வேதம் ஓதுதல்
உலகத்தில்
அந்தணராகப் பிறந்த யாவரும்
வேதாத்யயனம் அவசியம்
செய்ய வேண்டும். வேதம்
ஓதுவதுதான் இவர்களுக்கு
முக்கியமான தர்மம். எத்தனையோ
வைதீக தர்மங்களை இவர்கள்
அநுஷ்டித்தபோதிலும்
அதனால் எம்பெருமானுக்கு
உகப்பு அவ்வளவு ஏற்படாது.
வேதம் ஓதுவதனால்தான்
அவன் திருப்தி பெறுவான்.
'வேதத்தை அத்யயம் செய்யாமலிருக்கும்
அந்தணர் வ்ராத்யர்களாக
ஆகிவிடுகின்றர்' என்று
பெரியோர் கூறுவர். இவர்
இருபிறப்பாளன் (த்விஜந்மா)
ஆனபடியால் வேதம் ஓதுவதனால்தான்
இவனுக்கு த்விஜந்மத்வம்
ஸபலமாகிறது.
இக்காலத்தில்
எல்லா அந்தணர்களாலும்
வேதம் முழுவதும் அத்யயனம்
பண்ண முடியவில்லை. ஆனாலும்
உபயுத்தமான புருஷஸுக்தம்,
உபநிஷத் பாகம் முதலியவற்றை
இவர்கள் ஓதுகிறபடியால்
அவ்வழியால் அது நிலைக்கிறது.
இதையும் அத்யயனம் செய்யாமல்
எத்தனையோ ப்ராம்மணர்கள்
இருக்கிறார்களே என்றால்
அவர்களும் ஸந்தியாவந்தனத்தையும்
காயத்ரீயையும் விடாமல்
ச்ரத்தையுடன் செய்கிறபடியால்
அவர்களும் கடைத்தேறி
விடுவார்கள். இதையும்
செய்யாதவர்களுக்கு எதையும்
சொல்ல முடியாது.
வேதாத்யயனம்
செய்த அந்தணர்களினால்தான்
உலகமே ஸுபிக்ஷமடைகிறது.
"வேதமோதிய அந்தணரக்கோர்
மழை" என்ற ரீதியில் இவர்களால்தான்
மழையே பெய்கிறது. ஆகையால்தான்
பழங்கால அரசர்கள் எல்லாருமே
பிராமணர்களுக்கு இருப்பிடம்,
உணவு முதலிய எல்லா செளகரியங்களையும்
செய்து வைத்து, வேதம்,
சாஸ்திரங்கள் முதலிய
எல்லாவற்றையும் கற்கும்படியும்
கற்பிக்கும்படியும்
ஏற்பாடு செய்து வைத்திருந்தனர்.
தசரத
சக்கரவர்த்தி நீதி தவாறாமல்
அறுபதினாயிரம் ஆண்டு
அயோத்தியை ஆண்டு வந்தார்.
அவருடைய ராஜ்யம் ஸுபிக்ஷமாக
இருந்தது. குடிமக்களை
- விசேஷமாகப் பிராமணர்களை
- அவர் ஆதரித்து வந்தார்.
அவருக்குப் பிள்ளைப்பேறு
இல்லாததனால், தமக்குப்
பிறகு ராஜ்யத்தை ஆள்பவர்
யாரும் இல்லையே; அந்தணர்களை
ஆதரிப்பவர் யார்? அவர்கள்
வருந்துவார்களே என்றுதான்
வருத்தமடைகிறார். இதைக்
கம்பர் மிகவும் அழகாகக்
கூறுகிறார்:-
அருந்தவ
முனிவரும் அந்த ணாளரும் வருந்துத
லின்றியே வாழ்வில் வைகினார், இருந்துயர்
உழக்குவர் என்பின் என்பதோர் அருந்துயர்
வருத்தும்என் அகத்தை
என்றனன்.
ஆகையால் பிராமணர்களுக்கு
அரசர்களின் ஆதரவு வேண்டும்.
இவர்கள் வேதத்தைக் கசடற
ஓத வேண்டும். நாடு ஸுபிக்ஷம்
அடைய வேண்டும்.
பெரியாழ்வாரும்,
"இருக் கெஜுச் சாம வேத
நாண்மலர்கொண்டு உனபாதம்
நண்ணாநாள் அவை தத்துறுமாகில்
அன்று எனக்கவை பட்டினி
நாளே" என்று, ரிக் யஜுஸ்
ஸாமம் என்ற வேதங்களாகிய
புஷ்பங்களைக் கொண்டு
பகவானைத் தினமும் அர்ச்சிக்க
வேண்டும் என்கிறார்.
