Sri Vu Ve Perukaranai Swami

Ekadasi Mahimai
Sri Vu Ve Perukaranai Swami
Sri Vu Ve Perukaranai Swami attains Aacharyan Thiruvadi
Age does not stand in his way :
87th Thirunakshathram
Swami's 86th Thirunakshathram
Swami's 85th Thirunakshathram
Welcome to know about Sri Perukaranai Swami
Swami's profile in brief
Awards
Perukaranai's Swami's Sathabhishekam
Books authored by Perukaranai Swami
Stotra Ratnam
Upanyasa Manjari
Ahobila Kshethram
Pushpanjali
Ekadasi Mahimai
Dharmam Thalai Kaakkum
Mouna Vridham
Ilaya Perumaalum Ilaya Azhvaanum
Hanumanaip Ponra Aacharyan
Thula Kaveri Maahaathmyam
Mummatha Saaram
Nadappadhu Nadandhe Theerum
Patraa Kurai
Pandidhan Yaar ?
Twentyfour Steps
Saadhu Dharisanam
Josyam Balithuvittadhe
Vedham Odhudhal
Pirattiyin Avadhaara Visesham
Anger turns to Anugraham !
Paravaigal
Ten, Three and One
Kadan - Loan
Be Proud, but how ?
Sathurangam
Maarvam Enbadhu Oru Koil
Paasam
Ramanuja Padam
Viswamithrar
Idukkan Kalaiyum Iraivan
Ramanujar Kaattiya Visishtadvaidham
Sri Bashyamum Sri Bashyakaararum
Bagavath Baktharhalin Perumai
Kannika Dhaanam
Kakkum Iyalbinan
What is Truth?
Sampathum Vibathum
Saayujjam
Moonru Manidhargal
Amudhamum Vizhamum
Oru Thaniganin Kelvi
Yathra Praadhaa Sahodharaha
Vuyiraa? Maanamaa?
Moonru Kutrangal
Sammarjanam
Manam En Mariyadhu ?
Sraardham Seyvadhu En ?
Pithru Kaariyathil Oru Visesham
Makkalin Pokku
Dharma Sookshmam
Pava Naasini
Thirumagal Vasikkum Idam
Pirandha Idathaye Adaiyum
Aacharya Kaalamegam
Bagavath Geethaiyum Thiruppavaiyum
Kodari
Ore Iravu Ore Pahal
Padithavan Panakkaaranaa ?
Iru Sahodharargal
Bakthanin Perumai
Vunmaiyai Yosithu Paar
Manidhanin Vayadhu
Naangal Naangale Neengal Neengale
Prapathiyil Oru Visesham
Dhaasyam
Vaishnavan Yaar ?
Deha Sampathu
Favorite Links
Contact Me
Enter subhead content here
25 ஏகாதசிகளின் வ்ரத மஹிமை

உலகிலுள்ள மக்கள் அனைவருமே ஆஸ்திகராகவே இருப்பவர்கள்தான். வெளிச் செயலில் ஒருவகையாக நடப்பவர்களாயினும் உள்ளூர பாபச்செயலுக்கு அஞ்சி நடப்பவர்கள் என்பதில் ஸம்சயமில்லை. புண்ணியச் செயலில் ஈடுபடுபவர்களே! பாபம் என்பது பகவானுக்குக் கோபத்தைக் கொடுப்பது. புண்ணியம் என்பது அவனுக்கு உகப்பைத் தருவது. பாவபுண்யங்களுக்கு இவைதான் இலக்கணம். "இந்த உலகம் தான் உண்டு. இங்கு அநுபவிக்கப்படும் ஸுகம் தான் உண்மை. பரலோகம் கிடையாது. அங்குச் செல்வதுமில்லை. அங்கு ஸுகமும் கிடையாது என்று சொல்லி தப்புக்களில் இறங்குபவனை நாஸ்திகன் என்று சொல்கிறோம். உண்மையில் இவ்வாறு ப்ரஸங்கம் செய்பவனும் தனது வீட்டிலும் பிறருக்குத் தெரியாவகையில் இறைவனுக்கு அஞ்சி தான் நடந்துகொள்கிறான். கடவுள் நம்மை என்ன செய்து விடுவார் என்றும் பயப்படுகிறான். ஏன் எனில், நம்மால் எதையும் ஸாதிக்க முடியாதல்லவா? நாமே அரசனாகவும், ஸ்வதந்தரனாகவும், இருந்து எல்லாவற்றையும் ஸாதிக்க முடியாத வகையில் சக்தியற்றவனாக இருக்கிறோம் என்ற எண்ணம்தானே உண்டாகிறது. நினைத்த வேலையை ஸாதிக்கும் திறமை நம்மிடம் இல்லையே. மகனுக்கோ, மனைவிக்கோ நோய் வந்து விட்டால் அதைப்போக்க பல முயற்சியைக் கொடுத்தும் பயன் அளிக்கவில்லையே. பணம் இல்லாமல் பலர் வருந்துகின்றனர். மக்கள் பேறு இல்லாமல் பலர். இவ்வாறு பலவகையில் போசனம் கிடைக்காமல் சிலர். பல அல்லல்களால் துன்பப்பட்டு சிலர் தவிக்கின்றனர். ஆக நம்மால் எதையும் ஸாதிக்க முடியாது என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டாகிறது. மேலே சொல்லும்போது எதையாவது சொல்லிவிடலாம். நடை முறையில் வரும்போது அவனவன் தன் செயலை வெறுத்து தெய்வத்தை நாடுகிறான்.

கோயில் வேண்டாம், பூஜை வேண்டாம், விக்ரஹமும் இல்லை என்று சொல்லுபவர்கள் கூட சிலையை வைக்கிறார்கள். காந்திசிலை, நேருசிலை, இம்மாதிரி சிலை வைத்துக் கொண்டாடுகிறார்கள். பிறந்ந நாள் என்றும் இறந்த நாள் என்றும் அவைகளுக்கு மாலை, பஷ்பாஞ்சலி முதலியவைகளைச் செய்து கொண்டாடுகிறார்கள். ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்கிறார்கள். இறந்ததும் எலும்புகளை எடுத்துச் சென்று கங்கையில் கரைக்கின்றனர். ஏன்? இவர்களுக்குத்தான் மேல் உலகம் இல்லையே. உடலைக் காட்டிலும் வேறு ஆன்மா இல்லையே. யார் இதன் மூலமாக த்ருப்தியடையப் போகிறார்கள் என்றால் என்ன பதில் சொல்லக் கூடும். ஆக எல்லாம் வெளிப் பிரஸங்கமே தவிர உள்ளத்தில் ஆஸ்திச்யம் ஓடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் இவர்களும் கூட பாப புண்ணியத்திற்கு அஞ்சி நடப்பவர்களே. கொலைத் தொழிலில் இறங்கும் திருடன் கூட தெய்வத்தை வணங்குகிறான். ஆக அனைவருமே ஆஸ்திகர்கள்தான். ஏதோ தனது மனோரம் நிலை பெற வேண்டும் என்றெண்ணி அந்தந்த சமயத்துக்குத் தகுந்தவாறு தெய்வத்தை தூஷிப்பதும், நாஸ்திகராவதும், பிறகு வேண்டும்போது ஆஸ்திக முறையில் நடந்து கொள்வதும் இயல்பாகிவிட்டது.

மறையுறைக்கும் பொருளெல்லாம் மெய் என்று ஓர்வார்கள் அனைவருமே ஆஸ்திகர்கள். அதன்படி நடப்பவரும் ஆஸ்திகர்கள். வேதங்களில் எத்தனை மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. தேள் விஷம் இறங்க மந்திரம், பாம்பு விஷம் இறங்க மந்திரம், காமாலை நீங்க மந்திரம், பூச்சிக்கடி மூலம் ஏற்படும் கஷ்டத்தை நீக்க மந்திரம், ஜுரம், தலை வலி வயிற்று வலிபோக மந்திரம், சூந்யம் ஏவல் வைக்க மந்திரம் இப்படி எத்தனையோ மந்திரங்கள் உள்ளன. அந்தந்த கஷ்டங்கள் வரும் போது அதைப் போக்க அந்த மந்திரஸித்தியைப் பெற்றவனை அணுகுகிறோம். வேஷதாரியான நாஸ்திகன் கூட தன் இல்லத்தில் பேய், பிசாசு முதலியவைகளால் துன்பம் உண்டான போது அதை நீக்க மந்த்ர சக்திகைப் பெற்ற மகான்களிடம் அணுகி அதை நீக்க முயற்ச்சி செய்கின்றனர். மந்திரங்களை ஜபித்து ஸித்தி பெற்றவனால்தான் கவலைகளை நீக்க முடியும். ஏற்கனவே பலமுறை அக்ஷரலக்ஷம், ஜபம், தர்பணம், ஹோமம், செய்து ஸித்தி பெற்றவனாக இருந்தால்தான் அந்தந்த மந்திரங்களை வாயால் சொன்ன மாத்திரத்தில் அல்லது மனஸால் நினைத்த மாத்திரத்தில் விஷம் முதலியவை இறங்கி விடுகிறது. இது நம் எல்லோருக்கும் கண்கூடு. தன் ஸித்தியை பெற்ற பிறகு அந்த மந்திரத்தை நினைத்தும் சொல்லியும் கையை தூக்குகிறார்கள். உடனே பக்ஷணம், பொட்டலம், ஹாரம், முத்துமாலை, பூமாலை எல்லாம் வந்து விழுகின்றன. உள் மனத்தில் ஒருவருத்தம் என்று பார்த்தவுடன் கூறுகிறான். இதற்கெல்லாம் காரணம் மந்திர ஸித்திதான். இதில் ஆழங்கால்ப்பட்டிருக்க வேண்டும். அதிலேயே ஊற்றம் இருக்க வேண்டும். பலதடவை ஜபித்து அதில் ஸித்தி பெற்றிருக்க வேண்டும். காலத்தை வேறு விஷயத்தில் கழிக்காமல் அதையே த்யானித்து ஜபித்திருந்தால் உடனடியாக ஸித்திபெற்று விடலாம். இப்படி ஸித்தி பெறாமல் இருந்து மந்திரத்தை அந்த ஸமயம் உச்சரித்ததனால் ப்ரயோஜனமில்லை. கோயிலுள்ள அர்ச்சகர்கள் எந்த மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்கிறார்களோ, அந்த மந்திரத்தில் ஸித்தி பெற்றிருந்தால் ஒரு தடவை அர்ச்சனை செய்தல் மாத்திரத்தால் ஸேவார்த்திகளுக்கு பலனை அளிக்க வல்லவர் ஆவார்கள். இதைத்தான் "அர்ச்சகஸ்ய மஹாத்ம்யாது" என்றது. குரங்காட்டி குரங்கை கொண்டு பிழைக்கிறான். பாம்பாட்டி பாம்பைக் கொண்டும், மாட்டுக்காரன் மாட்டைக்கொண்டும், அதைப் போல் விக்ரஹத்தை கொண்டு ஸம்பாதிக்க எண்ணமிருந்தால் எப்படி மந்திரத்தில் ஊற்றமிருக்கும். இக்காலம், கடூரமானது. அரசாங்கம் போல் வ்யாபாரத்தில் இறங்கிவிட்டனர். எல்லாம்பிஸினஸ் (வ்யாபாரத்துறை) ஆகிவிட்டது. மந்திர ஸித்தியில் எண்ணமற்றவர்கள். இப்படி இஹபல ஸாதனமான மந்திரங்களில் நம்பிக்கை ஏற்படுகிறபடியால் பரலோக காரணமான சடங்குகளிலும் அதின் மந்தரங்களிலும் உண்மை என விச்வாஸம் உண்டாகிறது. சொன்னால் விரோதம். ஆயினும் சொல்கிறேன். மந்திரங்கள் பல உள்ளன. ஆயினும் பஞ்சஸம்ஸ்கார காலத்தில் மூன்று மந்திரங்களை மாத்திரம் உபதேசிக்கின்றனர். ஏன்? இவை மூன்றும் ஆத்மாவின் உஜ்ஜீவனத்துக்காக ஏற்பட்டவை. இதில் சரணாகதி சொல்லப்படுகிறது. நாம் அனைவரும் மேல் உஜ்ஜீவனம் அடைய வேண்டுமென்ற எண்ணம் உடையவர்கள் ஆனபடியால் சரணாகதியை விட வேறொன்றும் உஜ்ஜீவனத்தைக் கொடக்காதாகையால், அதை எடுத்துக்காட்டக் கூடிய மந்திரங்களை உபதேசிக்கின்றனர். இதை நாமும் முறையுடன் பெற வேண்டும். அவர்களும் முறையுடன் உபதேசிக்க வேண்டும். உபநயனகாலத்தில் காயத்ரியை உபதேசிப்பவன் முப்பதாயிரம் ஆவ்ருத்தி ஜபம் செய்து உபதேசிக்க வேண்டும் என்ற நியதியை கண்டுள்ளோம். இவ்வாறு பலமுறை மந்த்ரங்களை ஜபித்து ஸித்திபெற்று உபதேசிக்க வேண்டும். சிஷ்யர்களும், ஒருதினத்துக்கு நூறுதரமாவது ஜபம் செய்ய வேண்டும். இம்மாதிரி 4, 5 வருடங்களுக்கு முறைப்படி ஜபம் செய்தால் கிஞ்சித் தேனும் ஸித்தி பெற்றுவிடலாம். இவ்வாறு ஸ்வயம் ப்ரயோஜனமாகவே ஜபித்து வந்தபடியால் ஸித்திபெற்ற நாம் ஒரு தடவை மோக்ஷத்துக்காக உச்சரித்து விட்டால் பலனை அளித்துவிடும். பிறருக்காக உச்சரித்தாலும் பலனை பிறர் அடைவர். ஸாமான்ய பலன்களை அளிக்கக் கூடிய மந்திரங்களாலே ஸித்தியைப் பெற்றவனாலேயே ஸாதிக்க முடியும் என்றால் மோக்ஷரூபமான உயர்ந்த பலனை அடைய நாம் இந்த மந்திரத்தில் ஸித்தியை பெற்றிருக்க வேண்டும் என்பதில் ஐயம் என்ன உள்ளது. ஆகையால் தான் ஸ்ரீபாஷ்யகாரரும் 'த்வயம் அர்த்தாநுஸந்தாநேநஸ்தைவம் வக்தா' என்றருளிச் செய்தார்.

