|
|
|
|
|
|
|
1 உலகுக்குத்
தந்தையான கிருஷ்ணனால்
உபதேசிக்கப்பட்டது
2.தேவர்க்கும்
தேவனான பகவானாலே உபதேசிக்கப்பட்டது
3.அர்ஜுனனை
வியாஜமாக்கி உலகத்துக்கு
உபதேசிக்கப்பட்டது
4.அர்ஜுனனுக்கு
உபதேசம் செய்து அதன்
மூலமாக அவனுக்கு ஆசார்யனாலே
உபதேசிக்கப்பட்டது,
5 தனது க்ஷத்ரிய
தர்மத்தை இழந்த அர்ஜுனனைக்
குறித்து உபதேசிக்கப்பட்டது.
6 இதில் உபதேசம்
செய்ததால் பலர் மாண்டனர்.
7 சர்வக்ஞனான
பகவானால் உபதேசம் செய்யப்பட்டிருந்தும்
அர்ஜுனன் மறந்தான்.
8 பாரதத்தில்
சொல்லப்பட்டிருந்தும்
பகவத்கீதை உபநிஷத்தாக
கருதப்படுகிறது.
9 அர்ஜுனன்
எனும் புருஷனான தோழனைக்
குறித்து கிருஷ்ணன் உபதேசித்தது.
10 கிருஷ்ணன்
சரம உபாயமான ப்ரபத்தியை
கடைசியில் உபதேசம் செய்தான்.
11 கீதையை மக்களுக்கு
உபதேசம் செய்து ஜகதாசார்யன்
ஆனான் கண்ணன்.
12 ஸம்ஸார ஸாகரத்தில்
மூழ்கி பல அல்லல்களை
அடைந்து, வாடிக்கிடக்கும்
மக்களுக்கு, தத்வஞானம்
உண்டாவதற்காக கண்ணனால்
உபதேசம் செய்யப்பட்டது.
ஆக சோகநிவிருத்திக்காக
ஏற்பட்டது கீதை.
13 விஜயனுக்கு
மூன்று வகையில் சோகங்கள்
ஏற்பட்டன. 1. பந்துக்களை
அழிப்பதால் பாபம் ஏற்படும்
என்ற சோகம். 2. தைவ ஸம்பத்து
உள்ளவனுக்குத் தான் நற்கதி,
ஆஸுர ஸம்பத் உள்ளவனுக்கு
இல்லை என்று சொல்வதின்
மூலம் நாம் ஆஸுர ஸம்பத்தில்
சேர்ந்திருந்தால் என்
செய்வது? என்ற சோகம்.
3. கடினமான கர்ம, ஞான, பக்தி
யோகஙஙகளை உபதேசமாகப்
பெற்றதால், தம்மால் அவற்றை
செய்ய முடியாதே என்ற
சோகம். இம் மூன்றையும்
ஸ்ரீகிருஷ்ணன் கீதோபதேசம்
மூலமாகப் போக்கடித்தான்.
|
1 உலகத்துக்குத்
தாயான ஆண்டாளால் உபதேசிக்கப்பட்டது.
2 கிருஷ்ணனுக்கு உபதேசித்து
அவனுக்கும் ஆச்சார்ய
பூதையான ஆண்டாளாலே உபதேசிக்கப்பட்டது.
3 கிருஷ்ணனை ?ியாஜமாகக்கி
உலகதத்துக்கு உபதேசிக்கப்பட்டது. 4 கிருஷ்ணனுக்கு
உபதெசித்து அவனுக்கும்
ஆசார்ய பூதையான ஆண்டாளாலே
உபதேசிக்கப்பட்டது. 5 ஜகத்ரக்ஷணத்தை
தர்மமாக கொண்டு இருந்தும்,
அதை அடியோடு விட்ட பகவானைக்
குறித்து உபதேசிக்கப்பட்டது. 6 இதில்
உபதேசம் மூலம் மக்கள்
அனைவரும் உஜ்ஜீவித்தனர். 7 இங்கு
ஆண்டாளால் உபதேசிக்கப்பட்ட
அனைவரும் மறந்தார்கள்
அல்லர். வழி தொடர்ந்தார்கள்.
8 திவ்ய பிரபந்தத்தில்
சேர்ந்து திருப்பாவையும்
உபநிஷத்தாக கருதப்படுகிறது.
த்ரமிட உபநிஷத்துகளாக
கருதப்பட்டாலும், உபநிஷத்துக்கும்
வித்து ஆன படியால் மிகச்
சிறந்த உபநிஷத்து. 9 பெண்களான தோழிகளைக்
குறித்து, ஆண்டாள் உபதேசிக்கிறாள்.
ஏலோ ரெம்பாவாய் ஏல்
= ஏற்றுக்கொள்! ஓர் = இதன்
பொருளை தெரிந்துகொள்!.
எம்பாவாய் = எனது தோழியே!
என்பதும் பொருள் திருமங்கை
மன்னனின் 11-5 திரு மோழியான
மானமரும் மென்னோக்கி"
என்பதில் தோழியை குறித்து
சொல்வது போல் இங்கும்
உணர்க. 10 அதே
உபாயத்தை ஆண்டாள் முதலிலேயே
மார்கழி என்பதால் உபதேசம்
செய்தாள். மார்கழி மார்கசீர்ஷம்
தலையான உபாயம். 11 ஜகதாசார்யனான கண்ணனுக்கும்
ஆசார்யை சிறுவர்களுக்கு
வேதங்களை பயிற்றுவிப்பது
போல், வேதாந்த அர்த்தங்களை
உபதேசித்து ஆசார்யை ஆனாள். 12 தஜ்வாலையுடன்
கூடிய ஒரு பள்ளத்தில்
சிக்குண்டு தவிக்கும்
ஜீவர்கள் நற்கதி அடைய,
வராஹ எம்பெருமானிடம்
இருந்து உபதெசம் பெற்று,
இவள் உபதேசித்தாள். ஆக
சோக நிவருத்திக்காக
ஏற்பட்டது இதுவும். 13
இங்கும் மூன்று வகையில்
சோகங்கள் ஏற்பட்டன.
1. இங்கும், ஆயர்பாடியில்
துர்பிக்ஷம் ஏற்பட்டதால்,
இதை விலக்க, நோன்பு செய்தனர்.
இதனால் துர்பிக்ஷத்தால்
ஏற்பட்ட சோகம் நோன்பின்
மூலம் அகன்றது. 2. ஆயர்ப
பெண்கள் நந்தனுடைய புதல்வனான
கண்ணனைக் கணவனாக வரிக்க
வேண்டும் என்று யமுனைக்
கரையில் அர்ச்சித்தார்கள்.
கண்ணனைக் கணவனாக அடையாமையைப்
பற்றிய சோகம். இதுவும்
நோன்பால் அகன்றது. 3. மக்கள்
உண்டியே உடையே என்கிற
வகையில் திரிந்து கொண்டும்
தவிக்கின்றனர். நற்கதியை
அடைய இவர்களுக்கு வழி
அறியாமல் இருந்தபடியால்
சோக ஸமுத்ரத்திலேயே
மூழ் இருந்தனர். அந்த
சோகமும், இதனால் நிவ்ருத்தமானது.
நோன்பு, கண்ணனை பர்த்தாவாக
அடைவது, தத்வங்களை உணர்த்துவது
இவை மூன்றும் இத் திருப்பாவையில்
உபதேசிக்கப் பட்டபடியால்,
மேல் கூறிய மூன்று சோகங்களும்
அகன்றன.
|
|
|
|
பகவத் கீதையும், திருப்பாவையும்
திருப்பாவை 1.
மேன்மை பொருந்திய பாவையால்
சொல்லப்பட்டது. 2. பாவைக்காக
= நோன்புக்காக சொல்லப்பட்டது. 3.
பாவையின் பொருட்டு (தோழியின்
பொருட்டு) சொல்லப்பட்டது. 4.