ஆகையால்தான், 'வேதம் பிராமணர்களின்
தனம்' என்று பெரியோர்
கூறுவர்.
வேதத்தை அத்யயனம்
செய்யும்போது முதலிலும்
முடிவிலும் (முன்னும்
பின்னும்) அவசியம் பிரணவத்தைச்
சொல்ல வேண்டும். அதுதான்
எங்கும் வழக்கம். எதற்காக
என்றால், பிரணவத்திலுள்ள
முதல் எழுத்தான அகாரத்தால்
பகவான் சொல்லப் பெறுகிறான்.
அந்த பகவான்தான் எல்லா
வேதங்களாலும் சொல்லப்
பெறுகிறான் என்பதைக்
குறிப்பதற்காக. உலகத்திலும்
ஒருவனுடைய நிலம், வீடு
முதலிய உடைமைகளைச் சுட்டிக்
காட்டும்போது இவை இவனுடையச்
சொத்துக்கள்; இவ்வளவு
விஸ்தீர்ணம் உள்ளவை என்பதை
இரண்டு (நாலு) பக்கங்களிலும்
எல்லை (ஸர்வே)க் கற்களை
நாட்டியுள்ளதைப் பார்த்துத்தானே
நிச்சயம் செய்கிறோம்?
அதுபோல் எல்லா வேதமும்
பகவானுடைய சொத்து; அதாவது
எல்லா வேதங்களாலும் சொல்லப்பெறுகிறவன்
பகவான் என்பதைக் காட்டுவதற்காகவே
ஆரம்பத்திலும் முடிவிலும்
'ஹரி: ஓம்' என்று சொல்லுகிறோம்.
அங்கும் ஓம் என்னும்
பிரணவத்தால் ஹரி: அதாவது
பகவான்தான் சொல்லப்
பெறுகிறான் என்பதைக்
குறிப்பதற்காகவே 'ஹரி:
ஓம்' என்று சொல்வது.
இதையேதான்,
'யத் வேதாதெள ஸ்வர: ப்ரோக்தோ
வேதாந்தே ச ப்ரதிஷ்டித:|
தஸ்ய ப்ரக்ருதிலீநஸ்ய
ய; பர: ஸ மஹேச்வர: ||' என்று
பெரியோர் சொல்லுவர்.
செப்பிலே கிடந்த ஆபரணத்தை
வாங்கிப் பூண்டு, பின்னையும்
அவ்வாபரணத்தை வாங்கிச்
செப்புக்குள்ளே இட்டுவைக்குமாப்
போலே, ஆத்யந்த பீஜமாக
இருக்கிறது யாதொன்று,
அது தன்னுடைய ப்ரக்ருதியிலே
லீனமாயிருக்கிறது அகாரம்,
அது ரக்ஷகனைக் காட்டுவது"
என்று இதன் அர்த்தத்தைப்
பெரியோர் மிகவும் அழகிய
ரீதியிலே காட்டியுள்ளனர்.
அதாவது
- இக்காலத்தில் ஆபரணங்களைப்
பெட்டியில் வைப்பது போல்
முற்காலத்தில் செப்பில்
(கலசத்தில்) வைப்பது வழக்கம்.
அந்த ஆபரணத்தை உடலில்
தரிக்கும்போது செப்பிலிருந்து
எடுத்துப் பூணுவதும்,
வேண்டாத ஸமயத்தில் உடலிலிருந்து
எடுத்து அந்த செப்பிலேயே
வைப்பதும் வழக்கம். அதைப்
போல வேதோச்சாரணத்துக்கு
ஆத்யந்த பீஜமாக இருக்கிறது
பிரணவம். அதிலுள்ள அகாரம்
பரமாத்மாவைச் சொல்லுகிறது.
அவன் (பரமாத்மா) உயர்ந்த
ரத்தினம். பிரணவம் என்பது
கலசம். கலசத்தில் ரத்தினம்
இருப்பது போல பிரணவத்தில்
பகவான் இருக்கிறான்.
கலசத்திலிருந்து ஆபரணத்தை
(ரத்தினத்தை) வெளிப்படுத்துவது
போல் பிரணவத்தில் இருக்கும்
பரமாத்மாவை வேதோச்சாரணம்
மூலம் வெளிப்படுத்துகிறோம்.