வேதங்களில் புகழப்பட்ட பகவானை துதிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்த போதிலும் கண், காது, மூக்கு, முதலிய புலன்கள் அஹலோகஸுக ஸாதனமான பணம், புகழ், முதலிய பள்ளத்தில் தள்ளிவிடுகின்றன. பதுகையே நீ உனது மணிகளின் த்வனி மூலம் ஒவ்வொருக்ஷணமும் இதை நினைப்பிக்கிறாய் என்பது பாதுகா ஸகஸ்ரம். நாம் மந்திரங்களை ஜபிப்பதில்லை. அப்படி ஒரு ஸமயம் ஜபித்தாலும் பலதடவை ஜபிப்பதில்லை. அவ்வாறு நேர்ந்தாலும் எண்ணம் இதில் இல்லை. அவரவர்களுக்கு தக்கவாறு மனோரதம் வேறானபடியால் அதைப் பூர்த்தி செய்ய உத்வேகம் வந்துவிடகிறது. அதற்கு ஸாதனங்களில் ஈடுபட்டுவிடுகிறோம். ஸம்ஸாரமாகிற நெருப்புக்கு கட்டைகள் போல் அமைந்திருக்கும் நாம் உஜ்ஜீவனத்தை அடைய வேத வேதாந்தங்களில் சொல்லப் பட்டுள்ள மந்த்ரங்களை லோக நன்மைக்காக ஸ்வயம் ப்ரயோஜனமாய் ஜபித்து ஸித்திபெற வேண்டும். இதனால் மக்களும் உய்ய வழி ஏற்படும். நாமும் உய்யலாம். முன்பு ருஷிகளும் மகான்களும் இவ்வாறு ஸித்தி பெற்றபடியால்தான் அவர்கள் மந்திரங்களை உச்சரித்த மாத்திரத்தால் சாபமோ அநுக்ரஹமோ நடந்து வந்தது. சாபாநுக்ரஹஸ்வாமி என்ற மஹானின் கதையையும் கேட்டுள்ளோம். விச்வாமித்ரர் உபதேசம் செய்த இரண்டு மந்திரங்களும் சுனச்சேபன் விஷயத்தில் உடனடியாக பலித்ததையும் கேட்டுள்ளோம். நரபலி கொடுத்து யாகம் செய்ய வேண்டுமென்ற தருணத்தில் ஸித்திப் பெற்ற அவரது உபதேசம் மூலம் கிடைத்த மந்திரங்களை சொன்ன மாத்திரத்தில் இந்திரனும் உபேந்த்ரனும் வந்து அவனுக்கு உயிர் கொடுத்து யாகத்தையும் பூர்த்தி செய்து வைத்தனர் என்பதை அறிந்துள்ளோம். எனவே மந்திரங்களுக்கு ப்ரபாவம் அளவிடமுடியாது. மஹாவிச்வாஸத்துடன் அதை ஜபித்து வந்தால் ஸித்தியைப் பெறலாம். அதன் மூலமாக பலன் அனைத்தையும் பெற முடியும் இதனால் அடை முடியாததே கிடையாது. உதாஹரணமாக அஷ்டாக்ஷரம் என்ற மந்திரத்தின் ப்ரபாவத்தைப் பார்ப்போம். அஷ்டமூர்த்தி என்கிற ருத்ரனையும், நான்முகமும், கொண்ட ப்ரஹ்மாவையும், எட்டுதிக்குக்களையும், எட்டு திக்பாலகர்களையும், எட்டு தத்துவங்களையும், எட்டு குலபர்வதங்களையும் படைத்தான். எம்பெருமான் இவன் குணாஷ்டக விசிஷ்டன் இவனது ஸ்வரூப ஸ்வபாவங்களைக் கூறவந்தது. அஷ்டாக்ஷரம் என்னும் மந்த்ரத்தை அர்த்தத்துடன் உபதேசம் பெற்று தாமும் அதை அநுஸந்தித்து அஷ்டாங்க புத்தியுடன் ஸ்வயம் ப்ரயோஜனமாக மனனம் செய்பவர்களுக்கு கிடைக்க அரிதானது ஒன்றுமில்லை. எட்டு புஷ்பங்கள், எட்டு ஸித்தி, எட்டுபத்தி, யமநியமாதிகள் எட்டும், எட்டு செல்வம், எட்டு குணங்கள் 64 கலைகள் எட்டு ரஸத்துக்கு மேலான சாஸ்திரம் இவை எல்லாம் அவனுக்கு கிடைக்கும். இதில் எட்டாததொன்றுமில்லை என்றார் ஸ்வாமி தேசிகன். எட்டு மாமூர்த்தி, எண் கண்ணன், எண் திக்கு,

எட்டு இறை, எண் ப்ரக்ருதி
எட்டு மாவரைகள் ஈன்ற எண்குணத்தோன்
எட்டு எனும் எண் குண மதியோர்க்கு
எட்டு மாமலர் எண் ஸித்தி எண் பக்தி
எட்டு யோகாங்கம் எண் செல்வம்
எட்டு மாகுணம் எட்டெட்டெனும் கலை
எட்டிரஸமேலதுவும் எட்டினவே

என்பது ஸ்வாமி தேசிகன் பாசுரம். இங்கு எண்குணமதியோர்க்கு என்பதையும் எட்டு மாகுணம் (முக்த தசையில் ஆவிர்பாவிக்கும் குணாஷ்டகம்) என்பரையும் கவனிக்கத்தக்கது. ஒரு தடவை மந்திரத்தை உபதேசம் பெற்று சொன்ன மாத்திரத்தால் ப்ரயோஜனம் கிட்டாது என்பது லோகஸித்தம். எனவே மந்திரத்தை உபதேசம் பெற்று சொன்ன மாத்திரத்தால் ப்ரயோஜனம் கிட்டாது என்பது லோகஸித்தம். எனவே முதலில் ஸ்வயம் ப்ரயோஜனம் பல ஆவ்ருத்தி ஜபம் செய்து ஸித்தியைப் பெற்றுத்தல் நலம். இதன் மூலமாக எல்லா பலனையுமே மந்திரோச்சாரண மாத்திரத்தால் பெற முடியும். ஆக உபதேசம் பெற்ற முந்திரங்களை பலத்துக்காக உபயோகப்படுத்த வேண்டுமானால் பல தடவை ஜபம் செய்யவும். ஸுலபமாக வழி ததுான். ஒரு தினத்துக்கு 100 தடவை செய்து வந்தால் கால க்ரமத்தில் ஸித்தி பெறலாம். எனவே வெளி விஷயங்களில் அதிகம் ஈடுபடாமல், காலத்தையும் வீணாக்காமல் உபதேசம் பெற்ற மந்திரங்களை ஸித்தி பெற ஜபிக்க வேண்டும். ஒரு தினத்துக்கு 100 அல்லது 200 முறையாவது ஜபித்துவந்தால் 4..5 வருடங்களில் ஸித்திபெற்றுவிடலாம். அதைக் கருதியே தான் இந்த மூன்று மந்திரங்களை பஞ்சஸம்ஸ்கார காலத்தில் உபதேசிக்கின்றனர். இதை ஜபிப்பதே இல்லை என்றால் இதனால் எப்படி பலம் கிட்டும். சரணாகதி செய்யும் ஸமயத்தில் த்வயம் என்னும் மந்திரமே தெரியாது என்று சொல்பவர்கள் பலர். இவர் எப்படி அந்த ஸமயம் மந்திரத்தை நன்கு உச்சரிக்கத்தான் முடியும். இதனால்தான் கர்மம் கர்த்தா ஸாதனம் இவைகளின் குறைவு எற்பட்டு விடுகிறது. ஒரு தடவை முக்கூர் ஸ்ரீ அழகியசிங்கர் ஸ்வாமியைப் பார்த்து சாதித்தாயிற்று. கையை மூடிக் கொண்டு அஷ்டரஷரத்தைச் சொல்லும் என்று அவசியம் சொன்னார். கையைத் திற என்றார். செல்வம் இல்லையே என்றார். செல்வம் வேண்டும் என்றும் உச்சரிக்கச் சொன்னார். அப்பொழுதும் இல்லை ஏன்? "குலம் தரும் செல்வமு தந்திடு நீள் விசும்பருளும் .... பெருநிலமளிக்கும் .... நாராயண" என்னும் நாம் என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்யவில்லையா? என வினவினார். பதில் சொல்ல முடியவில்லை. பிறகு ஸ்ரீ அழகியசிங்கர் மந்த ஸித்தியைப் பெற்றிருக்க வேண்டும். நானும் பல தடவை ஜபம் செய்ய வேண்டும். நீரும் செய்ய வேண்டும். ஸித்தி பெற்றிருந்தால் உடனே பலன் அளிக்கும். கர்மா, கர்த்தா, ஸாதனம் மூன்றிலும் குறை கூடாது என்றார்.

இப்படி வேதங்களில் சொல்லப்படும் மந்திரங்களையும் சடங்குகளையும் நம்மால் முடிந்தவரை அநுஷ்டித்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம். நாம் இஹலோகத்திலும், பர லோகத்திலும் க்ஷேமத்தை அடைவதற்காகவே வேதங்கள் பல சடங்குகளை கூறுகின்றன. உலகத்தில் மக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். உடலே ஆன்மா கண்ட தேஸுகம் என்றெண்ணி பரலோகத்தை மறந்து தப்புச் செயலிலேயே இறங்குபவர்கள் சிலர். இவர்களுக்கு இங்குதான் ஸுகம். பரலோகம் பயங்கரம். ஊண்வாட உண்ணாது புலன் ஐந்தும் நொந்து பரலோகஸுகத்தையே ப்ரதானமாகக் கருதி வேலை செய்பவர்களுக்கு இங்கு ஸுகம் இல்லை. பரத்தில் ஆனந்தம் அதிகம். இங்கு முறையுடன் வேதோக்தமான காலக் கடன்களையும் செய்து பரலோகத்துக்காக சடங்குகளைச் செய்பவர்களுக்கு இங்கும் அங்கும் ஸுகம். இங்கும் மிக லோபியாகவும் க்ருபணனாகவும் சேர்த்துள்ள பணத்தை அநுபவிக்காமலும் தானதர்மங்கள் செய்யாமல் இருந்து இறந்தவர்களுக்கு இங்கும் சுகமில்லை, அங்குமில்லை ஆகையால் நாம் மூன்றாவதான அதிகாரிகளாக திகழ்ந்து நல்ல மார்கங்களில் ஈடுபட்டிருத்தல் உசிதம்.

நம் பெரியோர்கள் எத்தனையோ நோன்புகளையும் வ்ரதங்களையும் வகுத்து வைத்துள்ளனர். ஒவ்வொரு வருடங்களிலும் பல பண்டிகைகளையும் ஏற்படுத்தியுள்ளனர். ஆவணி அவிட்டம், காயத்ரி ஜபம், நாகசதுர்த்தசி, ஸங்க்ராந்தி மாக ஸ்நானம், அமாவாஸ்யை, ஏகாதசி, வரலக்ஷ்மி நோன்பு, ஸ்ரீ ராமநவமி, க்ருஷ்ண ஜெயந்தி, என்றடிப்படைகளில் எத்தனையோ வ்ரதங்கள் கூறப்பட்டுள்ளன. இவையெல்லாம் எம்பெருமானிடத்தில் ஈடுபட வழியாகும். எப்படியாவது பகவச்சிந்தனை மக்களுக்கு உண்டாக வேண்டும். நற்கதி பெற வேண்டும் என்றெண்ணி வேதங்களில் சொல்லப்பட்ட நோன்புகளை முனிவர்கள் ஸ்ம்ருத்தி இதிஹாஸ புராணங்களின் மூலம் வெளியிட்டனர். இதில் தேவதாந்தர ஸம்பந்தமாக சில நோன்புகள் இருப்பினும் அத்தேவதைகள் எம்பெருமானுக்கு 'அங்காநி அந்யாதேவதா' என்றபடி உடலானபடியால் எம்பெருமானான ஸ்ரீமன்நாராயணனுடைய ஆராதனமாகவே அவையும் அமையும்.

இதில் ஏகாதசி என்னும் வ்ரதத்தை எடுத்துக் கொள்வோம். இது அனைத்து நோன்புகளைக் காட்டிலும் உயர்ந்தது. இது எம்பெருமானுக்கு மிகவும் ப்ரியமானது, ஹரிதினம் எனப்பெயர் இதற்குண்டு. இந்த தினங்களில் இந்த நோன்பை சரிவர அநுஷ்டித்தால் பகவான் அவர்களிடத்தில் அதிக அன்பு செலுத்தி நற்பலன்களை அளிப்பான. பிராணங்கள் அனைத்துமே இந்த நோன்பை மிகப் பாராட்டியுள்ளன. இதை அவச்யம் நாம் அநுஷ்டிக்க வேண்டும். பகவானே இதை மிகப்படுத்தி கூறியுள்ளான். ஆறுவயது முதல் சக்தியுள்ளவர் இதை அநுஷ்டிக்க வேண்டும். அவ்வாறு அநுஷ்டிப்பவனுக்கு இஹலோகத்திலும், பல நன்மைகள் உண்டு. மேல் நரகமும் ஏற்படாது. இதற்கு யமனின் திதி என்றும் பெயர் உண்டு. இந்த நன்நாளில் தூங்காமலும் ஹரிநாம ஸங்கீர்தனம் செய்து கொண்டும் இருக்க வேண்டும். யமனின் திதியானபடியால் அவனோ அவனது படர்களோ ஸஞ்சரிப்பார்கள். அவர்கள் நம்மிடம் அணுகாமலிருப்பதற்கும் ஹரிநாம ஸங்கீர்த்தனம் செய்வது அவச்யம். ஹரி நாமத்தைக் கேட்டதும் பாபங்கள் விலகுவது போல் பாபிகளான அவர்களும், விலகிவிடுவார்கள். இது முக்யம்.

