|
|
Enter subhead content here
|
|
ப்ரபத்தியில் ஒரு
விசேஷம்
ஓர் ஊரில்
ஒரு மகான் இருந்தார்.
அவர் எல்லாம் கற்றவர்;
ராமாநுஜ ஸம்பிரதாயத்தைச்
சேர்ந்தவர். ஆகையால்
விசிஷ்டாத்வைத மதத்தில்
தேர்ச்சி பெற்றவர். ஸ்ரீதேசிக
ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவரானபடியால்
ந்யாஸதிலகம், ந்யாஸவிம்சதி,
ந்யாஸதசகம், சரணாகதிதீபிகை,
ஸ்ரீமத்ரஹஸ்ய த்ரயஸாரம்
முதலிய ஸ்ரீகோசங்களை
அர்த்தத்துடன் நன்கு
கற்றுப் ப்ரபத்தி சாஸ்திரத்தில்
விசேஷத்துடன் கரைகண்ட
அறிவாளியாக இருந்தார்.
அவர் சில சிஷ்யர்களுக்குக்
காலக்ஷேபம் ஸாதிப்பது
வழக்கம். ஒரு சமயம் பகவத்கீதை
காலக்ஷேபம் ஸாதித்துக்
கொண்டிருந்தார். அநேக
சிஷ்யர்கள் திரள்திரளாகக்
கூடியிருந்து ஸ்வாமியின்
காலக்ஷேபத்தை அநுபவிப்பது
வழக்கம். கடைசி அத்தியாயத்தில்
சரமச்லோகம் காலக்ஷேபம்
நடந்து வந்தது.
இவர்
சிஷ்யர்களைப் பார்த்துக்
கூறுகிறார்:- சிஷ்யர்களே
இது கீதையிலுள்ள சரமச்லோகம்.
இதில் வேத வேதாந்தத்திலுள்ள
ஸாரமான அர்த்தம் சொல்லப்பெறுகிறது.
கீதைக்கே முக்கியமான
அர்த்தத்தைச் சொல்லுவதில்
இங்கேதான் நோக்கம்.
இது ப்ரபத்தியைச் சொல்லுகிறது.
ப்ரபத்தி, பரந்யாஸம்,
சரணாகதி, ந்யாஸம் என்பவை
ஒன்றைத்தான் சொல்லுகின்றன.
எவன் எந்தப் பலனை விரும்பினாலும்
அதைப் பெற எம்பெருமான்
ஒருவனிடத்தில் சரணாகதி
செய்தால் அந்த எம்பெருமான்
சந்தோஷமடைந்து அந்தப்
பலனைக் கொடுக்கிறான்.
"எல்லா வழிகளையும் விட்டு
என்னை ஒருவனையே சரணமாக
நீ அடை. நான் உன்னை எல்லாப்
பாவங்களினின்றும் விடுவிக்கிறேன்.
நீ கவலைப்பட வேண்டாம்"
என்பது இதனுடைய கருத்து.
இதன் அர்த்தத்தை ஸ்ரீஸ்வாமி
தேசிகன்,
ஸுதுஷ்கரேண
சோசேத் யோ யேந யேநேஷ்ட
ஹேதுநா | ஸ ஸ தஸ்யாஹமேவேதி
சரமச்லோகஸங்க்ரஹ:|| என்று
சுருங்க அருளிச் செய்திருக்கிறார்.
சாகுந்தல
நாடகத்தில் ஒரு ச்லோகம்.
யேன யேனவியுஜ்யந்தே
ப்ரஜா : ஸ்நிக்தேன கர்மணா. ஸ
சபாபாத்ருதே தாஸாம் துஷ்யந்த
இதி குஷ்யதாம் || என்பது
எவன்
எவனுக்கு எந்த எந்த பந்துக்களின்
வியோகம் ஏற்பட்டாலும்
அந்த ஸ்தானத்தில் இருந்து
காப்பாற்றுகிறவன் துஷ்யந்தன்
என்று ஒலைச்சாத்தச் சொன்னான்.
ஒரு பெண்ணுக்கு பர்தா
மறித்தால் அந்த ஸ்தானத்திலும்தான்
இருப்பதாக ஏற்படும் அதற்கு
பரிஹாரமாக "பாபச் செயலில்
தவிற என்று மேல் சொன்னது.
இவ்வாறு காளிதாஸன் சொன்னதை
நினைத்து சரமச் ச்லோகத்துக்குத்தான்
ஒரு விதமாக பொருள் கூறினார்.
ஏன். மனிதன் அத்யல்பன்.