பாவையை - பெண்களை அழைத்து
சொல்லப்பட்டது. 5. பாவையை
அடைய (புருஷ காரார்தம்)
சொல்லப்பட்டது 6. பாவை
மூலம் (லக்ஷமி மூலம் = நீளாதேவியின்
மூலம்) பகவானை அடைய சொல்லப்பட்டது. 7.
பாவை = வழி (சரணாகதியைச்
சொல்ல ஏற்பட்டது. 8. பாவை
= பலத்தை அடைய சொல்லப்பட்டது. இப்படி
பல வகையில் பொருள் கொள்ளலாம்.
திருப்பாவை
- அடிவரவில் விசேஷம்:
திருப்பாவையில்
உள்ள முப்பது பாசுரங்களுக்கும்
அடிவரவு முன்னிட்டு விலக்ஷணமான
வேதாந்த விழுப்பொருள்
ஒன்று வரைகின்றோம். 1.
மார்கழி வையத்து(ள்) ஓங்கி
நிற்கிறது. மார்கசீர்ஷமான
ப்ரபத்தி, பூலோகத்தில்
சிறந்து விளங்குகிறது. 2.
ஆழிமாயனை புள்ளும் கீசு
கீசு (க்ருஷ்ண க்ருஷ்ண)
என்று அழைக்கின்றது. 3.
கீழ்வானம் வெள்ளென்றது.
ஆசார்யனை அடைந்தது முதல்
மோக்ஷம் அடையும் வரையுள்ள
ப்ரபாத காலம் - அறிவுற்றகாலம். 4.
தூமணி (ஜீவன்) நோற்று
சுவர்கம் புகும். 5. கற்றுக்
கறவை (ஆசார்யர்) கனைத்தது
இளம் கன்றுக்கே. (சிஷ்யர்க்கே). 6.
புள்ளின் வாய்க்கீண்டானை,
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து
(ஹ்ருதயம்) வாவியுள் காணலாம். 7.
எல்லே (என்ன ஆச்சர்யம்)! 8.
நாயகனாய் நின்றவன், அம்பரம்
(ஹ்ருதய ஆகாசம்)! 9. உந்து
மதகளிற்றன் (யானை போன்றவன்)
அவனே குத்து விளக்கு
(நிலையான விளக்கு)! 10. முப்பத்து
மூவர் அமரர்க்கு முன்
செல்ல ஏற்றவன் (எல்லா
தேவர்களுக்கும் அரசன்)! 11.
(அவனை) அங்கண் மாஞாலத்தரசர்
(ஜீவர்கள் தங்களது) மாரிமலை
முழைஞ்சில் (ஹ்ருதயத்தில்)
அன்று த்யானித்தார்கள். 12.
ஒருத்திமாலே! (நிகரற்ற
ஆண்டாளிடத்தில் மோகமடைந்த
திருமால்). 13. கூடாரை (பாவங்களை)
வெல்லும் சீர் உடையவன்
அவன்! 14. கறவைகள் (ஆசார்யர்கள்)
பின் சென்று சிற்றஞ்சிறுகாலான
(பிரபத்தியைச் செய்து)
வங்கக் கடல் கடைந்த மாதவனால்
எங்கும் திருவருள் பெற்று
இன்புறுவர்.
இந்த முப்பது
பாசுரம் கொண்ட திருப்பாவையில்
ஒவ்வொரு பாசுரங்களிலும்
அமைந்த வேதாந்த அர்த்தத்தை
வரிசையாக காட்டுகிறோம்.
1.
மார்கழி வையத்து ஓங்கி
என்ற மூன்று பாசுரங்களால்
அடைவே மூல மந்த்ரம், த்வயம்,
சரமச்லோகம் என்ற மூன்று
மந்த்ரங்கள் காட்டப்படுகின்றன. 2.
அம்பரமே, உந்து, முப்பத்து
இதில் பிரணவார்த்தம்
அ, உ, ம என்று பிரணவத்தை
சூசிப்பித்துக் கொண்டு
விளக்கப்படுகிறது. குத்து
என்று ஆரம்பிப்பதன் மூலம்
வேற்றுமையான அர்த்தம்
காட்டப்படுகிறது. அமலனாதி,
உகந்த உள்ளத்தனாய், மந்திபாய்
என்று அமலனாதி பிரானில்
உள்ளது போல் அமைந்துள்ளது.
இதனுடைய பொருள் உந்தன்னோடு
உறவேல் நமக்கு எற்றைக்கும்
ஏழேழ் பிறவிக்கும் என்பதில்
நன்றாக விளக்கப்பட்டுள்ளது. தனியனில்
பரார்த்யம் ஸ்வம் என்று
பட்டர் அருளிச் செய்தார்.
"அகாரேண உச்யதே விஷ்ணூ
"என்பதால் பிரணவத்தினுடைய
அர்த்தம் உபநிஷத்தில்
காட்டப்பட்டபடியால்
அதன் விசேஷத்தை ஆண்டாள்
இங்கு அருளிச் செய்தாள்.
கம்பன் சுமித்திரை வாயிலாக,
"பின்னும் பகர்வரள் மகனே
இவன்பின செல் தம்பி, என்னும்படி
அன்று, அடியார்க்கு ஏவல்
செய்து" என்று இப்பொருளை
வெளியிட்டான். இந்த பிரணவத்தின்
அர்த்தங்களை அர்ஜுனன்
ரதத்திலும் அக்ரத: ப்ரயயோ
ராம: என்கிற ஸ்லோகத்திலும்
கண்டு கொள்வது என்கிறார்
வேதாந்த தேசிகன் "அபிரக்ஷிதும்
அக்ரத: ஸ்திதம் த்வாம்"
என்று பரமார்த்த ஸ்துதியிலும்
சொன்னார். உந்து என்ற
பாசுரத்தால் வைணவ சம்பிரதாயத்துக்கு
முக்கியமாக ஏற்பட்ட சரணாகதிக்கு
புருஷகார பூதையான பிராட்டியின்
பெருமை சொல்லப்படுகிறது.
அதாவது புருஷகார ப்ரதிபாதனம்.
குத்து, முப்பத்து இந்த
இரண்டு பாசுரத்திலும்
வரிசையாக த்வயத்தில்
சொல்லப்பட்ட இரண்டு
கண்டங்கள் சொல்லப்படுகின்றன.
முதல் பாசுரம் ப்ராபகத்வபரம்,
இரண்டாவது ப்ராப்யத்வபரம்.
உக்கமும் தட்டொளியும்
என்று அங்கு கைங்கர்யம்
சொல்லப்பட்டது. ஒன்றே
அமையுமாயிருக்க, இரண்டு
பாசுரங்கள் சொன்னதன்
மூலம் த்வயத்தில் உள்ள
இரண்டு பாகம் சொல்லப்படுகிறது
என்பதில் பொருத்தம்
உண்டு.
முப்பத்து மூவர்
என்கிற பாசுரம் பரித்ராணாய
சாதூனாம் என்கிற கீதையில்
சொன்ன அர்த்தம் சொல்லுவதற்காக
வந்தது. துஷ்டர்களை ஸம்ஹரிப்பதற்கும்
சாதுக்களை ரக்ஷிப்பதற்கும்
எம்பெருமானின் அவதாரம்
என்பது கீதையின் பொருள்.
இங்கும் "கப்பம் தவிர்க்கும்"
என்றும் "செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும்"
என்றும் சொல்வதின் மூலம்
இது புலப்படும். பிரபந்நனுக்கு
மேலே வரக்கூடிய விஷயங்களும்
அங்கு சொல்லப்படுகின்றன. வையத்து வாழ்வீர்
என்ற பாசுரத்தில் ஸாங்க
பிரபதன அனுஷ்டானம் சொல்லப்படுகிறது.
உய்யும் ஆறு எண்ணி என்று
சொல்வதால் அங்கங்கள்
கூறப்பட்டது. மோக்ஷத்துக்காக
அனுஷ்டிக்கும் சரணாகதியில்
பிரசித்தமான ஐந்து அங்கங்களுடன்
பலத்யாகம் என்கிற அங்கம்
அதிகம் இருப்பதை மனதில்
வைத்து ஆறு என்று சொன்னாள். த்வயம்
என்கிற மந்திரத்தைச்
சொல்லி ப்ரபத்தியை அனுஷ்டிக்கிறோம்.