ஆபரணத்தைப் பூண்டபிறகு
மறுபடியும் கலசத்தில்
வைப்பது போல வேதோச்சாரணத்தால்
வெளிவந்த பகவானை மறுபடியும்
பிரணவத்தில் வைப்பதற்காக
முடிவிலும் பிரணவத்தைச்
சொல்லுகிறோம். கலசத்தைத்
திறப்பது, மூடுவது என்று
இரண்டு வியாபாரங்கள்
உண்டு. அதேபோல் இங்கும்
காட்டுவதற்காகவே பிரணவத்தை
ஆரம்பத்திலும் முடிவிலும்
ஸ்வரபேதத்துடன் சொல்லுகிறோம்.
ஆகையால் பகவானைச் சொல்லுகிற
அகாரத்தை உள்ளே அடக்கி
வைத்துள்ள பிரணவத்தை
வேதத்தின் ஆதியிலும்
அந்தத்திலும் சொல்லுகிறபடியால்
எல்லா வேதங்களும் பகவானையே
சொல்லுகின்றன என்று
ஏற்படுகிறது.
எங்கும்
வேதாத்யயனம் செய்யும்போது
ஆரம்பத்திலும் முடிவிலும்
வேறு தேவதைகளைக் குறிக்கும்
சொற்களைச் சொல்லி ஆரம்பிப்பதில்லை.
உதாரணமாக, 'ஹர: ஓம், நமச்சிவாய'
என்றோ, வேறு விதமாகவோ
ஆரம்பிப்பதும் முடிப்பதுமில்லை.
ஆகையால்தான் எல்லா வேதங்களும்
'ஹரி:' என்ற எம்பெருமானையே
சொல்லுகின்றன என்று
ஏற்பட்டது. நடுவில் வேதங்களில்
அநேக இடங்களில் தேவதாந்தரங்களைக்
குறிக்கும் சொற்கள்
இருந்தபோதிலும், அந்தச்
சொற்களும் அந்த அந்தத்
தேவதைகளுக்கு அந்தர்யாமியான
பகவானை (ஹரியை)க் குறிப்பதில்தான்
நோக்கு உடையவை. எல்லா
தேவதைகளும் பகவானுக்குக்
கைகால் முதலிய அவயங்களாக
இருக்கிறபடியால் அந்த
அந்த அவயங்களோடு கூடின
அவயவியான சரீரியான பகவான்தான்
அந்தச் சொற்களின் தாத்பர்யபூதன்
என்று சொல்ல வேண்டும்.
ஆகையால்தான், 'ஸர்வே வேதா
யத்பத மாமநந்தி' என்று
சாஸ்திரமும் கூறுகிறது.
வேதாக்ஷராணி
யாவந்தி படிதாநி த்விஜாதிபி
: | தாவந்தி ஹரிநாமாநி கீர்த்திதாநி
ந ஸம்சய : ||
என்றல்லவோ
ப்ரமாணம் உள்ளது? 'வேதங்களிலுள்ள
ஒவ்வொரு பதமும் பகவானைச்
சொல்லுகிறது என்பது
மாத்திரமல்ல; ஒவ்வோர்
அக்ஷரமும் பகவானையே கூறுகிறது'
என்றால், எல்லா வேதங்களும்
பகவானைக் குறிக்கின்றனவா
இல்லையா என்ற ஸந்தேஹம்
எப்படி எழும்?
இப்படி
வேதத்திலுள்ள ஒவ்வோர்
அக்ஷரமும் பகவானைச் சொல்லுகிறபடியால்
ஒரு தடவை வேதத்தைப் பூர்ணமாக
உச்சரித்தால் எத்தனையோ
தடவை ஹரிநாமத்தைச் சொல்லுவதுபோல
ஆகிறது. இவ்வளவு மகிமை
அடைந்தபடியால் தான்,
'வேதாத்யயனம் அவசியம்
செய்ய வேண்டும்; இதையே
ஜபிக்க வேண்டும்' என்று
பிரமாணம் கூறுகிறது :-
வேதமேவ
ஜபேந் நித்யம் யதாகாலம்
அதந்த்ரித: | ந ஹ்யஸ்யாஹு:
பரம் தர்மம் உபதர்மோந்ய
உச்யதே ||
"இதற்கு (வேதாத்யயனத்துக்கு)
ஸமமானதும் உயர்நததுமான
தர்மம் கிடையாது; மற்றவை
யாவும் தாழ்ந்தவையே."