வேதங்களில் புருஷஸூக்தம் சிறந்தது. தர்ம சாஸ்த்ரங்களில் மநுஸ்ம்ருதி, புராணங்களில் விஷ்ணுபுராணம், கவிகளில் வால்மீகி, மஹர்ஷிகளில் வ்யாஹர், ஞானிகளில் பீஷ்மர், மந்த்ரங்களில் மந்த்ரராஜம், வில்வித்தையில் அர்ஜுனன், பாரதத்தில் ஸ்ரீகீதை அவதாரங்களில் ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வகையில் வ்ரதங்களில் ஏகாதசி தலைச் சிறந்தது.

கங்கையைவிட சிறந்த புண்ய தீர்த்தமில்லை. மஹா விஷ்ணுவைவிட உயர்ந்த தேவதை இல்லை. தாயைவிட உயர்ந்த அன்பு செலுத்துபசரில்லை. காயத்ரியைவிட உயர்ந்த மந்திரமில்லை. அது போல் ஏகாதசியைவிட உயர்ந்த புண்ய தினமில்லை. எனவே இவ்விரதம் மாதம் இருமுறை ஸம்பவிக்கிறது. இதை அநுஷ்டித்தால் உடலுக்கும் நன்மை உண்டாகும். ஆஹாரமில்லாமல் பட்டினி கிடந்தால் உடலில் உள்ள யந்திரங்களுக்கு ஓய்வு கொடுத்தது போலும் ஆகும். இரு முறை ஓய்வு கொடுத்து உண்டு வந்தால் உடலில் பொலிவும் தேஜஸ்ஸும் உண்டாகும். ஆக சக்தியுள்ளவன் உடலில் நோய் இல்லாதவன் அனைவரும் அநுஷ்டிக்க வேண்டும்.

"ஏகாதச்யாம் அஹோராத்ரம் கர்தவ்யம் போஜன த்வயம் |
மத்யாஹ்நே ஹ்யுபவா ஸச்ச ராத்ரெள ஜாகரணம் ததா ||" என்றார்.

ஆன்றோர் இரவும், பகலும் ஆஹாரம் உட்கொள்ளாமல் பகவந்நாம ஸங்கீர்த்தனம் செய்ய வேண்டும். கடவுளுக்குப் பூஜை செய்ததும் அவனிடத்தில் இந்த நோன்பை அநுஷ்டிக்க ஆசைப்படுகிறேன். இதை நீ பூர்த்தி செய்து வைத்து ஸந்தோஷமடையவேண்டும் என ப்ரார்த்திப்பது முன்னோரின் வழக்கம். இதற்காக ஒரு ச்லோகமும் படிப்பார்கள் .....

"ஏகாதச்யா நிராஹார; பூத்வாஹம்து பரேsஹநி |
போக்ஷ்யாமி புண்டரீகாக்ஷ கதிர் பவ மமாச்யுத||" என்பது.

ஏகாதசியில் வ்ரதம் அநுஷ்டிப்பவர்கள் த்வாதசியில் முறைதவறாது பாரணை செய்ய வேண்டும். த்ரயோதசியில் பாரணை செய்தால் பன்னிரண்டு ஏகாதசியின் நோன்பால் ஏற்படும் பலனை அழித்துவிடுமாம். பன்னிரண்டு ஏகாதசி வ்ரதத்தை நன்கு நடத்தி பன்னிரண்டு த்வாதசியில் பாரணை செய்த பலன் போய்விடும் என்று ப்ரமாணங்கள் கூறுகின்றனர். மிக அல்பத்வாதசியாக இருப்பினும் அதற்குள் அநுஷ்டானங்களை முடித்துப் பாரணை செய்து விட வேண்டும். அப்படிச் செய்ய ஸாத்யமில்லாவிடில் ஜலபாரணை செய்யலாம். இதற்கும் மஹான்களின் ச்லோகம் உண்டு .... ஸ்ரீபாகதாக்ஞயா ஜல பாரணம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்து .... அசிதாநசிதா யஸ்மாத் ஆ போ வித்வத் பிரீரிதா:| அம்பஸா கேவலேனைவ கரிஷ்யே ஜலபாரணம் || என்று படிக்க வேண்டும். பிறகு கையில் ஆசமன முறைப்படி தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு - ஆப: பவித்ரமமலா ஸர்வகர்மஸு பாவநா: என்று தீர்த்தத்தை அருந்த வேண்டும். பிறகு ஆசமனம். இம்மந்திரங்களை உபதேசத்தால் பெற வேண்டும்.

இவ்வாறு ஏகாதசி வ்ரதத்தை அநுஷ்டிப்பவனுக்கு நடுவில் ஏதாவது ச்ரமங்கள் ஏற்பட்டால் அதற்கு பரிஹாரமும் உண்டு. தண்ணீர், கிழங்கு, நெய், பால், ஹவிஸ்ஸு, நிமந்த்ரணம், ஆசார்யனின் வாக்கு, மருந்து இந்த எட்டும் வ்ரதங்களை குலைக்காது. மத்தியில் அஸெளகர்யம் உடலுக்கு நேர்ந்தால் இவைகளை புசிக்கலாம். இதனால் ஏகாதசி வ்ரதம் பாதிக்கப்படாது. ஏகாதசி வ்ரதம் நடத்துபவன் அன்றையதினம் மற்றவரில்லத்தில் ச்ராத்தம் தடுபடும்போல் இரந்தால் நிமந்த்ரணம் இருந்து ச்ரார்த்தத்தைப் பூர்த்தி செய்து வைக்கலாம். அன்று அன்னம் சாப்பிட்ட போதிலும் உபவாஸம் இருந்து வ்ரதத்தை நடத்தின பலனும் உண்டு. ஆக நாம் கூடிய வரையில் ஏகாதசியில் உபவாஸம் இருந்து மறுநாள் த்வாதசியில் பாரணம் செய்து முடிக்க வேண்டும். குரங்குகள் உபவாஸம் இருந்த வகையில் இருத்தல் கூடாது - ஒரு சமயம் எல்லா வானரங்களும் ஒன்று சேர்ந்தன. மனிதர்கள் ஏகாதசியன்று அன்னம் ஆஹாரம் இல்லாமலிருக்க ராமதூதர்கள் கோஷ்டியில் இருக்கும் நாம் ஏன் உபவாஸம் இருக்கக் கூடாது என்று ஆலோசித்தன. எல்லா குரங்குகளும் ஒரே மனதாக நாளை வரும் ஏகாதசியில் உபவாஸம் இருப்பதாகத் தீர்மானித்தன. ஏகாதசியன்று காலை 10.00 மணி அளவில் எல்லாம் பசியால் வதைக்கப்பட்டன. ஏன் இதை ஏற்றுக் கொண்டோம் என மனத்தில் நினைத்தன. அதில் ஒரு வ்ருத்தவானராம் நாளை த்வாதசிக்காக ஆஹாரம் பிறகு தேடுவது கடினமானபடியால் இன்றே அருகில் உள்ள மாந்தோப்புக்குச் சென்று மரத்தில் உடகார்ந்து கொண்டு இருத்தல் நல்லது என்றது. அதை அனைத்துக் குரங்குகளும் ஆமோதித்தன. அப்படியே செய்தன. மணி பகல் 1.00 பசி தாங்கமுடியவில்லை. அதில் ஒரு குரங்கு கையில் பழத்தைப் பறித்து வைத்துக் கொள்ளலாம். காலையில் அப்படியே சாப்பிட்டுவிடலாம் என்றது. அப்படியே செய்தன. மணி 2.00 ஆயிற்று. மற்றொரு குரங்கு நமக்குத்தான் பகவான் தாடையில் பையைக் கொடுத்துள்ளான். எனவே பழங்களை வாயிலேயே வைத்துக் கொண்டிருந்தால் காலை 6.00 மணி அளவில் கடித்து தின்று விடலாம் என்றது. எல்லாம் உடன்பட்டன. பழத்தை வாயில் அடக்கிக் கொண்டிருந்தன. எத்தனை நாழி அப்படி இருக்க முடியும். அடுத்த ஏகாதசி எப்படியும் வைகுண்ட ஏகாதசி அன்று சுத்தோபவாஸம் ருக்கலாம் என்று சொல்லிக் கொண்டே பழங்களை சாப்பிட்டு விட்டன. இது வானரங்களின் தன்மை. வாயில் வைக்கப்பட்ட பழங்களை எப்படி உண்ணாமல் இருக்க முடியும்? சாஸ்த்ர நெறியிலும், அநுஷ்டானத்திலும் ஆவேச முள்ளவனுக்கும் கூட ஏகாதசி வ்ரததினத்தில் பெண்களின் அருகில் படுத்துக் கொண்டால் மனது மாறி நோன்பை அழித்துக் கொள்வது ஏற்படுகிறது என்றால் வானரங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ. புலன்களுடைய தன்மையை தாண்ட முடியாதல்லவா?

ஒரு மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகள் ஆக ஒரு வருடத்துக்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. சில சமயம் அதியமாகவும் ஒரு ஏகாதசி ஸம்பவிக்கக்கூடும். அந்த மாதத்திற்குப் புருஷோத்தம மாதம் எனப் பெயர்.

இந்த 25 ஏகாதசிகளுக்கும் பெயர் பஞ்சாங்கத்தில் படிக்கப்பட்டுள்ளது. பாத்மபுராணத்திலும் பெயர் கூறப்பட்டுள்ளது. அதுவுமின்றி ஒவ்வொரு ஏகாதசியின் மஹிமையையும் வ்ருத்தாந்தத்துடன் அப்புராணம் கூறுகிறது. அதையும் நாம் இங்கு அநுபவிப்போமாக :-

1. சைதர்ர க்ருஷ்ண ஏகாதசி .. பாபவிமோசனி
2. சைத்ர சுக்ல ஏகாதசி .. காமதா

3. வைசாக க்ருஷ்ண ஏகாதசி .. வரூதினி
4. வைசாக சுக்ல ஏகாதசி .. மோஹினி

5. ஆனி க்ருஷ்ண ஏகாதசி .. அபரா
6. ஆனி சுக்ல ஏகாதசி .. நிர்ஜலா

7. ஆடி க்ருஷ்ண ஏகாதசி .. யோகினி
8. ஆடி சுக்ல ஏகாதசி .. சயினி

9. ஆவணி க்ருஷ்ண ஏகாதசி .. காமிகா
10.ஆவணி சுக்ல ஏகாதசி .. புத்ரதா

11.புரட்டாசி க்ருஷ்ண ஏகாதசி .. அஜா
12.புரட்டாசி சுக்ல ஏகாதசி .. பத்மநாபா

13.ஐபபசி க்ருஷ்ண ஏகாதசி .. இந்திரா
14.ஐப்பசி சுக்ல ஏகாதசி .. பாபாங்குசா

15.கார்த்திகை க்ருஷ்ண ஏகாதசி .. ரமா
16.கார்த்திகை சுக்ல ஏகாதசி .. ப்ரபோதினி

17.மார்கழி க்ருஷ்ண ஏகாதசி .. உத்பத்தி ஏகாதசி
18.மார்கழி சுக்ல ஏகாதசி .. மோக்ஷ ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி

19.தை க்ருஷ்ண ஏகாதசி .. ஸபலா
20.தை சுக்ல ஏகாதசி .. புத்ரதா

21. மாசி க்ருஷ்ண ஏகாதசி .. ஷட்திலா
22.மாசி சுக்ல ஏகாதசி .. ஜயா

23.பங்குனி க்ருஷ்ண ஏகாதசி .. விஜயா
24.பங்குனி சுக்ல ஏகாதசி .. ஆமலிகி

25.அதிகமாக வரும் ஏகாதசி .. கமலா

ஆவணி சுக்ல ஏகாதசிக்கு பரிவர்த்தன ஏகாதசி என்றும், ஐப்பசி சுக்ல ஏகாதசிக்கு வ்யுக்தான ஏகாதசி என்றும் கார்த்திகை சுக்ல ஏகாதசிக்கு கைசிக ஏகாதசி என்றும் தை சுக்ல ஏகாதசிக்கு பீஷ்ம ஏகாதசி என்றும் சொல்வதுண்டு.