அவன் விஷயமாக ஏன் இப்படி
கூற வேண்டும் என்று பகவான்
விஷயத்தில் வைத்து ரஸகனமாக
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன்
ஸாதித்தார்.
"ஹுதுஷ்கரேண
சோ சேத்ய: தஸ்ய தஸ்ய அஹமேவேதி"
என்பது.
ஜனங்கள் வெவ்வேறு
பயன்களை விரும்புகிறார்கள்.
ஒருவன் குழந்தைகளை விரும்புவான்.
மற்றொருவன் மழையை; இன்னொருவன்
ஐச்வர்யத்தை. இப்படி
ஜனங்களின் மனோபாவம்
இருக்கிறது. அந்த அந்தப்
பலனை அடைவதற்கு வேதங்களில்
புத்திரகாமேஷ்டி, காரீரி
இஷ்டி முதலியவை வழிகளாகச்
சொல்லபபெற்றிருக்கின்றன.
இவற்றைச் செய்வது கஷ்டம்.
இவற்றைச் செய்தால் அந்த
அந்தப் பலனை அடைய முடியும்.
இந்தச் சமயத்தில் அவற்றைவிட்டு
பகவானிடம் சென்று 'நானோ
இந்த இந்தப் பலன்களை
விரும்புகிறேன். அவற்றுக்கு
வேதங்களில் சொன்ன வழிகளைச்
செய்ய முடியாமல் தவிக்கிறேன்.
அவற்றைச் செய்தால் என்ன
பயன்கள் வருமோ அவற்றைத்
தேவரீரே அந்த வழிகளுக்குப்
பதிலாக இருந்து அடியேனுக்கு
அநுக்ரகிக்க வேண்டும்'
என்று எம்பெருமான் திருவடிகளைக்
கெட்டியாகப் பிடித்துப்
கொள்வதுதான் சரணாகதி.
மோக்ஷரூபமான பலனுக்கும்
இந்தச் சரணாகதிதான் உபாயம்.
"மோக்ஷத்துக்கு காரணமான
பக்தியோகத்தை என்னால்
செய்ய முடியாததனால்,
அந்த ஸ்தானத்தில் தேவரீர்
இருந்து அந்தப் பலனைக்
கொடுக்க வேண்டும்" என்று
பிரார்த்திப்பது. இப்படி
செய்தால் மோக்ஷம் கட்டாயம்
கிடைக்கும். ஆகையால்
எல்லா விதமான பலனுக்கும்
சரணாகதி உபாயமாகிறது.
இப்படி மோக்ஷ ரூபமான
பலனை உத்தேசித்து சரணாகதி
செய்தபிறகு, இங்குள்ள
வரையில் ஒருவிதமான குற்றமும்
இல்லாமல் கைங்கர்யம்
செய்துகொண்டு இருக்கவேண்டும்
என்று உபதேசித்தார்.
பகவான்
ரக்ஷகன். அநிஷ்டத்தை
விலக்கி இஷ்டத்தைக் கொடுப்பவன்.
எந்த கார்யங்களைச் செய்தாலும்
அவன் தான் ரக்ஷகன்; ப்ரபத்தியிலும்
அவன்தான் ரக்ஷகன். ஆனால்
ஒரு விசேஷம். நான் அந்த
அந்த கர்மாக்களைச் செய்யாமல்
தவிக்கிறவன். ஆக அதைச்
செய்தால் வரும் பயனை
அதை செய்யாமலே நீ கொடுக்க
வேண்டும் என்பது ப்ரார்த்தனை.
இதுதான் இங்கு விசேஷம்.
உபாயத்தை எதிர்பார்க்காமல்
ரக்ஷிப்பது. நிரபேஷ ரக்ஷகத்வ
ப்ரார்த்தனை.
இதைக்
கேட்டுக் கொண்டிருந்த
சிஷ்யர்களில் ஒருவன்
"ஸ்வாமிந்! தேவரீர் ஸாதித்தது
நன்றாக புரிந்தது. ஆனால்
ஒரு சந்தேகம் உள்ளது.
நாம் மோக்ஷத்துக்காகச்
சரணாகதி செய்தால் நம்முடைய
பாவங்கள் எப்படி விலகுகின்றன?
அதை விவரித்து ஸாதிக்க
வேண்டும்" என்றார்.
ஆசார்யர்
- நம்முடைய பாவங்கள் மலைமலையாக
இருக்கின்றன. இவற்றுள்
ஸஞ்சிதம், ப்ராரப்தம்
என்று இரண்டு வகை உண்டு.