இப்படி எல்லா வேத அக்ஷரங்களும்
பகவானையே சொல்லுகிறபடியால்தான்
வேதாத்யயனம் முக்கிய
தர்மமாயிற்று. மற்றத்
தேவதைகளெல்லாம் பகவானுடைய
அவயங்களானபடியால் அவர்களைச்
சரீரமாக உடைய பகவான்தான்
முக்கிய அவயவி. அங்காநி
அந்யா: தேவதா: என்பதை வேதமே
கூறுகிறது. ஆகையால்தான்
ஸ்ரீ மத் ராமாயணத்தில்,
யுத்தகாண்டத்தில், ஸீதாதேவியின்
அக்னிப் பிரவேச காலத்தில்
எல்லாத் தேவதைகளுடன்
கூடிய பிரம்மா ஸ்ரீராமனை
ஸ்தோத்ரம் செய்தபோது,
அஹம் தே ஹ்ருதயம் ராம!
ஜிஹ்வா தேவீ ஸரஸ்வதீ
என்று, தாம் ஸ்ரீராமனுடைய
ஹ்ருதயமாகவும் தம் பத்தினியான
ஸரஸ்வதி தேவி நாக்காகவும்
ஆவதாகக் கூறி புகழ்ந்தார்.
பரமசிவனும் பரமாத்மாவைப்
பார்த்து, "தேவரீருக்குக்
கேசவன் என்ற பெயர் வந்த
காரணம், 'க' என்று சொல்லப்பெறுகிற
பிரம்மாவும், 'ஈஸ்' என்று
சொல்லப் பெறுகிற ஸர்வதேஹிகளுக்கும்
ஈச்வரனான நானும் தேவருடைய
அவயத்திலிருந்து உண்டானபடியால்
தேவரீருக்கு 'கேசவன்'
என்ற திருநாமம் உண்டாயிற்று"
என்று கேசவ என்ற அக்ஷரங்களைக்
கொண்டே ஸ்தோத்ரம் செய்தார்.
ஆகையால் இவ்வளவு மகிமை
பெற்ற வேதத்தை அவசியம்
அத்யயனம் செய்யவேண்டும்;
அதுவும் காலத்தில் முறை
தவறாமல் சோம்பலின்றிச்
செய்வது உத்தமம்.
ச்ராவண்யாம்
ப்ரோஷ்டபத்யாம் வா உபாக்ருத்ய
யதா விதி யுக்தஸ் சந்தாமஸி
அதீயீத மாஸாந் விப்ர:
அர்தபஞ்சமாந்
ச்ராவணம்
தொடங்கி நாலரை மாதம்
வேதாத்யயனத்துக்கு ஏற்பட்ட
காலம். இந்த நாலரை மாதங்களில்தான்
ஆசார்யரிடமிருந்து நியமத்துடன்
மாணவன் வேதத்தைக் கற்க
வேண்டும். மீதி மாதங்களில்,
ஆசார்யனிடமிருந்து கற்ற
வேதத்தை த்ருடப்படுத்த
உருச் சொல்ல வேண்டும்.
சுக்லபக்ஷத்தில் வேதங்களையும்,
கிருஷ்ணபக்ஷத்தில் வேதாங்கங்களையும்
ஓத வேண்டும். இது சாஸ்திர
மரியாதை.
அத ஊர்த்வம்
து சந்தாமஸி சுக்லேஷு
நியத: படேத் | வேதாங்காநி
ச ஸர்வாணி க்ருஷ்ணபக்ஷேஷு
ஸம்படேத் ||
என்பது, கீழ்க்
கூறிய விஷயத்தில் பிராமண
வசனம்.
இம்மாதிரி சாஸ்திர
மரியாதையை மீறாமல், நியமத்துடன்
ஸதாசார்யனிடமிருந்து
சரியான வயதில் உபநயன
ஸம்ஸ்காரம் பெற்று வேதத்தைக்
கற்றுக்கொண்டால் அந்த
வேதத்தின் மூலமாக எல்லாப்
பலன்களையும் ஸாதித்துக்கொள்ளலாம்.
நியமம் தவறிச் செய்தால்
சரிவரப் பயனைக் கொடுக்காது.