பாபமோசனீ : சைத்ர மாதத்தில் வரும் க்ருஷ்ண ஏகாதசிக்கு பாபமோசனீ என்று பெயர். நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாபங்களுக்கெல்லாம் இந்த ஏகாதசியில் சரிமுறையில் வ்ரதத்தை நடத்தினால் விலகும். உதாஹரணமாக பெண்களுக்கோ ஆண்களுக்கோ வ்யபிசாரம் முதலிய தோஷங்களால் ஏற்படும் குற்றங்கள் நீங்கும் எமனும் இவர்களை தண்டிக்கமாட்டான். சைத்ரதம் என்பது ஒரு அழகிய உத்யானவனம் அங்கு மஹர்ஷிகள் நியமத்துடன் தவம் செய்தனர். ஆகாயத்தில் உலாவி வரும் மஞ்சுகோஷை என்னும் அழகிய அப்ஸரஸ்த்ரீ இந்த உத்யானவனத்தின் அழகைக் கண்டு இங்கு இறங்கினாள். தவம்புரியும் முனிவர்களைக் கண்டாள். இவர்கள் நடுவில் மன்மதன்போல் மிக அழகுவாய்ந்த மேதாவி என்னும் முனிவரைக் கண்டு அவரிடத்தில் காம இன்பத்தை அநுபவிக்க ஆசை கொண்டாள். அவளது அழகிலும் குரலிலும் ஈடுபட்ட இம்முனிவரும் மயங்கி விட்டார். அவ்வளவுதான். தவம் புரிவதை அத்துடன் நிறுத்திக் கொண்டு அவளை ஸ்வாகதம் கொடுத்து தனது ஆச்ரமத்திலேயே தங்கவைத்தார். பல ஆண்டுகள் கடந்தன. முனிவரின் சாபம் தனக்கு ஏற்படுமோ என்று அஞ்சி அவ்வப்பொழுது அவரது கால்களில் விழுந்து விடை கொடுக்கும்படி வேண்டிக் கொண்டாள். ஆயினும் முனிவர் அவளது மோகத்தினால் காலம் சென்றதை அறியாமல் நீ இப்பொழுதுதானே வந்தாய். உனக்கு என்ன அவசரம். சற்று இருந்து போகலாமே என்று சொல்லி அவளது இன்ப வலையில் சிக்கிக் கொண்டார். மறுபடியும் இவள் விடை கேட்க நீ வந்து சில நிமிஷங்கள்தானே ஆயின என்று சொல்லி தன்னிடம் இருக்கச் செய்து ஆயிரக்கணக்கான கழிந்த வருஷங்களையும் அறியாமல் காம இன்பத்தில் திளைத்துவிட்டார். இன்னும் சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு சமயம் அவளது மடியில் படுத்துக் கொண்டிருக்கும்போது ஞானோதயம் ஏற்பட்டுவிட்டது. ஸந்தியா வந்தனம் செய்ய தாமதமாய்விட்டது என்று சொல்லிக் கொண்டே பரபரப்புடன் எழுந்து ஓடினார். அப்பொழுது இவள் இது வரையில் ஸந்த்யாவந்தனத்தை எப்படி செய்தீர். இப்பொழுது என்ன வந்துவிட்டது என்று கையைப் படித்து இழுத்தாள். அதற்கும் அவர் நீ வந்தது பகல் 12.00 மணி. இப்பொழுது சாயங்காலம் எனது அநுஷ்டானத்தை எப்படி விடமுடியும் என்றார். இவளும் கடந்த காலங்களைக் கணக்கிட்டுக் கூறி அவரை வளைத்தாள். அப்பொழுது பழுதே பலகாலம் போயின என்று அழுது அவளிடம் சினம் கொண்டு பேயாகும்படி சபித்தார். அவளும் தனது குற்றங்களைப் பொறுக்குமாறு வேண்டிக் கொண்டாள். மேதாவி என்னும் முனிவரும் அவள் விடை கேட்டும் அவனை அனுப்பாது தான் அவளை பலாத்காரமாக ஆச்ரமத்தில் வைத்துக் கொண்டு ஸுகமனுபவித்தது. தனது குற்றம் என்பதை அறிந்தவராய் மன்னித்தார். அன்றுதான் ஏகாதசி இருவரும் எத்தனையோ ஏகாதசி, த்வாதசிகளை நாம் வீணாக்குகிறோம். இன்று நல்ல அறிவு வந்தபடியால் நமது பாபம் விலகும். எனவே இந்த ஏகாதசிக்கு பாபமோசினீ எனப்பெயர். இதில் தவறாமல் வ்ரதம் நீ செய்து வந்தால் உனது சாபம் விலகும் என்று சொல்லி அனுப்பினார். இவரும் தனது தந்தையான ச்யவன மஹர்ஷியிடம் தனது பாபத்தையும் தபஸ்ஸின் இழவையும் கூறி வருத்தடைந்தார். தகப்பனாரான ச்யவனரும் இந்த ஏகாதசியன்று வழுவாமல் வ்ரதத்தை நடத்திவர உனது பாபம் அகலும். இழந்த தவத்தையும் பெறுவாய் என்றார். இவர்களும் அவ்வாறே நடத்தினர். இஷ்டத்தைப் பெற்றனர். இது பாபமோசனீயானபடியால் கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் கூட இத்தகைய பாபம் அகலும் என்பர். இதன் பெருமையை லோமசர் என்றும் முனிவர் மான்தாதாவுக்கு எடுத்துரைத்தார்.

2. காமதா : சைத்ர சுக்ல ஏகாதசியில் வரும் ஏகாதசிக்கு காமதா எனப் பெயர். இதன் பெருமையை வஸிஷ்ட முனிவர் திலீபனுக்குக் கூறினார். இந்த ஏகாதசியில் வ்ரதம் பூண்டவர்களுக்கு காமத்தை இஷ்டத்தை பூர்த்தி செய்து கொடுப்பதால் இதற்கு காமதை என்ற பெயர். ஒரு பயனை விரும்பி அநுஷ்டிப்பவர்களின் இஷடத்தைக் கொடுக்கும். நாகலோகத்தில் புண்டரீகன் என்றொரு அரசன் இருந்தான். அவன் புண்யங்களையே செய்பவன். தான தர்மங்களில் அதிக ஈடுபாடுடையவன். அன்ன சத்ரம் முதலிவைகளைக்கட்டி ஏழைகளுக்கு அன்னம் முதலியவைகளை அளிப்பவன். இவனது தர்மங்களின் பயனாக கந்தர்வர்கள் பெண்களுடன் ஆடல் பாடல்களை இவனது ஸபையில் நடத்துவார்கள். லலிதன் என்று ஒரு கந்தர்வன் தன் மனைவியான லலிதை என்னும் அப்ஸரஸுடன் இவனது ஸபையில் நர்தனம் ஆடுவது வழக்கம். அந்த தம்பதிகள் இணைபிரியாது இருப்பார்கள். ஒருவர்கொருவர் அன்புடனும் பிரிவை ஸஹிக்காத தன்மையுடனும் இருப்பார்கள். ஒரு ஸமயம் தனது மனைவியான லலிதையை இங்கு அழைத்து வரமுடியாமல் போனதால் தான் ஒருவனாகவே நர்தனம் செய்தான். பாடினான். அனால் இவனது மனம் அவளிடம் குடி கொண்டிருந்தபடியால் அவளது த்யானத்தால் தன்னை மறந்தான். அதனால் பாடலிலும் ஆட்டத்திலும் குறை ஏற்பட்டுவிட்டது. புண்டரீகன் பல முறை எச்சரித்தும் இவன் அவளிடம் மனதை செலுத்தியபடியால் சரிவர நர்தனம் செய்ய முடியவில்லை. இதனால் இவனுக்கு ராக்ஷஸனாகும்படி சாபம் ஏற்பட்டது. இவன் இதனால் ராக்ஷஸனாய் திரிந்தான். இதை அறிந்த லலிதை இவனை பின் தொடர்ந்தாள். ஒரு முனிவரின் ஆச்ரமத்துக்குச் சென்று அவரை வணங்கி அழுதாள். தனது கணவனின் சாபம் நீங்க வழி அமைத்துத் தர வேண்டும் என்றாள். முனிவரும் இறங்கி உனது இஷ்டத்தைப் பூர்த்தி செய்ய ஒரே ஒரு வழிதான் உண்டு. சைத்ர சுக்ல ஏகாதசியான காமதையில் உபவாஸம் இரு. பகவானைத் துதி செய். உனது விருப்பம் நிறை வேறும் என்றார். அவளும் அதன்படி இருந்து தனது கணவனின் சாபத்தைப் போக்கடித்து அவனுடன் இல்லற வாழக்கையை நன்கு நடத்தி காமசுகத்தை அநுபவித்தாள். ஆகவே எதை மனோரதித்துக் கொண்ட இந்த ஏகாதசியின் வ்ரதத்தை அநுஷ்டித்தாலும் அந்த அந்த மனோரதம் பூர்த்தியடையும் என்பது இதன் பெருமை.

3. வரூதினீ : வைசாக க்ருஷ்ண ஏகாதசிக்கு வரூதினீ என்று பெயர். வரூதினீ என்றால் ஸேனை. எவ்வாறு ஸேனை யஜமானனைக் காக்குமோ அவ்வாறு இந்த வ்ரதத்தை அநுஷ்டிப்பவனை இந்த ஏகாதசி காக்குமாம். நெய் குடத்தை ஏறும் எரும்புபோல் நம்மிடம் பாபங்கள் மொய்த்துக் கொண்டுள்ளன. அவை நமக்கு எதிரி. நல்ல பலனை அடைய முடியாத வகையில் நம்மை எதிர்க்கின்றன. இந்த ஏகாதசியில் வ்ரதம் இருந்தால் எதிரியான பாவங்களை வென்று நமக்கு ஸெளபாக்யங்களை அளிக்கும் நாம் பிறவிக்கடலைத் தாண்ட உபயோகப்படுகிறது. மான்தாதா என்னும் அரசனும் துந்துமானும் இந்த ஏகாதசியில் வ்ரதம் இருந்து வானுலகில் சென்றனராம். அங்கு பிறருக்கு கிடைக்க முடியாத ஸத்காரங்களையும் பெற்றனராம். பிரம்ம தேவனின் தலையைக் கிள்ளியதால் உண்டான பாபம் நீங்க ருத்ரன் இந்த ஏகாதசியில் உபவாஸம் இருந்து வ்ரதத்தை நடத்தினார். அதனால் தான் ஸ்ரீமன்நாராயணன் ஸந்துஷ்டனாய் இவனது கையில் ஒட்டிக் கொண்டிருந்த கபால ஓட்டை அகற்றினான். இந்த ஏகாதசியில் வ்ரதம் இருந்தால் எல்லா தான பலனையும் அடையலாம். மேலும் இந்த ஏகாதசியில் சிறியதான தானம் செய்தாலும் பெரிய புண்யத்தைக் கொடுக்கும். இதில் செய்யும் தானம் ஆலமரத்தின் விதைக்கு ஒப்பானது. அது எவ்வாறு பெரிய மரமாக ஆகிவிடுமோ அது போல் இதுவும் உயர்ந்த புண்யமாக மாறி அளவற்ற இன்பத்தை அளிக்கும். சாதாரணமாக ஏகாதசிகளில் உணவு, தாம்பூலம், சந்தனம், புஷ்பம் உபயோப்படுத்துதல் உசிதமல்ல. இதில் ஜாக்ரதையாக இருக்க வேண்டும். தூக்கத்தை அகற்ற வேண்டும். எண்ணெய் ஸ்நானம் கூடாது. இந்த ஏகாதசியில் எக்காரணத்தையிட்டும் பிறருக்கும் அன்னம் இடக்கூடாது.

4. மோஹினீ : வைசாக சுக்ல ஏகாதசிக்கு மோஹினீ எனப்பெயர். இதன் ப்ரபாவத்தை வஸிஷ்டரான குலகுரு தன் சிஷ்யனான இராமபிரானுக்குக் கூறினார். ஸகலபாவங்களையும் அகற்றவல்லது. இது எல்லா வ்ரதங்களிலும் உத்தமமானது. மோஹத்தை அப்புறப்படுத்த விளக்கானது. எம்பெருமானிடத்தில் மோஹத்தை விளைவிக்கவும் காரணமாகிறது. ஸரஸ்வதீ நதிக்கரையில் பத்ராவதி என்னும் ஒரு பட்டணம். அதை சந்திரவம்சத்து அரசன் த்ருதிமான் ஆண்டு வந்தான். அவனது நகரத்தில் தனபாலன் என்றொரு வைச்யன் இருந்தான். அவனுக்கு ஐந்து புத்ரர்கள். அவனோ விஷ்ணுவினிடத்தில் பக்தி கொண்டவன். புதல்வர்களும் அவனைப் போலவே பக்தியும் பணிவும் ஆசாரமும் கொண்டவர்கள் தான் அதில் ஒருவனான த்ருஷ்டபுத்தி என்பவன் இவர்களுக்கு மாறானவன். பொய் பேசுபவன், குடிப்பவன், திருட்டுத்தனத்திலேயே மனங்கொண்டவன், பிறர் பொருளை களவு ஆடுவது போல் பிறருடைய மனைவியையும் அபஹரித்து காம போகத்தில் இழிபவன். இவனது கெட்ட செயல்களைக் கண்ட அரசனும் தகப்பனும் இவனை காட்டுக்கு அனுப்பிவிட்டனர். இவனது பால்யத்தில் உண்டான நடத்தை அங்கும் இவனைப் பின் தொடர்ந்தன. மறுபடியும் களவில் இறங்கினான். பெண்களை தெரியாமல் தூக்கிக் கொண்டு வந்து ஸுகத்தை அநுபவித்து பிறகு அவர்களை கொன்றுவிடுவான். ஒரு நாள் காவலாளிகள் இவனைப் பிடித்து உதைத்தனர். அதனால் உடலில் காயமடைந்தான். மேலும் பெண்களின் கெட்ட நடத்தையாலும் உடலில் வ்யாதி ஏற்பட்டுவிட்டது. உலகமெல்லாம் திரிந்தான். இவன் செய்த பூர்வ புண்யவசத்தால் கெளண்டின்ய முனிவரின் ஆச்ரமத்தை அடைந்து மிகச் சோர்வுடன் விழுந்து விட்டான். முனிவரும் காலை கங்கையில் ஸ்நாநம் செய்து ஆச்ரமம் வந்தார். அவரது உடலில் உள்ள கங்கா தீர்த்தத்தின் பிந்து இவனது உடலில் விழுந்தது. இதன் மூலமாக அவன் தான் செய்த குற்றங்களை நினைத்து வருந்தினான். அம்முனிவரின் காலில் விழுந்தான். தான் நற்கதி பெற உபாயம் கூற வேண்டும் என வினவினான். இவனது துர்தசையைப் பார்த்து மனமிறங்கி 'மோஹினீ' என்னும் ஏகாதசியில் வ்ரதம் இருந்து வந்தால் பாபங்களினின்று விடுபடுவாய் என்று உபதேசித்தார். அவனும் அவ்வாறு அநுஷ்டிக்க பாபத்திலிருந்து விடுபட்டு விமானத்தில் ஏறி ஸ்வர்கலோகம் சென்றான், என்றார். வஸிஷ்டர் அளவற்ற துற் செயல்களை செய்த போதிலும் அநுதாபத்துடன் இந்த மோஹினி ஏகாதசியன்று வ்ரதமிருப்பவன் நற்கதி பெறுவான். இது இதற்குள்ள மஹிமை.