ஸஞ்சித பாபங்கள் சரணாகதி
செய்ததும் போய்விடுகின்றன.
ப்ராரப்தத்தில், 'இந்தச்
சரீரம் உள்ளவரையில் இருந்து
பிறகு மோக்ஷத்துக்கு
வருகிறேன்' என்று இவன்
வேண்டிக் கொண்டபடியால்,
இவன் ஒப்புக்கொண்ட ப்ராரப்த
பாகத்தைச் சரீரம் உள்ள
வரையில் அநுபவித்துவிடுகிறான்.
மற்ற எல்லாப் பாவங்களும்
தொலைந்துவிடுகின்றன.
பிறகு மோக்ஷத்தை அடைகிறான்.
சிஷ்யன்
- மனத்தில் நன்றாகப் புரிந்தது.
சரணாகதி செய்பவன் இந்த
உடல் உள்ளவரையில் பாவத்தைச்
செய்யாமல் எப்படி இருப்பான்?
அறியாத்தனமாகச் செய்த
பாவங்கள் தாமாகத் தொலைந்துவிட்டாலும்,
தெரிந்தே சில பாவங்களை
இவன் செய்வானே. பாம்புடன்
ஒரு கூரையில் வாசம் செய்பவனுக்கு
ஒரு சமயம் பாம்பின் உபத்ரவம்
ஏற்படத்தானே ஏற்படும்?
சரீரத்திலுள்ள இவனுக்குத்
தெரிந்தே பாவம் ஏற்படுமே.
அது போக என்ன வழி?
ஆசார்யர்
- அப்படிப் பாவம் ஏற்பட்டால்
அது போவதற்காக மறுபடி
ஒரு தடவை சரணாகதி செய்ய
வேண்டும்; பாவம் விலகிவிடும்.
அப்படிச் செய்யாவிட்டால்
லகுவான சிக்ஷைகளைப் பகவான்
கொடுத்து அநுபவிக்கச்
செய்துவிடுவான்; அதாவது
கண்ணில்லாமற் போவது,
காது செவிடாவது, புத்ரன்
பார்யை இவர்கள் அடங்காமலிருப்பது
இப்படி சிக்ஷைகளை பகவான்
செய்துவிடுவான்.
சிஷ்யர்
- ஸ்வாமிந்! இப்படி அபராதங்களைச்
செய்து, அதற்கு தண்டனையையும்
அநுபவித்துப் பிறகு மோக்ஷத்தை
அடைவது அவ்வளவு திருப்திகரமாக
இல்லை. குற்றமே செய்யாமல்
இங்கு உள்ளவரையில் பகவானுக்குக்
கைங்கரியம் செய்து மோக்ஷத்தை
அடைய வேறு வழி உண்டா?
ஆசார்யர்
- நாம் சரணாகதி செய்யும்போது,
'இந்த சரீரம் உள்ளவரையில்'
என்று வேண்டிக் கொண்டபடியால்,
ப்ராரப்த பாகம் ஒன்றை
இசைந்திருக்கிறோம்
அல்லவ்ா? அதில் மேற்கொண்டு
பாவங்களை (குற்றங்களை)ச்
செய்வதற்குக் காரணமான
பாவங்கள் இருக்கின்றன.
இவற்றுக்கு, 'பாபாரம்பகபாபம்'
என்று பெயர். அந்தப் பாபாரம்பகபாபமும்
போக வேண்டும் என்று
சரணாகதி செய்யும்போது
வேண்டிக்கொண்டால், மேல்உள்ளவரையில்
பாவமே ஏற்படாது. ஆகையால்தான்
ஆசார்யர்கள் சிஷ்யர்களுக்குச்
சரணாகதி செய்து வைக்கும்போது,
பாபாரம்பகபாபமும் தொலைய
வேண்டும்' என்று வேண்டிக்கொள்வார்கள்.
சிஷ்யன்
- ஸ்வாமிந்! ரொம்ப ஸந்தோஷம்.
விஷயம் நன்றாக புரிந்தது.
இம்மாதிரி தேவரீர் ஸாதித்தபடி
சரணாகதி செய்துகொண்டவர்கள்கூடத்
தெரிந்தே பாவங்களைச்
செய்து வருகிறார்களே?
ஆசார்யர்
- சாஸ்திரத்தின் உண்மை
இது. குழந்தையை அடைவதற்குப்
புத்திரகாமேஷ்டியைச்
சிலர் செய்கிறார்கள்.