அது வேதத்தின் குற்றமன்று;
நியமம் தவறிச் செய்த
இவனுடைய குற்றம்.
ஒரு
நோயாளி. தலை வலியும்
உதரவலியும் அவருக்கு.
டாக்டரிடம் சென்றார்
அவர். டாக்டரும் மாத்திரைகளைக்
கொடுத்து சாப்பிடு,
தீரும் என்றார். நோயாளி
பார்த்தான். என் இதை சாப்பிடவேண்டும்.
தலைவலி, உதரவலிதானே. இதற்காக
பொடி செய்து தலையிலேயும்
உதரத்திலேயும் தேய்த்துக்
கொள்ளலாம் என்ற எண்ணி
பொடி செய்து தேய்த்துக்
கொண்டார். இப்படி செய்ததால்
அந்த நோய் எப்படி நீங்கும்?
நீங்கவில்லை. மறுபடியும்
டாக்டரிடம் அணுகி உம்முடைய
மருந்தால் குணமாகவில்லை
என்றார். அவர் சொன்னது
ஒரு நியமம். செய்தது வேறு
வழி. அது எப்படி குணம்
ஏற்படும். எதற்கும் வழி
தவரக் கூடாது என்று மறுபடி
மாத்திரை கொடுத்தார்.
இவர் அப்படியே செய்தார்.
குணமும் ஏற்பட்டது. ஆக
எதிலும் நியமும் வேண்டும்.
புஸ்தகங்களைப் பார்த்து
மந்தரங்களை தெரிந்து
கொண்டாலும் பயன் ஏற்படாது
நன்கு இதை யோசிக்கவும்.
உலகத்திலும் எல்லா
வியாபாரங்களிலும் இப்படித்தானே?
அததற்கு ஏற்பட்ட வழிமுறைகளைத்
தவறிச் செய்தால் பயன்
ஏற்படாது என்பது தெரிந்ததுதானே?
யாகங்களிலும் செய்ய வேண்டிய
வழியைத் தவறிச் செய்தால்
பலன் ஏற்படாது அல்லவா?
'இந்த்ரசத்ருர் வர்தஸ்வ'
என்பதில் ஸ்வரபேதம் எற்பட்டு
வேறு விதமாக முடிந்தது
யாவரும் அறிந்ததே. யாகங்களில்
ஒழுக்கம் தவறி நடந்ததனால்
ப்ரஹ்மராக்ஷஸனாகப் பிறக்கிறான்
என்பதையும் கேட்டிருக்கிறோம்.
ஆகையால் ஸ்வரத்திலும்
மாறுதல் இருக்கக்கூடாது;
ஒழுக்கத்திலும் மாறுதல்
இருக்கக்கூடாது.
ஒழுக்கத்துடனும்
முறையுடனும் வேதாத்யயனம்
செய்ய வேண்டும் என்பதற்குப்
பெரியோர் ஒரு கதை கூறுவர்
:-
ஓர் ஊரில் ஓர் அந்தணர்
இருந்தார். அவர் நல்ல
வைதிகர், அநுஷ்டான சீலர்,
எல்லாக் கல்விகளையும்
கற்றவர், எல்லா வேதங்களையும்
நன்கு அத்யயனம் செய்தவர்;
பகவராதனம் செய்யாமல்
சாப்பிடமாட்டார்; குழாய்
ஜலத்தை அநுஷ்டானத்துக்கு
உபயோகப்படுத்தமாட்டார்;
கிணறு குளம் நதி முதலியவற்றிலதான்
அவகாஹன (அமிழ்ந்து) ஸ்நானம்
செய்வார். ஒரு ஸமயம் இவர்
திவ்ய தேச யாத்திரையாக
வடதேசம் சென்றார். பெரும்பாலும்
எல்லா இடங்களிலும் இவரது
அநுஷ்டானத்துக்குத்
தகுந்தபடி நதி குளம்
கிணறு முதலியவை கிடைத்தன.
தற்செயலாக ஓர் இடம் சென்றபோது
குழாய்ஜலம் தவிர வேறு
தீர்த்தம் கிடைக்கவில்லை.
அங்கே பத்து மைல் குழாய்
ஜலம்தான்; வேறு தண்ணீர்
கிடையாது. இவருக்கு அவசரமாகச்
சுத்தஜலம் தேவை இருந்தது.
எல்லா இடத்திலும் சுற்றிப்
பார்த்தார்; கிடைக்கவில்லை.