5. அபரை : ஆனி மாதம் க்ருஷ்ண பக்ஷத்தில் ஏற்படும் ஏகாதசிக்கு அபரை என்று பெயர். அபரை என்பதற்கு மற்றொன்று எனப் பெயர். இப்பெயர் இதற்குப் பொருத்தமாக அமைந்துள்ளது. வாமனனாகப் பிறந்த பகவான் த்ரிவிக்ரம ரூபமான அபராவதாரத்தை ஒரே அவதாரத்தில் எடுத்தான். எனவே இந்த அபரையிலும் த்ரிவிக்ரமனிடம் வழிபட வேண்டும். பகவான் எவ்வாறு துஷ்ட சிக்ஷணம் செய்து சிஷ்ட பரிபாலனம் செய்தானோ, அதுபோல் இதுவும் நமது பாபங்களை அகற்றி நன்மையை அளிக்கவல்லது. களவாடுதல், பொய்ஸாக்ஷி கூறுதல், பாகவதாபசாரப்படுதல் முதலிய பாவங்களுக்கு ப்ராயசித்தமாகுமாம். மாகஸ்நாநம் சிறந்தது. இதை ப்ரயாகையில் செய்தால் அளவற்ற பலம் அளிக்கும். காசியில் சிவராத்ரி வ்ரதம் சிறந்தது என்பர். கயையில் பிண்டதானம் சாலச்சிறந்தது என்பர் முன்னோர். ஸ்ரீகேதாரேச்வர தர்சனம், பத்ரியாத்ரை முதலியவை புண்யம் அளிக்கக்கூடியது. இவைகளால் ஏற்படும் இந்த வ்ரதம் ஒன்றே பலத்தை அளிக்கவல்லது. ஆக இதன் ப்ரபாவம் வாக்குக்கும் மனதிற்கும் நிலமல்லாதது.

6. நிர்ஜலா : ஆனி மாத சுக்ல ஏகாதசி நிர்ஜலை எனக் கூறுவர். இது உயர்ந்த ஏகாதசி. இந்த ஏகாதசியில் ஜலமும் அருந்தத் தக்கதன்று. எவன் ஒருவன் இந்தத் தினத்தில் தண்ணீரையும் அருந்தாமல் நிர்ஜலமாக உபவாஸம் விதிப்படி இருக்கிறானோ அவன் ஓராண்டு வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருந்த பயனைப் பெறுவான். இந்த ஏகாதசியில் ச்ரமபட்டு வ்ரதம் அநுஷ்டித்து விட்டால் ஸமஸ்த ஏகாதசிப் பலனும் கிடைத்துவிடும். தர்மபுத்ரன், கலியின் கொடுமையைப் பார்த்தார். எங்கும் களவு. எங்கும் சண்டை. தர்மமே சாய்ந்து விட்டது. அதர்மம் ஓங்கி நிற்கிறது. பிறர் மனைவியை அபகரித்தல். கள் குடித்தல். வீண் சண்டை செய்தல், மனைவிகள் புருஷர்களை படுத்துதல், கொலை எல்லாம் கண்டார். இதில் நாமும் வாஸம் செய்ய தலைவிதி ஏற்பட்டு விட்டதே எனக் கலங்கினார். இப்படிவரும் பாபத்தை அகற்ற வழியும் ஸுலபமாக இல்லையே எனவும் வருந்தினார். வ்யாஸ பகவானை சரணமடைந்தார். மக்கள் உய்ய ஸுலபமான வழியைக் கூற வேண்டுமேன ப்ரார்த்தித்தார். வ்யாஸபகவானும் சிறிது ஆழ்ந்து ஆலோசித்துக் கூறலானார். எல்லா பாபங்களையும் அகற்ற ஏகாதசி ஒன்றுதான் ஸுலபமான உபாயம். இதைத்தவிர வேறு வழி இல்லை என்றார். உடனே தர்மபுத்ரர் தனது ராஜ்யத்தில் எல்லோரும் ஏகாதசி வ்ரதமிருக்க வேண்டும் என்று பறை சாத்தினார். அனைவரும் பயந்து உபவாஸம் இருக்க முயற்சித்தனர். இதைக் கண்ட பீமஸேனன் வருத்தமடைந்தான். இவனோ வயறுதாரி. எவ்வளவு உண்டாலும் த்ருப்தியடையாதவன். மேலும் மேலும் உண்ணாலும் இவனது வயிற்றுள்ள அக்நி த்ருப்தி அடைவதில்லை. ஆக இவன் எப்படி ஒவ்வொரு ஏகாதசியும் உபவாஸமிருக்க முடியும் என்று கலங்கி வ்யாஸரிடம் முறையிட்டான். தங்களது உபதேசம் என்னை உயிருடன் அழித்து விடுகிறது. எனது வயிற்றில் உள்ள அக்நிக்கு வ்ருகம் எனப்பெயர். எனவே என்னை வ்ருகோதரன் என அழைப்பர். இந்த அக்நி அளவற்ற அன்னத்தை உண்டால்தான் சாந்தமடைகிறது. பகாஸுரனை விட நான் அதிகம் உண்ண வேண்டும். உங்களுக்கும் இது நன்கு தெரியும். ஆக எல்லா ஏகாதசிகளிலும் உபவாஸம் இருப்பது கடினம். தினத்தில் ஒரு வேளை புசித்து இரவு உண்ணாமல் இருப்பதே எனக்கு கஷ்டம். எனவே ஆண்டுக்கு ஒரு முறை ஒரு தினம் எப்படியாவது உபவாஸம் இருக்க முயற்ச்சிக்கிறேன். ஆனாலும் அந்த ஒரு தின உபவாஸமே அனைத்து ஏகாதசி உபவாஸப்பலனையும் அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஏகாதசியை செய்து எனக்கு கூற வேண்டும் என்று கேட்டான். வ்யாஸரும் திவ்ய சக்ஷுஸ்ஸால் பார்த்து ஆனி சுக்ல ஏகாதசியன்று ஒரு நாள் உபவாஸம் இருப்பாயாக. ஜலமும் அருந்தாமல் வ்ரதத்தை நடத்த வேண்டும். ஸகல ஏகாதசி பலனும் கிட்டும். முறைப்படி இருந்து த்வாதசி பாரணை செய். பகவானை இவ்வாறு பூஜை செய். உன் அபிமதம் ஸித்திக்கு மென்றார். பீமனும் இவ்வாறு வருடத்துக்கு ஒரு முறை உபவாஸம் இருந்து பகவானை பூஜித்தான். இதை ஸ்ரீக்ருஷ்ணன் வ்யாஸருக்கு உரைத்த மர்மம். இப்படி பீமன் இதில் நடந்தபடியால் பீம ஏகாதசி எனப் பெயர் வழங்கிற்று. இவ்வாறு இருந்து பாரணை செய்தபடியால் பாண்டவ த்வாதசி என த்வாதசிக்குப் பெயரும் வந்தது.

7. யோகினீ : ஆடி க்ருஷ்ண ஏகாதசியை யோகினீ என்று சொல்வர். யோகம் செய்பவர்களுக்கு உண்டான பயன் இதனால் கிட்டும். நாம் முற்பிறவியிலேயோ இப்பிறவியிலேயோ செய்த பாபத்தின் பலன்களான வ்யாதிகளைஅடைகிறோம். இதைப் போக்க சாஸ்திரங்களில் வழிவகுத்துக் காட்டப்பட்டுள்ளது. 'தச்சாந்தி, ஒளஷதை, தானை, ஜபஹோமாரச்சனாதிபி: என்று ஜபம், தானம், ஹோமம் அர்ச்சனை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் சிகரமானது யோகம். இது ஸர்வ பாப ப்ராயச்சித்தமாகும். இதற்கு ஸமமாகிறது இந்த ஏகாதசி. குபேரன் அளகாபட்டணத்தை ஆண்டு வருகிறான். இவன் எப்பொழுதும் தனக்கும் பரிஜனங்களுக்கும் ஸம்ருத்தியைக் கருதி சிவ பூஜை செய்பவன். பூஜைக்கு வேண்டிய சாமான்களை தக்க தருணத்தில்கொண்டு கொடுக்க ஒரு பணியாளனை வைத்துக் கொண்டிருந்தான். அவனது பெயர் ஹேமமாலி. இவனும் ச்ரத்தையுடன் பூஜைகளுக்கு வேண்டிய புஷ்பங்களை நாள்தோறும் பக்தியுடன் கொண்டு கொடுப்பான். இவன் விசாலாக்ஷி என்னும் பெண்ணை மணந்தான். அவன் அழகு பெற்றவள். மதுரமான பேச்சைப் பேசுபவள். அவளழகிலும் பேச்சிலும் அதிக மோகமுள்ளவனாய் அவளிடத்திலேயே லயித்திருப்பான். இதன் காரணமாக ஒரு நாள் புஷ்பங்களை பூஜை ஸமயத்தில் கொடுக்க மறந்து விட்டான். இதனால் கோபம் கொண்ட குபேரன் பணியாளனை குஷ்டரோகியாக வேண்டுமென்று சபித்துவிட்டான். ரோகத்தால் மிக்க கஷ்டம் உற்றான். தனது விதியை நொந்தான். பூஜைக்கு வேண்டிய புஷ்பங்களை கொண்டு கொடுத்துது கைங்கர்யமானபடியால் இவனுக்கு நற்புத்தி உதித்தது. மேருமலைக்குச் சென்றான். அங்கு தவத்தில் ஆழ்ந்த மார்கண்டேயரை வணங்கி தனது தவறையும் அதனால் ஏற்பட்ட சாபத்தையும் சொல்லி அழுதான். அவரும் எல்லா நோய்களையும் கபளீகரம் செய்யும் யோகினீயின் மாஹாத்மியத்தை எடுத்துரைத்து இதில் வ்ரதம் இருந்தால் உன் வ்யாதி விலகும் என்றார். இவனும் அன்று உபவாஸம் இருந்து பகவானை பூர்ண மனத்துடன் பூஜித்தான். நோயிலிருந்து விடுப்ட்டான். அளகாபரி சென்று முன்புபோல் பணிவிடை செய்து மனைவியுடன் ஸுகமாக வாழந்தான். இந்த ஏகாதசி நோயை அகற்றக் கூடியது.

8. சயனீ : ஆடிமாத சுக்ல ஏகாதசிக்கு சயனீ என்று பெயர். இதில் பகவான் படுத்துக் கொள்கிறான். கார்த்திகை மாதத்தில் எழுந்திருக்கிறான். இதற்கு சயனா ஏகாதசி என்றும் அதற்கு உத்தான ஏகாதசி என்றும் பெயர் வந்தது. இந்த நான்கு மாதங்கள் பகவான் படுத்துக் கொள்கிறான். இதற்கு சாதுர்மாஸ்யம் எனப்பெயர். வாமனாவதாரம் எடுத்த பகவான் மஹாபலியின் மதத்தை போக்க த்ரிவிக்ரமானாக உருவம் எடுத்தான். உலகங்களை அளந்து பலியைபாதாளத்தில் தள்ளினான். அவனது முதுகில் தன் சரீரத்தை வைத்தான். மற்றொரு உடல் எடுத்து பாற்கடலில் ஆதிசேஷ தல்பத்தில் படுத்துறங்கினான். இந்த ஏகாதசியில் தீபதானம் சிறந்ததாம்.

9. காமினீ : ஆவணி க்ருஷ்ண ஏகாதசியை காமினீ என்று அழைப்பது. இது காமத்தை பூர்த்தி செய்து வைக்கும். இந்த ஏகாதசியில் உபவாஸத்துடனும் பகவன் நாம ஸங்கீர்த்தனத்துடனும் நோன்பு அநுஷ்டிப்பவர் க்ஷேமத்தைப் பெறுவார். தேஹ ஆரோக்யம் உண்டாகும். மனக்கவலை நீங்கும். மோக்ஷ ஸாம்ராஜ்யத்தையளிக்கும். புஷ்பங்களில் துளஸீபுஷ்பம் உயர்ந்தது, பகவானுக்கு ப்ரியமானது. இதனால் அர்ச்சித்தால் உகப்பான் பகவான். அதிலும் இந்த ஏகாதசியில் துளஸீ புஷ்பத்தைக் கொண்டு ஸஹஸ்ரநாமார்ச்சனை செய்ய வேண்டும். தானத்தில் சிறந்தது ஸ்வர்ணதானம். எல்லா பொருளிலும் சிறந்ததானபடியால் இதைக் கொடுப்பது உத்தமம் எனப் பெரியோர் பணிப்பர். அதிலும் ஸ்வர்ணத்தை எவ்வளவு அதிகமாகக் கொடுக்கிறோமோ அவ்வளவு பலன் உண்டு. ஒருபாரம் ஸ்வர்ணம் கொடுத்தால் வரும் நன்மை அளவிற்பாலது. இந்த ஏகாதசியில் துளஸீபுஷ்பம் கொண்டு பகவானைஅர்ச்சித்தால் மஹத்தான ஸ்வர்ணதான பலனாம். இதில் நெய்யைக் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீபத்தை ஸத்பாத்ரத்தில் கொடுப்பதும் உத்தமமாம்.