ஸந்ததியும் பெறுகிறார்கள்;
சிலர் செய்தும் பலனை
அடைவதில்லை. மழை பெய்ய,
வேதங்களில் சொன்ன சில
காரியங்களைச் செய்து,
சிலர் பலனை அடைகிறார்கள்;
சிலர் பெறுவதில்லை. இதற்கெல்லாம்
என்ன காரணம்? பலனைப் பெறுகிறவன்
சரியான வழியில் நின்று
கர்மங்களைச் செய்கிறான்.
முறை தவறிச் செய்தால்
எதுதான் பலனைக் கொடுக்கும்?
சரணாகதியைச் சரியான முறையில்
செய்யாமற் போனால் பலன்
ஏற்படுவதில்லை. இது எண்ணினவன்
குற்றமோ, செய்து வைத்த
ஆசார்யனின் குற்றமோ,
செய்யப்பட்ட சரணாகதி
சரியான முறையில் இல்லாததனால்
அதன் குற்றமோ என்றுதான்
சொல்ல வேண்டும். 'உடல்
உள்ளவரையில் பாவமில்லாமல்
கைங்கர்யம் செய்ய வேண்டும்'
என்று பாபாரம்பகபாபத்துக்கு
அஞ்சிச் சரணாகதி செய்த
பிறகும், மேல் தெரிந்தே
க்ரூரமானவையும் தகாதவையுமான
பாவங்களைச் செய்து வந்தால்
அவன் விஷயத்தில் சரணாகதி
எப்படிச் சரிவரச் செய்யப்
பெற்றது என்று சொல்ல
முடியும்? பகவான் ஒருவனையே
சரணமாக அடைந்த பிறகும்
ஒருவன் காளிகோயிலுக்கும்
தேவதாந்தரக் கோயிலுக்கும்
சென்றும், உற்சவங்களை
நடத்தி வைத்தும் கண்ணில்
தாரைதாரையாக ஜலத்தைப்
பெருக்கிக் கொண்டு அந்தத்
தேவதாந்தரங்களிடத்தில்
ஈடுபட்டு வந்தால் அவன்
செய்த சரணாகதி சரியானபடி
நடக்கவில்லை என்றுதானே
சொல்ல வேண்டும்? அதைப்
போலத் தான் இதையும்
தெரிந்து கொள்ள வேண்டும்.
"மந்த்ராக்யம்
முக்தி பீஜம் பரிணதிவசத:
கல்பதே ஸத்பலாய" என்றார்.
விதை எவ்வாறு அங்குரம்
நெல் காய் முதலிய வைகளுக்கு
காரணமோ அது போல் இம்மந்திரம்
மோக்ஷ பலத்துக்கு பீஜம்.
சரியான இடத்தில் அதை
விதைக்க வேண்டும். எலி
முகுந்ததையோ பழையதையோ
விதைத்தால் எவ்வாறு பலிக்கும்.
விதை விதைப்பவன் அதற்கு
தோஷம் இல்லாமல் சரியாக
இருந்தால்தான் பலிக்கும்.
அவ்வாறே இங்கும்.
சிஷ்யன்
- ஸ்வாமிந்! ஐயம் நீங்கிற்று.
மனத்தில் நன்றாகப் பதிந்தது.
ஆனாலும் மற்றொரு சந்தேகம்
ஏற்பட்டுள்ளது. சரணாகதி
செய்தபிறகு இந்த உடல்
உள்ளவரையில் ஒரு வித
குற்றமும் இல்லாமல் ஒருவன்
கைங்கரியம் செய்து வருகிறான்.
தெரியாத்தனமாகக்கூட
அவனுக்குக் குற்றம் ஏற்படுவதில்லை.
இது எல்லாருக்கும் தெரிந்ததே.
ஆனால் அவன் பல துன்பங்களை
அநுபவிக்கிறான். பாவங்களைப்
பிறகு தெரிந்து செய்திருந்தால்
அவற்றின் பலனாக இந்தத்
துக்கங்கள் ஏற்பட்டன
என்று சொல்லலாம். அவனுக்கோ
பாவமே பிறகு ஏற்படவில்லை.
இதற்குக் காரணம் என்ன?
ஆசார்யர்
- 'சரீரம் உள்ளவரையில்'
என்று ப்ராரப்த பாகத்தை
இவன் இசைந்திருக்கிறான்
அல்லவா? அதில் துன்பங்களைக்
கொடுக்கக்கூடிய பாவங்கள்
இருக்கின்றன. அதன் பலனாக
இது உண்டாகிறது.
சிஷ்யன்
: - ஸ்வாமிந்! விஷயம் வாஸ்தவந்தான்.