அம்மந்திரத்தில் ஆறுபதங்கள்
இருக்கின்றன. அதையும்
நினைவு படுத்துகிறாள். நோற்று
சுவர்க்கம் என்பதில்
ஸத்வ குணம், ரஜோ குணம்,
தமோ குணம் என்கிற மூன்று
குணங்களும் அதன் வாயிலாக
வரக்கூடிய கார்ய பரம்பரையும்
சொல்லப்பட்டதாகிறது.
ராவணன் ரஜோ குணம் உள்ளவன்.
கும்பகர்ணன் தமோ குணம்
படைத்தவன். விபீஷணன்
ஸத்வ குணம் உள்ளவன். மாயனை
... போய பிழையும் என்பதில்
"சர்வதர்மான் பரித்யஜ்ய"
என்று கீதாசார்யனால்
சொல்லப்பட்ட அர்த்தம்
விளக்கப்படுகிறது. உபநிஷத்தில்
"தத் யதா இஷீகதுலம்" என்று
ஸஞ்சித ப்ராரப்த பாபங்களின்
அழிவை சொல்கிறது. இதைத்தான்
கீதாசார்யன் "சர்வபாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி" என்று
எடுத்துக் காட்டினான்.
இதையே ஆண்டாளும் சொன்னாள்.
ஆக கீதை எப்படி உபநிஷத்தோ
அதுபோல் இதுவும் உபநிஷத்து.
பாஷ்யகாரர் கத்யத்தில்
மனோ, வாக். காயம் என்ற
தோடங்கி இவ்விஷயங்களை
விவரித்து இருக்கிறார். "கீழ்வானம்"
என்கிற பாசுரம் லீலாவீபூதி,
போகவிபூதி என்ற இரண்டு
விபூதியையும் எம்பெருமான்
பெற்றவன் என்றும், லீலா
விபூதி தூங்குவதற்கு
இடம் என்றும் போக விபூதி
போகங்களுக்கு இடம் என்று
காட்டுகிறது. அடைக்கலம்
புகுந்த பிறகு இங்கு
உள்ளவரை இருக்கும் காலம்,
"ப்ரபாத காலம்", "பொழுது
விடியும் காலம்" (பின்மாலை)
என்று சொல்லப்பட்டதாகிறது.
பக்தன் பிரபந்தன் இவர்களுடைய
வேறுபாடும் இதில் தெரியும். எல்லே
இளம்கிளியே என்பதில்
லீலா விபூதி இருள்தருமா
ஞாலமாகையால் அனைவரும்
எப்போதும் ஒரே சமயத்தில்
தூங்குகிறபடியால் அவர்களை
எழுப்ப ஆண்டாள் முயற்சிக்கிறாள்.
நீளா தேவியினிடமுள்ள
மோகத்தால் தூங்கி கொண்டிருக்கும்
எம்பெருமானை எழுப்புவது
போல் இங்கும் விஷய சுகங்களில்
மண்டியிருக்கும் ஜீவர்களை
எழுப்புகிறாள். பிரதிக்ஞையை
மீறி நடந்தவனும் தாரை,
ருமா இவர்களிடத்தில்
ஈடுபட்டவனுமான சுக்ரீவனை
ராமன் லக்ஷ்மணன் மூலமாக
எழுப்புவது போல் இங்கும்
நம்மை எழுப்பிகிறாள்.
இதில் நானேதான் ஆயிடுக
என்பது சாரம். இதில் பாகவத
ப்ராதான்யமும் விசிஷ்டாத்வைதமதமும்
காட்டப்படுகிறது. ப்ரஹ்லாதன்
தன்னை எம்பெருமானாகவே
நினைத்து "அவனேநான்" என்று
சொன்னான். "த்வம்வா அஹமஸ்மி
பகவோ தேவதே" என்றது உபநிஷத்து. ஸோம்ஹ,
ஸோம்ஹ என்பது உபாசன
பிரகாரம். இவ்வாறு ஸோஹம்,
ஸோஹம் என்று சொல்லிக்
கொண்டே வந்தால் ஹம்ஸ
என்று மாறி விடுகிறது.
இதனால் தான் பரமஹம்ஸம்
என்று உபாசனம் செய்பவர்களை
சொல்வது, தாஸத்வம் என்பது
ஜீவனுக்கு ஏற்படும்.
ஆக ஸோஹம் என்பது தாஸோஹம்
என்பதில் முடியும். ஜீவாத்மாவிக்கும்
பரம் பொருளுக்கும் ஒருவகையில்
அபேதம் ஒருவகையில் பேதம்
என்பது இங்கு புலப்படும்.
பேதம், அபேதம் இரண்டும்
ஒன்றுக்கொன்று முரண்
ஆனபடியால் பொருத்தம்
உள்ளதாக ஆகாதே என்று
ஆத்மபாவத்தை முன்னிட்டு
அபேதமும் வரலாம். விருத்தமான
இந்த இரண்டும் ஓரிடத்திலே
இருப்பது இயலாதது. ஆயினும்
நரசிம்மம் என்று ஒருவரையே
நரம் என்றும் சிம்மம்
என்றும் கூறுகின்றோம்.
அதுபோல் இங்கும் நான்
என்று சொல்லக்கூடிய
பொருளும். இதை பட்டர்
"விருத்தே வையக்ரீ ஸுகடித
ஸமாநா திகரணே ந்ரஸிம்த்வே
பிப்ரத் வரத பிபரா மாஸித
ஜகத்" என்பதால் ஸூசிப்பித்தார்.
ஆகையாலே தத்துவமன்று.
தத் = அந்தப்ரம்மம். த்வம்
= நீ அன்று என்று சொல்லப்பட்டது. கடோகநிஷத்தில்
உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ரபோதத,
நிசாமயத என்று எழுந்து
இருத்தல், விழித்தல்,
அறிவு, பெறுதல், பார்த்தல்
என்று சொல்லப்பட்டது.
இவை திருப்பாவையில் உள்ளன.
எழுந்திருக்கும்போது
ஹரிநாம கீர்த்தனம் செய்ய
வேண்டும். நடந்து செல்லும்போது
கேசவனைப் பாடவேண்டும்.
சாப்பிடும்போது கோவிந்தனை,
தூங்கும்போது மாதவனை
என்றது ஸாஸ்திரம். இதிலும்
ஹரி என்ற பேரரவம், கேசவனைப்
பாடவும், கோவிந்தா உந்தன்னைப்
பாடி, வங்கக் கடல் கடைந்த
மாதவனை என்று சொல்லி
இருப்பதை நோக்கவும்.
காலை, பகல், மாலை மூன்று
வேளையிலும் சந்தியாவந்தனம்
முடிந்தவுடன் ரங்கநாதனையும்
திருவேங்கடமுடையானையும்
தேவப் பெருமானையும் யதுகிரி
நாதனையும் வணங்கவேண்டும்
என்பது சாஸ்திரம். ஸ்ரீரங்
மங்கலநிதிம் கருணா நிவாஸம்
ஸ்ரீவேங்கடாத்ரி சிகராலய
காளமேகம் ஸ்ரீஹஸ்திசைல
சிகரோஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீசம் நவாமி சிரஸா
யதுசைல தீபம்
இங்கும்
"பையத்துயின்ற பரமனடி"
"வெள்ளத்தரவில்" "இங்ஙநே
போந்தருளி என்பதில்
ரங்கநாதன் துதிக்கப்பட்டார்.
"செல்வ திருமாலால்" என்பதால்
திருவேங்கடமுடையானும்
தேவாதிராஜனை என்பதாலும்
புள்ளரையன் கோயில் என்பதாலும்
தேவப் பெருமாள் சொல்லப்பட்டார்.