10. புத்ரதா : ஆவணி சுக்லபக்ஷ ஏகாதசிக்கு புத்ரதா எனப் பெயர். இது நியமத்துடன் வ்ரதமிருப்பவனுக்கு புத்ர ஸந்ததியையளிக்கும். பத்ர காமேஷ்டியினால் கிடைக்கும் பலன் இதனால் கிட்டும். மகப்பேறு ஏற்படுவதற்குத் தடங்கலான பாவங்கள் இதனால் தீரும். மாஹிஷ்மதி என்னும் பட்டணத்தை மஹிஜித் என்று ஒரு அரசன் ஆண்டு வந்தான். தனது ராஜ்யத்தில் அவனுக்கு ஸர்வஸம்ருத்திஇருந்த போதிலும் புத்ரஸந்ததி இல்லை. இதனால் மனவருத்த மடைந்தான். தனக்கு பிறகு அரசை ஆள்வதற்கு யாருமில்லாததால் கலங்கினான். ராஜ்யத்தில் உள்ள அந்தணர்களை இதற்கு பரிஹாரம் என்ன செய்யலாம் என வினவினான். அவர்களும் ஆலோசித்து அங்குள்ள தபோவனத்தில் தவம் புரியம் லோமசர் என்னும் மஹர்ஷியிடம் அழைத்துச் சென்றனர். முனிவரும் இவர்களை உபசரித்து உங்களுக்கு வேண்டும். உதவியை செய்கிறேன் என்றார். அரசனுடைய வருத்தத்தைக் கூறினர். முனிவர் த்யானத்தில் ஆழ்ந்து கூறலானார். இவ்வரசன் முன் பிறவியில் வைச்யனாக இருந்தான். ஒரு சமயம் வெளியூர் சென்ற போது தாகம் அதிகமாக, அதை தீர்க்க குளக்கரைக்குச் சென்றான். அங்கு ஒரு பசு தண்ணீர் அருந்திக் கொண்டிருந்தது. தண்ணீர் கலங்கிவிடும் என்று எண்ணி அதைக் கல்லால் அடித்துத் துரத்தினான். இதனால் அவனுக்கு பாபம் ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாய் இவனுக்கு ஸர்வஸம்ருத்தி இருந்த போதிலும் புத்ரஸந்ததிஇல்லாத குறை உண்டாயிற்று என்றார். இதற்குப் பரிஹாரம் சொல்ல வேண்டும் என்று கேட்க ஆவணி சுக்ல ஏகாதசி தினம் நியமத்துடன் வ்ரதமிருந்தால் பாபம் நீங்கும். ஸந்ததியும் உண்டாகும் என்றார். இதன்படி இவனும் புத்ரதா என்னும் ஏகாதசியில் வ்ரதமிருந்தான். ஸந்ததியும் பெற்றான்.

11. அஜா : புரட்டாசி க்ருஷ்ண ஏகாதசியை அஜா என்று சொல்வது. உலகத்தில் பிறப்புடையவன் துன்பமில்லாமல் இருப்பது அரிது. பிறந்ததுமே துன்பக்கடலில் மூழ்குவான். இது இயற்கை. இந்த ஏகாதசியில் வ்ரதம் இருப்பவன் ஏற்பட்ட துன்பங்களிலிருந்து விடுபட்டு அஸத்ருசமான புதுப்பிறவையை அடைவான். எனவே இதற்கு அஜை எனப்பெயர். அரிச்சந்திரன் வ்ருத்தாந்தம் நாம் அறிந்ததே. ராஜ்யத்தை இழந்தவன் மனைவி மக்களைத் துறந்தான். தானும் ஒரு சண்டாளனிடம் அடிமையாய் இருந்தவன். இப்படி பலஅல்லல்களுக்கு ஆளானவன். இவனை கெளதம முனிவர்கண்டார். இரக்கம் கொண்டார். இந்த ஏகாதசியில் வ்ரதமிருந்தால் துன்பங்கள் அகலும் என்றார். இதன்படி இவன் நடந்தான். மனைவியையும் மக்களையும் இராஜ்யத்தையும் பெற்றான். எனவே இதில் உபவாஸம் இருப்பவன் இழந்தவைகளைப்பெற்று ஸுகமடைவான்.

12. பத்மநபை : புரட்டாசி சுக்ல ஏகாதசிக்கு பத்மநபை என்பெயர். எம்பெருமானுக்குப் பத்மநாபன் எனப்பெயர் ஏன் ? இவனது நாபியில் பத்மம் தோன்றுவதால். அதிலிருந்து ப்ரஹ்மா அவனிடமிருந்து உலகமும் தோன்றுகிறது. இவ்வாறு படைக்கப்பட்ட உலகம் செழிப்பாக இருக்க வேண்டுமானால் மாதம் மும்மாரி மழைப் பெய்ய வேண்டும். அப்பொழுது பத்மநாபனால் படைக்கப் பட்ட உலகம் செழிக்கும். அவன் பெயரை பெற்ற இந்த ஏகாதசியில் வ்ரதமிருந்தால் மழை கொட்டும், வான் பொழியும், பூமி செழிக்கும். ஸுர்யவம்சத்தில் மாந்தாதா என்னும் அரசன் ஆண்டுவரும் காலத்தில் எந்தவகையான குறையும் இல்லாமல் இருந்தும் மழைக்குறைவினால் துர்பிக்ஷம் ஏற்பட்டுவிட்டது. நீதி தவறாது அரசு ஆண்டுவரும் எனக்கும் இந்த நிலை ஏற்பட்டதே என்று மனவருத்தத்துடன் வனம் சென்று ஆங்கீரஸ முனிவரை வணங்கி தன் குறையை அகற்ற உபாயம் கேட்டான். அவரும் உன் ராஜ்யம் தர்ம முறையில் தான் நடந்து வருகிறது. தவம் செய்ய அதிகாரமற்ற ஒருவன் தவம் புரிகிறான். அவனைக் கொன்றால் மழைப் பெய்யும் என்றார். இதற்கு இவன்அவனைக் கொல்ல மனமில்லாதவனாய் வேறு உபாயம் கூற வேண்டும் என வினவினான். அவரும் ஆலோசித்து இந்த ஏகாதசியில் வ்ரதமிருந்தால் போதும் என்றார். அவனும் இதை அநுஷ்டிக்க மழையும் பெய்தது. உலக க்ஷேமகரம் இந்த ஏகாதசி வ்ரதம்.

13. இந்திரை : ஐப்பசி க்ருஷ்ண ஏகாதசிக்கு இந்திரை எனப்பெயர். இதை அநுஷ்டித்தால் இந்திர (ஸ்வர்க) லோகத்திலுள்ள பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். எனவே இந்திரா எனப்பெயர்.மாஹிஷ்மதி பட்டணத்தை ஆண்டு வந்த இந்திரஸேனனின் பித்ருக்கள் தங்கது வினையால் நரகத்தில் யமலோகத்தில் யாதனையை அடைந்து கஷ்டம் உற்றனர். நாரதர் அங்கு சென்ற போது அவர்கள் தங்கள் கஷ்டத்தைக் கூறி எங்களை மீட்க உபாயம் செய்யுமாறு புதல்வனிடம் சொல்ல வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டனர். இதை நாரதர் மூலம் அறிந்த அரசன் நாரதரையே பணிந்து உபாயத்தைக் கேட்டான். அவரும் நரகத்தில் இருந்த இவன் தந்தைகளை மீட்க இந்த ஏகாதசியை உபதேசித்தார். இதை செவ்வனே நடத்தினால் உன் பிதாக்களை கரையேற்றலாம் என்றார். அவனும் அவருபதேசித்தபடி நடந்தான். பித்ருக்களும், நரகத்தை விட்டு ஸ்வர்கம் சென்று மகனை ஆசீர்வதித்தனர்.

14. பாபாங்குசா : ஐப்பசி சுக்ல பக்ஷத்து ஏகாதசிக்கு பாபாங்குசை எனப்பெயர். பாபங்களைப் போக்க இது அங்குசமாய் அமைகிறதாம். பாபம் செயதவன் யமலோகத்தை அடைந்து யாதனையை அடைவான். இதில் வ்ரதம் இருப்பவர்கள் பாபத்திலிருந்து விலகப் பட்டவர்களாய் யமலோகத்தை அடையமாட்டார்களாம். கங்கை, காவேரி, துங்கபத்ரை, கோதாவரி முதலிய புண்யநதிகளில் ஸ்நாநம் செய்வதால் பாபமகலும். புண்ய காலங்களில் ஸத்பாத்ரத்தில் தானம் செய்வதாலும் பாபமகலும் என்பது சாஸ்த்ரம். இந்த ஏகாதசியில் வ்ரதமனுஷ்டிப்பவன் ஸகல புண்ய தீர்த்த ஸ்நான பலத்தையும் அன்னவஸ்த்ர ஸ்வர்ணம் முதலியவைகளின் தான பலத்தையும் பெறுவான். இங்கு மஹான்களின் மூலம் கேட்ட கதையை எழுதுகிறோம். உஜ்ஜயினியில் வேசர்மன் ஒருவன்இருந்தான். நல்ல குணம் பெற்றவன். தர்மங்களைச் செய்பவன். பல இடங்களில் அன்ன சாலையை ஏற்படுத்தி தினமும் விடாமல் அன்னமளிப்பவன். அவன் செய்யாத நல்வினையே இல்லை. அவன் செயலுக்கு இலக்கான பாவமே இல்லை. அவனைப் புகழாதவர் இவ்வுலகில் இல்லை என்றே சொல்லலாம். ஒரு சமயம் நோய்வாய்ப்பட்டு படுத்துக் கொண்டான். யமதூதர்கள் இவனைப் பாசத்தால் பிணித்து இழுத்துக் கொண்டு சென்றனர். இவன் இவ்வளவு தான தர்மங்களைச் செய்த நமக்கும் இந்த அவஸ்தையா ! புண்யங்களுக்குப் பலனே இல்லையா ? இது ஒரு அநீதி. இதுவா கடவுளின் தன்மை என்று வருத்தப்பட்டுக் கொண்டு நாரதனைக் கண்டான். தனது துர்தசையைக் கூறி புலம்பினான். அவரும் ஆச்சர்யமடைந்து, யமதூதர்களைப் பார்த்து இவனுக்கு இன்னும் ஒரு நாள் ஆயுளில் மீதியுள்ளது. இப்படியிருக்க ஏன் இழுத்துச் செல்கிறீர்கள். மேலும், இவன் அளவற்ற புண்யத்தைப் பண்ணினவன். இவனுக்கு எப்படி யமலோகவாஸம் என்று கேட்டார். தூதர்கள் .... இவனும் புண்யம் செய்ததில் ஸந்தேஹமில்லை. அன்னதானம் செய்ததிலும் குறையில்லை. ஆனால் இவன் தானும் ஏகாதசியில் அன்னத்தைப் புசித்தான். அனைவற்கும் அன்று அன்னமிட்டான். ஏகாதசியில் அன்னத்தை விரும்புகிறானே. தனது பித்ருக்களுடன் நரகத்தில் வாஸம் செய்வான் என்றால் அன்னமிட்டவனுக்கும் புசிப்பவனுக்கும் நரகம் இல்லாமல் எவ்வாறு போய்விடும். இதை அறிந்த யமனின் உத்தரவின்படி நாங்கள் கொண்டு போக வந்தோம். ஆனால் தாங்கள் சொல்படி ஒரு நாள் உள்ளபடியால் நாளை அழைத்துப் போகிறோம் என்றனர். நாரதரும் நாளை காலை நானும் இங்கு இருக்கிறேன். நீங்கள் சென்று வரலாம் என்றார். அவர்கள் சென்றதும் இவனிடம் உடகண்ணால் ஆராய்ந்து பார்த்துச் சொல்லத் தொடங்கினான்.

இன்று ஏகாதசியானபடியால் இந்த வ்ரதத்தை மனப்பூர்வமாக அநுஷ்டித்து பகவானிடத்தில் உன்னை அர்பணம் செய். யமயாதனை உனக்கு எற்படாது என்றார். அவனும் இந்த ஏகாதசியை முறைப்படி நாரதர் கூறியபடி வ்ரதமிருந்து பகவானை ஆராதித்தான். மறுநாள் காலை யமதூதர்களைப் போக வேண்டாம் என்று உத்தரவு இட்டான். நாரதர் இவனைப் பார்த்து இந்த ஏகாதசியில் வ்ரதமிருந்தால் எத்தனை ஏகாதசி சாப்பிட்ட போதிலும் பலருக்கு அன்னமிட்ட போதிலும் இதனால் ஏற்படும் பாபம் நம்மிடம் அணுகாது. எல்லா பாபங்களையும் இந்த ஏகாதசி வ்ரதமே பஸ்மமாக்கினாய். இது எல்லா ஏகாதசியைக் காட்டிலும் மிகமிக உயர்ந்தது. இதை அநுஷ்டித்தவர்களுக்கு யமபயமும் கிடையாது. நரகத்திலுள்ள பித்ருக்களும் ஸ்வர்க்கம் சென்று விடுவார்கள். இதன் மஹிமை வாசாமகோசாம் என்று உணர்ந்தார் என்று. ஆக நாம் ஒவ்வொரு ஏகாதசியிலும் வ்ரதம் இருக்க வேண்டும். இதில் முக்யமாக பாகவதாராதனம் செய்து உபவாஸமும் ஸங்கீர்த்தனமும் செய்ய வேண்டும்.