சரணாகதி செய்யும்போதே
இவன் இசைந்துள்ள ப்ராரப்தபாகத்தில்
துக்கங்களைக் கொடுக்கக்
கூடிய பாவங்களும் ஒழிய
வேணடும் என்று வேண்டிக்
கொண்டிருந்தால் பிறகு
துன்பம் ஏற்படாது அல்லவா?
'பாபாரம்பகபாபங்கள் போக
வேண்டும்' என்று வேண்டிக்
கொள்வது போல், 'து:காரம்பகபாபங்களும்
தொலைய வேண்டும்' என்று
வேண்டிக் கொள்ளலாம்
அல்லவா? சரணாகதிதான்
எல்லாப் பலனையும் கொடுக்கும்
என்று தேவரீர் ஸாதிக்கிறீரே,
ஆசார்யர்
- அழகான கேள்வி. இதுவரையில்
இதை யாரும் கேட்டதில்லை.
இதற்குப் பரிகாரமும்
யாரும் எங்கும் உசிதமாக
ஸாதித்ததுமில்லை. ஆனால்
ஸ்ரீஸ்வாமி தேசிகன் ஸ்ரீஸூக்தியை
நன்கு ஆராய்ந்தால் இதற்கு
பதில் புலப்படும். தூப்புல்
வள்ளலான தேசிகமணி தவிர
வேறு யார்தாம் இதற்கு
பதில் ஸாதிக்க முடியும்?
ந்யாஸதிலகத்தில் பதினான்காவது
ச்லோக ரத்தினத்தை மனத்தில்
தரித்துப் பார். தானாகவே
பதில் விளங்கும். ஸ்லோகம்
-
சோகாஸ்பதாம் சமதந:
ச்ரயதாம் பவாப்தெள, ராகாஸ்பதாம்ச
ஸஹஜம் ந ருணத்ஸி து:கம்
| நோசேதமீ ஜகதி ரங்கதுரீண!
பூய:, க்ஷோதிஷ்ட போகரஸிகாஸ்
தவ ந ஸ்மரேயு: || (ஸ்ரீந்யாஸதிலகம்
- 14)
ஸுகவாழ்க்கையிலேயே
இருந்து ஆனந்தத்தை அநுபவித்துக்கொண்டிருக்கும்
ஒருவன் அந்தச் சமயத்தில்,
'ஐயோ, நாராயணா! தேவரீர்
எனக்குச சீக்கிரத்தில்
திருவடி ஸாதிக்கக்கூடாதா?
ஏன் இந்த உலகத்தில் நான்
இருக்கவேண்டும்?' என்று
வேண்டிக்கொள்வானா? ஒரு
காலும் வேண்டிக்கொள்ளமாட்டான்.
எம்பெருமானையே நினைக்கவும்
மாட்டான். சாமானியமான
கஷ்டங்களை அநுபவித்துக்கொண்டு
உயர்ந்த சுகங்களை அநுபவிப்பனே
பகவானை நினைப்பதில்லையே.
அப்படி இருக்க இவன் எப்படிப்
பகவானை நினைப்பான்? அதிகமாக,
தேகத்தின் அநாரோக்கியம்,
புத்திர பந்துக்களின்
வியோகத்தினால் ஏற்படும்
சோகம் முதலியவை இருக்கும்போது
கதறிப் பகவானை வணங்கி,
'உடனே திருவடி ஸாதிக்க
வேண்டும்' என்று வேண்டிக்
கொள்வான். இது உலக இயற்கை.
ஆகையால் சரணாகதி செய்யும்போது,
'து:காரம்பகபாபமும் போக
வேண்டும்' என்று எண்ணிச்
சரணாகதி செய்தால், பகவான்
அதை ஒப்புக்கொள்ளமாட்டான்.
மேற்கொண்டு துக்கமே
இல்லாமல் இந்தச் சரீரம்
உள்ளவரையில் இன்பங்களையே
அநுபவித்து வந்தால் அத்யல்பமான
அந்த இன்பங்களிலேயே மிக்க
சுவை இவனுக்கு உண்டாகிவிடும்.
மேன் மேலும் அதிலேயே
இவனுக்கு நாட்டம் ஏற்பட்டுவிடும்.
அப்போது பகவானையே இவன்
மறந்துவிடுவான். துக்கங்கள்
வரும்போதல்லவா பகவானின்
ஸ்மரணம் வருகிறது? ஆகையால்
துக்கங்களோடு கலந்துதான்
பகவான் சுகங்களைக் கொடுப்பான்.