ஏற்றக் கலங்கள் பாட்டில்
ஆற்றப் படைத்தான் மகனே
என்பதால் செல்வப்பிள்ளை
சம்பத்குமாரன் சொல்லப்பட்டான். உங்கள்
புழக்கடை என்பதில் வேதாந்தத்தின்
சாரமான அர்த்தம் சொல்லப்படுகிறது.
இதை நமது ஸ்வாபதேசத்தில்
பார்த்துக் கொள்ளவும்.
அங்கண்மான் ஞாலத்து என்பதிலும்
உலகில் பிறந்திருக்கும்
மக்கள் தங்களுடைய அழகிய
கண் காது மூக்கு ஆகிய
புலனுடன் கூடிய சரீரத்தில்
அபிமானத்தை விட்டு எம்பெருமான்
திருவடிகளைப் பற்றவேண்டும்.
சரீரத்துக்கு அரசனான
ஜீவன் தனது சரீரத்தில்
பிடித்தம் இல்லாதவனாய்
எம்பெருமானிடம் ஆசையைப்
பெற்றவனாய் எம்பெருமானிடம்
கைங்கர்யம் செய்யவேண்டும்
என்ற வேதாந்த அர்த்தம்
சொல்லப்படுகிறது. அன்று
இவ்வுலகம் என்பதில் அடி
போற்றி என்பதுதான் சரணாகதி.
சென்றங்கு என்பதால் சரீரத்தின்
அழிவுக்கு அநுகுணுமான
விவேகம். தசேந்திரியானனம்
என்பது ப்ரமாணம். பொன்ற
என்பதால் கள்ளர் அழைத்து
கொண்டு போகும் வழியே
எம்பெருமான் அழிக்கிறான்
என்பது இங்கு கூறப்படுகிறது.
போற்றி போற்றி என்று
ஆறு முறை சொல்லுவதன்
மூலம் எம்பெருமானுடைய
ஆராதனகாலத்தில் எம்பெருமானுக்கு
நம்மால் சமர்ப்பிக்கப்
படவேண்டிய ஆசனங்கள்,
விவக்ஷிதங்கள்: தேவதைகளை
வர்ணிப்பதற்கு திருவடி
முதல் திருமுடி வரை துதிப்பது,
(கவிகள் மனிதனை வர்ணிக்கும்போது
கூந்தலில் ஆரம்பிப்பர்).
க்ருஷ்ணன் எம்பெருமானின்
அவதாரம் ஆனபடியால் இப்பாட்டில்
முதலில் அடிபோற்றி என்றது
தேசிகனும் பகவத் த்யான
சோபானத்தில் 'பாதாம்
போஜம்' என்கிற ச்லோகத்தால்
இந்த க்ரமத்தை காட்டியுள்ளார்.
இங்கு போற்றி என்று
ஆறு ரஸம் சொல்லப்படுகிறது.
நம்மால் உட்கொள்ளப்படும்
பொருள்களின் சுவை ஆறு
வகை. (1) பக்ஷ்யம்,
போஜ்யம், சோஷ்யம், லேக்யம்,
காத்யம், பேயம். (1) பக்ஷணம்,
ஹவிஸ், வற்றல், துகையல்,
காய்கறி, பாயஸம், ஒளபசாரிகம்,
அர்க்யாதி. (2) ஸாம்ஸ்பர்சிகம்
- புஷ்பம், சந்தனம் முதலியவை (3)
ஸாந்த்ருஷ்டிகம் - தீபம்,
கற்பூர ஹாரத்தி, தூபம் (4)
ஆப்யவ்யவஹாரிகம் - போஜனம்.
இப்படி போஜனத்தில் ஆறு
ரசங்கள். "வருத்தமும்
தீர்ந்து மகிழ்ந்து"
என்று பாசுரத்தில் கஷ்டம்
நீங்குவது மாத்திரம்
பர்யாப்தம் ஆகாது. அவசியம்
சுகமும் வேண்டும். அதாவது
"அநிஷ்டநிவ்ருத்தி, இஷ்டப்ராப்தி
இவை இரண்டும் பலம். ரோக
நிவ்ருத்தி, ஆரோக்யம்
இவை இரண்டும் இன்றியமையாதது.
கடன் இல்லாமை, மூலதனத்தை
அடைவது இவ்விரண்டுமே
வேண்டும். சரணாகதி செய்த
பிறகு அவித்யா நிவிருத்தி
அதாவது துக்கத்தின் ஆழிவு.
இது தான் மோக்ஷம் என்பது
தார்க்கீகர்களின் மதம்.
அத்வைதிமதத்திலும் ஆனந்த
அனுபவம் மோக்ஷத்தில்
இல்லை என்று இதை கண்டிப்பதற்காக
மகிழ்ந்து என்று அதிகம்
சொன்னான். ஸாலோக்யம்,
ஸாமீப்யம், ஸாரூப்யம்,
ஸாயுஜ்யம் என்பது மோக்ஷத்தின்
நாலுவகை. ஸாயுஜ்யம் என்பதுதான்
முக்யமான மோக்ஷம். முந்தியவை
இதற்கு முன்தசைகள். (லோகேஷு)
கோபிகைகளுக்கு கோகுலவாசம்
சாலோக்யம். நந்தகோபனுடைய
இல்லத்தை சேருதல் சாமீப்யம்.
மாலே மணிவண்ணா, கூடாரையிலும்
ஸாமீப்யமும் ஸாயுஜ்யமும்
சொல்லப்படுகின்றன. கூடாரையில்
சதம் மாலா ஹஸ்தா: சதம்
அஞ்சன ஹஸ்தா: சதம் சூர்ணவஸ்தாக:
சதம் வாஸோ ஹஸ்தா: என்று
உபநிஷத்தில் மாலை, மை,
மணத்தூள், ஆடை, ஆபரணம்
இவைகள் ஒவ்வொன்ளையும்
நூறு நூறு பெண்மணிகள்
எடுத்து வந்து முக்தனை
அலங்கரிக்கிறார்கள்
என்று சொல்லப்பட்ட விஷயம்
கூறப்படுகிறது. தம் பிரும்மகந்த:
பிரவிசதி, பிரும்மரஸ:
பிரவிசதி. பிரும்மதேஜ:
பிரவிதி, பிரக்ஞயா விபஸ்யதி
என்று ஐந்து குணங்களும்
சொல்லப்பட்டு இருக்கின்றன.
"என்றனைய பல்கலனும் என்பதால்
அபஹதபாப்மா என்ற சொல்லப்பட்ட
எட்டு குணங்களுக்கு ஆவரிபாவம்
காட்டப்படுகிறது. ஆடையுடுப்போம்
என்பதால் எம்பெருமானுக்கு
தாம் செய்யும் தொண்டுகளுக்குப்
பொருத்தமான கரணகளேபரம்
இந்திரியம் சரீரம் முதலியவைகளை
எடுத்துக் கொள்வது விளக்கப்பட்டது.
பால்சோறு என்பதால் அமுதமாகிய
பிராட்டியுடன் கூடின
எம்பெருமானாகிற ஷாட்குண்யமான
அன்னம் தெரிவிக்கப்படுகிறது.
"ஸோச்நுதே சர்வாந்" என்று
வேதத்தில் சொல்லப்பட்ட
விஷயம் கூடியிருந்து
என்பதால் பாட்டப்பட்டது.
காமாநீ, காமரூபீ, அனுஸஞ்சரன்
என்பதும் இங்கு அறியத்தகுந்தது.
குறிர்ந்து என்பதால்
"ஏஷ பிரும்ம பிரவிஷ்டோஸ்மி
கிரீஷ்மே சீதமிவ ஸ்ரதம்"
என்கிற விஷயம் சொல்லப்பட்டது.
ஆக வைகுண்டத்தில் முக்தனுக்கு
ஏற்படும் ஸாயுஜ்யம் இந்த
பாசுரத்தில் ஆண்டாளால்
நன்கு வெளியிப்பட்டது.