15. ரமா : கார்த்திகை க்ருஷ்ண ஏகாதசிக்கு ரமை எனப் பெயர். தனது பெயருக்குத் தக்கவாறு ஐச்வர்யத்தை அளிக்கும் அதை ஸ்திரப்படுத்தும். இதில் உபவாஸமிருப்பவன் ஸ்திரமான ராஜ்யத்தை அடைந்து விளங்குவான். சந்திரஸேனனின் புதல்வன் சோபனன். அவன் பசி தாங்காதவன். ஒரு வேளை கூட ஆஹார மில்லாமல் இருக்க முடியாதவன். இவனுக்கு முசுகுந்தன் என்ற அரசன் தன் பெண்ணான சந்தரபாகையை மணம் செய்து வைத்தான். இந்த அரசன் ஒவ்வொரு ஏகாதசிகளிலும் உபவாஸம் இருப்பவன். ப்ரஜைகளும் இவனது நிர்பந்தத்தால் உபவாஸம் இருப்பவர்கள். ஏகாதசி முந்தய தினம் ஒவ்வொரு வீதியிலும் நாளை ஏகாதசி, ஒவ்வொருவரும் உபவாஸம் இருக்க வேண்டும், விஷ்ணு பூஜை செய்ய வேண்டும் என்று தமுக்கு அடிக்கச் செய்வான். உபவாஸமில்லாதவனை தூக்கில் இட்டுவிடுவான். இது அவனது ராஜ்ய தர்மம். ஒரு சமயம் சோபனன் மாமனாரின் அகத்துக்கு வந்தான். அன்று ஏகாதசி. படர்கள் வழக்கம்போல முன் இரவும் அன்றும் பறைசாத்தினர். சோபனன் கவலைப்பட்டான். உணவு உண்டால் தலை போய்விடும் என்றும் மனைவி கூறினாள். இவன் பயந்து உபவாஸம் இருக்க அது தாங்க முடியாமல் மறுநாள் காலை இறந்துவிட்டான். முறைப்படி ஸம்ஸ்காரம் செயதனர். சில நாட்கள் கழிந்தன. இவன் மனைவி துன்ப ஸாகரத்தில் மூழ்கியிருக்க ஸோமசர்மா என்ற பெரியவர் தனது தீர்த்த யாத்ரையை முடித்து இவ்வூருக்கு வந்தார். கவலையுடன் உள்ள இப்பெண்ணைக் கண்டார். பெண்ணே நீ ஏன் அழுகிறாய். உன் கணவன் மந்தரமலையின் அருகில் ஒரு திவ்ய நகரத்தை ஆண்டு வருகிறானே. உன் பர்த்தா உயிருடன் இருக்க வ்யஸனம் ஏன் என்றார். இதைக் கேட்ட இவன் மனைவி தன் தந்தையுடன் அங்கு சென்று தன் கணவனைப் பார்த்து மகிழ்ந்தாள். அவனும் இங்கு வாமதேவமுனிவரின் அருளால் எனக்கு உயிர் வந்தது. ராஜ்யமும் கிட்டியது. நான் நிர்பந்தத்தின் பேரில் ச்ரத்தை இல்லாமல் ரமா ன்னும் ஏகாதசியை உன் ஊரில் அநுஷ்டித்தேன். அதன் பலன் இது என்றான். இது அழியாமல் இருக்க என்ன செய்வது என்றும் கேட்டான். அப்பொழுது முனிவர் வந்து உன் மனைவி செய்த ஏகாதசியின் மஹிமையால் இது அழியாது என்று வரம் கொடுத்தார். இருவரும் ஸுகமாக இராஜ்யத்தில் வாழந்து ஏகாதசி வ்ரதத்தையும் நடத்தி வந்தனர்.

16. ப்ரபோதினீ : கார்த்திகை சுக்ல ஏகாதசிக்கு ப்ரபோதினீ எனப் பெயர் வழங்குவதுண்டு. சயன ஏகாதசியிடல் படுத்த பகவான் இந்த ஏகாதசியில் எழுந்திருக்கிறான். ஆக ப்ரபோதினி எனப் பெயர். இப்பொழுது பகவான் விழித்துக் கொள்வதால் இந்த ஏகாதசிதினம் புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். எம்பெருமான் உகந்து அருள்பாவிப்பான். எல்லா ஐஸ்வர்யமும் அதனால் கிட்டும். எல்லா புஷ்பங்களுமே இதில் எம்பெருமான் அர்ச்சனைக்கு உரியவை. துளஸீ புஷ்பம் புஷ்பங்களில் சிறந்தது. இதனால் பூஜை செயதால் ஸந்தோஷமடைவான். எப்பொழுது கேசவனுக்கு ப்ரியமானது இதனிடத்தில் எட்டு வகையான பக்தி செலுத்தினால் பகவான் நம்மிடம் அநுக்ரஹம் புரிவான். 1. துளஸியை தர்சிப்பது. 2. தொடுவது. 3. பெயரைச் சொல்வது. 4. துதிப்பது. 5. வைத்துவளர்ப்பது. 6. ஜலம் விடுவது. 7. பூஜிப்பது. 8. இதைக் கொண்டு பகவானை அர்ச்சிப்பது. இவ்வாறு பகவானிடத்தில் 8 வகையான பக்தி செலுத்துவது போல் இதனிடத்திலும் செலுத்தினால் பகவான் வைகுண்டமளிப்பான். விஷ்ணு லோகத்திலும் கோடியுகம் வஸிப்பான். இந்த நன்னாளில் புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சிப்பதோடு பலவகையான கனிகளையும் நிவேதனம் செய்தல் நல்லதாம்.

17. உத்பத்தி : கார்த்திகை க்ருஷ்ண ஏகாதசிக்கு உத்பத்தி ஏகாதசி எனப் பெயர். முராரி என்று எம்பெருமானுக்குப் பெயர். இந்த ஏகாதசியன்று பகவான் முரன் என்னும் அசுரனைக் கொன்றார். அவனைக் கொல்ல தன் உடலிலிருந்து கன்னிகையை இன்று உண்டு பண்ணினார். ஆகையால் இதற்கு உத்பத்தி ஏகாதசி எனப் பெயர் வழங்கிற்றாம். முரன் என்ற அரக்கன் தபோபலம் பெற்று தேவர்களையும், அந்தணர்களையும் வதைத்தான். இவனுக்கு நடுங்காதவர்கள் யாருமில்லை. இந்திரன் பயந்தான். பரமசிவனை சரணடைந்தான். அவனும் இந்திரனையழைத்துக் கொண்டு பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரமனை வேண்டுகிறார். கருடத் வஜனான பகவான் படையுடன் வந்த முரனுடன் எதிர்த்தான். தனது சக்ராயுதத்தால் படைகளை வென்றார். சினம் கொண்ட முராஸுரன் பல ஆண்டுகள் எம்பெருமானோடு போர் புரிந்தான். பகவானது கன்னிகை மூலம்தான் இவன் மரணமடைய வேண்டும் என்ற வரத்தை உணர்ந்த பகவான் பயந்தவன் போல் பதரிகாச்சரம் சென்று விசாலமான ஸிம்மாவதி என்ற குகையில் படுத்துக் கொண்டான். முரனும் பின் தோடர்ந்து குகையை அடைந்தான். அப்பொழுது எம்பெருமானின் உடலிலிருந்த தோன்றிய ஒரு கன்னிகையைக் கண்ட அம்பு தொடுக்கலானான். அக்கன்னிகையும் அரக்கனை ஹுங்காரம் செய்து பஸ்பமாக்கினாள். எம்பெருமானும் எழுந்து அக்கன்னிகைக்கு அருள் புரிந்தார். அவளும் நான் பிறந்த இந்த தினத்தில் உபவாஸமிருந்து உம்மை பூஜிப்பவனுக்கு வைகுண்டமளிக்க வேண்டும் என்று வரம் கேட்டாள். பகவானும் தன்னை இந்த ஏகாதசியில் பூஜிப்பவனுக்கு எல்லா நன்மையும் தருவதாக வாக்களித்தார். ஆக இம்மை ஸுகம், மறுமை ஸுகம், செல்வம், புகழ், ஆரோக்யம் எல்லாம் ஏகாதசி வ்ரதமுள்ளவர்களுக்குக் கிடைக்கும் என்பது இதிலிருந்து தேர்ந்த விஷயம்.

18. மோக்ஷதா : மார்கழி மாதம் சுகல பக்ஷ ஏகாதசிக்கு மோக்ஷ ஏகாதசி எனப் பெயர். பகவானும் இந்த மாதத்தை 'மாஸாநாம் மார்கசீர் ஷோாஸ்மி' என்ற பாராட்டியுள்ளான். இதற்கு பெரிய ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்றும் பெயர் வழங்கப்படும். இதில் எம்பெருமானை அர்ச்சிப்பவர்களுக்கு மோக்ஷம் திண்ணம். இவர்களுடைய பித்ருக்களும் நரகத்தில் இருந்தாலும் அதைத் துறந்து ஸ்வர்கம்செல்வாராம். இந்த ஏகாதசியில் பரமபதவாசல் திறப்பது என்று எல்லா கோயில்களிலும் வடக்குவாசல் திறப்பது வழக்கம். ஸ்வர்க வாசல் என்று சொல்லுவர். ஸ்ரீரங்கம் முதலிய திவ்ய தேசங்களில் வடக்கு வாசலில் திரள் திரளாக எம்பெருமானை தர்சிக்க நான் முன்பு நான் முன்பு என்று போட்டியில் மக்கள் நிற்பார்கள். எம்பெருமானுடைய முதல் கடாக்ஷம் தன்மேல் விழ வேண்டும் என்ற அவா அனைவர்க்கும் இருக்கும். எம்பெருமான் படுத்து எழுந்திருந்து பார்க்கும்போது ஏற்படும் ப்ரதமகடாக்ஷம் ஐச்வர்யத்தை தரும் விரோதிகளையும் அழிக்கும். அர்ஜுனனை முதல் பார்த்த பிறகே ஸ்ரீக்ருஷ்ணன் துரியோதனனைக் கண்டான். விஜயனுக்கு ஏற்பட்ட முதல் கடாக்ஷம் அவனது விரோதியை அழிப்பதுடன் அவனது படடாபிஷேகத்துக்கும் ஹேதுவாயிற்று. ஆகவே நமக்கு ஏற்படும் விரோதிகளை அழிப்பதுடன் ஐச்வர்யம் முதலிய நற்பயனை எம்பெருமான் முதல் பார்வை கொடுக்கும் என்பதற்காக அனைவரும் அப்பொழுது காத்துக் கொண்டிருப்பார்கள். பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரமன் விழித்தெழுந்திருக்கும்போது அவனது கடாக்ஷம் முதன் முதலில் தன் மேல் விழ வேண்டும் என்று பெரிய பிராட்டி துடக்கமானவர்கள் முதலில் எழுந்து அவனது பாதபரிஸரத்தில் நின்று திருவடிகளை வருடுவார்களாம் என்றார் ஸ்வாமி தேசிகன். கம்பம் என்னும் ஒரு நாடு. அதை முறைதவறாது வைகானஸன் அரசன் ஆண்டுவந்தான். ஒரு நாள் தூங்கும்போது இவனது பித்ருக்கள் கனவில் வந்து "நாங்கள் நரகத்தில் பல வேதனைகளை அடைந்து வருந்துகிறோம். இதை அகற்ற ஏதாவது ஒரு வழியை சிந்திக்கலாம். அங்குள்ள மகான்களிடம் இதைச் சொல்லி எங்களுடைய வருத்தத்தை நீக்க முயற்ச்சிக்கவும்" என்று அழுது கொண்டே சொன்னார்கள். இக்கனவு கண்டதும் இவனுக்கு வருத்தம் அதிகமாயிற்று. காலை எழுந்து அங்குள்ள பெரியவர்களிடம் கூறினான். அவர்களும் பர்வதர் என்னும் முனிவர் எல்லாமறிந்தவர். அவரிடம் போகலாம் என்று சொல்லி அரசனையும் அழைத்துச் சென்றனர். பர்வதமுனிவர் இதைக்கேட்டு ஞானக்கண்ணால் ஆலோசித்தார்.

அரசனே உனது தந்தை அரசனில் சிறந்தவன் நானே, என்னை விட மேற்பட்டவர் யாருமில்லை என்ற மதம் கொண்டவர். இதனால் யாவரையும் மதிக்காதவர். தர்மத்தை மறந்தவர். உன் தாயுடன் ருது காலத்தில் (மாதவிடாய் ஆன 16 நாட்களில்) விதிப்படி சேர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தும் மதியாது பிறர் மனைவியிடம் புணர்ந்தார். இதன் காரணமாகக் கொடிய பாபம் அவரை படித்து ஹிம்ஸிக்கிறது. எனவே நீ இந்த வைகுண்ட ஏகாதசியில் மனைவியுடன் வ்ரதமிருந்தால் உன் தந்தையை மீட்க முடியும் என்றார். இவனும் பக்தியுடன் இந்த ஏகாதசியில் உபவாஸமிருந்து பூஜை புரஸ்காரங்களைச் செய்து தந்தைக்கு அர்ப்பணம் செய்தான். அந்த க்ஷணமே அவனுடைய பித்ருக்கள் விடுபட்டு விமானம் ஏறி புதல்வனையும் ஆசீர்வதித்து ஸ்வர்க்கம் சென்றனர். ஆக இது நினைத்த பலனை அளிக்கக் கூடியது.

19. ஸபலை : தை மாத க்ருஷ்ண ஏகாதசிக்கு ஸபலை எனப்பெயர். சம்பாவதி என்னும் ஒரு பட்டணம். அதை மாஹிஷ்மதன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவன் நேர்மையானவன். அவனுக்கு ஐந்து புத்ரர்கள். மூத்தவனுக்கு லும்பன் எனப்பெயர். அவன் செய்யாத பாபமில்லை. அரசகுமாரன் என்ற கர்வத்தால் எல்லோருடைய வீட்டில் உள்ள பணத்தை திருடுவான். கள் குடிப்பான். பிறருடைய மனைவியை பலாத்காரமாகப் புணர்வான். ஜனங்களின் அல்லலைக் கொண்டு அரசன் தன் புதல்வனை காட்டில் கொண்டு விட நியமித்தான். அங்கு இருந்தும் இவன் தொல்லை செய்யாமல் இல்லை. இரவில் பட்டணங்களில் நுழைந்து தீமைச் செயல்களைச் செய்து வந்தான். ஒரு சமயம் காவலாளிகளிடம் பிடிபட்டு அடியும்பட்டான். தன்னை இன்னார் என்று சொல்லி அவர்களிடம் விடுபட்டு ஓடிவிட்டான். அது முதற்கொண்டு தீயச்செயல்களை அறவே விட்டொழித்தான். பிறகு மரத்தடியில் தங்கி காய்கனிகளை உண்டு வாழந்தான். தன்னால் கொண்டு வரப்பட்ட பழங்களை கடவுளுக்கு நிவேதனம் செய்து மரத்தடியில் தூங்குவான். ஒரு நாள் காலை லும்பக: நேற்று ஸபலா ஏகாதசி. நீ தங்கி இருந்த மரம் அரசமரம். இங்கு கனிகளை பகவானுக்கு நிவேதனம் செய்து இரவு விழித்து பகவன் நாமத்தை உச்சரித்தாய். அதனால் உனது பாவம் அகன்றது. க்ரமமாக ராஜ்யத்தையும் பெருவாய் என்று ஆகாயத்தில் ஓர் குரல் கேட்டது. அதே சமயம் பட்டணத்து யானையுடன் பரிவாரம் வந்து இவனை அழைத்துச்சென்றது. ராஜ்யத்தில் அமோகமான ஸுகத்தையும் பெற்றான். பலத்தை நிவேதனம் செய்து வ்ரதத்தை செய்தபடியால் இதற்கு ஸபலை எனப்பெயர் உண்டாயிற்று. ஆக ஸகல பழங்களையும் நிவேதனம் செய்து உபவாஸமிருந்தால் ராஜ்யமும் கிடைக்கும். ஆக பூர்ணமனத்துடன் இந்த ஏகாதசியில் உபவாஸம் இருக்க வேண்டும். பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