எனவே, பாபாரம்பகபாபம்
போக வேண்டும் என்று
சரணாகதி செய்வது போல,
து:காரம்பகபாபம் போக
வேண்டும் என்று சரணாகதி
செய்யக்கூடாது. அதற்குப்
பகவான் இசையமாட்டான்.
இது தான் நம் தூப்புள்
வள்ளல் தந்த சாஸ்திரார்த்தம்.
"கூவிக்கொள்ளும்
காலம் குறுகாதோ" என்றார்
ஆழ்வார். இதைப் படித்த
ஒரு வ்ருத்தர். நித்யமும்
தேவராஜன் ஸன்னதியில்
ப்ரதக்ஷிணம் செய்துகொண்டும்
கூவிக்கொள்ளும் காலம்
குறுகாதோ" என்பதை உரக்கச்
சொல்லிக் கொண்டும்
போவார். இதை பார்த்த
அர்ச்சகர் 'இவர் உலக இன்பத்தில்
ஆசை உள்ளவர் என்பதை அறிவிக்க
ஒரு நாள் மூல விக்ரஹத்தின்
பின் ஒளிந்துகொண்டு
இவர் இப்படி சொல்ல குறுகிவிட்டது
குறுகிவிட்டது என்று
உரைத்தாராம். இதைக் கேட்ட
இவர் மறுநாள் ஏன் வருகிறார்.
அவ்வாறு நசை நமக்கு.
ஒரு
ஆசார்யர் சிஷ்யர்களுக்கு
காலக்ஷேபம் ஸாதிக்கிறார்.
அவருக்கு வயிற்று வலி
அதிகம். ஆக காலக்ஷேபம்சொல்லும்போது
தனது வயிற்று வலியை பக்கத்திலுள்ள
க்ருஷ்ணரஜினத்தில் ஏத்திவிடுவார்.
காலக்ஷேபம் ஆனதும் அதை
வழக்கம்போல் தன்னிடம்
வரச் செயதுவிடுவார் -
இங்கு ஒர் சிஷ்யன் ஏன்
இப்படிச் செய்யவேண்டும்.
வலியால் தான் ஏன் துடிக்கவேண்டும்
என்று கேட்டான். அதற்கு
ஆசார்யன் சொன்ன பதில்.
வியாதியும் ஒரு ஆசார்யர்
என்று. இதன் கருத்து, இது
உள்ளபடியால்தான் மேலே
பாபம் செய்யாமல் இருக்க
புத்தி உண்டாகிறது. பகவானைப்
பார்த்து 'சீக்கிரம்
உன் திருவடியைத்தா, விரைவில்
மோக்ஷம் அடைவேன்' என்று
கேட்கிற புத்தியும் உண்டாகிறது.
இவ்வாறு பகவானை ஸ்மரிக்க
வேண்டும் என்று எண்ணிதான்
பகவான் துக்காரம்பக பாபத்தை
ப்ரபத்தியால் போக்குவதில்லை
என்று.
ஆசார்யன் - ப்ரபத்தியில்
ஒரு விசேஷம் சொல்கிறேன்.
கேண்மின். பாவங்கள் ஒவ்வொருவருக்கும்
மலை மலையாகக் குவிந்து
கிடக்கின்றன. இதை இரண்டு
பாகமாக பிரிப்பர். ஸஞ்சிதம்
ப்ராரப்தம் என்று. அதில்
பலங்க கொடுக்க வேணும்
என்று எண்ணத்துடன் எந்த
பாகத்தை எடுத்துக்கொள்கிறானோ,
அதற்கு ப்ராரப்தம் எனப்
பெயர். இந்த பாகம் பல சரீரங்களைக்
கொடுக்கும் வல்லமை பெற்றது.
அதில் இப்பொழுது ஒரு
சரீரத்தை எடுத்து அநுபவித்துக்
கொண்டுள்ளோம். ப்ரபத்தி
செய்தால் ஸஞ்சிதம் அழிந்துவிடும்.
ப்ராரப்தத்தில் இப்பொழுது
எடுத்துக் கொண்டு அநுபவிக்கும்
சரீரத்தைத்தவிர மற்ற
பாகங்கள் வேண்டாம் என்று
கேட்கிறபடியால் இந்த
கர்மாவைத் தவிர மற்ற
பாகங்களும் அழிந்துவிடும்.
இதற்கு அநுப்யுபகத ப்ராரப்தாசம்
என பெயர். இதை விட ஒப்பொண்ட
பாகத்துக்கு அப்யுபகதம்
ப்ராரப்தம் எனப் பெயர்.
