தவள்.
ஒருவனைக் காட்டி விவாஹம்
செய்து கொள் என்றான்
பிதா. அதற்கு அவள் நான்
கேட்கும் ப்ரச்னங்களுக்கும்
பதில் சொன்னால் ஸம்மதம்
என்றாள். யஸய ஷஷ்டி சதுர்தீஸ்யாத்,
விஹஸ்ய ச விஹாய ச அஹம்
கதம் த்விதீயா ஸ்யாத்
த்விதியா ஸயாமஹம் கதம்
என்று கேட்டாள். 'ராமஸய'
என்பது ஆறாம் வேற்றுமை.
அதுபோல் உள்ளது. 'விஹய்ய
என்பது' விஹாய என்பது
ராமாய என்பது போல் உள்ளது
இது நான் காம் வேற்றுமை.
இதை அநுசரித்து விஹஸ்ய
என்பது ஆறாம் வேற்றுமை
என்று விஹாய என்பதை நான்காம்
வேற்றுமை என்றான். 'அஹம்'
கதம், 'ராமம்' போல் என்பது
உம் கூடியது. இதை த்விதீயை
என்றான். இவை எல்லாம்
அவ்ய யத்தில் சேர்ந்தது.
இதை சப்தமாக நினைத்து
ராம சப்தத்துக்கு ஒப்பிட்டு
பேசினான். அவ்வளவுதான்.
இப்படி சொல்லுபவனுக்கு
எப்படி 'நான் த்விதியையாக
(மனைவியா) ஆவேன் என்றாள்.
ஆக முன் காலங்களிலும்
பெண்கள் கூட ஸம்ஸ்க்ருதத்தில்
நன்கு பயிற்சி பெற்றவர்கள்.
இக்காலத்தில் நன்கு படித்தவர்கள்.
ஆக மானம்தான் பெரியது.
மற்றவை பெருமை வாய்ந்ததல்ல.
*****
|
|
|
|
|
|
|
|