20. புத்ரதா : தை மாத சுகல ஏகாதசிக்கு புத்ரதா எனப் பெயர். புதல்வன் இல்லாதவர்கள் கூட இதில் வ்ரதமிருந்தால் உத்தம புத்ரனைப் பெறுவர். பத்ராவதிப் பட்டணத்தை ஆண்டு வந்த ஸுகேது என்பவன் எல்லா ஸம்ருத்தி பெற்றிருந்தும் புத்ரஸந்ததியின்றி தன் மனைவியான சம்பகையுடன் வருத்தத்தில் ஆழந்தான். பல தர்மங்களையும் செய்தாலும் புதல்வன் இல்லாதவனுக்கு நற்கதி கிடையாதே என்றும் வருத்தமுற்றான். தன் பித்ருக்கள் திதியன்று சரியாக போஜனம் சாப்பிடுவதில்லையே என்றும் கலங்கினான். ஒரு சமயம் காடு செல்லும் போது ஓர் ஸரஸ்ஸின் அருகில் சில ஆச்ரமங்களையும் அங்கு விளங்கும் ஸுர்யன் போலுள்ள ரிஷிகளையும் கண்டான். அவர்களை நீங்கள் யார் எனவும் வினவினான். அவர்களும், நாங்கள் விச்வே தேவர்கள். மாகமாஸம் இந்த குளத்தில் ஸ்நானம் செய்து உபவாஸமிருக்க வந்தோம். இன்று ஏகாதசி உபவாஸமிருந்து பகவானை பூஜித்தால் புத்ரஸந்ததி உண்டாகும் என்றனர். இதைக்கேட்டதும் அன்று நியமத்துடன் ஏகாதசி வ்ரதத்தை அநுஷ்டித்தான். உத்தம புத்ரனையும் பெற்றான். ஆக இது புத்ரஸந்ததியைக் கொடுக்கும் ஏகாதசி.

21. ஷட்திலா : மாசி மாத க்ருஷ்ண ஏகாதசிக்கு ஷட்திலை எனப்பெயர். ப்ரஹ்மஹத்தீ, கோஹத்தி, செளர்யம் முதலிய பாபங்களை நீக்கும் மஹாபாதகம் என்று சொல்லக்கூடிய பாபங்களையே அகற்றும் உபபாதக விஷயங்களை பற்றிச் சொல்ல வேண்டாம். தால்ப்ய முனிவருக்கு புலஸ்த்யர் கூறிய கதை மாகமாஸம் ஆரம்பத்தில் பூமியில் விழுவதற்கு முன்னதாகவே பசும் சாணத்தை கையில் ஏந்தி அதில் எள்ளையும் பருத்திக் கொட்டையையும் சேர்த்து சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். பெளர்ணமி வரை சாணம் ஈரமாக இருந்தால் நமது மஹாபாதகங்கள் நம்மை விட்டு அகலும். பூஜையையும் ஆரம்பிக்க வேண்டும். நூறு கூஷ்மாண்டம் அல்லது நூறு தேங்காய் அல்லது கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கு இவைகளைக் கொண்டு ஒரு பிராம்மணனை விஷ்ணுவாக வரித்து ஜலபாத்ரம், பாதுகை, குடை, செருப்பு கரும்பு, எள்ளுடன் பாத்ரம் கறுப்பு பசு இவைகளைத் தானம் செய்தல் வேண்டும். திலத்தை அரைத்து உடலில் பூசிக் கொள்ள வேண்டும். திலஸ்நானம் செய்ய வேண்டும். தில ஹோமம், தில ஜலதானம் (தர்பணம்) திலான்ன போஜனம் என்ற வகையில் 6 ப்ரகாரம் திலத்தை உபயோகப்படுத்த வேண்டும். இதற்குத்தான் ஷட்திலை எனப் பெயர். இவ்வாறு இந்த ஏகாதசியில் நடத்தினால் எல்லா பலமும் உண்டாம். அவனிப்பட்டணத்தில் ஒரு அந்தண மாது எல்லா தர்மங்களையும் செய்து வந்தாள். அன்னதானம் செய்வதில் மனமில்லாதவள். இவளிடம் அருள் புரிய பகவான் ஸந்நியாஸி வேஷம் பூண்டு வந்தான். இவள் அவருக்கு அர்க்யாதிகளைக் கொடுத்து உபசரித்தாள். அன்னத்தைக் கேட்டார். கோபம் கொண்டு பிக்ஷாபாத்ரத்தில் மண் கட்டியைப் போட்டாள். இவள் செய்த புண்ணியத்தின் வசமாக உபசாத்ரத்துடன் ஸ்வர்கம் சென்றாள். அங்கு இவளுக்கு பற்பல வஸதிகள் இருந்தன. ஸுகமான வாழ்க்கை ஏற்படடது. ஆனால் புஜிக்க அன்ன வஸதி இல்லாமல் கஷ்டப்பட்டாள். அங்கு முன்பு உபசரிக்கப்பட்ட ஸந்யாஸியைக் கண்டாள். முன்பு எல்லா தானமும் செய்தாய். அன்னமிடவில்லை. அதன் பயன் இது என்று சொல்லி உன்னைக் காண தேவதாஸிகள் வருவார்கள். கதவை தாளிட்டுக் கொள். கதவைத் திறக்க சொல்வார்கள். அப்பொழுது ஷட்திலை ஏகாதசி பலத்தைக் கொடுத்தால் திறப்பேன் என்று சொல் என்றார். இவளும் அப்படியே செய்ய தேவதாஸிகள் ஷட்திலை ஏகாதசியின் பலனைக் கொடுக்க ஸம்மதிக்க வில்லை. கடைசியில் ஒரு தாஸி கொடுக்க இவளிருக்கும் இடம் உணவுப் பொருளால் நிறைந்தது. பிராம்மணியின் பசியும் அகன்றது. அவளும் ஸுகம் அடைந்தாள்.

22. ஜயா : மாசி சுக்ல ஏகாதசிக்கு ஜயை எனப் பெயர். இது பேய் பிசாசத்துக்கும் நற்கதியை அளிக்கும். மால்யவான் என்ற கந்தர்வனும் அவனது மனைவியுமான புஷ்பவதி என்ற கந்தர்வ கன்னியும் தம்பதிகள் கான கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். பரஸ்பர அநுராகமுள்ளவர்கள். இந்திர ஸபையையே மேய்மறக்கச் செய்பவர்கள். ஒரு சமயம் இனியகுரலுடன் பாடும் போதும் ஆடும்போதும் ஒருவர்க் கொருவர் மோஹத்தால் பாட்டையும் மறந்து போயினர். அபஸ்வரமாக பாடினர். கோபம் கொண்ட இந்திரன் பேயாக ஆகும்படி சபித்து விட்டான். பல ஆண்டுகள் பேயாக இருந்து கஷ்டமுற்றனர். ஒரு ஸமயம் அன்னமும், ஆஹாரமும், தீர்த்தமும் இல்லாமல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தங்களது துர்தசையை நினைத்து நொந்துக் கொண்டனர். அன்று இரவு தூங்கவுமில்லை அந்த தினம் ஐயா என்னும் ஏகாதசி. இவர்கள் வஸித்த இடமும் அச்வத்தமரம். இதனால் மறுநாள் காலை உருமாறி கந்தர்வர்களாக காட்சியளித்தனர்.

23. விஜயா : பங்குனி க்ருஷ்ண ஏகாதசி விஜயை என்று அழைக்கப்படுவது. அவரவர் மனோரதத்தைப் பூர்த்தி செய்து வைக்கும். இன்றையதினம் செய்யும் வ்ரதம் இந்த தினத்தில் ஏழு தான்யங்களை ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்பி அதில் கலசத்தை வைத்து அலங்கரித்து ஸ்ரீமன் நாராயணனை ஆவாஹநம் செய்து பூஜிக்க வேண்டும். த்வாதசியன்று மஹானுக்கு அன்னமிட வேண்டும். அக்கலசத்தை தக்ஷிணையுடன் அவருக்கு ஸமர்ப்பிக்க வேண்டும். இப்படி செய்தால் எங்கும் வெற்றி பெறலாம். ஸ்ரீராமனும் தால்ப்யருடைய உபதேசமும் மூலம் இந்த ஏகாதசியை அநுஷ்டித்தார். ஆக இராவணனை வென்று ஜயமடைந்தார்.

24.ஆமலகி : பங்குனி சுக்ல பக்ஷ ஏகாதசிக்கு ஆமலகி எனப் பெயர். சுத்தமாகவே உபவாஸமிருக்க வேண்டும். ஜலமும் அருந்தக் கூடாது. பாபிகளுடனும் ஸம்பாஷணம் செய்வதும் தவறு. கலசம் வைத்து பரசுராமனை ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். மரத்தையும் வலம் வர வேண்டும். இப்படி செய்வதால் புண்யதீர்த்த ஸ்நானபலன் திவ்ய தேசம் சென்றதின் பயன் கிட்டும். ஆயிர கோதான பலன் இதனால் உண்டாகுமாம். ஒரு ஸமயம் பரமாத்மாவினுடைய முகத்திலிருந்து ஜலத்தின் பிந்து சிறிது கீழே விழுந்தது. அது மரமாக ஆயிற்று. தேவர்கள் இதைக் கண்டு வியந்தனர். அப்பொழுது அசரீரி வாக்கு இம்மாதிரி கூறிற்று. நாராணமூர்த்தியின் திவ்ய க்ருபையால் இம்மரம் உண்டாயிற்று. இதற்கு நெல்லி மரம் எனப் பெயர். இதன் காய் ஆமகலம். இது மனிதனுக்கு மிக பத்தியமானது. உடலுக்கு ஒளியையும் குளிர்ச்சியையும் வலிமையையும் கொடுக்கும். இது உடலுக்கோர் ரஸாயனம். இது எம்பெருமானின் அம்சமான வ்ருக்ஷம். இதைப் பூஜிக்க வேண்டும். இதன் கனியை ஏகாதசி உபவாஸமிருப்பவர் த்வாதசியன்று புசிக்க வேண்டும். இது கோதான பயனைக் கொடுக்கும். ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் நினியிலும், வேரிலும், மத்தியிலும் வஸிக்கின்றனர். கிளைகளில் முனிவர்கள், இலையில் வஸுக்கள், புஷ்பங்களில் மருத்துக்கள், பழத்தில் நவப்ரஜாபதிகள் வஸக்கின்றனர் என்றது. தத்க்ஷணமே அந்த அசரீரி வாக்கு தன்னை நாராணனின் மூர்த்தியாக காட்டிக் கொடுத்து மறைந்து விட்டது. இதைக் கேட்டதும் அங்கு வந்த முனிவர்கள் உலகத்தை உண்டு பண்ணினவன் ரக்ஷிப்பான். ஸம்ஹரிப்பவன் எவனோ அவன் தான் நாராணன். இந்த ஆடலகமலம் மூலமான நமக்கு ஸேவை கொடுக்கிறான் என்று வணங்கினர். இந்த ஏகாதசி வ்ரதம் கோதான பலனைக் கொடுக்கும் என்றனர்.

25. கமலா : அதிகமாக ஸம்பவிக்கும் ஏகாதசிக்கு கமலா எனப் பெயர். இம்மாதத்தை புருஷோத்தமனான எம்பெருமானின் ஸஹதர்மசாரிணியான மஹாலக்ஷ்மியை ஸாக்ஷாத்கரிப்பதற்கு ஹேதுவாகும். இதில் உபவாஸமிருப்பவன் லக்ஷ்மீ ஸம்பந்தன் ஆவான். ஸர்வஸம்ருத்தி என்று ப்ராஹ்மணன் இருந்தான். அவனுக்கு ஐந்து புதல்வர்கள். ஜயசர்மா என்பவன் கடைசி புதல்வன். பாபச் செயலில் ஊற்றமுள்ளவன். பெற்றோர் சொல்லை மதியாதவன். இவனது நடத்தை யாருக்கும் இவனை இல்லத்தை விட்டு துரத்தி விட்டனர். மிக்க கவலையுடன் இருந்த இவனை ஹரிமத்ரர் என்னும் மஹர்ஷி பார்த்து உபதேசித்தார். கமலை என்னும் ஏகாதசியை உபவாஸத்துடன் நடத்தி வந்தால் உனது பாபம் அகலும் என்றார். அவர் சொன்னபடி அவனும் அநுஷ்டித்தான். அன்றிரவே மஹாலக்ஷ்மி ப்ரஸன்னமானாள். குளிரக் கடாக்ஷித்தாள். இந்த ஏகாதசி வ்ரம் இருப்பவர்களுக்கு நான் தர்சனம் கொடுப்பேன். இது எனக்கு பிடித்தமானது. நீ இதை நடத்தியபடியால் எனது அநுக்ரஹமும் உனக்கு கிடைத்தது. அபரிமிதமான செல்வமும் உனக்கு உண்டாகும் என்று சொன்னாள்.

இவ்வாறு ஒரு ஆண்டுக்கு ஏற்படும 25 ஏகாதசியின் மஹிமை பாத்மபுராணத்தில் உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை எல்லோரும் படித்து அதன்படி வ்ரதமிருந்து லக்ஷ்மி நாராணனுடைய அநுக்ரஹத்திற்கு பாத்ரர்களாக வேண்டும். அனைவருக்கும் மங்களம் உண்டாகுக.

சுபம்.

ஏகாதசிகளின் மஹிமை (பாத்ம புராணத்தில் கூறியபடி).







Enter supporting content here