இதிலும் ஸுகதுக்கங்களைக்
கொடுக்கும் கர்மபாகம்
நிறைய உள்ளது. பக்தியோகத்துக்கு
ப்ராரப்தத்தைப் போக்கடிக்க
திறமை இல்லை. ப்ரபத்திக்கு
அது உண்டு. அது மாத்திரம்
இல்லாமல் இப்பொழுதே
எல்லா பாபங்களும் போக
வேண்டும் என்று நினைத்துப்
பண்ணினால் அப்யுபகத ப்ராரப்தாம்சமும்
நசித்துவிடும். பக்தியை
அவதார ரஹஸ்ய சிந்தனையோடு
செய்தால் ப்ராப்தமும்
ஸர்வம் போய்விடும் என்பது
ஸித்தாந்தம். ஆக பக்திக்கு
ஸஞ்சித நாசகத்வம் போல்.
இதற்கு ப்ராப்த நாசகத்வமும்
அப்யுபகத கர்மம் தவிர
மற்ற கர்ம நாசகத்வமும்
விசேஷம். இங்கு பாபாரம்பத
பாப நிவர்த்திக்காகவும்
ப்ரபத்தி செய்யலாம் என்பதுபோல்
துக்காரம்பக பாப நிவ்ருத்யர்த்தமாகவும்
செய்யலாமே என்பது உன்னுடைய
கேள்வி. இதற்கு தான் ஸ்வாமி
தேசிகன் செய்யக் கூடாது
என்று சமத்காரமாக பதில்
கூறினார்.
இங்கு ஒரு
சந்தேகம். சிஷ்யன் கேட்கிறான்.
ஸ்வாமின் பாபாரம்பக பாபம்
போக வேண்டும் என்று
ஒருவன் ப்ரபத்தி செய்யாமல்
இருந்தால் மேல் பாவங்கள்
ஏற்படும். அதன் மூலம்
க்லேசங்களும் உண்டாகும்.
வந்த பிறகு அந்த கஷ்டங்கள்
(வயிற்று வலி) முதலியவை
போவதற்காக ப்ரபத்தி
செய்யலாமா.
ஆசார்யர்
- தாராளமாக செய்யலாம்.
இது புந:ப்ரபத்தியில்
சேராது. இதற்கு ப்ராயச்சித்த
ப்ரபத்தி என்று பெயர்.
சிஷ்யன் - பாபாரம்பக
பாபம் போக வேண்டும்
என்று ப்ரபத்தி செய்வதால்
லாபம் என்ன ? மேல் கொண்டு
புத்தி பூர்கமாக பாபம்
செய்தால் வரும் கஷ்டம்
நீங்குவதற்குதானே செய்கிறோம்.
அப்பொழுது பாபமும் வர
ப்ரஸக்தி இல்லை. கஷ்டமும்
வர ப்ரஸக்தியில்லை. ஆக
து:காரம்பக பாபம் போக
ப்ரபத்தி செய்வது போலத்தானே
ஆய்விட்டது. இதனால் உங்கள்
கருத்து ஜயிக்கவில்லை.
நான் கேட்டது போலத்தான்
முடிந்துவிட்டது. மேலும்
அப்யுபகத ப்ராரப்தத்தில்
புண்யாம்சமும் இருக்கும்.
அதனால் மேல் சுகமும்
ஏற்படும். இதனால் இவனுக்கு
வைராக்யம் வர வழி ஏது.
துக்காரம்பக பாபத்தை
வேண்டிக்கொண்டால் துக்கம்
வராமல் சுகமாகவே இருப்பான்.
அதன் மூலம் எம்பெருமானை
நினைக்கமாட்டான் என்று
சொன்னீரே. அதுபோல்தான்
அப்யுபகத ப்ராரப்தத்தில்
புண்யாம்சமும் இருப்பதால்
சுகமும் வரும் ஆகையால்
பகவானை நினைக்க வழி யேது
என்ற கேள்வி உண்டாகுமே.
ஆக முதலிலேயே ஸுகாரம்பக
புண்யமும் போகவேண்டும்
என்று கேட்கவேண்டியதுதானே.
ஆசார்யன்
- வாஸ்தவம்தான். ஆனால்
இங்கு மர்மத்தை யோசிக்கவேண்டும்
துக்கமே கலசாத ஸுகத்தை
அநுபவிப்பதற்கும் துக்கம்
கலந்து அத்துடன் அநுபவிப்பதற்கும்
வாசியுண்டு. முதல் அம்சத்தில்
வைராக்யம் வர வழியில்லை.