அத்துடன் ஸார்ஷ்டிதையும்
சொல்லப்பட்டது. அதாவது
"ஸார்ஷ்டி தாதத்ர போகஸ்ய
தாரதம்ய விஹீனதா" என்று
சொல்லுகிறபடி ஏற்றத்தாழ்வு
இல்லாமல் அநுபவிப்பது.
இத்திருப்பாவையில்
பதினைந்து பாசுரம் வரையில்
தூங்குபவர்களை எழுப்புவது,
பதினாறு முதல் கணக்கிட்டால்
இருபத்தி ஆறாவது பாசுரம்
பதிநொன்று. அதாவது ஏகாதசி
ஆகிறது. மாலே என்கிற பாசுரம்
அது. மார்கழி நீராடுவான்
என்று இதில் விரதம் உபதேசிக்கப்படுகிறது.
ஏகாதசி அன்று நாம் விரதம்
அனுஷ்டிக்கிறோம். பிறகு
துவாதசி. அதுபோல் இங்கும்
இருவத்தி ஏழாவது பாசுரம்
துவாதசி. ஆகையால் தான்
இப்பாசுரத்தில் மூடநெய்
பெய்து என்று சொல்லப்படுகிறது.
சாந்தோக்ய உபநிஷத்தில்
பிருத்யன், எஜமானன் இவர்கள்
இருவரும் சேர்ந்து போகங்களை
அனுபவிப்பதாக உள்ளது.
"யதா ச்ரேஷ்டீ" என்கிற
உபநிஷத்து வாக்கியத்தை
நினைவு கூறலாம். "கறவைகள்
பின்சென்று "நாம் ஆசாசார்யர்களை
பின் சென்று வேதாந்தங்களைப்
படிக்க வேண்டும். நாதமுனி,
ஆளவந்தார், ராமானுஜர்
முதலிய ஆச்சார்யர்கள்
இங்கே கறவைகள் அவர்களைத்
தொடர்ந்து வணக்கம்,
வினயம் முதலியவைகளுடன்
வனம் என்று சொல்லப்பட்ட
பிரும்மத்தை அறிந்து
அனுபவிக்க வேண்டும். வங்கக் கடல் த்வய
மந்திரத்தை இப்பாசுரம்
எடுத்துக்காட்டுகிறது.
'மாதவன்' என்பது பூர்வ
கண்டத்தினுடைய விவரணம்.
"செல்லத் திருமால்" என்பது
உத்திரகண்டத்தினுடையது. இத்திருப்பாவையில்
முதல் பாசுரத்தில் "கார்மேனிச்
செங்கண்" என்றும், "செங்கண்
சிறுச் சிறிதே" என்றும்
"செங்கண் திருமுகத்து"
என்றும் மும்முறை செங்கண்
என்று சொல்லப்பட்டுள்ளது.
இதிலிந்து மூன்று கண்களை
உடைய எம்பெருமானான அழகிய
லக்ஷ்மிநரஸிம்ஹனிடத்தில்
ஆண்டாளுக்கு பக்தி அதிசயம்
காட்டப்பட்டாகிறது. "தபன
இந்து அக்னி நயன.." என்று
ஸ்வாமி தேசிகன் மூன்று
கண்ணை உடையவன் லக்ஷ்மி
நரஸிம்ஹன் என்று சொன்னார்
காமாஸிகாஷ்டகத்தில். "கோவிந்தா
என்பதையும் இத்திருப்பாவையில்
மூன்று முறை உபயோகித்திருக்கிறாள்.
"கூடாரை வெல்லும் சீர்
கோவிந்தா", "குறை ஒன்றும்
இல்லாத கோவிந்தா", "பறை
கொள்வான் அன்று காண்
கோவிந்தா" என்று. அன்று
துயில் உறியும்போது
த்ரெளபதி கண்ணனை அழைத்தாள்.
அங்கும் கோவிந்தா என்று
மும்மறை கூறியிருப்பதை
அநுசரித்து கண்ணனிடத்தில்
அப்பெயரையே சொல்லி ஆண்டாளும்
அநுபவிக்கிறாள். எம்பெருமானுக்கு
திருப்பாவை ஜீயர் என்று
பெயர். ப்ரதிதினமும்
பாஷ்யக்காரர் திருப்பாவையை
காலக்ஷேபமாக சாதித்து
வந்தபடியால் இத்திருநாமம்
இவருக்கு உண்டாயிற்று.
மேலும் இப்ப்ரபந்தத்தை
அநுசந்தித்துக் கொண்டே
பிக்ஷை பெருவதற்கு செல்வதாலும்
இப்பெயர். மேலும் திருப்பாவை
ஒவ்வொரு பாசுரமும் ஆச்சார்யனான
பாஷ்யக்காரரையே சொல்லவந்தது.
இக்காதைகளால் சொல்லப்படுகிறவர்
எம்பெருமான். ஆகையால்
இவருக்கு திருப்பாவை
ஜீயர் என்று பெயர் உண்டாயிற்றாம்.
மேலும் சரணாகதி கத்யத்தில்
பாஷ்யகாரர் த்வயத்தினுடைய
அர்த்தமான சரணாகதி என்னும்
பிரபத்தியை வெளியிட்டு
இருக்கிறார். "ஆண்டாளும்
பிரபத்தி என்னும் உபாயத்தை
மார்கழி" மார்கசீருஷம்
அதாவது பிரபத்தி என்பதால்
வெளியட்டார். ஆகையால்
பாஷ்யகாரரும், கோதை
பிராட்டியும் சகோதர
சகோதரி பாவத்தை பெற்றனர்.
ஒரே விதமான கருத்தை உடையவர்கள்
அன்றோ சகோதரர்கள் ஆவார்கள்.
"ஸ்ரீபெரும்பூதூர் மாமுனிக்கு
பின்னானாள் வாழியே" என்று
இவள் வாழித்திருநாமம்
அமைந்தது. தனுர்மாதம்
: ப்ரணவோ தனூ என்பதையும்
நோக்கவும். ஆதிசங்கராச்சாரியார்
திருவாதிரை என்னும் ஆருத்ரா
நக்ஷத்திரத்தில் பிறந்தவர்.
அவர் பெளத்தம் முதலிய
பாஹ்ய மதங்களைக் கண்டித்தார்.
அவர் மற்ற மதங்களைக்
கண்டித்ததற்கு கருத்து
என்ன என்றால், பிபூதியாகிற
உலகமும் விபூதிமானான
தெய்வமும் இல்லை. அதாவது
"சர்வமும் சூன்யம்" என்பதை
எப்படியாவது நிரகிக்க
வேண்டும். இரண்டுமே உண்டு
என்று சொன்னால் அவர்களுக்கு
திருப்தி ஏற்படாது என்று
கூடமான ஆசயத்தை (எண்ணம்)
மனதில் வைத்து உலகம்
இல்லை என்பதை ஒப்புக்
கொள்கிறோம். எல்லாம்
பிரமத்தால் ஏற்பட்டது.
பிரமத்துக்கு அதிஷ்டானம்
ஒன்று அவசியம் இருக்க
வேண்டுமே அது இல்லாவிடில்
பிரமம் சம்பவிக்க முடியாதே
என்று சொல்லி அவர்களை
திருப்தி படுத்தினார்.
ஆக பரமாத்மா என்பது உண்டு
என்பதை ஒப்புக் கொண்டார்.
உலகம் இல்லை என்பதில்
நோக்கம் இல்லை. ஆகையால்தான்
மக்களுக்கு உண்மையை அறியப்படுத்த
வேண்டும் என்று எண்ணி
ஏக தண்டதாரியான அவர்
அதே நக்ஷத்திரத்தில்
த்ரிதண்டதாரியான ராமானுஜராக
அவதரித்தார். சித், அசித்,
ஈஸ்வரன் என்ற மூன்று
தண்டத்தைப் பெற்றார்.