அங்கு
மகா தேஜஸ்வியாயும் ரிஷிகளைப்
போன்றவருமான ஒரு மகானைப்
பார்த்தார்; அவரைத் தண்டனிட்டு,
"இங்கே குழாய்ஜலம் தவிர
வேறு ஜலம் கிடைக்குமா?"
என்று கேட்டார். அவர்,
"நீர் யார்? எங்கிருந்து
வருகிறீர்? என்ன விசேஷம்?"
என்று கேட்டார். இவர்
ஊர் முதலியவற்றையும்,
வேதாத்யயனம் செய்ததையும்,
நியமத்தையும் கூறினார்.
இதைக்கேட்ட அந்த மகான்,
"நீர் வேதாத்யயனம் செய்திருக்கிறீர்.
சுத்தஜலத்தைத் தேடி ஏன்
கஷ்டப்படுகிறீர்? ஸுலபமாக
நீர் ஸம்பாதித்துக் கொள்ளளாமே!
வெண்ணையை வைத்துக்கொண்டு
நெய்க்கு அழுவது போல்
இருக்கிறதே!" என்றார்.
இவருக்கும்
ஒன்றும் புரியவில்லை.
"வேதாத்யயனத்துக்கும்
சுத்தஜலத்துக்கும் என்ன
ஸம்பந்தம்? எனக்கு இது
ஆச்சரியமாக இருக்கிறதே!"
என்றார். இதைக்கேட்டு
அந்தப் பெரியவர் புன்சிரிப்புடன்,
"வருண மந்த்ரத்தைச் சொல்லிப்
பக்கத்திலுள்ள ஒரு செடியைப்
பறித்தால் தண்ணீர் பிரவாகமாகப்
பெருகுமே" என்றார்.
இதைக்
கேட்டதும் இவருக்கு பின்னும்
ஆச்சரியம் அதிகமாயிற்று.
அதுமாதிரியே செய்து பார்த்தார்;
ஒன்றும் பலிக்கவில்லை.
பிறகு அந்த மகான் வருண
மந்த்ரத்தை ஜபித்து ஒரு
புல்லைப் பறிக்க, தண்ணீர்
கொட்ட ஆரம்பித்தது.
இதைக் கண்டதும், "வேதாத்யயனம்
செய்து இவ்வழியால் தண்ணீரை
வரவழைக்க முடியவில்லையே!
தேவருக்கு மாத்திரம்
எப்படி முடிந்தது?" என்று
வினவினார்.
"நானும் அத்யயனம்
செய்திருக்கிறேன். ஆனால்
தர்ம சாஸ்திரங்களில்
கூறியபடி நாலரை மாஸங்கள்
ஆசார்யனிடமிருந்து அத்யயனமும்,
பிறகு ஆவ்ருத்தியும்
முறை தவறாமல் செய்திருக்கிறேன்.
இம்மாதிரி செய்தால் இந்த
வேத மந்த்ரங்களைக் கொண்டு
எல்லாக் காரியங்களையும்
ஸாதிக்கலாம். இதற்கு
இதுவே நிதரிசனம். நான்
தினந்தோறும் வருண மந்த்ரத்தை
ஜபித்து இம்மாதிரியே
சுத்தமான தண்ணீரை வரவழைத்து
உபயோகித்துக் கொள்ளுகிறேன்'
என்றார். இதைக் கேட்டதும்,
'எவ்வளவு சாஸ்திரங்களை
கற்றுக்கொண்டால் என்ன?
எவ்வளவு காவிய நாடகங்களைப்
படித்தும் எழுதியும்
என்ன? எவ்வளவோ யாகங்களைச்
செய்தும் என்ன? முறையுடன்
வேதங்களை அத்யயனம் செய்யாததனால்,
கற்ற வேதமும் ஸமயத்தில்
உபயோகப்படவில்லையே!'
என்று இவர் நினைத்தார்.
காளிதாஸன் வரப்ரஸாத கவி
என்று புகழ்வதுண்டு.
அவன் ஒரு சமயம் கங்கையை
மனதில் நினைத்து ப்ரார்த்தித்தான்.
கங்காதேவியும் அவன் மந்திரத்துக்கு
வசப்பட்டு தாரை தாரையாக
பெருகினாள் என்பதையும்
கேட்டுள்ளோம்.