இரண்டாவதில் வைராக்யம்
அவச்யம் வரும். நீயே அதை
யோசித்துப்பார். துக்கம்
வராமலும் சுகமும் வராமலும்
இருக்க நினைத்தால் அப்பொழுது
பண்ணும் ப்ரபத்தி ஆர்த
பாபத்தாயாகவேதானே முடியும்.
ஆக இதெல்லாம் யோசித்து
மனதில் நிம்மதியடைய வேண்டும்.
1,
ஸ்வரக்கலோகம் எப்பொழுதும்
ஆனந்தத்தையேக் கொடுக்க
கூடியது. அதனால் அங்கு
சென்றவனுக்கு வைராக்யம்
வராது. 2. நரகம்
எப்பொழுதும் வேதனையைக்
கொடுப்பது. அதனால் அங்கு
இருப்பவனுக்கு ஐயோ நாம்
எப்பொழுது வெளியில்
வருவோம் என்கிற எண்ணமே
உண்டாகும். மனுஷ்யலேகத்தில்
ஸுகம் துக்கம் கலந்து
வருமாகையால் இதில் மனிதனுக்கு
நப்பாசை இருக்க வழியுண்டு.
ஆக சிஷ்யனே நீ யோசித்துப்பார்.
துக்காரம்பகமான பாபத்தையும்
கழிக்க வேண்டும என்று
ப்ரபத்தி செய்தால் அதை
கொடுத்துவிட்டால் எப்படி
இவனுக்கு வைராக்யம் வந்து
பகபதனுபவத்தில் எப்படி
ருசி ஏற்படும். மோக்ஷத்தில்தான்
எப்படி நசை ஏற்படும்.
அதனால் அந்த பாவங்களைப்
போக்கடித்து மோக்ஷம்
வேண்டும் என்று கேட்கவும்
தகா. அவனும் கொடுக்க
மாட்டான்.
சிஷ்யன் - ஆசார்யரே,
நன்கு புரிந்தது. ஆனால்
ஒரு சந்தேஹம். அடியேன்
கேட்ட ப்ரச்னத்துக்கு
பதில் வரவில்லை. துக்கத்ைத்க்
கொடுக்க கூடிய பாபாரம்பக
பாபம் போகவேண்டும் என்று
ப்ரத்தி ஒப்புக் கொண்டுன்ளோம்.
அப்படியானால் பாபமும்
போய்விட்டது. அதனால்
உண்டாகும் துக்கமும்
போய்விடும். ஆக முன்போலத்தானே
பகவதனுபவத்தில் ருசி
ஏற்படாது?
ஆசார்யன்
- நீ குசாக்ரபுத்தி. நன்கு
தெரிந்து கொண்டுதான்
ப்ரச்னை பண்ணுகிறாய்.
ஆனால் ஒன்றை யோசித்துப்
பார். துக்கங்களுக்கு
காரணமான சரீராந்தரங்களை
இவன் வேண்டாம் என்று
சொல்லிவிட்டான். இந்த
சரீரத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
இதில் பல ஸுக துக்கங்களுக்கு
காரணமான பாகங்கள் உள்ளன.
துக்கக ரணமான பாபங்களும்,
பாபங்களுக்கு காரணமான
பாபங்களும் உண்டு. நேராகவே
துக்கத்தைத் தரக்கூடிய
பாபங்களும் உண்டு. முதல்
பாகம் போகவேண்டிக் கொண்டோம்.
இரண்டாவதான
பாகமும் போகவேண்டும்
என்று ப்ராரத்தித்து
அவனும் தந்து விட்டால்
ஸ்வர்கத்துக்கு ஸமமாக
ஆகிவிடும் மனுஷ்ய லோகமும்.
ஆக நப்பாசைதான் இருக்கும்.
வைராக்யம் வர வழியே இல்லை.
ஆகவேதான் அப்படி நடக்காது
என்று சொன்னது.
சிஷ்யன்
- நன்கு புரிந்து விட்டது.
இப்படி யார் உபதேசம்
செய்யமுடியும். தினவு
அடங்கும்படி சொல்வதற்கு
உங்களுக்கு ஸமமாக யாருமில்லை.
இவ்வளவு உள் புகுந்து
பார்த்தவர்களும் இல்லை.
ஆகவேதான் தங்களிடம் கேட்டு
கொண்டேன். ஸந்தோஷம்.
*****
|
|
|
|
|
|
|
|
Enter supporting content here
|
|
|
|