முன்பு ஈஸ்வரன் என்கிற
ஒரு தண்டம். காலையில்
எழுந்தவுடன் நாம் ஹரிநாம
சங்கீர்த்தனத்தை ஏழுமுறை
செய்யவேண்டும். இவ்விஷயம்
ஆஹ்னிக க்ரந்தத்தில்
காட்டப்பட்டுள்ளது. நாம்
ஹரி என்கிற நாமத்தை உச்சரிக்கிறோம்.
ஹரி என்கிற ராமன், நமக்கு
புருஷகார பூதையாயும்
அவனுக்கு தர்ம பத்நியாயும்
அமைந்துள்ள சீதாதேவியை
காலையில் எழுந்தவுடன்
நினைக்கிறான். "சீதேதி
மதுராம் வாணீம் வ்யாஹரன்
பிரதி புத்யதே" என்பது
ராமாயணம். திருப்பாவையிலும்
பிராட்டியை சொல்லக்கூடிய
திரு என்கிற சொல் ஏழுமுறை
சொல்லப்பட்டுள்ளது.
நாம் ஏழுமுறை பகவானை
சொல்வதுபோல் அவனும்
ஏழுமுறை திரு என்று பிராட்டியை
சொல்கிறான். நித்ய விபூதியில்
உள்ள பிராட்டியானவள்
புருஷகாரபூதை ஆகிறாள்.
ராமாவதாரத்தில் சீதை
அப்படி ஆகிறாள். கிருஷ்ண
அவதாரத்தில் நீளா தேவி.
அர்ச்சனையிலே நமக்கு
ஆண்டாள் புருஷகாரம்.
ஆர்த்ராபராதினி என்று
ஸ்வாமி தேசிகனும் இதை
விளக்கினார். அல்லி நாட்
தாமரை மேல் ஆரணிங்கின்
இன் துணைவி என்கிற ஆண்டாள்
தனியனிலும் இது தெரிவிக்கப்படுகிறது. 18வது
உந்து என்கிற பாசுரம்
உயர்ந்தது. இதில் புருஷகாரபூதையான
பிராட்டி சொல்லப்படுகிறாள்.
இப்பாசுரம் மார்கசீருஷ
மாசத்தில் பிறந்தது.
பகவத் கீதையும் பதினெட்டு
அத்யாயம் கொண்டது. அதிலும்
சரமஸ்லோகம் பதினெட்டாவது
அத்தியாயம். பொதுவாக
18 என்கிற எண்ணுக்கு மகிமையே
அதிகம். இவ்விஷயம் எனது
ராமாயணசுதா என்னும் நூலில்
பால கண்டத்தில் விஸ்தாரமாக
கூறப்பட்டிருக்கிறது.
அங்கு கவனித்துக் கொள்ளவும்.
இத்திருப்பாவையில் செங்கண்,
கோவிந்தா என்பதை மும்முறை
சொன்னதுபோல் நாராணா
என்ற நாமமும் மும்முறை
சொல்லப்பட்டிருக்கிறது. 1. நாராயணனே நமக்கே
பறை தருவான். 2. நாராயணன்
மூர்த்தி கேசவனைப் பாடவும் 3. நாற்றத்துழாய்
முடி நாராணன் என்ற இடங்களில். கேசவாதி
த்வாதச நாமங்கள் என்பது
பிரசித்தமானது. நாம்
ஸந்தியாவந்தனம் செய்யவும்
பொழுது பன்னிரண்டு நாமங்களை
சொல்லி உடலில் இவர்களை
வைக்கிறோம். புண்ட்ராதாரணம்
போதும். இவர்களை சொல்லி
புண்டரத்தை தரிக்கிறோம்.
திருப்பாவையில் ஆண்டாளால்
காட்டப்பட்ட பன்னிரண்டு
திருநாமம் ஒன்று உண்டு.
(1) நாராணன் (2) ஓங்கி உலகளந்த
உத்தமன் (வாமனன்) (3) தாமோதரன்
(செய்த தாமோதரனை) (4) கேசவன்
(கேசவனைப் பாடவும்) (5) தேவாதிதேவன்
(6) மாதவன் (7) வைகுந்தன் (8) முகில்
வண்ணன் (9) பங்கயக் கண்ணன்
(10) மணிவண்ணன் (11) கோவிந்தன்
(12) நெடுமால் இவைகள். மாயனை
என்பது திருப்பாவையில்
நான்கு முறை சொல்லப்பட்டிருக்கிறது
(1) மாயனை மன்னு (2) மாமாயன்
மாதவன் (3) மாயனைப்பாடு
(4) அறைபறை மாயன் என்று. நான்கு
வேதங்களின் ஸாரார்த்தத்தை
காட்டுகிறது. மாயன் என்ற
பதம். திருப்பாவையில்
கவனிக்க வேண்டிய விஷயம்
ஒன்றுள்ளது. ஆயர்பாடியில்
உள்ள பெண்கள் அனைவரும்
ஒன்று சேர்ந்து நோன்பு
நோற்கின்றனர். ஸர்வஸ்மாத்பரனான
கண்ணனை பர்தாவாக அடைய
வேண்டும் என்ற எண்ணத்துடன்,
நோன்பு நோற்கப்படுகிறது
என்று ஸ்ரீமத் பாகவதத்தில்
சொல்லப்பட்ட வரலாறு.
ஸர்வேச்வரனை பர்தாவாக
அடைய வேண்டும் என்கிற
எண்ணம் உடையவர்கள் இப்பெண்களானபடியால்
இவர்கள் கன்னிகைகள் என்றே
சொல்லவேண்டும். விவாஹமான
பெண்களாய் இருந்தால்,
அவனை கணவனாக வேண்டி நோன்பு
நோற்க அவச்யம் இல்லை.
ஆண்டாளும் இவ்வரலாற்றைத்
தான் இத்திருப்பாவையில்
குறிப்படிகிறாள். இவள்
பாசுரத்திலும் செல்வச்
சிறுமீர்காள்! பிள்ளாய்!
நாயகப் பெண்பிள்ளாய்
என்றெல்லாம் அழைக்கிற
படியால் கன்னிகைகளாகவே
இவர்கள் இருக்க வேண்டும்
என்று புலப்படுகிறது.
ஆயர்ச்சிறுமியரோமுக்கு
என்பதை நோக்கினாலும்,
மிகச்சிறிய பெண்கள் தான்
நோன்பு நோற்கின்றனர்
என்றே புலப்படுகிறது.
விஷயச்சுவை அறியாத, பெண்கள்
இவர்கள் ஆனபடியால் ச்ருங்கார
சஸத்திற்கு இங்கு அவகாசமே
இல்லை. உரைகளில் ச்ருங்கா
ரஸத்தை புகுத்தி எழுதி
உள்ளனர். இவையெல்லாம்
ரஸோக்தி என்று சிலர்
கருதுகின்றனர். மற்றும்
சிலர், க்ருஷ்ணன் மதுரையில்
அவதரித்தான். அதை விட்டு
ஆயர் குலம் அடைந்தான்.
ராமாவதாரத்தில் ராமனிடத்தில்
ஈடுபட்ட மஹரிஷிகள் இவனை
அனுபவிக்கக் கருதி, ஆயர்பாடியில்
பெண்களாகவும் பசுக்களாகவும்
பிறந்தனர் என்பது ப்ரமாணத்தில்
ஏற்பட்டது. ஆக அவர்களை
அனுபவிப்பதற்காகவே கோகுலம்
சென்றான. வயது முதிர்ந்த
பெண்களை விட்டுவிட்டு
மற்ற பெண்கள் அனைவரிடமும்
ச்ருங்கார ரஸத்தின் மூலமாகவே
அனுபவித்தான் என்பது. ராஸக்ரீடையில்,
பெண்கள் அனைவருமே, கணவன்
புதல்வன், பெற்றோர்,
மாமனார், மாமியார் என
அனைவரையும் விட்டுவிட்டு
கண்ணனை அணுகி, காதலை அனுபவித்தனர்
என்பதும் பாகவதத்தில்
உள்ளது. இவ்வாறு, சொல்லி
இருக்க இப்பெண்கள் கன்னிகைகளே
என்று எப்படி ஒப்புக்
கொள்ள முடியும்? பிறருடைய
மனைவியை, கண்ணன் எப்படி
அனுபவிக்கலாம்? அது குற்றமல்லவா?