ஆதி
சங்கர பகவத் பாதர் கனகதாரா
ஸ்தோத்ரம் செய்து கனகமழையை
வரவழைத்தார். ஸ்வாமி
தேசிகனும், ஸ்ரீஸ்துதி
செய்து தாரை தாரையாக
தன மழையை வரவழைத்து ப்ரஹ்மசாரிக்கு
கொடுத்தார். இதையெல்லாம்
நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டும். 'பங்கோருபரி
கங்கா நிபதன ந்யாயேன'
என்று சொல்வதுண்டு.
பக்தனான நொண்டியின்
தலையில் கங்கை தானாகவே
வந்து விழுந்தாள் என்பதும்
உண்டு.
ஆகையால், நியமங்களுடன்
வேதங்களை ஓத வேண்டும்.
இக்காலத்தில் ஆசார்யனிடம்
ஒரு வருஷத்துக்கு நாலரை
மாதக்கணக்கில் வேதாத்யயனம்
செய்வது ஸுலபமான காரியமல்ல.
எத்தனையோ வருஷ காலம்
குருகுல வாஸம் செய்ய
நேரிடும் - இப்படி அத்தியயனம்
செய்தால். குருகுலத்தில்
சிறிது காலங்கூட வாஸம்
செய்து கற்பது ச்ரமஸாத்தியமாக
இருக்கிறபடியால் எல்லா
மாதங்களிலும் அத்யயனம்
செய்யத் தொடங்கிவிட்டனர்.
இந்தத் தோஷம் போவதற்காகவே,
"தைஷ்யாம் பெளர்ணமாஸ்யாம்
அத்யாய-உத்ஸர்ஜந-அகரணப்ராயஸ்சித்தார்த்தம்"
என்று ஸங்கல்பித்து 'காமோ
கார்ஷீத் மந்யுர கார்ஷீத்'
என்ற மந்த்ரஜபம் செய்கிறோம்,
ஆகையால்,
யதாகாலத்தில் யதாவிதி
வேதாத்யயனம் செய்வதே
முக்கியம். அந்தணராகப்
பிறந்தவர் இப்படி வேதங்களை
ஓதியும், யாகங்களைச்
செய்தும், ஓதுபவர்களுக்கு
உதவியும், அக்னி பரிசர்யை
செய்தும் தமது அந்தணத்தன்மையை
நிலைநாட்டிக்கொள்ளவேண்டும்.
ஸ்ரீராமன்
தண்டகாரணியம் சென்ற போது,
அங்குள்ள ரிஷிகள், "அரக்கர்களால்
நலிவுபட்டு வேதாத்யயனம்,
அக்னிபரிசர்யை, தபஸ்
முதலியவற்றைச் செய்ய
முடியாமல் கஷ்டப்பட்டுப்
பிராமணத் தன்மையையே நாங்கள்
இழந்து விட்டோம்" என்று
அங்கலாய்த்து அநுதாபத்துடன்
ஸ்ரீராமனிடம் முறையிட்டதாகக்
கம்பர் கூறுகிறார் -
இறக்கம்
என்று ஒரு பொருள் இலாத
நெஞ்சினார் அரக்கர்
என்று உளர் சிலர் அறத்தில்
நீங்கினார். நெருக்கவும்
யாம் படர் நெறி இலா நெறி
துறக்கவும் அரும் தவத்துறையும்
நீங்கினோம்."
மாதவத்து
ஒழுகலேம் மறைகள் யாவையும் ஒதலேம்
ஓதுவார்க்கு உதவல் ஆற்றலேம் மூதெரி
வளற்கிலோம் முறையில்
நீங்கினோம் ஆதலில்
அந்தணரேயும் ஆகிலேம்
என்பது
கம்பர் பாசுரம். ஆக வேதாத்யயனம்
செய்யவேண்டும். செய்பவர்களுக்கு
பலவகையில் உபகாரம் செய்யவேண்டும்
என்று நிர்பந்தம் செய்கிறார்.
இப்படி இருக்க இவ்வாறு
ஒரே கருத்துடன் எல்லோரம்
கூறியிறுக்க நியமத்தை
விட்டு எப்படி அனைவரும்
செய்வது அத்யயனத்தை என்பதை
யோசிக்கவேண்டும். இல்லையேல்
எவ்வாறு கார்யம் பலிதமாகும்.
இதை
ஒட்டிதான் பூர்வ புருஷர்கள்
அத்யயனத்தை காப்பாற்றுவது
கோயில் அர்ச்சிப்பது
முதலியன செய்தார்கள்.