தர்மத்தை நிலைநாட்ட அவதரித்தவனன்றோ
இந்த ப்ரபு? இவனே இவ்வாறு
குமார்கத்தில் சென்றால்
உலகம் எவ்வாறு நன்மார்க்கத்தில்
செல்லும். 'ஸங்கரஸ்ய ச
கர்த்தாஸ்யாம்' என்று
உபதேசித்தான் கண்ணன்.
உலகமக்களுக்கு, கலப்பு
இல்லாதிருப்பதற்காகவே
நான் அவதரித்த படியால்
இதை எவ்வாறு செய்வேன்
என்றான். இவ்வாறு கேள்விகளை
கேட்டுகொண்டு பாகவதமே
பதில் கூறுகிறது. "தர்ம
வ்யதிக்ர மோத்ருஷ்ட:
ஈச்வரானாம்ச ஸாஹஸம்.
தேஜீயஸாம் ந தோஷாய வஹ்னே:
ஸர்வ புஜோயதா! வினச்யத்யாசரன்
மெளட்யாத்யதாருத்ரோ
அப்திஜம் விஷம் ஈச்வரானாம்
வஸஸ் ஸத்யம் ததைவாசரிதம்
க்வசித்" என்று. மஹிமை
பெற்றவர்களுக்கு இவை
எல்லாம் குற்றத்தில்
சேராது. ஸர்வேச்வரன்
எல்லோருக்கும் மேற்பட்டவனானபடியால்
அவன் எதைச் செய்தாலும்
ஜீரணம் செய்து கொதள்ளமுடியும்.
அவன் கர்மத்துக்கு வச்யன்
அல்லன். அவன் செய்த விளையாட்டு
இவை அனைத்தும் ஆயர்பாடியில்
வெண்ணைத் திருடி கள்வன்
எனப் பெயர் பெற்றான்.
அவன் செய்த செளர்யம்
நம்முடைய பாபத்தை போக்கும்.
அவனது ஜாரத்தன்மையும்
நமது குற்றத்தை அகற்றும்.
அவ்வாறான வைபவம் பெற்றவன்
அவன். இவை எல்லாம் அவனைக்
குற்றவாளி ஆக்காது. அக்னீ
பரிசுத்தமானது. தன்னிடத்தில்
சேர்க்கபட்ட பொருள்
அனைத்தையும் பஸ்பமாக்கும்
தன்மை உடையது. சுத்தமான
பொருட்கள் அல்லது அசுத்தமான
பொருட்கள் எவற்றை அதில்
சேர்த்தாலும், அதற்கு
இயற்கையாக அமைந்த சுத்தி
எக்காரணத்தாலும் குறைந்துவிடாது. பரமசிவன்
ஸமுத்ரத்தை கடைந்த போது
உண்டான விஷத்தை உட்கோண்டான்.
அந்த விஷபானம் அவனை என்ன
செய்தது? அதைப் பார்த்து,
நாம் விஷத்தை பருக முடியுமா?
எல்லாவற்றையும் ஜீரணித்துக்
கொள்ளும் சக்தி பெற்றவர்கள்
எதையும் செய்யலாம். நமக்கோ
அவ்வாறான சக்தி இல்லை.
அவனது உபதேசத்தை மாத்திரம்
நாம் உபஜீவிக்க வேண்டும்.
அவனது ஆசாரத்தை நாம்
கைப்பற்றலாகாது. பார்த்த
ஸாரதியான கண்ணனுடைய உபதேசம்
நமக்கு மருந்து. ஸ்ரீராமபிரானின்
உபதேசமும், ஆசரணமும்
நமக்கு மருந்து ஆகும். ஸ்வாமி
தேசிகன் இவ்விஷயத்தில்
சொன்ன ஸமாதானத்தை பார்ப்போம்.
த்ரெளபதி ஐந்து புருஷனை
மணந்து கொண்டாள். அதை
அனுஸரித்து நாமும் பல
புருஷர்களை மணந்து கொள்ளலாமா?
அவ்வாறு ஏற்பட்டது. த்ரெளபதியின்
ப்ராசீனமான பரமசிவன்
அளித்த வரம், திவ்யமான
பரமபுருஷனுடைய மற்ற பெண்களோடு
ஏற்படும் காதல் ராகம்
முதலிய வியாதிகளை போக்கடிக்கும்
மருந்தாக அமைகிறது. ஆக
இது கண்ணனுக்கு குற்றத்தை
அளிக்காது. மேலும் இவன்
பல பெண்களுடன் கலந்து
இருந்த போதிலும் நித்ய
ப்ரஹ்மசாரி ஆகிறான். உத்தரையின்
வயிற்றில் இருக்கும்
சிறு குழந்தை அச்வத்தாமாவின்
அஸ்த்ர பலத்தால் கரிக்கட்டை
ஆகிவிட்டது. கீழே விழுந்ததும்
அனைவரும் புலம்ப ஆகாசவாணி
நித்ய ப்ரஹ்மசாரியின்
பாதஸ்பர்சம் ஏற்பட்டால்
குழந்தையாக மாறிவிடும்
என்று சொன்னது. பீஷ்மாசார்யர்
ஹனுமன் இவர்கள் முன்வரவில்லை.
இவர்களை நாம் நித்ய ப்ரஹ்மசாரிகள்
என்று சொல்வதுண்டு.
ஸ்ரீக்ருஷ்ணன், இந்த
சமயம் நான் நித்ய ப்ரஹ்மசாரியாக
இருந்தால் என்னுடைய பாத
ஸ்பர்சம் ஏற்பட்டு இக்கரிக்கட்டை
சிசுவாக ஆகக் கடவது! என்று
சொல்லி, தன் திருவடியால்
ஸ்பர்சித்தான். குழந்தையாக
மாறி, அழ ஆரம்பித்தது.
இதையே காரணமாகக் கொண்டு
அவன் நித்ய ப்ரஹ்மாசாரி
என்று சொல்வது மிகையாகாது.
எனவே பல பெண்களுடன் இவன்
விளையாடின போதிலும்
இவனது ப்ரஹ்மசர்யம் நீங்கவில்லை.
நிறைந்திருந்தது. ஆயர்பெண்கள்
இவனிடம் பலவகையில் ச்ருங்கார
ரஸத்தை காட்டினர். இவனும்
இவ்வாறே நடந்தான். இவன்
ஊர்த்வ ரேதஸ்ஸாகவே இருந்தான்.
அதோ ரேதஸ்ஸை உடையவன்தான்
ப்ரஹ்மசாரியாக மாட்டான்.
இவன் அப்படியல்லன். இதையும்
பாகவதம் கூறுகிறது. லலிதவிலாஸ
வல்கு என்கிற ச்லோகத்தால்.
இவ்வாறு நம்மால் இருக்கமுடியுமா?
ஆக அவன் நித்யசுத்தன். மேலும்
பதி ஸுதன் பந்துக்கள்
அனைவரையும் விட்டு உன்னுடைய
வேணுநாதத்தை கேட்டு மகிழ்ச்சியால்
வந்த நாங்கள் பதிவ்ரதைகளே
என்று பதில் கூறினர்.
க்ருஷ்ணனிடத்தில். நீதான்
எங்களுக்கு எல்லாவிதமான
வந்துவானபடியால், பர்தாவும்
நீதான் இவ்வாறு சாஸ்த்ரங்கள்
சொல்லியிருக்க உன்னை
விட்டு மற்றொரு புருஷனை
நாடினால் தான் எங்களது
கற்பு குறைந்து விடும்.
ஆக நாங்கள் வ்யபிசாரிகள்
அல்லர் என்றும் பாகவதத்தில்
சொல்லப்பட்டுள்ளது. மேலும்
இவன் ஆயர்பாடியில் எந்தப்
பெண்களோடு விளையாடினானோ,
அவர்கள் அனைவரும் அதே
நேரத்தில் அந்தந்த பந்துக்களுடனும்
தங்கள் தங்களது கணவனுடனும்
கூடி மகிழந்தனராம். புருஷனைவிட்டு
பெண்கள் இல்லாத வகையில்
காட்சி அளிக்கவில்லையாம்.
தனது யோக மஹிமையால்
அந்தந்தப் பெண்கள் அந்தந்த
புருஷனுடன் விளையாடும்
வகையில் ஆச்சர்ய சேஷ்டிதத்தை
ஏற்படுத்தி வைத்தானாம். மற்றும்
ஒரு விஷயம் கேண்மின்.
ஒருவன் பலஜன்மங்களை கர்மவசத்தால்
எடுத்துக் கொள்கிறான்.
முன் பிறவியில் சண்டாளனாக
இருந்தவன் மருபிறவியில்
அந்தணனாகப் பிறக்கிறான்.
சண்டாளப் பிறவியில் இருக்கும்போது
செயல்கள் பாப புண்யங்கள்
அவனைவிட்டு போவதில்லை.
ஆயினும் மறுபிறவி அந்தணனானபடியால்
அவனை வைதிக கர்மங்களில்
அந்வயத்தை ஏற்றுக்கொள்கிறோம்.
சரீரம் மாறினபடியால்
அந்த உடலில் செய்த பாபங்களையிட்டு
இந்த உடலில் இவனை பஹிஷ்க்கரிப்பதில்லை.
உதாஹரணமாக அந்தண உடலில்
ப்ரஷ்டனாக இருந்தால்
இவனை நிமர்ந்த்ரணத்தில்
வைப்பதில்லை. பூர்வஜன்மத்தில்
இருந்த வைகளைக் கொண்டு
எதையும் சொல்வதில்லை.
ஏன்? உடல் வேரானபடியால்.
அது போல் இங்கும் கவனிக்க
வேண்டும். "க்ருஷ்ணரூபாணி
அஸங்க்யானி" என்ற வகையில்
கண்ணனது உடல்பல ஒவ்வொரு
உடலும் க்ருஷ்ணனாகவே
ஸேவை அளிக்கக் கூடியவை.
நித்யப்ரஹ்ம சாரியின்
பாதஸ்பர்சத்தால் இக்குழந்தையின்
சாபம் நிங்கும் என்று
அசரீரிவார்த்தையைக்
கேட்டதும் க்ருஷ்ணன்
தனக்கு ஸஜாதியமான மற்றொரு
உடலை எடுத்து வந்தான்.
இந்த உருவம் புதியதாயும்
வேராகவும் ஆனபடியால்
இதற்கு எந்தவிதமான கோதும்
இல்லை. எனவே இவன் நித்யப்ரஹ்மசாரி
என்றக்காரணத்தால் பரிக்ஷித்
ஸ்வயரூபத்தை அடைந்தான்
என்று இவ்வாறான மார்கங்களைக்
கையாண்டு பதில் சொல்லலாம். இப்படி
இவன் பெண்களுடன் விளையாடின
போதிலும் இவனுக்கும்
குற்றமில்ை. ஆய்பெண்களுக்கும்
எந்தவிதமான தோஷமுமில்லை. ஆயர்
சிறுமியர்களாக இருந்தாலும்
ச்ருங்கார ரஸத்துக்கு
அவகாசமில்லை என்பதும்
சரியன்று. கன்னிகைகளுக்கும்
காமவிகாரம் என்பது உண்டு.
ருதுமதி ஆகாவிடிலும்
மனதில் விகாரம் ஏற்படலாம்.
கன்னிகைகளையும் ஆலிங்கனம்
அதரசும்பனம் முதலிய காமவிகாரங்கள்
மூலம் 'அனுபவிப்பதும்
உண்டு இது கண்கூடு. எனவே
தர்மசாஸ்த்ரங்களில்
கன்னிகை ஆலிங்கனம் செய்தால்
ப்ராயச்சிதம் சொல்லப்பட்டுள்ளது.
விகாரமே ஸம்பவிக்காது
என்றிருந்தால் ஆலிங்கனாதிகளுக்கு
ப்ரஸக்தியே இல்லை. ப்ராயச்சித்தமும்
சொல்ல வேண்டாம். ஆகையால்
கண்ணன் ப்ரெளடையான பெண்களுடன்
விளையாடினாலும் கன்னிகைகளுடன்
லீலா ரஸத்தை அநுபவிப்பதாக
இருந்தாலும் திருப்பாவையில்
இது சொல்லப்படுவது பொருத்தமாகலாம். ஆண்டாள் வாழி
திருநாமத்தை நாம் தினந்தோறும்
கூறுகிறோம். "திருவாடிப்
பூரத்து ஜகத்துதித்தாள்
வாழியே" என்பதை "பெரியாழ்வார்
பெற்றெடுத்த பெண்பிள்ளை
வாழியே என்று சொல்வது
வழக்கம். பெரியாழ்வார்
தன் மனைவியினிடத்தில்
கோதையை பெற்றாள் என்பது
இல்லை. இது வாஸ்தவம். துளஸீ
கானத்தில் கிடைத்தவள்.
துளஸிச் செடிகளைக் கொண்டு
பெயற்று எடுக்கும்போது
கிடைத்தவள் ஆனபடியால்
பெரியாழ்வார் பெற்றெடுத்த
பெண்பிள்ளை வாழியே என்று
சிலர் சொல்வர். பெரும்பூதூர்
மாமுனிக்குப் பின் நாநாள்
வாழியே என்பதற்கும் வேறு
பொருள் சொல்வர். திரு
மாலிரும் சோலை பெருமாள்
விஷயமாக நூறு தடாவில்
அக்கார வடிசல் சொன்னேன்.
முதலியவைக் கொண்டு ராமாநுஜர்
நிறைவேற்றியபடியால்
தங்கையின் மனோரதத்தை
அண்ணன் பூர்த்தி செய்து
வைக்கிற விஷயம் கண்டுள்ளபடியால்
ராமாநுஜர் ஆண்டாளுக்கு
அண்ணனார் என்று ஐதிஹம்
சொல்லி இந்த வாழித்திரு
நாமத்துக்கு வ்யாக்யானம்
சொல்வர். இது ஒரு புரம்.
மற்றொரு வகையிலும் பொருள்
கூறலாம். அத்தத்தின்
பத்தாநாள் தோன்றிய அச்யுதன்
என்றார் பெரியாழ்வார்.
நக்ஷத்திரத்தை முன்னிட்டு
கூறுவதுண்டு. அதுபோல்
இங்கும் சொல்லலாம்.
அதாவது ராமாநுஜர் நக்ஷத்திரம்
திருவாதிரை. ஆண்டாள்
நக்ஷத்திரம் பூரம். இரு
நக்ஷத்திரங்கள் நடுவே
நான்கு நக்ஷத்திரங்கள்
உள்ளன. ஆக இதை வைத்துக்
கொண்டு ராமாநுஜர் அண்ணன்
ஆகிறார். பெரும்பூதூர்
மாமுனிக்கு நான்கு நாள்
(நாலு நாள்). பின் பிறந்த
ஆண்டாளே நீ வாழக்கடவாய்
என்பது ஸாரம். ஹஸ்த நக்ஷத்ரத்துக்கு
பின் என்று கண்க்கு செய்தால்
ஸ்ரவண நக்ஷத்ரம் முன்
என்று கண்க்கிட்டால்
ரோகினி நக்ஷத்திரம்
என்று கூறுவதுண்டு. ஆக
முன், பின் என்ற வகையில்
இங்கும் யோசித்துப்
பார்த்தால் பின் நால்
நாள் வாழியே என்பதும்
பொருந்தும். பர்ஹ்யேவ
அஜனன நக்ஷத்ரம் என்பது
பாகவதம். அஜனன் சதுர்முகன்
அல்லது விஷ்ணு. இதை மனதில்
வைத்துத்தான் ஆழ்வாரும்
சோன்னார்.
*****
|
|
|
|
|
|
|
|