"அந்தணர்
என்போர் அறவோர். மற்றெல்லாவிடத்தும்
செந்தண்மை பூண்டு ஒழுகலால்"
என்றார் வள்ளுவர். அம்
- அழகிய, தண் - குளிர்ந்தத்
தன்மையை உடையவர். அர்
- ஆண்பால். கோபமில்லாதவன்.
தயாவான். வித்யதே ப்ராஹ்மணேதம்,
என்றான் ராக்ஷஸனான ராவணன்.
"குளித்து
மூன்றனலை ஓம்பும் குறி
கொள் அந்தணனம் என்றார்
திருமாலையில். ஆக சரியான
வழியில் ஸத்வ மார்க்கத்தில்
அத்யயனம் செய்தால் எல்லாற்றையும்
ஸாதித்துவிடலாம். கேவலம்
உபகரணத்தைக் கொண்டே
எதையும் ஸாதிக்க இயலாது.
பாருங்கள் இரண்டு த்ருஷ்டாந்தத்தை.
1.
அகஸ்த்யர் கலசத்தில்
உண்டானவர். மான்தோலைதான்
வஸ்த்ரமாக உடையவர். காட்டில்
வாஸம் கிழங்குகளை புசிப்பவர்.
இன்னும் இம்மாதிரி செயலைப்
பெற்றவர். கட்டைவிரல்
அளவு பரிமாணம் உடையவர்.
அவர் தனது உள்ளங்கையிலே
சமுத்ரத்தை அடக்கி ஆசனம்
செய்தார்.
2. இப்படி ஸூர்யனுடைய
ரதத்துக்கு ஒரே சக்ரம்,
குதிரை ஏழு, பாம்பால்
கட்டப் பட்டவை அவை, வழியோ
பிடிப்பு இல்லாத ஆகாசம்,
ஸாரதி அருணன் கால் இல்லாதவன்.
இவ்வாறு இருந்தும் ப்ரதி
தினமும் உதயம் அஸ்தமயமும்
செய்கிறான். ஆகஸத்வகுணம்
பெறுகி அதன் மூலமாக அத்யயனம்
முதலியவைகளைச் செய்தால்
எல்லா கார்யத்தையும்
ஸாதித்துவிடலாம்.
மந்திரத்தைக்
கொண்டு (கங்கா) ஜலத்தையும்
வரவழிக்கலாம். (ஸமுத்ர)
ஜலத்தையும் உட்கொள்ளலாம்.
இது ஸநியமாமன மந்திரத்தின்
மஹிமை.
தேள் கொட்டிவிடுகிறது.
பாம்பு தீண்டுவிடுகிறது.
பூச்சிக் கடியால் உபாதை
இவை மந்திரங்களைக் கொண்டு
சீக்ரத்தில் இரக்கிவிடுகிறோம்.
ஒளஷதி மூலமாக போக்கடிப்பதும்
ச்ரமம். சீக்ரத்திலும்
நடைபெறாது. புஷ்பகவிமானம்
ஆகாயத்தில் மந்திரம்
மூலமாகத்தான் ஆகாய மார்க்கத்தில்
செல்லுகிறது. இப்பொழுது
யந்திர மூலமாகச் செல்வது
எவ்வளவு கடினம் என்பதை
பார்த்துத் தானே இருக்கிறோம்.
எவ்வளவு அபாயம் ஏற்படுகிறது.
மந்திரத்தால் ஸாதிப்பது
அபாயகரம் அன்று. யந்திர
தந்திரங்கள் எல்லாம்
ஸுலபத்தில் பயன்படுவதில்லை.
பேய் பிசாசு ஓட்டுவது
சூன்யம் வைப்பது எடுப்பது
எல்லாம் அதர்வண வேதத்தில்
ஸுப்ரஸித்தமானது.
நாம்
வேதத்தை ஸரிவர ஓதி அத்யயனம்
செய்யா விட்டாலும் காயத்ரி
மந்திரத்தையாவது ஸ்வரத்துடன்
ஐந்து முடிவுகளுடனும்
ஜபித்து வந்தால் ப்ராஹ்மண்யம்
ஸித்திக்கும் என்பர்
பெரியர். அதற்கு ஸமமான
மந்திரம் எதுவும் இல்லை.
ஆக ஸந்த்யாவந்தனமும்
காயத்ரி ஜபமும் விடாமல்
செய்தால் நலத்தை தரும்.
*****
|